மகனை இழந்த வருத்தமும் மறைந்தது

கட்டாய இந்தி ஒழிந்தது என் களிப்புக்களவில்லை வீர நடராஜன் தந்தையார் விண்ணப்பம் இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்று உயிர் நீத்த தோழர் நடராசன் தந்தையார் தோழர் கோ.லட்சுமணன் பின்வருமாறு எழுதுகிறார். திராவிட நாட்டின் தனிப்பெரும் செல்வர்காள்! திராவிட தனிமொழியாம் தமிழைக் கெடுத்து நமது தாய்நாட்டில் ஆதிக்கம் செலுத்த ஆரியர்களால் சூழ்ச்சி செய்து சுமத்தின இந்தியெனும் வடநாட்டு மொழியை தாய்நாட்டின் நலங்கருதி எதிர்த்தொழிக்க எழுந்த திராவிடப் பெரும் போரில் கலந்து உழைக்கப் போவதாக எனது செல்வன் நடராசன்… Continue reading மகனை இழந்த வருத்தமும் மறைந்தது

கவைக்குதவாத ‘பட்ஜட்’

1940-41ஆம் வருஷத்திய சென்னை மாகாண சர்க்காரின் வரவு-செலவு திட்டம் வெளியாய்விட்டது. இந்த வரவு – செலவு திட்டத்தைப் பார்க்கும் யாவரும் மாமூல் பிரகாரம் தயார் செய்யப்பட்ட திட்டமாக இருக்கிறதே தவிர புதிதாக எத்தகைய நல்ல அம்சமும் அதில் இருப்பதாகக் காணமாட்டார்கள் என்பது நிச்சயம். மேலும் இவ்வரவு – செலவு திட்டத்தைப் பார்த்தால் நாட்டிலே இருந்து வரும் கிளர்ச்சிக்கு ஏதாவது பரிகாரம் அளிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தின் மீது தயாரிக்கப்பட்டிருக்கிறதேயொழிய உருவான திட்டம் யாதும் சேர்க்கப்படவில்லையென்பதும் நன்கு… Continue reading கவைக்குதவாத ‘பட்ஜட்’

பொன்மொழிகள்

உண்மையான அரசியல் வளர வேண்டுமானால் மக்களிடம் மனிதத் தன்மை வளர வேண்டும். ஒழுக்கமும், நாணயமும் ஏற்பட வேண்டும். மற்றவர்களிடம் அன்பு கலந்து நடந்து கொள்ள வேண்டிய அவசியம் உணரப்பட வேண்டும். இப்பொழுது உள்ள அரசியல் கட்சிகளிடம் இத்தன்மை இருக்கின்றனவா? இவைகளை வளர்க்கவாவது இக்கட்சிகள் பாடுபடுகின்றனவா? இல்லையே; பின் எப்படி உண்மையான அரசியல் வளரும்? ஒழுக்கக்கேடு என்பது மானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒழுக்கமுள்ளவன் மானியாய் இருப்பான்; மானி, ஒழுக்கமுள்ளவனாக இருப்பான்.

எது வகுப்பு வாதம்?

பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு நீதிக்கட்சிக்கு இந்நாட்டில் செல்வாக்கிருப்பது உண்மையானால், ஆதரவிருப்பது உண்மையானால், ஏன் வரப்போகும் சென்னை மேல்சபைத் தேர்தலுக்குக் கட்சியின் பேரால் ஆட்களை நிறுத்தி வெற்றிபெறக் கூடாதென்றும், எப்பொழுது போட்டியிட ஆள் கிடைக்கவில்லையோ அப்பொழுதே அக்கட்சிக்கு நாட்டில் செல்வாக்கில்லையென்பது விளங்கவில்லையா என்றும் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார் முதல் சாதாரண ஒரு காங்கிரஸ் பேர்வழி வரை கேட்டும், பத்திரிகைகளில் நையாண்டி பண்ணியும் வந்ததற்கு, பெரியார் அவ்வப்போது பல இடங்களில் தக்க பதில் கூறியிருக்கிறார். அதாவது, நீதிக்கட்சியின் பேரால் வரப்போகும் மேல்சபைத் தேர்தலுக்குப்… Continue reading எது வகுப்பு வாதம்?

துப்பாக்கிப் பிரயோகமும் தேசபக்தரும்

வாயில்லா பூச்சிகளாக நடைப்பிணங்களாக இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளிகள் ஏதாவது சில உரிமைகள் பெற வேண்டுமானால், அதற்கு இன்று ஆயுதமாயிருப்பது வேலை நிறுத்தம் ஒன்றே என்பதை யாவரும் அறிவார்கள். இன்று தொழிலாளர்கள் ஏதாவது சில உரிமைகள் பெற்று வருகிறார்கள் என்றால் அதற்கு இவ்வேலை நிறுத்தம் என்ற ஒரே ஆயுதம்தான் காரணமாகும். நாகரிக உலகம் இதை அனுமதித்தே வந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். இன்று எங்கு பார்த்தாலும் ஆலைத் தொழிலாளர்களும் மற்றுமுள்ள தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள் என்பதை… Continue reading துப்பாக்கிப் பிரயோகமும் தேசபக்தரும்

கட்டாய இந்தி ஒழிந்தது

ஆச்சாரியார் சர்க்கார் புகுத்திய இந்தி உத்தரவை ரத்து செய்து இந்தியை இஷ்டபாடமாக்கி வெளியிட்டுள்ள சர்க்கார் அறிக்கை வருமாறு:- தங்கள் பள்ளிக் கூடங்களில் கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டிருக்கும் இந்தியை இஷ்டப்பாடமாக்குவது பற்றி சர்க்கார் சிறிதுகாலமாக யோசித்து வந்திருக்கிறார்கள். கட்டாய இந்திமுறை, பொதுமக்களில் பெரும்பகுதியினரிடையே எதிர்ப்பையும் அதிருப்தியையம் விளைவித்திருக்கிறது. முடிவாக முதல் மூன்று பாரங்களில் பரீட்சை எதுவுமில்லாமல் இந்தியை கட்டாயப் பாடமாக மட்டும், கற்றுக் கொடுப்பதால் மாணவர்களுக்கு அந்த பாஷையில் போதிய அறிவோ, திறமையோ ஏற்படாதென்றும் சர்க்காருக்குத்தோன்றுகிறது. இந்தியை இஷ்டபாடமாக… Continue reading கட்டாய இந்தி ஒழிந்தது

கட்டாய இந்தி ரத்து பெரியார் அறிக்கை

இந்தி கட்டாயப் போதிப்பு உத்திரவு மாற்றப்பட்ட சர்க்கார் அறிக்கையைப் பார்த்தேன். இவ்வளவு நாள் பொறுத்தாவது நமது கவர்னர் இந்தி எதிர்ப்பானது இந்நாட்டுப் பெரும் பகுதியான மக்களின் ஆத்திரத்துடன் கூடிய எதிர்ப்பு என்பதை உணர்ந்து கொண்டதற்கும் இப்போது போதித்துவரும் கட்டாய இந்தி போதனை முறை பயனற்றதும் கூடாததும் என்று உணர்ந்து அந்த முறையையும், கட்டாயப் போதிப்பையும் ரத்துச் செய்ததற்கும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் அந்த அறிக்கையின் படி இந்தி இனி இஷ்ட பாடமாக வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டாலும் அதற்காகப் பொது… Continue reading கட்டாய இந்தி ரத்து பெரியார் அறிக்கை

பொன்மொழிகள்

ஒரு நாட்டு மக்கள் முன்னேற வேண்டுமானால் அரசியலில் கட்சி – பிரதிக் கட்சி இருக்க வேண்டியதும், அவை ஒன்றுடன் ஒன்று போராட வேண்டியதும் நியாயமும் இயற்கையுமேயாகும். ஆனால், அவ்விதப் போராட்டமானது நியாயமான முறையிலும் ஒருவரை ஒருவர் துஷ்பிரசாரம் செய்யாமலும் இருப்பதே வரவேற்கத் தக்க விசயமாகும். ஒரு கட்சியை மற்றொரு கட்சி தாக்குவதும், துஷ்பிரசாரம் செய்வதும் ஒரு நிமிடமும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாத காரியமாகும். சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கம் மிக அவசியமாகும். ஒழுக்கம் என்பது பிறரைப் பாதிக்கும்படியோ, அயலாருக்குத்… Continue reading பொன்மொழிகள்

விஸ்வகர்ம சமுகத்திற்கு பெரியார் விளக்கம்

தென் இந்திய விஸ்வகர்ம சங்கப் பொதுக் காரியதரிசியார் அவர்கள் நீதிக்கட்சியின் தலைவரான நம் பெரியாரிடமிருந்து சில விஷயங்கள் விளக்கப்பட வேண்டுமென்று விரும்பி விடுத்த வேண்டுகோளுக்குப் பெரியார் விளக்கமளித்து அச்சமுகத்திற்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவ்வேண்டுகோள் 14.02.1940ஆம் தேதி விடுதலையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தென் இந்திய விசுவகர்ம சமுக மக்கள் எல்லோரும் நன்கு சிந்தித்து ஒரு முடிவுக்கு வர வேண்டியது இது சமயம் மிகவும் அவசியமாகும். எல்லா சமுகத்தாருக்கும் பொருந்தும் பெரியாரின் பதில் என்னும் வேண்டுகோளானது தென்னிந்திய விஸ்வகர்ம… Continue reading விஸ்வகர்ம சமுகத்திற்கு பெரியார் விளக்கம்

பெரியாருக்கு ஜனாப் ஜின்னா பாராட்டு

புதிய டில்லி, பிப்ரவரி 26 அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் ஜனாப் எம்.ஏ ஜின்னா அவர்கள் ஈரோடு விலாசத்திற்கு பெரியார் அவர்களுக்கு கீழ்வரும் தந்தியை அனுப்பியுள்ளார். NEW DELHI,Feb, 26,RAMASAMI NAICKER,ERODE. Your magnificent stand sacrifices for people at last secured justice. My congratulations compulsory Hindi cancelled. JINNA. மொழிபெயர்ப்பு “தங்களுடைய மகத்வமான உறுதியும், மக்களுக்காக செய்த தன்னலமற்ற தியாகங்களும் கடைசியில் நீதியை அளித்துவிட்டன. கட்டாய இந்தி நீக்கப்பட்டமைக்கு தங்களை… Continue reading பெரியாருக்கு ஜனாப் ஜின்னா பாராட்டு