சகோதரர்களே! கல்வி விஷயத்தில் இந்த சகாப்தத்தில் இருக்கும் மக்கள் மிகவும்
மேன்மை பெற்றவர்களே ஆவார்கள். ஏனெனில் முந்திய சகாப்தத்திற்கும் பிந்திய
சகாப்தத்திற்கும் கல்வி கற்பிப்பதில் எவ்வளவோ வித்தியாசங்கள் உண்டு. முதலாவது
நம் சகாப்தத்திற்கு முந்திய காலத்தில் இன்ன இன்னார் தான் கல்வி கற்பிக்க
உரிமையுடைவர்கள் என்கின்ற நிபந்தனை இருந்தது. இன்ன இன்ன விஷயந்தான்
கற்பிக்கப்படலாம் என்கின்ற நிபந்தனையும் இருந்தது. இதோடூ மாத்திரமல்லாமல்
இன்ன இன்னார்தான் கல்வி கற்பிக்கப்பட உரிமையுடையவர்கள் என்கின்ற
நிபந்தனையும், இன்ன இன்னவர்களுக்கு எழுத்து வாசனையே கற்பிக்கப் படக்கூடாது
என்கின்றதான நிர்ப்பந்தமும் இருந்து வந்தது. இந்த மாதிரி யான நியமங்களினாலும்,
நிர்ப்பந்தங்களினாலும் கல்வி என்பது “மூடுமந்திரம் போன்று ஒரு ரகசியப்
பொருளாகவே இருந்து வந்தது. இந்தக் காரணங்களால் முற்காலங்களில் ஆயிரத்தில்
ஒருவர் இருவரே கல்வி கற்றவர்கள் என்று சொல்லும்படியான மாதிரியில் இருந்து
வந்ததோடூ கல்வி கற்றவர்கள் என்பவர்களே எல்லா மக்கள்மீதும் எல்லாக்
காரியத்திலும் ஆதிக்கம் செலுத்துபவர்களாய் இருந்து வந்தார்கள். அன்றியும் மேல்
சொல்லப்பட்ட இந்த நிபந்தனைகளும், ஆதிக்கங்களும், எல்லாம் மக்கள் பிரிவில் ஒரு
தனிபிரிவார் மாத்திரம் அதுவும் பிறவிகாரணமாய் உரிமை கொண்டாடத் தக்கதாய்
இருந்து வந்ததே அல்லாமல் மற்றபடி பொதுத் தகுதியைக் கொண்டதாகவோ,
எல்லோருக்குமே சம உரிமையைக் கொண்டதாகவோ சிறிதும் இருந்து வரவில்லை.
சாதாரணமாய் நமது இந்தியாவை முழுவதும் எடுத்துக்கொண்டு பழைய கல்வி
போதனாமுறை என்பதை ஒரு முறையாக வைத்துப் பார்ப்போமானால் இந்தியாவில்
உள்ள 35 கோடி மக்களில் 17 1/2 கோடி மக்களான பெண்களுக்கு எந்தக்காரணத்தைக்
கொண்டும் கல்வி கற்பிக்க முடியாததாகும். மற்றொரு பிரிவில் 7 கோடி ஜனசமூகம்
ஆகிய தாழ்த்தப் பட்ட மக்கள் என்பவர்கள் விஷயத்திலும் படிப்பு என்பது
நினைப்பதற்கே முடியாத காரியமாய் இருக்கும். மற்றும் பார்ப்பனர்கள், அரசர்கள்,
வியாபாரிகள் என்கின்ற வெகு சிறிய கூட்டத்தார்கள் மாத்திரம் கல்வி கற்க
உரியவர்களாவார்கள். அவர்களிலும் கல்வி கற்பிப்பதில் பிரிவுக்கு பிரிவு
வித்தியாசமிருக்கும்.
இன்றைய கல்வி
ஆனால் இன்றைய கல்வி போதனை விஷயத்தில் இவ்வித வித்தியா சங்கள் ஏதும்
இல்லாமல் யாருக்கும் யாவரும் கல்வி கற்பிக்கப் படலாம் என்கின்ற ஒரு நியமம்
இருந்து வருகின்றது. ஆகையினால் நான் முந்திய சகாப்தங்களை விட பிந்திய
சகாப்தம் கல்வி விஷயத்தில் பாராட்டக் கூடியது என்று சொன்னேன். ஆனபோதிலும்
கல்வியின் இன்றைய லட்சிய மும் கற்பிக்கும் போதனாமுறையும் பாராட்டக்கூடியது
என்பதாகச் சொல்லிவிட முடியாது.
ஏனெனில் கல்வி என்பது ஒரு மனிதனுக்கு கற்பிக்கப்படவேண்டிய அவசியமெல்லாம்
ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு தகுதிப்படுத்துவது
என்பதேயாகும். அல்லது உலகில் நல்வாழ்க்கை வாழத் தகுதியுடையவனாக்குவது
என்பதாகும்.
அதாவது ஒவ்வொரு காரியத்திற்கும் மற்றவர்களை எதிர்பார்த்தோ, மற்றவர்கள்
ஆதிக்கத்தில் இருந்தோ அல்லது தனக்கு மற்றவர்கள் வழிகாட்ட வேண்டிய
நிலையிலோ மனிதன் இல்லாமல் சுதந்திரத்தோடு சுய ஞானத்தோடூ வாழத்
தகுதியுடையவனாக வேண்டும் என்பதேயாகும். அன்றியும் கல்வி கற்பிக்கும்
கடமையில் இருக்கும் ஒவ்வொருவரும் கல்வியின் அவசியத்திற்கு இந்தக்
காரணங்களைத்தான் சொல்லுகின்றார்கள். கற்பிக்கப்படுபவர்களும் இந்த எண்ணத்தின்
மீதுதான் தாங்கள் கற்பதாக கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கல்வியின் பயன்
இந்த லக்ஷியத்திற்கு அனுகூலமாயிருக்கின்றதா என்பதை சற்று யோசித்துப்
பாருங்கள்.
பொதுவாக, எந்த தேசியத்திலுமே மக்களுக்கு கல்வி கற்பிக்கும் பொருப்பில்
இருப்பவர்கள் எல்லோரும் கல்வி போதிக்கும் விஷயத்தில் ஒருவிதமான உள்
கருத்தை வைத்துதான் அதை கல்வியின் மூலம் போதிக்கும் முயர்ச்சியில் இருந்து
வருகின்றார்கள். அந்த மாதிரியான உள் கருத்தை போதிப்பதில் கல்வியானது
மக்களுக்கு அறிவுக்கும் வாழ்க்கையில் சுதந்திரமாய் வாழ்வதற்கும் பயன்படுகின்றது
என்கின்ற கொள்கையை விட தாங்கள் கொண்ட உள் எண்ணத்தையே மிக
முக்கியமாய் கருதுகின்றார்கள். உதாரணமாக ஒரு தேசத்தார் தேசபக்திக்கு ஏற்ற கல்வி
இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். மற்றொரு தேசத்தார் மத பக்திக்கு ஏற்றதான
கல்வி வேண்டுமென்று கருதுகிறார்கள். மற்றொருவர் வீரம் ஏற்பட வேண்டுமென்று
கருதுகிறார்கள். இன்னொருவர், அந்த நாட்டு பழமையான பழக்க வழக்கம் ஏதோ
ஏற்படூவதற்குத் தகுந்ததாயிருக்கவேண்டூமென்று கருதுகின்றார்கள். மற்றும் சிலர்
கடவுள் பக்தி புகட்டுவதற்கு அனுகூலமாய் பார்க்கின்றார்கள். இப்படியாகவே பல
உட்கருத்துகளை பிரமாதமாய் கருதி கல்வி முறை ஏற்படுத்துவதில் கல்வியின்
உண்மையான பிரயோஜனம் ஏற்படாமலே மறைந்து போய்விடுகின்றது.
கல்வியும் மதமும்
இந்தக் காரணங்களால் கல்வி கற்றவர்கள் எல்லாம் அறிவாளிகளாய்
இருக்கமுடியாமல் எந்த உள் காரணத்தை வைத்து கற்பிக்கப்பட்டார்களோ அதற்கு
மாத்திரமே பயன்படுகின்றவர்களாக ஆகிவிடுகின்றார்கள். கல்வி கற்பிப்பதில்
இக்குறைபாடுகள் தவிர மற்றொரு பலமான கெடுதி என்னவென்றால், கல்வி
கற்பிப்பதில் மதத்தின் ஆதிக்கம் வந்து புகுந்து அறிவுக் காக கல்வி என்பது மாறி
முட்டாள் தனமும், விசாரணைஅற்ற தன்மையும் வருவதற்கே கல்வி
பயன்படுூம்படியாக ஆகிவிடுகின்றது. இது இன்று உலகத்தில் இரண்டொரு தேசம் தவிர
மற்ற தேசங்களிலெல்லாம் நடந்து வரும் சம்பவமாகும்.
இதற்கு காரணமென்ன வென்றால், கல்வியின் பொருப்பு எல்லாம்
மதங்களினுடையவும், மத ஸ்தாபனங்களினுடையவும் ஆதிக்கத்தில் சிக்கி
மதபோதகர்கள், மதகுருக்கள், மதத்தலைவர்கள் ஆகியவர்களால் நடத்தப் பட்டி
வருகின்றவைகளாய் இருப்பதே காரணமாகும்.
மதத்திற்கும், உலக இயற்கைக்கும் எப்போதுமே சம்பந்தம் இருப்ப தில்லை. ஏனெனில்
அனேகமாய் எல்லா மதங்களுமே உலக இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை
வழிமரித்து கண்மூடித்தனமான செயர்க்கையில் திருப்புவதையே ஜீவநாடியாய்
கொண்டிருக்கின்றது. அதனால் மதம் கலந்த படிப்பால் இயற்கை அறிவுக்கும்
ஆராய்ச்சிக்கும் இடமில்லாமலே போய் விடுகின்றது. எப்படி எனில் மதங்கள்
என்பவைகள் எல்லாம், ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன் இருந்தே
காணப்படுபவைகள் ஆகும்.
ஆகவே, மத சம்பந்தமான கொள்கைகள், அபிப்பிராயங்கள், முதலியவைகள் எல்லாம்
அந்தக் காலத்திய உலக நிலை, அறிவு நிலை, ஆராய்ச்சி சவுகரிய நிலை, கல்வி நிலை
ஆகியவைகளுக்கு ஏற்றவை களாகவே இருக்கும். ஆதலால் அவை இந்தக்கால அறிவு,
ஆராய்ச்சி சவுகரியம் முதலியவைகளுக்கு ஏற்றதாக இருக்க முடியாது. இந்த
குறைபாடானது உலக தோற்றத்தின் – மனித வாழ்க்கையின் ஒவ்வொரு தன்மையிலும்
இருக்க வேண்டியதாகிவிட்டது. ஆதலால் கல்வியும் மதமும் கலந்தால் அறிவு
சூன்யமாக வேண்டியதைத் தவிர வேறில்லை.
பகுத்தறிவும் – மதமும்
உதாரணமாக தற்கால நிலைமையின் பயனாய் ஏற்பட்ட ஆராய்ச்சி சவுகரியத்தை
கைகொண்ட ஒரு வான சாஸ்திரி கிரகணத்திற்கு காரணம் சொல்லுவதாய் இருந்தால்,
அவன் பூமியுடையவும், கூரியனுடையவும் நடப்பைக் கொண்டு கணக்கு போட்டுூ பார்த்து
ஒன்றின் நிழலால் மற்றொன் றின் ஒளி இன்ன காலத்தில் இன்ன அளவுக்கு
மறைக்கப்படுகின்றது என்று சொல்லுவான். இதே விஷயத்தைப் பற்றி மத
சாஸ்திரியை கேட்டால் அவன் சூரிய, சந்திரன்களுக்கு ஏற்பட்ட சாபத்தின் பயனாய்
றாகு,கேது என்னும் இரண்டூ கெட்ட கிரகங்களால் ஏற்படும் பீடைகள் என்று
சொல்லுவான்.
இதில் இருக்கும் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், ஒரே ஆசாமி
வானசாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக்கும்போது பூமியின் நிழலால்
மறைக்கப்படுகின்றதென்றும் மத சாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக்கும்போது
சூரியன், சந்திரன் என்னும் தேவர்களை றாகு,கேது என்னும் பாம்புகள் விழுங்குகின்றன
என்றும் சொல்லுவான்.
இதுமாத்திரமல்லாமல் வானசாஸ்திரியாய் இருந்து சூரியக்கிரகணத் தன்மையைப்
பிரதியட்சப் பாடமாக சில சாதனங்களைக் கொண்டு பிள்ளை களுக்குப் பாடம்
கற்புவித்துவிட்டு விட்டுக்குப் போனவுடன் றாகு, கேது பாம்புகள் விழுங்குகின்றன
என்பதற்குத் தகுந்தபடி தோஷ பரிகாரத்திற்கு ஸ்நானம் செய்யவும் தற்பணம்
செய்யவும் சங்கல்பம் செய்து கொள்ளவும் சாந்தி செய்யவுமான காரியத்தில்
ஈடுபடுகின்றான். ஆகவே கல்வியுடன் மதத்தையும் கலக்குவதால் மனிதனுடைய
பகுத்தறிவும் அறிவு சுதந்திரமும் எவ்வளவு கேவலமான நிலைமைக்கு வந்து விட்டது
என்பதை நினைத்துப் பாருங்கள்.
அதிலும் நமது மதசம்பந்தமான அபிப்பிராயங்களும், குறிப்புகளும் மிகமிகப்
பழமையானதினால் காட்டுமிராண்டித்தனமான காலத்து எண்ணங்களையும் அதன்
முடிவுகளையும் இன்று எவ்வளவோ தெளிவான காலத் தில் கட்டிக்கொண்டு
அழுவதுடன் அதைக் கல்வியுடன் கலக்கி கல்வியையே பாழ்படுத்தி விட்டோம்.
உபாத்தியாயர்கள்
இன்றைய கல்வியில் முக்கியமாக நமது நாட்டுக் கல்வியில் இருக்கின்ற ஆபத்தும்
பயனற்ற தன்மையும் எதனால் என்று பார்ப்போமானால் நமது கல்வி போதகர்கள்
எல்லாம் மதத்தின் சாக்கினால் மேன்மையடைந்து வருகின்றவர்களாகவே ஏற்பட்டு
விட்டதாகும். மதம் என்னும் உலோகத்தினால் ஒரே அச்சில் உருக்கி வார்க்கப்பட்ட
உருவங்களேதான் இன்று பெரிதும் உபாத்தியாயர்களாக அமைந்து இருக்கின்றார்கள்.
இம்மாதிரி உபாத்தியாயபர்களிடம் படிக்கும் பிள்ளைகளுக்குக் கல்வியினால் எப்படி
அறிவும் சுதந்திர ஞானமும் உண்டாக முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள். அறிவு
வேறு மதம் வேறு என்று பிரித்துவிட வேண்டும். அறிவை உண்டாக்கி விட்டூ பிறகு
அந்த அறிவின் மூலம் மதத்தைக் கொள்ளும்படி செய்ய வேண்டும். அப்படிக்கில்லாமல்
மதத்தைப் புகுத்தி அதன் மூலம் அறிவை வளரவிடாமல் செய்து விட்டால் சுதந்திர
ஞானம் எப்படி ஏற்படும்?
இரண்டும் இரண்டும் ஐந்து என்றால் எப்படி ஐந்து? என்று கேள்க் கக்கூட உரிமை
இல்லாத முறையில் கல்விகற்பித்தால் கணக்கில் ஒரு மனிதன் தேர்ச்சி பெற
முடியுமா? அதுபோலவே இயற்கை விஷயங்களில் காட்டுமிராண்டிக் கால முதல் கர்ண
பரம்பரையாக கேட்டு வந்த சேதியையே சொல்லிக்கொண்டு அதையே போதித்து
வந்தால் அதன் மூலம் எப்படி இயற்கை அறிவு ஏற்படுத்த முடியும்?
பிள்ளைகளுக்கு சுதந்திர ஞானம் பரவச்செய்யும் கல்விக்காக சில தப்புகள் செய்ய
வேண்டி வந்தாலும் அனுமதிக்கத்தான் வேண்டும். ஆனால் அத்தப்பிதத்தை
அனுமதிக்கும் முறையில் வேண்டுமானால் நாம் சற்று ஜாக்கிரதையில் இருந்து
அத்தப்பிதத்தினால் ஏற்பட்ட பயனைக் கொண்டூ பிரத்தியட்ச அனுபவ அறிவு பெறத்
தகுதியாக்க வேண்டும். உபாத்தியாயர்களின் புத்திசாலித்தனத்தை இங்குதான் பார்க்க
வேண்டுமேயொழிய எதிரொலிபோல் கூப்பாடு போட்டு உறுப்போடவும்
கண்மூடித்தனமாய் விஷயங்களைப் பதிய வைக்கவும் சிறிதும் இடம் கொடுக்கக்
கூடாது. ஆகவே நமது கல்வியின் ஜீவநாடி எல்லாம் லக்ஷியத்திலும் போதனா
முறையிலும் தான் இருக்கின்றது. உபாத்தியாயர்கள் பகுத்தறிவாளர்களாய் இருக்க
வேண்டும். அறிவின் முடிவின்படி நடப்பவர்களாய் இருக்க வேண்டும்.
பிரார்த்தனை
இன்று இங்கு இந்த விழா துவக்கப்படூமுன் நிகழ்ச்சி குறிப்பில் குறிப்பிட்டிருந்த
பிரார்த்தனை என்னும்பேரால் ஒரு பொய் நடிப்பு நடிக்கப் பட்டதானது உங்களுக்குத்
தெரியும். பிரார்த்தனை என்று தலைவர் சொன்னவுடன் சில பிள்ளைகள் வந்தார்கள்,
கைகட்டினார்கள், கண்களை மூடிக் கொண்டார்கள், “ஜனகணமன….” என்று எதையோ
சொன்னார்கள். அது போலவே சில பெண்கள் வந்தார்கள். கைகட்டினார்கள்.
கண்மூடினார்கள். ஏதோ பாஷையில் எதையோ சொன்னார்கள். இதற்கு பெயர்
பிரார்த்தனையாம். இது பக்திக்காக செய்யப்படுவதாம், மேலும் இது கடவுளுக்கு
ஆகவாம், நண்பர்களே. இதில் ஏதாவது அறிவோ நாணையமோ இருக்கின்றதா?
என்பதை நிதானமாய், பொறுமையாய் யோசித்துப் பாருங்கள். தயவு செய்து
ஆத்திரப்படாதீர்கள்.
கடவுள் என்பதும் பக்தி என்பதும் பிரார்த்தனை என்பதும் எவ்வளவு
முக்கியமானதாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டுமென்று சொல்லி
வருகின்றீர்களோ அந்தக்குணம் எல்லாம் மேல் குறிப்பிட்ட இந்த பிரார்த்தனையில்
இருந்ததா? பாருங்கள். சாதாரணமாக கிராமபோனுக்கு உள்ள அறிவு போன்று
சிறுவர்கள் அவர்களுக்கும் அவர்களுக்கு இந்த பிரார்த்தனைப் பாட்டு சொல்லிக்
கொடுத்தவர்களுக்கும் புரியாத ஒரு பாட்டை இந்த சபையில் உள்ள சுமார் ஒரு
ஆயிரம் பேருக்கும் புரியாத பாஷையில் நாடகத்தில் நடிப்பதுபோல் வந்து
சொல்லிவிட்டு போவது என்றால் இதற்கு சமமாக எதை சொல்லுவது?
அநேகமாக நமது பிரார்த்தனைகள் என்பதெல்லாம் புரியாத பாஷை, புரியாத சொற்கள்,
புரியாத கருத்துக்கள் கொண்ட பாடல்களாகவும் வாக்கியங்களாகவும் இருக்கின்றனவே
தவிர பக்தி என்பதற்கு பொருத்தமானதாய் இருக்கின்றதா? பாருங்கள். எந்த பக்தி
பாட்டும் சங்கீத பிரதானியத்திலும், இலக்கண இலக்கிய பிரதானியத்திலும், வேஷப்
பிரதானியத் திலும், சடங்குப் பிரதானியத்திலும் இருக்கின்றதே தவிர உண்மை
பிரதானியத்தில் சிறிதாவது இருக்கின்றதா? பாருங்கள். இந்த மாதிரிவேஷமுறையில்
இவ்வளவு சிறு குழந்தைப் பருவத்தில் இருந்தே புகுத்தப்பட்ட இந்த பக்திக்கு ஏதாவது
ஒரு துரும்பளவு யோக்கியதையாவது இவர்களது பிற் கால வாழ்வில் உண்டாகிறதா?
என்று யோசித்துப் பாருங்கள்.
மற்றும் இதிலிருந்து அக்குழந்தைகளுக்கு ஒரு பித்தலாட்டத்தையும் நாணையக்
குறைவையும் பக்தி என்னும் பேரால் புகட்டினவர்களானோமா? இல்லையா? என்று. யோசித்துப் பாருங்கள்.
பெண்கள்
அன்றியும் இந்தமாதிரியான மதம் கலந்த கல்வியானாலும் வேஷத் தன்மையானாலும்
நமது பெண்கள் நிலையும் மிகவும் மோசமாகி விடுகின்றது. அவர்கள் மதத்தையும்
பக்தியையும் வாழ்க்கையில் பிரமாதப் படுத்தி அதனால் பெண் சமூகம் முன்னேறவே
மார்க்கம் இல்லாமல் செய்து கொள்ளுகின்றார்கள். பெண்களை இன்றைய தினம் ஒரு
உபாத்தியாயராக வாவது இருக்கக்கூடிய நிலைக்கு கொண்டு வந்தது மதமும் பக்தியும்
அல்லவே அல்ல. ஆனால் மதமும் பக்தியும் தான் அவர்களை இதுவரை
அடிமைகளாக்கி வைத்திருந்தது. அவையெல்லாம் மாறி அவர்களுக்கு சிறிதளவாவது
சுதந்திரமேற்படக் காரணம் மதத்தை அலட்சியம் செய்து செய்யப்பட்ட சீர்திருத்த
பகுத்தறிவு உணர்ச்சியல்லவா? அப்படிப்பட்ட பெண்மக்கள் இப்போது சிறிது விடுதலை
பெற்று உபாத்தியாயரான பிறகு தங்கள் அடிமைத் தனத்திற்கு காரணமாய் இருந்த
மதத்தை பிள்ளைகளுக்கு கல்வியுடன் புகுத்துவார்களானால் அவர்களை மத
சம்பிரதாயத்தில் ஈடுபடுத்துவார்களேயானால் இவர்களிடம் நமது பிள்ளைகளை
ஒப்புவிக்கலாமா? என்பது பயமாகவே இருக்கின்றது.
இப்பெண்கள் கண்மூடித்தனமாய் மதத்தில் ஆழ்ந்து கல்வியோடு அதை கலக்கி
குழப்புவதிலிருந்து அவர்கள் மருபடியும் அடுப்பூதவும், சட்டி சுரண்டவுமான
உலகத்திற்கு போக அஆசைப்படுகின்றார்கள் என்றுதான் விளங்குகின்றது. இனி
பிள்ளைகளுக்கு கல்வி போதிக்கும் வேலை முழுவதும் பெண்களுக்கே கொடுக்க
வேண்டும் என்று எண்ணிய என் போன்றவர்கள், மனதெல்லாம் பெண்
உபாத்தியாயர்கள் நிலைமையைப் பார்த்த பிறகு மனம் பயப்படுகின்றது.
ஆகவே, பெண் உபாத்தியாயர்கள் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமேயொழிய
ஆண் உபாத்தியாயர்களை பின்பற்றக்கூடாது என்று கேட்டுக் கொள்ளுகிறோம்.
இல்லாதவரை தங்கள் பழய தொழிலுக்காவது போய் விடவேண்டும். குழந்தைகளை
கெடுத்து விடக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
தேசியம்
தவிர இந்த லக்ஷணத்தில் உள்ள கல்வியோடு இப்போது வரவர தேசபக்தி என்பதாக
ஒன்று புகட்டப்பட்டு விடுகின்றது. இது அறிவு வளர்ச்சிக்கு மற்றொரு ஆபத்தான
காரியமாகும். கடவுள் பக்தி, மத பக்தி ஆகியவைகளைப் போலவே இந்த தேச பக்தியும்,
மனிதனின் அறிவு வளர்ச்சியை நாசமாக்கி விடுகின்றது. அதிலும் நமது நாட்டு
தேசபக்தியோ நினைப்பதற்கே பயங்கரமானதாய் இருக்கின்றது. தேசபக்தியும்,
தேசீயமும் பழமையைப் பார்த்துக் கொண்டு பின்னால் போகப் பார்க்கின்றதே தவிர
முன்புரம் திரும்பிப் பார்ப்பதில்லை. முற்போக்கில் கவலை கொள்வதில்லை.
தேசியத்திற்கும் புதியதுக்கும் ஜென்மப் பகையாய் இருந்து வருகின்றது. தேசீயம்
என்றாலே பழமை என்றே கருதப்பட்டூ விட்டது. புதுமை என்றாலே தேசத் துரோகம்
என்றாய் விட்டது.
ஆகவே, கல்வி என்று பேர் வைத்து அதன் சாக்கில் மதத்தை போதித்து தேசியம் என்ற
உணர்ச்சியையும் அதன் மூலமாகவே ஏற்றி விட்டால் குரங்குக்கு கள்வார்த்தது போல்
தான் ஆகுமே தவிர அங்கு பகுத்தறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், முற்போக்குக்கும்,
சுதந்திரத்துக்கும் இடமே இல்லாமல் போய்விடும். இந்தக் காரணம் தான் உலகத்தில்
இந்தியாவுக்கு மாத்திரம் கீழ்படியில் முதல் ஸ்தானம் கிடைத்திருக்கின்றது.
முடிவுரை
ஆகவே, கல்வி கற்பிப்பதை விட கல்வியின் லக்ஷியத்தையும், போதனையின்
தன்மையையும் மாற்ற வேண்டியது இந்தியாவுக்கு மிகவும் அவசியமானதாகும்
என்பதே எனது அபிப்பிராயம். நண்பர்களே! ஏதோ கல்வி என்னும் தலைப்பின் கீழ்
எனக்குப் பட்ட, நான் சரியென்று கருதிய சில விஷயங்களை தங்களுக்கு
விண்ணப்பித்துக் கொண்டேன். இவற்றை நன்றாய் அலசி பார்க்க வேண்டுமாயும்,
அதாவது சரி என்று பட்டால் மாத்திரம் எடுத்துக் கொள்ளும்படியாகவும்
தப்பாயிருந்தால் தயவு செய்து உடனே மறந்து விடுங்கள் என்றும் கேட்டுக்
கொள்ளுகின்றேன்.
(குறிப்: 17.09.1931 அன்று ஈறோடு மகாஜன ஸணைஸ்௯ூலில் ஸ்டூீடன்ஸ் விட்டரறி
அசோசியேஹன் என்னும் மாணவர் இலக்கிய சங்க வர.ட ஆரம்ப நாள் விழாவில்
ஆதிறிய உறை
(குடி அரசு – சொற்பொழிவு – 27.09.1931)
கல்வி முறையில் மாற்றம் தேவை
நம் நாட்டு மாணவர்கள் கல்விப் படிப்பினால் எந்தவிதமான பகுத்தறிவையும் எதையும்
ஆராய்ந்து அறியும்படியான தன்மையையும் அடைய முடிவதில்லை. அவர்கள்
படிக்கின்ற படிப்பினால் பிற்கால வாழ்க்கையைத் தரித்திரமின்றி நடத்த வேண்டும்.
அதற்காக, ஏதாவது உத்தியோகத் துறையிலோ, வேறு பணம் சம்பாதிக்கின்ற
வழியிலோ பயன்பட வேண்டும் என்பதற்காகவே படிக்கிறார்கள். பெற்றோர்களும்
தங்களுடைய குழந்தைக்கு அறிவு வளர வேண்டும் என்ற காரணத்திற்காகப் பள்ளிக்கு
அனுப்புவதில்லை; படித்துப் பட்டம் பெற்று வந்ததும் ஜீவனத்துக்கு வேண்டிய
முறையில் எங்காவது உத்தியோகம் கிடைக்குமா என்ற நோக்கத்தோடேயே
பெற்றோர்கள் முயற்சிக்கிறார்கள்.
ஆகையால், அவர்கள் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் கூறுகின்ற ஒவ்வொன்றையும்
அப்படியே மனப்பாடம் செய்து, அதையே பிறகு அவர்கள் கேட்கும்பொழுது
சொல்லுவதாலும், எழுதுவதாலும் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். இந்த முறையில்
ஒரு மாணவன் எவ்வித உயர்ந்த பட்டத்தை அடைந்த படிப்பாளி என்று
கூறப்பட்டாலும், அவனுக்குப் போதிய பொது அறிவும், உலகியலில் தகுந்த ஞானமும்
அடைந்தவனாகக் கருதப்பட மாட்டான். ஆசிரியர் சொல்லுவதைத்தான் கேட்க
வேண்டும்; புத்தகத்திலுள்ளதைத்தான் மனப்பாடம் செய்து திரும்பவும் ஒப்புவிக்க
வேண்டும் என்பது, நம் நாட்டுக் கல்வி முறை. இக்கல்வி முறையினால்
மாணவர்களுக்கு அறிவு புகட்டப்படுவதால் அவர்கள் பிற்காலப் பழக்க
வழக்கங்களுக்கும், நல்லொழுக்கத்திற்கும் தகுதியுடையவர்களரக ஆகமாட்டார்கள்.
ஆனால், பலர் பலவிதமாக அறிவு, ஞானம் என்பதைக் கருதுகிறார்கள். பெரும்பாலோர்
ஞானம் என்பதும், அறிவு என்பதும் கடவுளைக் காண்கிறதும், மோட்சத்தை
அடைவதும்தான் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் குழந்தையிலிருந்தே நம்
பிள்ளைகளுக்கு ஊட்டப்பட்டு வருவதால், மேன்மேலும் ஒரு மாணவன்
தெளிவற்றவனாகவே ஆக்கப்படுகிறான். பொதுவாகவே மாணவன் அதற்கு இடம்
கொடுக்காமல் தன்னை இன்னான் என்றுணர்ந்து “நம் பருவம் எதையும் அறிந்து
கொள்ளுகின்றதும், தெரியாதவைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறதுமான
மாணவப் பருவம்’ என்பதை உணர வேண்டும். இவ்வித எண்ணமுள்ள மாணவன்தான்
பிற்காலத்தில் எதையும் அறிந்த அறிவாளியாக விளங்க முடியும்.
மேல்நாட்டு மாணவர்கள் எல்லோரும் இவ்வித எண்ணம் கொண்டவர்களாக
இருப்பதாலும், அவர்களுக்கு இந்தப்படியே பயிற்சி அளிப்பதாலும்தான் அவர்கள்
எதையும் ஆராயும் தன்மையுள்ளவர்களாகவும், மென்மேலும் ஒவ்வொன்றையும்
எடுத்துக் கொண்டு இது ஏன்? எப்படி? எதற்காக? இதனால் என்ன செய்ய முடியும்?
என்று இப்படிப் பலவிதமான கேள்விகளுக்குப் பதில் தெரிந்து கொண்டே பார்த்ததால்
இன்றைக்கு அவர்கள் அறிவாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் விளங்குகிறார்கள்.
மற்றும் பல பொது விஷயங்களிலும் நம் நாட்டு மக்களைப் போல் இல்லாது,
எவ்விடத்திலும் பிறருடன் நன்முறையில் பழகுகிறார்கள். ஆனால், நம் நாட்டு
மாணவர்களுக்குப் பொது அறிவைப் புகட்டுவதற்கு வேண்டிய சாதனங்கள் ஒன்றும்
இல்லாததாலும், நம் நாட்டுக் கல்வி முறையில் இவை கற்பிக்கப்படாததாலும்
அவர்கள் வயதுவந்தவர்களானதும் பொது இடங்களிலும், உலகத்தோடும்
நன்முறையில் பழகுவது கிடையாது. புகைவண்டி நிலையம் சென்றால், எவன் ஒருவன்
முதலில் டிக்கட் வாங்குகிறானோ, அவன்தான் சமர்த்தன் என்று புகழப்படுகிறான். புதிய
சினிமா இன்றுதான் முதலில் வெளியிடப்படுகிறது என்றால் அன்றைக்கு படத்திற்கு
முதல் டிக்கட் வாங்குகிறவன் அதிபராக்கிரம புத்திசாலி என்று போற்றப்படுகிறான்.
ஏதாவது ஒரு உண்மையை மறைக்க ஆயிரம் பொய்களைக் கூறித் தப்பித்துக்
கொண்டால் அவன் அறிவிற் சிறந்தவன்; அவன் கூறியது பொய்யானாலும் தன்
புத்தியின் பூகத்தால், வெகு சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டான் என்றுதான்
கூறுவர்.
நன்னடத்தை என்பது என்னவென்று பார்த்தால் ஒரு மனிதனிடம் நீங்கள் என்ன
எதிர்பார்க்கிறீர்களோ, நீங்கள் மகிழ்ச்சியடையவும், திருப்தியடையவும் அவன் என்ன
செய்யவேண்டுமோ, அதே முறையில் நீங்களும் பிறரிடம் பழகும்போது அவர்களுக்கு
மகிழ்ச்சியையும், திருப்தியையும் உண்டாக்கும்படியான வழியில் நடந்து
கொள்வதாகும். உங்களிடம் ஒருவர் நடந்து கொள்வதிலிருந்து உங்களுக்குக்
கஷ்டத்தையும், மனக்கலக்கத்தையும் அதிருப்தியையும் உண்டாக்குகிற முறைகள்
எவை எவையென்று தோன்றுகிறதோ, அவையவைகளை விட்டுவிட வேண்டும். இது
ஒரு சுலபமான கருத்து. இதை யாவரும் கைக்கொள்ளுவதால் நல்லறிவும், பொது
அறிவும் அடைந்தவர்களாகலாம்.
(0771.1954 அன்று திருச்சியில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய செரற்பொழிவு)
விடுதலை – 12.11.1954
கல்வி
தோழர்களே!
கல்வி என்னும் விஷயமாய் நான் பேசுவது என்றால், எனக்கு அதிக தைரியம்
வேண்டும். ஏனெனில், மக்கள் பெரும்பாலோர் கல்வி என்பதற்கு என்ன பொருள்
கொண்டிருக்கிறார்களோ அந்தக் கல்வி எனக்குக் கிடையாது. பிழையற எழுதக்கூடத்
தெரியாதவன் – அவையடக்கமாக நான் இதைச் சொல்லவில்லை. உண்மையிலேயே
எனக்கு வல்லினம், இடையினம் கூடச் சரியாகப் பிரயோகிக்கத் தெரியாது. அது
மாத்திரமல்ல, ஒரே சந்தர்ப்பத்தில் ஒரு வாக்கியத்தில் ஒரு வார்த்தை இரண்டு
தடவை வருமானால் ஒரு தடவை வல்லினம் போடுவேன்; மறுதடவைக்கு
இடையினம் போடுவேன். அந்த மாதிரியான நான், உங்கள் முன் கல்வி என்பதைப்
பற்றிப் பேசுவது என்றால் அது எவ்வளவு கஷ்டமான காரியம் என்று பாருங்கள்.
ஆனாலும் உங்கள் விருப்பத்திற்கும் எனது ஆசைக்குமாக ஏதோ என்
அபிப்பிராயத்தைக் கூறுகிறேன். நீங்கள் அதை அப்படியே ஒப்புக் கொண்டுவிடாமல்,
நன்றாய் ஆலோசித்து கொள்வது கொண்டு, தள்ளுவதைத் தயங்காமல் தள்ளி
விடுங்கள்.
கல்வி கல்வி என்றால் என்ன? பள்ளிக்கூடத்தில் சர்க்கார் பள்ளிக்கூட அதிகாரிகள்
ஏற்படுத்தின திட்டப்படி அவர்கள் குறிப்பிடும் விஷயங்களைக் கொண்ட புத்தகங்களை
உருப்போட்டு பரிட்சை கொடுத்து தேர்வு அத்தாட்சி பெறுவதையே அனேகம் பேர்
கல்வி என்று கருதி இருக்கிறார்கள். அன்றியும் இப்படிப்பட்ட கல்வி கற்பது என்பது
அறிவு விளக்கத்திற்காக என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே கல்வி என்பதற்கு
கருத்து ஒன்று, சொல்லு மற்றொன்று என்று சொல்லக் கூடியதாய் இருப்பதோடு
கல்வியின் பயனாய் நடந்து கொள்ளும் நடத்தை மற்றொன்றாக இருக்கிறது.
அதாவது கல்வி என்பது வயிற்றுப் பிழைப்புக்கும் எப்படியாவது வாழ்க்கை
நடப்புக்கும், பெருமைக்கும் தான் பயன்படுத்தப்படுகின்றது. இப்படி மூன்று விதமாகப்
பயன்படுத்தப்படும் கல்வியில் மக்களுக்கு ஏற்படும் பணச் செலவும், நாள் செலவும்,
ஊக்கச் செலவும் அளவு சொல்ல முடியாததும் சாதாரண மக்கள் தாங்க முடியாததும்
ஆகவே இருக்கிறது.
கல்விக்கு லட்சியமில்லை
பொதுவாகவே நான் சொல்லுவேன் நம் மக்களுக்கு கல்வி கற்பிப்பதில் நமக்கு
லட்சியம் ஒன்றுமே கிடையாது. யார் எதைப் படிக்க வேண்டும்? படித்த படிப்பு
எதற்குப் பயன்படும்? என்கின்ற ஒரு யோசனையே பெற்றோர்களுக்குக் கிடையாது.
படிப்பது என்பது எதையோ படிப்பதும் படிப்பு வரக்கூடிய பிள்ளையாய் இருந்தால்
படித்துக் கொண்டே போவதும், படிப்பு வரா விட்டால் நிறுத்திவிடுவதும், படித்துப்
பட்டம் பெற்றுவிட்டால் அன்று முதலே வேலை தேடித் திரிவதும் ஏதோ கிடைத்த
வேலையை ஒப்புக்கொண்டு அதன் மூலம் வாழ்க்கை நடத்துவதும், தன் தனிப்பட்ட
குடும்பம் முன்னுக்கு வரப்பார்ப்பதும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதும்
ஆகிய இவைதான் கல்வியின் தன்மையாய் இருக்கிறது. எந்த வேலைக்கு எவ்வளவு
படிப்பு வேண்டும் என்பதில் மனித னுக்கு சிறிதும் ஞானமே கிடையாது – தனிப்பட்ட
மனிதனின் வாழ்க்கை நலத்திற்கே கல்வியைப் பயன்படுத்துவது கல்வியின் பயனாக
ஆகிவிட்டதால் கல்வி கல்லாத மக்கள் என்பவர்களுடைய நாணயம், ஒழுக்கம்
என்பதைவிட கற்றவர்கள் என்பவர்களுடைய நாணயமும் ஒழுக்கமும் மிகமிக
மோசமாகவே இருக்கும்படி படித்த அநேகர் நிலைமை ஏற்பட்டுவிட்டது. கல்வி,
தந்திரத்திற்கும் மற்ற மக்களை ஏய்ப்பதற்கும் கற்றிருக்கிறோம் என்பதற்கு ஆக
சராசரி மனிதத் தன்மையைவிட பல மடங்கு தங்களைப் பெரியவர்களாக எண்ணிக்
கொள்ளவும் நடவடிக்கையில் சராசரி மனித நாணயத்தை, நடத்தையைவிட
பலமடங்கு மோசமாய் நடக்கவும் ஏற்பட்டுவிடுகிறது.
கல்வி மக்களைச் சுரண்டூகிறது
இன்றையக் கல்வி, கல்வியின் பேரால் மற்ற மக்களைச் சுரண்டுவதற்கே பயன்படக்
கூடியதாக ஏற்பட்டுவிட்டதால் கல்வி கற்றவர்கள் என்பவர்களுக்கு மற்ற மக்கள்
நலத்தைப் பற்றிக் கவலையே இல்லை. அதிலும் இராஜதந்திரம், அரசியல் என்கின்ற
இரண்டு தலைப்பின் கீழ் எவ்வளவு அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டாலும்
குறை கூறப்படுவதில்லை. ஆதலால் கற்றவர்கள் என்பவர்கள் தங்களது நாணயமற்ற
தன்மையை நடத்திப் பயன் பெற அரசியலையும் இராஜ தந்திரத்தையும் கையாள
மோகம் ஏற்பட்டூ விடுகின்றது. ஆகவே இன்றைய கல்வி அறிவுக்கும்,
ஒழுக்கத்திற்கும், அன்புக்கும் பயன்படுவது இல்லை என்பது மாத்திரமில்லாமல் பல
கேடுகளுக்கும் காரணமாக இருக்கின்றது.
இதில் மற்றொரு தன்மை என்னவென்றால் கல்வி கற்பது என்பது இன்று
செல்வவான்களுக்கும் செல்வ சவுகரியம் இருப்பவர்களுக்கும் எள்ளளவும்
ஒழுக்கமும், நாணயமும், மானமும் இல்லாமல் பணம் தேடத் துணிகிற
வர்களுக்கும்தான் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடிகின்றது . சிறிய
பணக்காரர், சிறிய வரும்படிக்காரர், சராசரி வாழ்க்கைக்காரர்கள் நாணயத்துக்கும்,
மானத்துக்கும் பயந்து வாழ்க்கை நடத்துகிறவர்கள் ஆகியவர்கள் தங்கள்
பிள்ளைகளைப் படிக்க வைக்க ஆரம்பித்தார்களே யானால் அவர்கள் மிக்க ஏழ்மைக்
குடூம்பத்தார்களாகவும் தரித்திரக்காரர்களாவும் சதா துன்ப வாழ்க்கை
நடத்துகிறவர்களாகவும் ஆகிவிட நேரிடுகின்றது.
சர்க்கார் நிலை
சர்க்காருக்கு இந்தக் கல்வியைப் பற்றிய ஒரு பொறுப்புணர்ச்சியே கிடையாது என்றே
சொல்லலாம். சாதாரணமாக சர்க்காரின் கல்வித் திட்டத்தின் கருத்து
என்னமாயிருக்குமென்று யூகித்தறியவே முடியாமல் போகிறது. ஆனால் அது எப்படி
முடிகின்றது என்று பார்த்தால் அநாகரிக மக்கள் அல்லது கீழ்த் தர மக்கள்
செல்வவான்கள் ஆகாமல் கஷ்ட வாழ்வு நடத்தும்படி செய்வதற்கு கள்ளுக்கடைகள்,
கூதாடூமிடங்கள், விபசாரி இல்லங்கள் எப்படி இருந்து வருகின்றனவோ அதே போல்
நாகரிக உணர்ச்சி உள்ள மக்கள் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டு வறுமை வாழ்வு
வாழ்ந்துகொண்டூ இருக்கவும் கையில் ஏதாவது ஒரு சிறு அளவும் சேர்த்து வைக்க
முடியாமல் அடிமைத் தன்மைக்கு எப்பொழுதும் தயாராக இருக்கவும் மக்களைக்
கட்டாயப்படுத்துவதற்கு அனுகூலமாக யோசித்துச் செய்யப்பட்ட காரியம் என்றுதான்
கருத வேண்டியிருக்கிறது.
கோவில், பண்டிகை, திருவிழா, சடங்கு முதலியவை களும் பெருவாரியான மக்களை
இந்த நிலைக்குத்தான் கொண்டு போகிறது என்று சொல்லப்பட்டாலும் அது
வருணாசிரம தர்மத்தை நிலை நிறுத்தச் செய்த காரியம் என்னலாம். ஆனால் இந்தப்
படிப்பு முறை அரசியல் ஆதிக்கத்தைக் குறிவைத்து ஒரு கூட்ட மக்களை அரசியல்
அடிமையாக இருப்பதற்கு ஆகச் செய்த காரியம் என்றால் எண்ணத்தில் மாற்றம்
இருந்தால் இருக்கலாமே ஒழிய பயனில் மாற்றம் இருக்காது என்பேன்.
B.A., M.A.,
சர்க்கார் மக்களை 8.௩. 1.8, படிக்க வேண்டும் என்று சொல்வதிலோ, அந்த
யோக்கியதாம்சம் வேண்டுமென்று கேட்பதிலோ, அதற்கு ஆக சர்க்கார் பொருள்
செலவழித்து தாபனம், இலாகா ஏற்படுத்தி இருப்பதிலோ என்ன நியாயமும்
அவசியமும் கண்டு பிடிக்க முடிகிறது என்று கேட்கிறேன்.
சர்க்கார் உத்தியோகத்துக்கு 8. &., வகுப்பு தேர்வு வேண்டியிருக்கிறது. அந்த பி.ஏ.,
தேர்வுக்கு இலக்கியம், பூகோளம், சரித்திரம், கணக்கு, விஞ்ஞானம் (சைன்)
முதலியவை படித்து உருப்போட்டுத் தேரவேண்டி இருக்கிறது. இந்தப்
படிப்புக்காரர்களுக்கு சர்க்கார் கொடுக்கும் உத்தியோகங்களுக்கு அவர்கள் உத்தி
யோகம் பார்க்கும் காலங்களில், அல்லது தன்மைகளில் மேற்கண்ட இலக்கியம்,
பூகோளம், சரித்திரம், கணக்கு, சைன்ஸ் இவ்வளவு தேவை இருக்கிறதா? அல்லது
பயன் படுகிறதா? என்று கேட்கிறேன். தேவை இல்லையென்றால் சர்க்கார் செய்வது
தப்பான காரியமா இல்லையா? என்று கேட்கிறேன். ஒரு முஸ்லிம்
உத்தியோகத்திற்கு வந்தால் அவனுக்கு ஒருமாதிரி யோக்கியதாம்சம் இருந்தால்
போதுமென்றும், ஒரு ஆதிதிராவிடன் வேலைக்கு வந்தால் அவனுக்கு ஒரு
யோக்கியதாம்சம் இருந்தால் போதுமென்றும், ஒரு திராவிடனும் ஒரு ஆரியனும்
(பார்ப்பானும்) உத்தி யோகத்திற்கு வந்தால் அவனுக்கு ஒரு மாதிரி யோக்
கியதாம்சம் இருக்க வேண்டுமென்றும், ஒரு அய்ரோப் பியனுக்கோ அல்லது
ஆங்கிலோ இந்தியனுக்கோ வேறுமாதிரி யோக்கியதாம்சம் இருக்க வேண்டும்
என்றும் தரம் பிரித்திருப்பதின் கருத்து என்ன?
முஸ்லிமுக்கும், ஆதிதிராவிடனுக்கும் சற்று குறைந்த படிப்பு யோக்கியதாம்சம்
போதும் என்று சர்க்கார் ஒரு பத்தி வைத்திருக்கிறார்கள். இந்த இரு சமுகத்தாரும்
திராவிடர், ஆரியர், என்கின்ற இரு சமுகத்தாரை விட அதிபுத்திசாலிகளாகக்
கருதப்பட்டு அவர்களுக்குக் கல்வி யோக்கியதை குறைக்கப்பட்டு இருக்கிறதா?
அல்லது அவர்கள் புத்திசாலித்தனத் துக்கு அவ்வளவு தான் படிக்க முடியும் என்று
கருதி குறைக்கப்பட்டி ருக்கிறதா?
(02.03 124 அன்று ஈரோடு இலண்டன் மிஷன் கம்யூணிட்டி டிரெயினிங் ஸ்கூலில்
கல்வி என்னும் பொருள் புற்ஜி தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு
குடிஅரசு – 01.04.1944