• பொன்மொழிகள்
  கோயில்களைப் பற்றி என்னுடைய கண்ணியமான அபிப்பிராயமெல்லாம் கோயில்கள் கண்டிப்பாகப் பக்திக்கும் ஒழுக்கத்திற்கும் ஏற்பட்டவை அல்ல வென்றும், மக்களை மூடர்களாக்கி அடிமைப்படுத்தவும், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்கின்ற சாதி வித்தியாசத்தை நிலை நிறுத்தவும், ஒரு கூட்டத்தார் பாடுபடாமல் இருந்து கொண்டே சோம்பேறித்தனமாய் - வயிறு வளர்க்க வேண்டிப் பொது சனங்கள் பாடுபட்டுச் சம்பாதித்த பணத்தைக் கொள்ளை அடிக்கவும் வசதி செய்து கொள்வதற்காகவே ஏற்பட்டவையாம்.

  Read more

  பொன்மொழிகள்
  இந்துக் கடவுள்களை அன்பு மயம் என்கிறார்கள். ஆனால் இந்துக் கடவுள்கள் கொடுமை மயமாகவே இருக்கின்றன. கையில் வில், வாள், சூலம், சக்கரம், கதை (தடி), அரிவாள் முதலிய மக்களைத் தண்டிக்கும், கொல்லும் ஆயுதங்களும், கோர ரூபமும் மக்களைக் கும்பல் கும்பலாய்க் கொன்று குவித்த கதைகளும் , நடத்தைகளும் ஏராளமாக இருக்கின்றன.

  Read more

  பொன்மொழிகள்
  ஒரு கடவுளுக்குத் தினம் எத்தனை தடவை பூசை, படையல்? ஒவ்வொரு பூசை படையலுக்கும், எத்தனை படி அரிசி பருப்புச் சாமான்கள்? இவைகள் எல்லாம் யார் வயிற்றில் அறுத்து வைக்கப்படுகின்றன? மக்களுக்குக் கல்வி இல்லை, தொழில் இல்லை, சாப்பாடு இல்லை என்று ஒரு புறம் சொல்லிக்கொண்டு, மற்றொரு புறம் இம்மாதிரிச் செல்வம் பாழாக்கப்படுகிறதென்றால் யோக்கியன் எப்படிச் சகித்திருக்க முடியும்?

  Read more

  பொன்மொழிகள்
  கடவுளைப் பற்றி என்ன இலக்கணம், இலட்சியம் சொல்லப்படுகிறது என்றால் உருவமற்ற, குணமற்ற, நிறமற்ற, எண்ண முடியாத தன்மை படைத்த, பிறப்பு, இறப்பற்ற, எக்காலத்தும் என்றும் நிறைந்து நிற்கும் சக்தி என்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படிப் பார்த்தால் இந்த இராமன் எப்படிக் கடவுளாக முடியும்? கிருஷ்ணன், கந்தன், விநாயகன் இப்படியாகச் சொல்லப்படுபவைகள் எல்லாம் எப்படி கடவுள்களாக முடியும்? இவைகள் எல்லாம் பிறந்திருக்கின்றன செத்திருக்கின்றன. உருவம் இருக்கின்றன. சராசரி மனிதக் குணம் படைத்தவைகளாய் இருப்பவைகளை...

  Read more

  பொன்மொழிகள்
  இந்து மதச் சம்பந்தமான கோயில்கள் எல்லாம் பெரிதும் சமாதிதான். அந்தக் கடவுள்களெல்லாம் அநேகமாய் அந்தச் செத்துப்போன ஆள்களேதான் என்பதே எங்கள் ஆராய்ச்சிக்காரர்கள் துணிவு. இதனால்தான் பல கடவுள்களும், பல புண்ணியத்தலங்களும் ஏற்பட வேண்டிய தாயிற்று.

  Read more

 • பொன்மொழிகள்
  உண்மையான கடவுள் ஒன்று இருக்கிறது என்றால் பாடுபடாத சோம்பேறிப் பித்தலாட்டக் கூட்டத்தார் வயிறு வீங்கச் சாப்பிடவும், பாடுபடும் பாட்டாளி மக்கள் பட்டினி கிடந்து உடுத்த உடையில்லாமல், இருக்க வீடில்லாமல், படிக்க எழுத்து அறிவில்லாமல் இருக்கவும் முடியுமா?

  Read more

  பொன்மொழிகள்
  பார்ப்பான் என்றால் கடவுளுக்குச் சமமானவன். இன்னும் கவனித்துப் பார்த்தால் கடவுளுக்கும் மேலானவன். இராமாயணத்தில் இராமன் சொல்லுகின்றான், பிராமணன் எனக்கு மேலானவன் என்று, பாரதத்தில் கிருட்டிணன் சொல்லுகின்றான் பிராமணன் தனக்கு மேலானவன் என்று. சூத்திரனுக்குக் கடவுளை நேராகக் கும்பிடும் உரிமை இல்லை. கடவுளைக் கும்பிட வேண்டுமானால் பார்ப்பானைத்தான் கும்பிடவேண்டும். பார்ப்பான்தான் சூத்திரனுக்குக் கடவுள் என்று எழுதி வைத்தும் இருக்கின்றான்.

  Read more

  பொன்மொழிகள்
  உலகத்தில் மூன்றில் இரண்டு பகுதி மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ரஷ்யா, சைனா, ஜப்பான், பர்மா, சயாம் இங்குள்ள மக்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கை கிடையாது. நம் நாட்டைத் தவிர மற்ற சில நாட்டு மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்றாலும் அவர்களுக்கெல்லாம் ஒரே கடவுள்தான். அதுவும் உருவ மற்றது. நமக்குத்தான் ஆயிரம் கடவுள் அதற்குப் பெண்டாட்டி, வைப்பாட்டி, பிள்ளைக்குட்டி, அதற்குக் கல்யாணம், பண்டிகை, திருவிழா என்றெல்லாம் கொண்டாடி வழிபடுகின்றோம். மற்ற...

  Read more

  பொன்மொழிகள்
  கடவுள் சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ளவர் என்பதாக இருந்தும் கடவுளால் என்ன காரியம் நடக்கிறது? எதையும் கடவுள் பெயரைச் சொல்லி மனிதன்தான் செய்கிறான் கடவுளை அலட்சியப் படுத்திவிட்டுக் கடவுளுக்கு இஷ்டமில்லாத காரியம் என்பதைக்கூட மனிதன் செய்கிறான். மனிதனுக்குக் கேடான காரியமும் நடந்த வண்ணமாய் இருக்கின்றன. ஒரு காரியமாவது கடவுள் உணர்ச்சி உள்ள உலகில் பூரணத்துவம் அதாவது திருப்தி உள்ளதும் குறை இல்லாததுமான காரியம் காணக் கூடியதாக இல்லை. மனிதனுக்குப்...

  Read more

  பொன்மொழிகள்
  கடவுள் நம்பிக்கையாளர் என்கின்ற எல்லாச் சோம்பேறிகளும் பிரார்த்தனை என்பதன் பேரால் தங்கள் வஞ்சகத் தொழிலை நடத்திக் கொண்டே உள்ளனர். வாலிபர்கள் ஒரு செல்வாக்கையோ, ஒரு பிரச்சாரத்தனையோ, காதலையோ கண்டுவிட்டால் சுலபத்தில் வழுக்கி விழக்கூடும். செல்வாக்கற்ற காரியத்தில் பற்றாய் இருப்பது மிகச் சங்கடமாகத் தோன்றும். பொது மக்கள் ஆதரவு, புகழ், உற்சாகமான காரியங்களில் இருக்கும் அவா, ஒரு தேக்கமான காரியத்தில் உற்சாகம் காட்ட இடம் தராது. எந்த மனிதனும் மற்றவனுக்கு உபகாரியாயும் கடைசிப்பட்சம் மற்றவனுக்குத்...

  Read more

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: