விசுவகர்மத் தலைவர் கடிதத்துக்கு பெரியார் பதில்

அன்புள்ள ஐயா அவர்களே! தாங்கள் ஜனவரி 19ஆம் தேதி எழுதிய வேண்டுகோள் கடிதம் பெற்றேன். அதை பொதுமக்கள் அறியும்படி 20.01.1940ஆம் தேதி விடுதலையில் பிரசுரிக்கச் செய்துமிருக்கிறேன். அது விஷயமாய் உடனே தங்களுக்கு பதில் எழுத எனக்கு போதிய சாவகாசமில்லாமல் போனதால் தாமதமாகி விட்டதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். நான் பொதுவாழ்வில் தலையிட்ட காலம் முதல்கொண்டு தங்களையும், தங்களது அருந்தொண்டுகளையும் நான் நன்கு அறிவேன். தங்கள் சமுகம்பற்றியும், அதன் முன்னேற்றத்திற்காக ஏற்பட்டிருக்கும் விஸ்வகர்ம சமுக ஸ்தாபனம் செய்துவரும் முயற்சிகள்பற்றியும் நான்… Continue reading விசுவகர்மத் தலைவர் கடிதத்துக்கு பெரியார் பதில்

காந்தியத்தை ஏன் ஒழிக்க வேண்டும்?

உலகில் தோன்றிய ஒவ்வொருவனுக்கும் இவ்வுலகில் வாழ பூரண சுதந்திரமிருக்க வேண்டும் என்றும் ஒருவனை ஒருவன் மதத்தின் பேராலோ, ஜாதியின் பேராலோ, பிறப்பின் பேராலோ, நிறத்தின் பேராலோ அடிமையாக்கி ஆண்டான் – அடிமை, முதலாளி – தொழிலாளி, பிராமணன் – அல்லாதான், வெள்ளையன் – கருப்பன் என்ற பாகுபாட்டைக் கற்பித்து வரும் நாகரிகமற்ற முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றும், இக்கொடிய முறை ஒழிக்கப்பட வேண்டுமானால் உலகப் பொருளாதார நிலை, நாட்டின் பொருளாதார நிலை அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டுமென்றும் நாம்… Continue reading காந்தியத்தை ஏன் ஒழிக்க வேண்டும்?

பூகோளப்பட பித்தலாட்டம்

தோழர்களே, இன்று இம்மகாநாட்டைத் திறந்து வைக்க நேர்ந்ததை நான் ஒரு பெருமையாய் கருதுகிறேன். இதைத் திறந்து வைக்கும்போது சம்பிரதாயத்துக்காவது நான் சில வார்த்தைகள் பேச வேண்டியவனாய் இருக்கிறேன். அதில் முக்கியமாக உங்கள் லீக் சங்கங்களைப் பற்றிப் பேச ஆசைப்படுகிறேன். இந்தியா போன்ற நாடுகளில் மக்களுக்கு விமோசனம் ஏற்பட வேண்டுமானால் இம்மாதிரி தனித்தனி சங்கங்கள்தான் முக்கியமாய் வேண்டியதாகும். இந்தியாவில் லட்சியம் ஏது? இந்த நாடு ஒரு கதம்பமாகும். இந்த நாட்டுக்கென்று பொதுவாக ஒரு லட்சியமும் இல்லை. ஏனென்றால் இங்கு… Continue reading பூகோளப்பட பித்தலாட்டம்

அரசியல் நிர்ணய சபை சரிதம்

இந்தியாவின் அரசியலமைப்பை வகுக்க அரசியல் நிர்ணய சபை கூட்ட வேண்டுமென காங்கிரஸ் மகாசபை கோரியுள்ளது. இது ஒரு புதிய விஷயம் ஆதலின், இது எப்படிக் கூட்டப்படும்? பிரிட்டன் இதைச் செய்வது சாத்தியந்தானா? அரசியல் அமைப்பு எப்படி வகுக்கப்படும்? என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதற்கெல்லாம் திருப்திகரமான வகையில் தகுந்த பதில் அளிப்பதற்கு, மற்ற குடியேற்ற நாடுகளில் இவ்விதமான அரசியல் நிர்ணய சபைகள் கூட்டி எவ்விதம் அரசியலமைப்பு வகுக்கப்பட்டது என்பதும், பிரிட்டன் இதனை எவ்விதம் ஏற்றுக்கொண்டது என்பதும் ஆகிய விவரங்கள்… Continue reading அரசியல் நிர்ணய சபை சரிதம்

காங்கிரசை எதிர்க்க கூட்டு இயக்கம்

நான் பம்பாயில் சுற்றுப்பிரயாணம் செய்தபோது அ.இ. முஸ்லிம் லீக் தலைவர் ஜனாப் முகம்மது அலி ஜின்னாவையும், ஆதித்திராவிட சமுகத் தலைவர் டாக்டர் அம்பேத்கரையும் சந்தித்துச் சில மணி நேரங்கள் அவர்களுடன் மனம் விட்டுத் தாராளமாகச் சம்பாஷித்தேன். நாங்கள் காங்கிரஸின் ஆரம்பம் முதல் அரசியல் நிர்வாகத் திறமையின்மை வரை பல்வேறு விஷயங்கள் பற்றிச் சம்பாஷித்தோம். ஜனாப் ஜின்னாவும் டாக்டர் அம்பேத்கரும் காங்கிரஸைப் பற்றிக் கூறிய அபிப்பிராயங்கள் என் சொந்த அபிப்பிராயத்தை ஒத்தனவாகவே இருந்தன. நாங்கள் மூவரும், காங்கிரஸ் செல்வாக்கினால்… Continue reading காங்கிரசை எதிர்க்க கூட்டு இயக்கம்

எனது பம்பாய் பயணம்

அன்புள்ள தலைவர் அவர்களே! தோழர்களே! நான் பம்பாய் தமிழ் மக்களின் சாதாரண அழைப்பிற்கிணங்கி பல தோழர்களுடன் பம்பாய் சென்று திரும்பியதற்காக என்னை இவ்வளவு ஆடம்பரமாக வரவேற்று, பொதுக்கூட்டமும் கூட்டி இருக்கிறீர்கள். இதுபோலவே சென்னையிலும் ஸ்டேஷனிலேயே ஏராளமான மக்கள் கூடி வரவேற்றார்கள். இது எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை. நான் இதற்கு முன் பலதடவை பம்பாய் சென்றுள்ளேன். அதுபோலவே இந்தச் சமயமும் பம்பாய் சென்றேன். பம்பாய் சென்றதன் நோக்கம் நமது நாட்டிலிருந்து பிழைப்பதற்காக பம்பாய் சென்றுள்ள தமிழர்கள் நமது… Continue reading எனது பம்பாய் பயணம்

யாருக்கு இந்த உபதேசம்?

இந்தியா ஒரு ‘நேஷன்”என்று ஒரு கூட்டத்தார் சொல்லி வருவதை நாம் பல தடவை மறுத்து தக்க உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறோம். நினைக்க முடியாததும், எண்ண முடியாததுமான கற்பனைகளைக் கற்பித்து மக்களை ஏய்த்து அடிமைப் படுத்தி வந்த வஞ்சகக் கூட்டத்தாரின் மரமண்டையில் நாம் எவ்வளவுதான் உதாரணங்களுடன் விளக்கினாலும் எப்படி ஏறும். ஆகவே, பொதுமக்கள் தான் உணர்ந்து அவர்களின் பித்தலாட்டத்தை, புரட்டை அறிந்து தக்க பாடம் கற்பிக்க வேண்டியதாகும் என்ற ஒரே காரணத்தின் மீதும் “இந்தியா ஒரு தேசம் (நேஷன்) அல்லவென்று… Continue reading யாருக்கு இந்த உபதேசம்?

இந்தியை எதிர்ப்பது ஏன்?

தலைவர் அவர்களே! தாய்மார்களே!! தோழர்களே!!! இன்று இக்கூட்டம் இவ்வளவு பெருமையாகவும், வெற்றியாகவும் முடியுமென்று எதிர்பார்க்கவில்லை. இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி தொடங்குவதற்கு இவ்வளவு பெரிய ஒரு கூட்டம் போட்டுதான் செய்ய வேண்டும் என்கின்ற அவசியமில்லை. எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்கிறது. நாமும் சில நாளைக்கு தீவிர கிளர்ச்சியை நிறுத்தி வைப்பது என்ற முடிவு செய்தோமே ஒழிய, அடியோடு நிறுத்திவிடவில்லை. அதுவும் நான் என் சொந்த முறையில் சில தலைவர்கள் யோசனைப்படி நிறுத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டேனே தவிர, பொது அபிப்பிராயத்தின் மீதுகூட… Continue reading இந்தியை எதிர்ப்பது ஏன்?

காங்கிரஸ் மந்திரிகள் ஆட்சி ஒழிந்த நாள்

தலைவர்களே! கான்சாகிப் சேக்தாவுது சாய்பு அவர்களே!! இந்து முஸ்லிம் தோழர்களே!!! இன்று நாம் இங்கு ஏன் இவ்வளவு ஏராளமாகக் கூடியிருக்கிறோம் என்பதை யாவரும் அறிந்திருப்பீர்கள். 27 மாதங்களாக நம்மை ஆண்டு பல தொல்லைகளுக்காளாக்கி வந்த காங்கிரஸ் மந்திரிகள் ஆட்சி ஒழிந்ததற்காக மகிழ்ச்சி தெரிவிக்க வேண்டியே கூடி இருக்கிறோம். இது இயற்கையேயாகும். மக்களுக்கு ஏற்பட்டிருந்த கொடுமைகள் ஒழிந்தால் அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டாட்டம் கொண்டாடத்தான் செய்வார்கள். ஏன் விழா கொண்டாடுகிறோம்? இன்று இந்தக் கொண்டாட்டம் இந்தியா முழுவதும் கொண்டாடுவார்கள். அதுபோல்… Continue reading காங்கிரஸ் மந்திரிகள் ஆட்சி ஒழிந்த நாள்

மைனாரிட்டிகள் செய்யவேண்டியது

சர்தார் படேல், சென்ற இரண்டொரு தினங்களுக்கு முன் ஆமதாபாத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் “அரசியல் நிர்ணய சபை கூட்ட வேண்டுமென்ற காங்கிரஸ் கோரிக்கைக்கு பிரிட்டிஷ் சர்க்கார் சம்மதிக்க வேண்டும். இன்னும் அதிக அதிகாரங்களுடன் மந்திரி பதவிகளை வகிக்கும் நிலைமை காங்கிரசுக்கு ஏற்படவேண்டும். அதுவரை காங்கிரஸ் பதவிகளைத் திரும்பிப் பார்க்காது” என்று ஜம்பமாகப் பேசியிருக்கிறார். இவரது ஜம்பப்பேச்சைப் பார்ப்பவர்கள் எவருக்கும், காங்கிரசை பிரிட்டிஷ் சர்க்கார் பதவி ஏற்க அழைப்பதாகவும், இவர்கள் என்னமோ நிபந்தனைகள் விதித்து அவைகளை ஒப்புக்கொண்டால்தான் முடியும்… Continue reading மைனாரிட்டிகள் செய்யவேண்டியது