மக்களுக்குள் அதிலும் அரசியலில் இறங்கியவர்களுக்குள் ஒருவருக்கொருவர் கருத்து மாறுபாடு அடைவது இயற்கை. நடப்பு வேற்றுமை ஏற்படுவதும் இயல்புதான். நமக்கே சில விஷயங்களில் நாம் செய்தது தவறு, நினைத்தது தவறு என்கிற எண்ணம் தோன்றும்போது மற்றவர்களுடன் மற்றக் காரியங்களில் கருத்து வேற்றுமை ஏற்படுவது இருந்தாலும் மனிதத் தன்மையோடும் பொது நலத்துக்குப் பாதக மின்றியும் நடந்து கொள்ள வேண்டியதே முக்கியமாகும்.
அறிவு இருப்பது மனிதன் தொல்லையற்றுச் சுகவாழ்வு வாழவும், விஞ்ஞான அதிசய அற்புதங்களைக் காணவும், கடவுளுக்கும் அறிவிற்கும் சம்பந்தமில்லை என்று மேல்நாட்டான் கருதி அறிவைப் பயன்படுத்துகின்றான். நமது நாட்டான் அறிவு இருப்பது பிள்ளை பெறவும் வாழ்வு பூராவும் அதோடு தொல்லை யனுபவிக்கவும், அதனைக் காப்பதில் தன் வாழ்வை உழைப்பைப் பயன்படுத்துவதற்கும் என்று கருதுவதால் வாழ்வு பூராவும் தொல்லைகளையே அனுபவிக்கின்றான்.