பொன்மொழிகள்

உண்மையான அரசியல் வளர வேண்டுமானால் மக்களிடம் மனிதத் தன்மை வளர வேண்டும். ஒழுக்கமும், நாணயமும் ஏற்பட வேண்டும். மற்றவர்களிடம் அன்பு கலந்து நடந்து கொள்ள வேண்டிய அவசியம் உணரப்பட வேண்டும். இப்பொழுது உள்ள அரசியல் கட்சிகளிடம் இத்தன்மை இருக்கின்றனவா? இவைகளை வளர்க்கவாவது இக்கட்சிகள் பாடுபடுகின்றனவா? இல்லையே; பின் எப்படி உண்மையான அரசியல் வளரும்? ஒழுக்கக்கேடு என்பது மானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒழுக்கமுள்ளவன் மானியாய் இருப்பான்; மானி, ஒழுக்கமுள்ளவனாக இருப்பான்.

பொன்மொழிகள்

ஒரு நாட்டு மக்கள் முன்னேற வேண்டுமானால் அரசியலில் கட்சி – பிரதிக் கட்சி இருக்க வேண்டியதும், அவை ஒன்றுடன் ஒன்று போராட வேண்டியதும் நியாயமும் இயற்கையுமேயாகும். ஆனால், அவ்விதப் போராட்டமானது நியாயமான முறையிலும் ஒருவரை ஒருவர் துஷ்பிரசாரம் செய்யாமலும் இருப்பதே வரவேற்கத் தக்க விசயமாகும். ஒரு கட்சியை மற்றொரு கட்சி தாக்குவதும், துஷ்பிரசாரம் செய்வதும் ஒரு நிமிடமும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாத காரியமாகும். சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கம் மிக அவசியமாகும். ஒழுக்கம் என்பது பிறரைப் பாதிக்கும்படியோ, அயலாருக்குத்… Continue reading பொன்மொழிகள்

பொன்மொழிகள்

வக்கீல்களை எல்லாம் இஷ்டப்படி கொள்ளையடிக்க விடாமல், சம்பளக்காரனாக அரசாங்கமே நியமித்து வாதாடச் செய்ய வேண்டும். வியாபாரிகளை எல்லாம் ஒழித்துப் போட்டு அரசாங்கமே வியாபாரத்தை மேற்கொள்ள வேண்டும். பார்ப்பனர்களை எல்லாம் குற்றப் பரம்பரைச் சாதி ஆக்க வேண்டும். மனிதனுக்கு மனிதன் உதவி செய்ய வேண்டும்; பிறரிடத்தில் அன்பு காட்ட வேண்டும்; பிறருக்குக் கெட்டவனாகக் கூடாது; பிறரை மோசம் செய்யக்கூடாது. இது போன்ற பண்புகள் இன்று மக்களிடத்தில் அறவே இல்லை. எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும், பெரிய பதவிகளைத் தேட… Continue reading பொன்மொழிகள்

பொன்மொழிகள்

மக்களுக்குள் அதிலும் அரசியலில் இறங்கியவர்களுக்குள் ஒருவருக்கொருவர் கருத்து மாறுபாடு அடைவது இயற்கை. நடப்பு வேற்றுமை ஏற்படுவதும் இயல்புதான். நமக்கே சில விஷயங்களில் நாம் செய்தது தவறு, நினைத்தது தவறு என்கிற எண்ணம் தோன்றும்போது மற்றவர்களுடன் மற்றக் காரியங்களில் கருத்து வேற்றுமை ஏற்படுவது இருந்தாலும் மனிதத் தன்மையோடும் பொது நலத்துக்குப் பாதக மின்றியும் நடந்து கொள்ள வேண்டியதே முக்கியமாகும். அறிவு இருப்பது மனிதன் தொல்லையற்றுச் சுகவாழ்வு வாழவும், விஞ்ஞான அதிசய அற்புதங்களைக் காணவும், கடவுளுக்கும் அறிவிற்கும் சம்பந்தமில்லை என்று… Continue reading பொன்மொழிகள்

பொன்மொழிகள்

கடவுள் நம்பிக்கையாளர் என்கின்ற எல்லாச் சோம்பேறிகளும் பிரார்த்தனை என்பதன் பேரால் தங்கள் வஞ்சகத் தொழிலை நடத்திக் கொண்டே உள்ளனர். வாலிபர்கள் ஒரு செல்வாக்கையோ, ஒரு பிரச்சாரத்தனையோ, காதலையோ கண்டுவிட்டால் சுலபத்தில் வழுக்கி விழக்கூடும். செல்வாக்கற்ற காரியத்தில் பற்றாய் இருப்பது மிகச் சங்கடமாகத் தோன்றும். பொது மக்கள் ஆதரவு, புகழ், உற்சாகமான காரியங்களில் இருக்கும் அவா, ஒரு தேக்கமான காரியத்தில் உற்சாகம் காட்ட இடம் தராது. எந்த மனிதனும் மற்றவனுக்கு உபகாரியாயும் கடைசிப்பட்சம் மற்றவனுக்குத் தன்னால் துன்பம் கொடுக்காதவனாகவும்… Continue reading பொன்மொழிகள்

பொன்மொழிகள்

சுயாட்சி என்பது வரி இல்லாமல் நடக்கும் ஆட்சிதான். அப்படிக்கு இல்லாமல் வரி கொடுத்துவிட்டு இன்னது செய் என்று கேட்பது அடிமை ஆட்சிதான். இன்றைய ஜனநாயக ஆட்சியில் பார்ப்பானுக்கு ஒருவன் எதிரியானால் அவன்தான் ஜனநாகயதுக்கு எதிரியாகத் தகுதி இல்லாதவனாகக் கருதப்படுகிறானே ஒழிய பார்ப்பனர் அத்தனை பேரும் சங்கராச்சாரி முதல் சவுண்டி மாமா வரை 100-க்கு 100 பேரும் ஜனநாயகத்தின் ஆச்சாரியப் பீடமாகவே கருதப்படுகிறார்கள். அது போலவே பார்ப்பனர்களுக்கு அடிமைகளான அத்தனை பேரும் மரியாதைக்கு உரியவர்களாகவே ஜனநாயகத்திற்குத் தகுதி உள்ளவர்களாகவே… Continue reading பொன்மொழிகள்