மகனை இழந்த வருத்தமும் மறைந்தது

கட்டாய இந்தி ஒழிந்தது என் களிப்புக்களவில்லை வீர நடராஜன் தந்தையார் விண்ணப்பம் இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்று உயிர் நீத்த தோழர் நடராசன் தந்தையார் தோழர் கோ.லட்சுமணன் பின்வருமாறு எழுதுகிறார். திராவிட நாட்டின் தனிப்பெரும் செல்வர்காள்! திராவிட தனிமொழியாம் தமிழைக் கெடுத்து நமது தாய்நாட்டில் ஆதிக்கம் செலுத்த ஆரியர்களால் சூழ்ச்சி செய்து சுமத்தின இந்தியெனும் வடநாட்டு மொழியை தாய்நாட்டின் நலங்கருதி எதிர்த்தொழிக்க எழுந்த திராவிடப் பெரும் போரில் கலந்து உழைக்கப் போவதாக எனது செல்வன் நடராசன்… Continue reading மகனை இழந்த வருத்தமும் மறைந்தது

கவைக்குதவாத ‘பட்ஜட்’

1940-41ஆம் வருஷத்திய சென்னை மாகாண சர்க்காரின் வரவு-செலவு திட்டம் வெளியாய்விட்டது. இந்த வரவு – செலவு திட்டத்தைப் பார்க்கும் யாவரும் மாமூல் பிரகாரம் தயார் செய்யப்பட்ட திட்டமாக இருக்கிறதே தவிர புதிதாக எத்தகைய நல்ல அம்சமும் அதில் இருப்பதாகக் காணமாட்டார்கள் என்பது நிச்சயம். மேலும் இவ்வரவு – செலவு திட்டத்தைப் பார்த்தால் நாட்டிலே இருந்து வரும் கிளர்ச்சிக்கு ஏதாவது பரிகாரம் அளிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தின் மீது தயாரிக்கப்பட்டிருக்கிறதேயொழிய உருவான திட்டம் யாதும் சேர்க்கப்படவில்லையென்பதும் நன்கு… Continue reading கவைக்குதவாத ‘பட்ஜட்’

பெரியாருக்கு ஜனாப் ஜின்னா பாராட்டு

புதிய டில்லி, பிப்ரவரி 26 அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் ஜனாப் எம்.ஏ ஜின்னா அவர்கள் ஈரோடு விலாசத்திற்கு பெரியார் அவர்களுக்கு கீழ்வரும் தந்தியை அனுப்பியுள்ளார். NEW DELHI,Feb, 26,RAMASAMI NAICKER,ERODE. Your magnificent stand sacrifices for people at last secured justice. My congratulations compulsory Hindi cancelled. JINNA. மொழிபெயர்ப்பு “தங்களுடைய மகத்வமான உறுதியும், மக்களுக்காக செய்த தன்னலமற்ற தியாகங்களும் கடைசியில் நீதியை அளித்துவிட்டன. கட்டாய இந்தி நீக்கப்பட்டமைக்கு தங்களை… Continue reading பெரியாருக்கு ஜனாப் ஜின்னா பாராட்டு

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

ஆச்சாரிய சர்க்கார் இந்தியை பள்ளிகளில் அதுவும் இளம் மாணவர்களுக்கு கட்டாயப் பாடமாக புகுத்திய காலையில் ‘கட்டாயம்’ என்பது இருத்தல் கூடாதென்றும், இளம் மாணவர்கள் ஏற்கனவே பல பாடங்களைக் கற்க வேண்டிய கஷ்ட நிலையிலிருக்கையில் இப்புதியதொரு பாடத்தையும் கட்டாயமாக கற்கச் செய்வது அவர்களுக்கு பெரிய பாரமாகும் என்றும், தாய்மொழிப் பயிற்சிக்குப் பங்கம் ஏற்படும் என்றும், கட்டாயப் பாடமாக வைத்துவிட்டு பரிட்சையில்லாமல் செய்வது பொருந்தாச் செய்கை என்றும், சிறிதும் அர்த்தமற்ற செய்கையென்றும் நாம் சொல்லி வந்ததை நமது வாசகர்கள் இதற்குள்… Continue reading ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

சீனப் பிரமுகர் பேச்சு

தலைவர் அவர்களே! அன்புமிக்க தோழர்களே! நான் இந்த மாபெரும் தமிழர் கூட்டத்தில் தமிழில் பேசுவதைக் கேட்டு நீங்கள் பெரும் ஆச்சரியம் அடையலாம். சீன தேசத்தவனாகிய என்னை தமிழில் பேசும்படித் தூண்டியது, இந்தக் கூட்டத்திற்கு காரணமான உங்கள் தலைவர் பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் தான். இன்று உலகில் சமுதாயத் துறையில் வேலை செய்துவரும் ஒருவர் உண்டானால் அது பெரியார்தான் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளுவீர்கள். அவரால் தமிழ்நாடு அடைந்துவரும் முன்னேற்றம் அனந்தம். சீன தேசத்து டாக்டர் சன் யாட்… Continue reading சீனப் பிரமுகர் பேச்சு

ஆச்சாரியார் திருச்சி விஜயம்

அலங்கோல வரவேற்பு செருப்பும் துடைப்பமும் தோரணம் (நமது நிருபர் தந்தி) திருச்சி பிப்ரவரி 9-மாஜி கனம் சி. ராஜகோபாலாச்சாரியார் இன்று காலை திருச்சி வந்து சேர்ந்தார். தமக்கு எதிராக செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களைக் காணாமல் போகவேண்டுமென்ற எண்ணத்துடன் அவர் குறிப்பிட்டிருந்த வடக்கு ரஸ்தாவை விட்டு வேறுவழியாக காந்தி மார்க்கட் திறப்புவிழா வைபத்திற்கு வந்தார். வேறு இடங்களில் பழைய செருப்புகள், துடைப்பங்கள் ஆகியவைகளைக் கொண்ட தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. ஏராளமான கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. இவைகளைப் போலீசார் அப்புறப்படுத்தினர். பொதுக்கூட்டத்தில் சமரசம்… Continue reading ஆச்சாரியார் திருச்சி விஜயம்

நீதிக்கட்சியின் மத்திய காரியாலயத் திறப்பு விழா

சர். எ.டி.பி. திறந்து வைத்தார் ராயப்பேட்டை பைக்ராப்ட்ஸ் தெருவில் நிறுவப்பட்டிருக்கும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் மத்திய காரியாலயத்தின் திறப்பு விழா வைபவம் நேற்று நடைபெற்றது. ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். நீதிக் கட்சியைச் சேர்ந்த பழைய தலைவர்கள் எல்லாம் ஒன்றுகூடியிருந்தனர். சர்.ஏ.பி. பாத்ரோ, குமாரராஜா முத்தைய செட்டியார், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், சர்.கெ.வி. ரெட்டிநாயுடு, எஸ். முத்தைய்ய முதலியார், ராவ் பகதூர், என்.ஆர். சாமியப்ப முதலியார், பெரியார் ஈ.வெ.ராமசாமி முதலியவர்கள் வந்திருந்த பிரமுகர்களில் சிலராவர். மேற்படி வைபவத்திற்குத் தலைமை… Continue reading நீதிக்கட்சியின் மத்திய காரியாலயத் திறப்பு விழா

சர்.பன்னீர்செல்வம் இந்திய மந்திரி ஆலோசகர் (நமது நிருபர் தந்தி)

சென்னை, ஜன. 19- இந்திய மந்திரிசபையின் ஆலோசகராக சர்தார் பகதூர் மோகன் சிங்கிற்குப் பதிலாக மாஜி மந்திரியும், ஜஸ்டிஸ் உபதலைவருமான சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். – தோழர் பெரியார், குடிஅரசு – பெட்டிச்செய்தி – 21.01.1940

சபாஷ்! சண்முகம்

“சமஸ்தான வருமானத்தில் 20% கல்வி விஷயத்துக்காக கொச்சியில் செலவிடப்படுகிறது. இந்த அளவு, இந்தியாவில் வேறு எந்த சமஸ்தானத்திலும் செலவிடப்படுவதில்லை; எந்த (பிரிட்டிஷ்) மாகாணத்திலும் செலவிடப்படுவ தில்லை” என்று கொச்சி சமஸ்தான கல்வி அபிவிருத்தியைப் பற்றி, திவான் சர்.ஆர்.கே. சண்முகம் ஜனவரி 12ஆம் தேதி திருச்சூரில் ஒரு பள்ளியின் பொன்விழாவில் பேசுகையில் கூறினார். சுமார் 2000 ஆரம்பப் பள்ளிகளை மூடிய ஆச்சாரியாருக்கு இது அர்ப்பணம் செய்யப்படுகிறது! – தோழர் பெரியார், குடிஅரசு – பெட்டிச்செய்தி – 21.01.1940

பெரியாரும் – பிரசாத்தும்!

பார்ப்பனியம் இந்நாட்டில் வேரூன்றியதற்கும், இன்று பார்ப்பனியம் எத்துறையிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கும், பார்ப்பனியத்திற்கு நம் மக்கள் அடிமையானதற்கும், நம் மக்கள் கலையிழந்து மொழியிழந்து, நாகரிகமிழந்து வாழ்வதா – மாள்வதா என்ற நிலையிலிருப்பதற்கும் பார்ப்பனியத்தைப் புகுத்தியவர்கள் தான் அதாவது ஆரியர்கள்தான் காரணமென்றாலும், நம்மவர்களும் அதற்குப் பொறுப்பானவர்கள் என்பதை யாவரும் மறந்து விடக்கூடாதென்றும், நம்மவர் சிலரின் கோழைத்தனத்தினால்தான், நெஞ்சில் உரமில்லாததினால்தான், ஆற்றலில்லாததினால்தான் சுயமரியாதையிழந்து சுயமதிப்பிழந்து வாழ்ந்து வருகின்றோம் என்றும் நாம் பலதடவை எழுதி வந்திருக்கிறோம். பெரியாரும் நம்மவர்கள் தவறினால்தான் சுயமரியாதையிழந்து பார்ப்பனியத்துக்கு… Continue reading பெரியாரும் – பிரசாத்தும்!