இந்து – முஸ்லிம் பிரச்சினை மிக முக்கியமானதாக விளங்குவதற்குக் காரணம் அவர்களுக்கேற்பட்டிருக்கும் திறமை வாய்ந்த ஸ்தாபனமேயாகும். அவர்கள் ஒற்றுமையாக அதைப் பலப்படுத்தி வருகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக தமிழர்களாகிய நம்மவர்களிடம் ஒற்றுமை இல்லை. அதனால்தான் இந்து – முஸ்லிம் பிரச்சினையைப்போல் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் பிரச்சினை மிக முக்கியமானதாயிருந்தபோதிலும் அதைப் போன்று முக்கியத்துவம் பெறாது இருக்கிறது.
முஸ்லிம்களைப் போல பார்ப்பனரல்லாதாரும் ஒற்றுமைப்பட வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்காக ஜஸ்டிஸ் கட்சி எப்பொழுதும் போராடி வந்திருக்கிறது. அவர்களது முன்னேற்றத்திற்காக பார்ப்பனரல்லாதார் தொடர்ந்து இவ்வியக்கத்தை நடத்த வேண்டும்.
(05.02.1940 அன்று சென்னை இராயப்பேட்டை பைக்ராப்ட்ஸ் தெருவில் நிறுவப்பட்டிருந்த தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தின் மத்திய காரியாலயத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பெரியார் ஈ.வெ.ரா ஆற்றிய சொற்பொழிவு)
– தோழர் பெரியார், குடிஅரசு – சொற்பொழிவு – 11.02.1940