பொன்மொழிகள்

Print Friendly, PDF & Email

ஒரு நாட்டு மக்கள் முன்னேற வேண்டுமானால் அரசியலில் கட்சி – பிரதிக் கட்சி இருக்க வேண்டியதும், அவை ஒன்றுடன் ஒன்று போராட வேண்டியதும் நியாயமும் இயற்கையுமேயாகும். ஆனால், அவ்விதப் போராட்டமானது நியாயமான முறையிலும் ஒருவரை ஒருவர் துஷ்பிரசாரம் செய்யாமலும் இருப்பதே வரவேற்கத் தக்க விசயமாகும். ஒரு கட்சியை மற்றொரு கட்சி தாக்குவதும், துஷ்பிரசாரம் செய்வதும் ஒரு நிமிடமும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாத காரியமாகும்.


சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கம் மிக அவசியமாகும். ஒழுக்கம் என்பது பிறரைப் பாதிக்கும்படியோ, அயலாருக்குத் தொல்லை ஏற்படும்படியோ, நடந்து கொள்ளா திருப்பதுமேயாகும். ஒழுக்க மற்றவரது செய்கைகளால் ஊருக்கே ஆபத்துண்டாகலாம்.


படிப்பு ஒருவனுக்கு இருந்தாலும் இல்லை என்றாலும் அது மற்றவனைப் பாதிக்கிற – சமுதாயத்தைப் பாதிக்கிற விசயம் இல்லை. ஆனால் ஒழுக்கம் இல்லை என்றால் அது அவனை மட்டும் பாதிப்பதில்லை. மற்றவர்களையும், சமுதாயத்தையும் பாதிக்கிற தாகையால் படிப்பைவிட ஒழுக்கத்திற்கே முக்கியம் தர வேண்டும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *