கட்டாய இந்தி ரத்து பெரியார் அறிக்கை

இந்தி கட்டாயப் போதிப்பு உத்திரவு மாற்றப்பட்ட சர்க்கார் அறிக்கையைப் பார்த்தேன். இவ்வளவு நாள் பொறுத்தாவது நமது கவர்னர் இந்தி எதிர்ப்பானது இந்நாட்டுப் பெரும் பகுதியான மக்களின் ஆத்திரத்துடன் கூடிய எதிர்ப்பு என்பதை உணர்ந்து கொண்டதற்கும் இப்போது போதித்துவரும் கட்டாய இந்தி போதனை முறை பயனற்றதும் கூடாததும் என்று உணர்ந்து அந்த முறையையும், கட்டாயப் போதிப்பையும் ரத்துச் செய்ததற்கும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் அந்த அறிக்கையின் படி இந்தி இனி இஷ்ட பாடமாக வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டாலும் அதற்காகப் பொது… Continue reading கட்டாய இந்தி ரத்து பெரியார் அறிக்கை

பார்ப்பனரல்லாதார் இயக்கம்

இந்து – முஸ்லிம் பிரச்சினை மிக முக்கியமானதாக விளங்குவதற்குக் காரணம் அவர்களுக்கேற்பட்டிருக்கும் திறமை வாய்ந்த ஸ்தாபனமேயாகும். அவர்கள் ஒற்றுமையாக அதைப் பலப்படுத்தி வருகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக தமிழர்களாகிய நம்மவர்களிடம் ஒற்றுமை இல்லை. அதனால்தான் இந்து – முஸ்லிம் பிரச்சினையைப்போல் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் பிரச்சினை மிக முக்கியமானதாயிருந்தபோதிலும் அதைப் போன்று முக்கியத்துவம் பெறாது இருக்கிறது.முஸ்லிம்களைப் போல பார்ப்பனரல்லாதாரும் ஒற்றுமைப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்காக ஜஸ்டிஸ் கட்சி எப்பொழுதும் போராடி வந்திருக்கிறது. அவர்களது முன்னேற்றத்திற்காக பார்ப்பனரல்லாதார் தொடர்ந்து இவ்வியக்கத்தை நடத்த… Continue reading பார்ப்பனரல்லாதார் இயக்கம்

நீதிக் கட்சி நிலையத் திறப்பு விழா

“இன்று நமது கட்சிக்குப் பெரியார் தலைமை தாங்கியிருப்பதினால் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பதை நாம் காண்கிறோம்” என சென்னை ராயப்பேட்டை பைக்ராப்ட்ஸ் தெருவில் நிறுவப்பட்டிருக்கும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத் திறப்பு விழாவிற்குத் தலைமை வகித்த செட்டிநாட்டு குமாரராஜா எம்.ஏ. முத்தைய செட்டியார் அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டிருப்பதிலிருந்து பெரியார் நீதிக்கட்சியினால் நலமடைந்தாரா? பெரியாரால் நீதிக்கட்சி நலமடைந்ததா? என்ற உண்மையை பொதுமக்கள் இப்பொழுதாவது நன்கு உணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகிறோம். 500 அடி ஆழத்தில் நீதிக்கட்சியை புதைத்து விட்டோம் இனி இந்நாட்டை… Continue reading நீதிக் கட்சி நிலையத் திறப்பு விழா

பெரியாரும் – பிரசாத்தும்!

பார்ப்பனியம் இந்நாட்டில் வேரூன்றியதற்கும், இன்று பார்ப்பனியம் எத்துறையிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கும், பார்ப்பனியத்திற்கு நம் மக்கள் அடிமையானதற்கும், நம் மக்கள் கலையிழந்து மொழியிழந்து, நாகரிகமிழந்து வாழ்வதா – மாள்வதா என்ற நிலையிலிருப்பதற்கும் பார்ப்பனியத்தைப் புகுத்தியவர்கள் தான் அதாவது ஆரியர்கள்தான் காரணமென்றாலும், நம்மவர்களும் அதற்குப் பொறுப்பானவர்கள் என்பதை யாவரும் மறந்து விடக்கூடாதென்றும், நம்மவர் சிலரின் கோழைத்தனத்தினால்தான், நெஞ்சில் உரமில்லாததினால்தான், ஆற்றலில்லாததினால்தான் சுயமரியாதையிழந்து சுயமதிப்பிழந்து வாழ்ந்து வருகின்றோம் என்றும் நாம் பலதடவை எழுதி வந்திருக்கிறோம். பெரியாரும் நம்மவர்கள் தவறினால்தான் சுயமரியாதையிழந்து பார்ப்பனியத்துக்கு… Continue reading பெரியாரும் – பிரசாத்தும்!