தமிழ்நாட்டில் தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த சென்ற நூற்றாண்டின் தொடக்க காலத்திலேயே ஆங்கிலத்தில் ‘ரிவோல்ட்’ ஏட்டை நடத்தியவர் பெரியார். தமிழில் குடிஅரசு தொடங்கிய 3 ஆண்டுகளிலேயே முற்போக்காகச் சிந்தித்து, திட்டமிட்டு ஆங்கில ஏட்டை நடத்தினார். ஆனால் அடுத்த தலைமுறை முழுக்க முழுக்க இணைய உலகில் வாழும் இந்தக் காலத்தில் அவரது எழுத்துக்களும், பேச்சுக்களும் இன்னும் இணைய உலகில் நுழையவே இல்லை என்ற வேதனையான உண்மையை சுயவிமர்சனமாக வெளியிடுகிறோம்.

விடுதலை, உண்மை, பெரியார் முழக்கம், சிந்தனையாளன் போன்ற ஏடுகள் அந்தந்த அமைப்புகளின் இணையதளங்களில் கிடைக்கிறது. அவையும் பெரும்பாலும் அந்தந்த அமைப்புகளின் செய்திகளையும் சேர்த்துத் தாங்கிவரவேண்டிய அவசியமான சூழலில் இருக்கின்றன. பெரியார் திராவிடர் கழகம் 2011 இல் பெரியாரின் எழுத்துக்கள் பேச்சுக்கள் அடங்கிய குடி அரசு தொகுப்புக்களை இலவசமாக வெளியிட்டது. அச்சிட்ட புத்தகங்களை முன்பதிவுத் தொகைக்கு வெளியிட்ட அதேநாளில் www.periyardk.org என்ற இணையதளத்தில் இலவசமாக – எழுத்துருக் களாகவும், பி.டி.எஃப் கோப்பாகவும் வெளியிட்டது. தற்போது அந்தத்தளம் செயல்படவில்லை.

தற்போது எந்த இணையதளத்திலும் யூனிகோட் எழுத்துவடிவில், எழுத்துக்களாக எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பெரியாரின் ஏழுத்துக்களோ, பேச்சுக்களோ இல்லை. தோழர்கள் பூங்குழலி, கீற்று இரமேஷ், தமிழ்ஓவியா, தமிழச்சி போன்ற பலதோழர்கள் தங்களது வலைப்பூக்களிலும், இணைய தளங்களிலும் பெரியாரின் சில கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். பெரியார் இயக்கங்களுக்கு எந்தத்தொடர்பும் இல்லாத http://thamizhagam.net/ என்ற தளத்தில் பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட பி.டி.எஃப் கோப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரியாரைப் பற்றிய முழுமையான தகவல்கள் அடங்கியதளம், இலவசமாக – யூனிகோட் எழுத்துவடிவில் எடுத்துப்  பயன்படுத்திக்கொள்ளும் தளம் என்று எதுவும் இல்லை.

அதேபோல பெரியாரின் போராட்டங்களின் பெயரையோ, நிகழ்வுகளின் பெயரையோ இணைய தளங்களில், கூகுளில் தேடினால் ஆதாரப்பூர்வமாக, முழுமையாகவோ எந்தத் தகவலும் கிடைப்பதில்லை. ஆயிரக்கணக்கான சிறு நூல்களை மிக மிக மலிவான விலையில் வெளியிட்டவர் பெரியார். அதற்குக்காரணம் குறைந்த விலையில் கருத்துக்கள் போய்ச்சேரவேண்டும் என்பதைவிட, மக்களிடை கருத்துக்கள் எளிதாகச் சென்று சேர (Easy Access) வேண்டும் என்பதே நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.

இந்த இணைய யுகத்தில் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்வதற்கு ஏற்ற வகையில் யூனிகோட் எழுத்து வடிவில் உள்ள இணையதள லிங்க்குகள் தான் மிகவும் அடிப்படைத் தேவை. ஆனால் பெரியாரின் எந்த சிறு நூலும் யூனிகோட் எழுத்து வடிவில் இலவசமாக இணையதள இணைப்பாகக் கிடைப்பதே இல்லை. யாரும் அந்த முயற்சியைச் செய்யவில்லை.

மிக முக்கியமாக, ஆங்கிலத்தில் பெரியாரின் எழுத்துக்கள் என்று இணையதளத்தில் எதுவுமே இல்லை. பெரியார் தி.க வெளியிட்ட ரிவோல்ட் தொகுப்பு மட்டும் பி.டி.எஃப் வடிவில் மட்டும் உள்ளது. இந்தியிலும் எந்த வெளியீடும் இல்லை.

அதுபோல இன்று முன்னணி பதிப்பகங்கள் அனைத்தும் தமதுவெளியீடுகளை ஒலிப்புத்தகங்களாகவும் வெளியிட்டு வருகின்றன. பெரியார் கருத்துக்களை அப்படி ஒலிப்புத்தகங்களாக தமிழில் (Audio Books) வெளியிடும் திட்டத்தையும் வைத்துள்ளோம்.

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: