மதத்துக்கு அரசாங்கம் பாதுகாப்பாயிருக்கிறதா? அல்லது அரசாங்கத்துக்கு மதம் பாதுகாப்பாயிருக்கிறதா?

* * *

கடவுளுக்கு பணக்காரன் பாதுகாப்பா? அல்லது பணக்காரனுக்கு கடவுள் பாதுகாப்பாயிருக்கிறதா?

* * *

மதத்தைப் பணக்காரன் காக்கின்றானா அல்லது பணக்காரனை மதம் காக்கின்றதா?

* * *

கடவுள் இல்லாமல் பணக்காரன் வாழமுடியுமா? அல்லது பணக்காரன் இல்லாமல் கடவுள் வாழ முடியுமா?

* * *

பார்ப்பானை கடவுள் உண்டாக்கினாரா? அல்லது கடவுளை பார்ப்பான் உண்டாக்கினானா?

* * *

கடவுள் இல்லாமல் மனிதன் வாழ முடியாதா? அல்லது மனிதன் இல்லாமல் கடவுள் வாழமுடியாதா?

* * *

மனிதனுக்காக மதம் இருக்கிறதா? அல்லது மதத்துக்காக மனிதன் இருக்கிறானா?

* * *

மதம் மக்களை மாற்றிக்கொள்ளுகிறதா? அல்லது மக்கள் மதத்தை மாற்றிக்கொள்ளுகிறார்களா?

* * *

மனிதனுக்கு மதம் "ஜாதியைப் போல்" பிரவியில் ஏற்பட்டதா? அல்லது மனிதன் பிறந்தபின் மதம் வந்து புகுந்து கொள்ளுகிறதா?

* * *

இப்பொழுது, காந்தியார் மனிதனுக்கு மதம் பிறப்போடு வருகிறது என்கிறார். அன்றியும் அது சட்டையைக் கழட்டுவதுபோல் கழட்டக்கூடியது அல்ல என்கிறார்.

* * *

அப்படியானால், மதமற்ற நாஸ்திகனுக்குப் பிறக்கிற குழந்தை எந்த மதத்தைச் சேர்ந்தது?

* * *

தகப்பன் கிறிஸ்தவனாகவும், தாய் இந்துவாகவும் இருந்தால் இவர்களது குழந்தை எந்த மதத்தோடு பிறக்கிறது?

* * *

எல்லா மதக்காரர்களுடனும் சம்பந்தம் வைத்துக்கொள்ளும் தேவதாசிகளின் குழந்தைகளுக்கு எந்தமதம் பிறவி மதம்?

* * *

இந்து பிரசிடெண்ட்டுகளுக்கும் கிறிஸ்துவ உபாத்தினிகளுக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த மதம் பிறவி மதம்.

* * *

முஸ்லீம் சேர்மென்களுக்கும் இந்து உபாத்தினிகளுக்கும் பிறக்கும் குழந்தை எந்த மதத்தைச் சேர்ந்தது?

* * *

ஐரோப்பிய ஆபீசர்களுக்கும், இந்திய உத்தியோகஸ்தர் பெண்களுக்கும் பிறக்கும் குழந்தை எந்த மதத்தைச் சேர்ந்தது?

* * *

முதலில் ஒரு இந்துவையும், பிறகு ஒரு முஸ்லீமையும் மணந்து கொண்ட கிறிஸ்துவ பெண்ணுக்கு பிறந்த குழந்தைகள் எந்த மதத்தோடு பிறக்கின்றன?

* * *

ஆரிய சமாஜிகளால் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் முதலியவர் களிலிருந்து மதம் மாற்றம் செய்யப்பட்டவர்களும், கிறிஸ்தவர்களால் இந்துக்களில் இருந்து மதம் மாற்றம் செய்யப்பட்டவர்களும், முஸ்லீம்களால் இந்துக்களிலும், கிறிஸ்தவர்களிலும் இருந்து மத மாற்றம் செய்யப்பட்டவர்களும் எந்த மதத்தோடு பிறந்தவர்களாகிறார்கள்.

* * *

அது எப்படி கண்டுபிடிக்கமுடியும்?

* * *

இந்தப்படி மதம் மாறியவர்களும், மதம் மாற்றப்பட்டவர்களும் செத்தால் மதம் மாறியதற்காக நரக மோக்ஷமடைவார்களா?

* * *

எந்த மத சம்பந்தமான மோக்ஷ நரகங்களை அடைவார்கள்?

* * *

இன்று இந்தியாவில் உள்ள 8கோடி முஸ்லீம்களும் ஒரு கோடி கிறிஸ்தவர்களும் ஆதாம் ஏவாள் காலம் தொட்டே முஸ்லீமாகவும், கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறார்களா? அல்லது சட்டையைக் கழட்டுவது போல், பழய மதங்களைக் கழட்டிவிட்டு, வேறு மதத்தை மாட்டிக் கொண்டவர்களா?

* * *

மதங்களுக்கு இருக்கும் சட்டம்தான் ஜாதிப்பிரிவுகளுக்கும், வருணாச்சிரம தர்மங்களுக்கும் இருந்து வருகிறதா அல்லது இவைகளுக்கு வேறு சட்டமா?

* * *

ராமானுஜர் காலத்தில் வைணவர்களாக ஆக்கப்பட்ட, ஆசாரிகள், மண் உடையார்கள், நாடார்கள், தேவாங்கர்கள், பல "தாழ்ந்த" வகுப்பார்கள் எல்லோரையும் அவர்கள் சந்ததியார்களையும் இன்று எப்படி மதிக்கிறது?

* * *

கீதைப்படியும், மனுதர்ம சாஸ்திரப்படியும் சூத்திர ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை எந்த வருணத்தைச் சேர்ந்தது?

பகுத்தறிவு (மா.இ.) துணுக்குகள் நவம்பர் 1935

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: