சுயாட்சி என்பது வரி இல்லாமல் நடக்கும் ஆட்சிதான். அப்படிக்கு இல்லாமல் வரி கொடுத்துவிட்டு இன்னது செய் என்று கேட்பது அடிமை ஆட்சிதான்.
இன்றைய ஜனநாயக ஆட்சியில் பார்ப்பானுக்கு ஒருவன் எதிரியானால் அவன்தான் ஜனநாகயதுக்கு எதிரியாகத் தகுதி இல்லாதவனாகக் கருதப்படுகிறானே ஒழிய பார்ப்பனர் அத்தனை பேரும் சங்கராச்சாரி முதல் சவுண்டி மாமா வரை 100-க்கு 100 பேரும் ஜனநாயகத்தின் ஆச்சாரியப் பீடமாகவே கருதப்படுகிறார்கள். அது போலவே பார்ப்பனர்களுக்கு அடிமைகளான அத்தனை பேரும் மரியாதைக்கு உரியவர்களாகவே ஜனநாயகத்திற்குத் தகுதி உள்ளவர்களாகவே கருதப்படுகிறார்கள். நாட்டின் ஜனநாயகத்தில் பெய்யும் மழை அத்தனையும் இவ்விரு கூட்டத்தாருக்கே பயன்படுகின்றது.
முற்காலத்தைப் போல் இக்காலம் ஏமாற்றுக் காரர்களின் எண்ணம் நிறைவேறும் காலம் இல்லை. கடவுள் கொடுத்தார் என்று கடவுள் மேல் பழியைப் போட்டு ஆண்டுக்கொரு பிள்ளை வீதம் அளவுக்கு மீறிய பிள்ளைகளைப் பெற்றுத் துன்பப்படுவது அறிவீனமே. இது விஞ்ஞானக் காலம் ஆராய்ச்சியும் பகுத்தறிவும் மலிந்த காலம். பிள்ளை வேண்டுமெனில் பெற்றுக் கொள்ளவும், வேண்டா மெனில் கருத்தரிக்காமல் இருக்கவும் செய்ய வைத்தியச் சாதனங்களைக் கொண்ட காலம்.