எது வகுப்பு வாதம்?

பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு நீதிக்கட்சிக்கு இந்நாட்டில் செல்வாக்கிருப்பது உண்மையானால், ஆதரவிருப்பது உண்மையானால், ஏன் வரப்போகும் சென்னை மேல்சபைத் தேர்தலுக்குக் கட்சியின் பேரால் ஆட்களை நிறுத்தி வெற்றிபெறக் கூடாதென்றும், எப்பொழுது போட்டியிட ஆள் கிடைக்கவில்லையோ அப்பொழுதே அக்கட்சிக்கு நாட்டில் செல்வாக்கில்லையென்பது விளங்கவில்லையா என்றும் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார் முதல் சாதாரண ஒரு காங்கிரஸ் பேர்வழி வரை கேட்டும், பத்திரிகைகளில் நையாண்டி பண்ணியும் வந்ததற்கு, பெரியார் அவ்வப்போது பல இடங்களில் தக்க பதில் கூறியிருக்கிறார். அதாவது, நீதிக்கட்சியின் பேரால் வரப்போகும் மேல்சபைத் தேர்தலுக்குப்… Continue reading எது வகுப்பு வாதம்?

விஸ்வகர்ம சமுகத்திற்கு பெரியார் விளக்கம்

தென் இந்திய விஸ்வகர்ம சங்கப் பொதுக் காரியதரிசியார் அவர்கள் நீதிக்கட்சியின் தலைவரான நம் பெரியாரிடமிருந்து சில விஷயங்கள் விளக்கப்பட வேண்டுமென்று விரும்பி விடுத்த வேண்டுகோளுக்குப் பெரியார் விளக்கமளித்து அச்சமுகத்திற்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவ்வேண்டுகோள் 14.02.1940ஆம் தேதி விடுதலையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தென் இந்திய விசுவகர்ம சமுக மக்கள் எல்லோரும் நன்கு சிந்தித்து ஒரு முடிவுக்கு வர வேண்டியது இது சமயம் மிகவும் அவசியமாகும். எல்லா சமுகத்தாருக்கும் பொருந்தும் பெரியாரின் பதில் என்னும் வேண்டுகோளானது தென்னிந்திய விஸ்வகர்ம… Continue reading விஸ்வகர்ம சமுகத்திற்கு பெரியார் விளக்கம்

மானமுள்ளவர்களாய் வாழ வேண்டுமானால்?

“முதலில் உன் கண்ணிலிருக்கிற துரும்பை நீக்கிவிட்டு அயலான் கண்ணிலிருக்கும் உத்திரத்தை நீக்கப் பாடுபட வா” – என விவிலிய நூலில் ஒரு பழமொழி உண்டு. அதுதான் இன்று காங்கிரஸ்காரர்கள் தென் ஆப்பிரிக்கா விஷயத்தைக் குறித்து பேசுகையில் நமது ஞாபகத்தில் வருகிறது. ஏன் நாம் இவ்வாறு கூறுகிறோம் என்றால் சென்றவார “சண்டே அப்சர்வர்” பத்திரிகை மலபார் ஜில்லா போர்டார் மலபார் ஜில்லாவில் ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள உணவு விடுதிகளில் இந்துக்களுக்கென்றும், முஸ்லிம்களுக்கென்றும் தனித்தனி இடம் ஒதுக்கி வைத்திருப்பதை ஒழிக்க… Continue reading மானமுள்ளவர்களாய் வாழ வேண்டுமானால்?