ஆச்சாரியார் திருச்சி விஜயம்

Print Friendly, PDF & Email

அலங்கோல வரவேற்பு


செருப்பும் துடைப்பமும் தோரணம்


(நமது நிருபர் தந்தி)


திருச்சி பிப்ரவரி 9-மாஜி கனம் சி. ராஜகோபாலாச்சாரியார் இன்று காலை திருச்சி வந்து சேர்ந்தார்.


தமக்கு எதிராக செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களைக் காணாமல் போகவேண்டுமென்ற எண்ணத்துடன் அவர் குறிப்பிட்டிருந்த வடக்கு ரஸ்தாவை விட்டு வேறுவழியாக காந்தி மார்க்கட் திறப்புவிழா வைபத்திற்கு வந்தார். வேறு இடங்களில் பழைய செருப்புகள், துடைப்பங்கள் ஆகியவைகளைக் கொண்ட தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. ஏராளமான கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. இவைகளைப் போலீசார் அப்புறப்படுத்தினர்.


பொதுக்கூட்டத்தில் சமரசம் ஆசிரியர் தோழர் பக்தாதி கேள்விகளடங்கிய அச்சடித்த தாள் ஒன்றை தோழர் ஆச்சாரியாரிடம் கொடுத்து பதில் சொல்லும்படி வேண்டிக்கொண்டார்.


சேர்மன் தோழர் தேவரும் மற்றவர்களும் அவரைத் தடுத்து (தோழர் பக்தாதியை) கீழே இழுத்தார்கள்.


இதனால் கூட்டத்தில் குழப்பம் அதிகரித்தது. போலீசார் பக்தாதியை அழைத்துச் சென்றுவிட்டார்கள். பலத்த போலீஸ் பந்தோபஸ்துமிருந்தது.


போலீசாரின் இச்செய்கையை கண்டிக்கும் அறிகுறியாக கடைகள் மூடப்பட்டன.


– குடிஅரசு – பெட்டிச்செய்தி – 11.02.1940

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *