வக்கீல்களை எல்லாம் இஷ்டப்படி கொள்ளையடிக்க விடாமல், சம்பளக்காரனாக அரசாங்கமே நியமித்து வாதாடச் செய்ய வேண்டும். வியாபாரிகளை எல்லாம் ஒழித்துப் போட்டு அரசாங்கமே வியாபாரத்தை மேற்கொள்ள வேண்டும். பார்ப்பனர்களை எல்லாம் குற்றப் பரம்பரைச் சாதி ஆக்க வேண்டும்.
மனிதனுக்கு மனிதன் உதவி செய்ய வேண்டும்; பிறரிடத்தில் அன்பு காட்ட வேண்டும்; பிறருக்குக் கெட்டவனாகக் கூடாது; பிறரை மோசம் செய்யக்கூடாது. இது போன்ற பண்புகள் இன்று மக்களிடத்தில் அறவே இல்லை. எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும், பெரிய பதவிகளைத் தேட வேண்டும், பெரிய மனிதன் ஆக வேண்டும், பேரும் புகழும் அடைய வேண்டும் என்றே எல்லோரும் நினைக்கிறார்கள். ஒழுக்கத்துக்கும் நாணயத்திற்கும் இடமில்லாமற் போய்விட்டது.