தொகுப்பு:யாழ்மொழி

சுயமரியாதை இயக்கம் தோன்றிய சில வருட காலத்திலேயே, தமிழ்நாட்டில் அது அனேகமாக ஒவ்வொருவருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தது. முதல் சுயமரியாதை மாநாடு செங்கல்பட்டில் நடந்தது.

சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம்

 1925 ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். அதன் நோக்கம், மனிதனுக்கு மனிதன் வேற்றுமையையும், வகுப்புக்கு வகுப்பு பிரிவினையையும் உண்டாக்குகிற சமுதாயக் கட்டுப்பாட்டையும், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஒரு கட்டுப்பாட்டையும், சமூகத்தில் பெரும்பாலானோரை ஆடு மாடுகளிலும் கேவலமாய் நடத்துவதற்கு ஏதுவான கட்டுப்பாட்டையும்,கோயில்களுக்குள்பெரும்பாலோர்பிரவேசிக்கக்கூடாதென்றுதடுக்கிறகட்டுப்பாட்டையும், பெண்களை ஒதுக்கி அடிமைகள் மாதிரி நடத்துவதற்கு இடம் கொடுக்கிற கட்டுப்பாட்டையும் மற்றும் இது போன்றவைகளையும்ஒழிப்பதே ஆகும்.

பெரியார்விடுத்த அழைப்பு!

 ஒவ்வொரு தோழரும், தங்கள் மனைவி மக்களுடன் வர வேண்டும்.

 • வாலிபர்களும்,பெண்களும்,தாழ்த்தப்பட்டோர்களும் அவசியம் வர வேண்டும்.
 • தனிப்பட்ட ஸ்திரீகளும், தங்களை விதவைகள்என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களும் அவசியம் வர வேண்டும்.
 • அரசாங்க உத்தியோகஸ்தர்களும்,அதிகாரிகளும்கண்டிப்பாய் வர வேண்டும்.

மாநாட்டின் நோக்கம்

 இம்மாநாடு சமத்துவம், சம உரிமை, சம சந்தர்ப்பம், சிக்கனம், அன்பு, இரக்கம், ஒழுக்கம் ஆகியவைகள்ஏற்படவும், குருட்டு நம்பிக்கை, மூட பழக்கவழக்கம், தீண்டாமை, பெண்ணடிமை ஆகியவைகள்நீங்கவும்,எளியோரைவலியோர் அடக்கி ஆளாமலும், பாமரர்களைப் படித்தவர்கள் ஏமாற்றாமலும், ஏழைகளைச் செல்வந்தர்கள் கொடுமைப் படுத்தாமல்இருப்பதற்கும், பகுத்தறிவு உணர்வு வளர்ச்சி பெறுவதற்குமாகும்.

 மாநாடு

 • மாநாடு தினத்தன்று,36 மைல் நீள ஊர்வலம் சென்னையிலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டை அடைந்தது. மாநாட்டுத் தலைவர்கள் மோட்டார் கார்களில் அணி வகுக்க, வழி நெடுக மக்கள் உற்சாக வரவேற்பு தந்தனர். மலர் பொழிதல், ஒலி முழக்கங்களுடன் காலை 8.30 மணிக்கு சென்னை தியாகராயர்மண்டபத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது.

 • • வழி நெடுக மேளதாளங்களோடு வரவேற்று, வரவேற்புப் பத்திரங்களை வாசித்து சிற்றுண்டிகளை வழங்கினார்கள். மாகாணத்தின் முதல்வர் டாக்டர் சுப்பராயன், அமைச்சர் சேதுரத்தினமய்யர், முத்தையாமுதலியார், தாலுக்காபோர்டு தலைவர்கள், சட்டசபை உறுப்பினர்கள், பெரியார்ஈ.வெ.ராமசாமி, சவுந்தரபாண்டியன் என ஏராளமான தலைவர்கள் மோட்டார் காரில் ஊர்வலமாக வந்தனர்.
 • • மாநாட்டுபந்தலில்20,000 பேர் திரண்டிருந்தனர். மாநாட்டுமுகப்பு, மிகப் பெரும் அலங்காரமாகவடிவமைக்கப்பட்டிருந்தது. மாநாட்டுஅரங்கிற்குள்வீட்டுப் பொருள் காட்சிகள், தொழில் கண்காட்சிகள், சிற்றுண்டி சாலைகள், ஆங்கில முறை ஓட்டல்கள், விவசாய கண்காட்சிகள், எந்திர கண்காட்சிகள், வாசகசாலைகள், இடை இடையே தலைவர்கள் உருவச்சிலைகள், பூந்தோட்டங்கள், 2000 தோரணவிளக்குகள், ‘சுயமரியாதையேபிறப்புரிமை’ என்று பொறிக்கப்பட்டகாந்தவிளக்குகள் என எழில் குலுங்கியது மாநாடு அரங்கு. 4, 5 இடங்களில் ‘லவுட் ஸ்பீக்கர்’ எனும்ஒலிக் கருவிகள் அமைக்கப்பட்டிருந்தன.
 • • காலை நிகழ்ச்சிகளாகபனகல் அரசர் படத்தை அரசு சட்டசபை உறுப்பினர் எம்.கிருஷ்ணநாயர் திறந்து வைத்தார். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. முதல் நாள் தலைவர் உரை, பிரதிநிதிகள் உரை நடந்தன.
 • • இரண்டாம் நாள் வாலிபர் மாநாட்டுடன் தொடங்கியது. மாநாட்டுத் தலைவர் சுரேந்திரநாத்ஆரியா. தமிழ்நாடு முழுதும் கிராமம் கிராமமாகச் சுற்றி சுயமரியாதைப் பிரச்சாரம் செய்வது என்றும், பிரச்சாரத்துக்குபனகல் அரசர் பெயர் சூட்டுவது என்றும் தலைவர் அனுமதியோடுபெரியார் இராமசாமி அறிவித்தார்.உற்சாகத்தோடுவரவேற்ற இளைஞர்கள், அதே நிகழ்வில்பிரச்சாரத்துக்கு தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர்.
 • • மாநாட்டுச்செலவுக்காக உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. உண்டியலில்வசூலான தொகை ரூ.3000. (1929இல்இத்தொகையின் மதிப்பு மிகப் பெரிது; பவுன் விலை ரூ.7 விற்ற காலம்)
 • • இரண்டாம் நாள் மாநாட்டின் இறுதியில் நன்றி கூறிய பெரியார் இராமசாமி குறிப்பாக பெண்களுக்கு முதல் நன்றியைக் கூறினார். மகாநாடு நடத்த ஒத்துழைத்தவர்களாக ஜமீன்தார் அப்பாசாமி, வள்ளலார் வேதாசலம், ராவ்பகதூர்கிருஷ்ணசாமி, கண்ணப்பர் ஆகியோர் பெயரைக் குறிப்பிட்ட பெரியார் இராமசாமி, தனது விருப்பப்படி செயல்பட்டு, எல்லா வகையிலும் உதவியவாழ்க்கைத் துணை நாகம்மையாருக்கும் நன்றி கூறினார்.
 • • இரவு சாப்பாட்டுக்குப் பிறகு, இரவு 10 மணிக்கு மேல் பொதுக் கூட்டம் நடந்தது. மாநாட்டில் இருந்த பெண்களைவிட, பொதுக்கூட்டத்துக்கு வந்த பெண்களின் எண்ணிக்கை அதிகம். மாநாட்டுத்தீர்மானங்களை விளக்கி, பொதுக்கூட்டத்துக்குத் தலைமையேற்ற பெரியார் இராமசாமி, செ.முருகப்பா,அய்யாசாமி, தண்டபாணி, பொன்னம்பலனார், லிங்கம், அழகிரிசாமி பேசினார்கள். இரவு 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் விடியற்காலை 5 மண வரை நடந்தது.
 • • மாநாட்டுக்கு வெளி மாகாணங்களிலிருந்தும் பிரதிநிதிகள் ஏராளமாக வந்திருந்தனர். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவர்கள் கதர் உடைகளுடனும், காங்கிரஸ் கட்சியின் மிதவாத, தீவிரவாதப்பிரிவினரும்அன்னிபெசன்ட் ஆதரவாளர்கள், ஜஸ்டிஸ் கட்சியினர், பார்ப்பனர்கள், மகமதியர்கள், கிறிஸ்தவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், சைவசமாஜக்காரர்கள், வைணவசமயக்காரர்கள், பிரம்மஞானசபையினர், வெள்ளைக்காரர், வெள்ளைக்காரபாதிரியார்கள், பண்டிதர்கள், புராணபிரச்சாரகர்கள், சன்யாசிகள், சாமியார்கள், கோயில் டிரஸ்டிகள், குருமார்கள், அர்ச்சகர்கள், சர்க்கார் அதிகாரிகள், பதவியிலுள்ளமாஜிஸ்திரேட்டுகள், நீதிபதிகள், கலெக்டர்கள், குடியானவர்கள், கூலி வேலை செய்வோர், திருமணமான பெண்கள், விதவைகள், தாசிகள் என்று அனைத்துப் பிரிவினரும் பங்கேற்றார்கள் என்று ‘குடிஅரசு’ பதிவு செய்கிறது.

தீர்மானங்கள்

 சைமன்கமிஷன் :-

 • இந்தியாவிலுள்ள பல வகுப்பாரின்உரிமைகளும்,அபிப்பிராயங்களும் ஒன்றுக்கொன்று மாறாக இருப்பதால், இந்திய அரசியல் விசாரணைக்கமிஷனில் இந்த பல வகுப்புப்பிரதிநிதி களையும்நியமிப்பதுசாத்தியமில்லை என்று இந்திய மந்திரி பார்லிமெண்டில் கூறியிருப்பதாலும், இந்திய மக்களில் எல்லா சமூகத்தாருக்கும்நம்பிக்கைக்கொடுக்கக் கூடிய ஒருவரைச் சேர்க்க முடியாத நிலைமையில் நமது தேசம் இருக்கிறபடியாலும், இந்திய அங்கத்தினர் நியமிக்கப்படவில்லை என்றும் காரணத்தைக் கொண்டு கமிஷனைப் புறக்கணிப்பது நியாயமில்லை என்று இம்மாநாடு கருதுகின்றது.
 • சைமன்கமிஷனர்தீர்க்கஆலோசனையின் பேரில் பார்லிமெண்டாருக்கு அனுப்பும் அறிக்கையில், சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்களும்,கொள்கைகளும், கூடிய சீக்கிரம் நிறைவேறுவதற்குமார்க்கங்களைத் தேடுவார்கள் என்று இம்மாநாடு எதிர்பார்க்கிறது.
 • நேரு கமிட்டித் திட்டம் :-
 • நேரு கமிட்டிஅறிக்கையானது, நமது இயக்கத்தின் அடிப்படையான கொள்கைகளுக்கு விரோதமாக இருப்பதால், அதைக் கண்டிப்பதுடன்,இந்தியாவின் வருங்காலத்து அரசியல் திட்ட அமைப்பில்,வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஒப்புக் கொள்ளப்படவேண்டுமென்ற கொள்கையை வற்புறுத்துகிறது.

 • ஜாதி பேதம் :-
 • மக்கள் பிறவியினால் உயர்வு தாழ்வு உண்டு என்ற கொள்கையை இம்மாநாடு அடியோடு மறுக்கிறது. அதை ஆதரிக்கிற மதம், வேதம், சாஸ்திரம்,புராணங்களை எல்லாம் பொது ஜனங்கள் பின்பற்றக் கூடாது.
 • வருணாசிரமம் என்ற கொடுமையானகட்டுப்பாட்டையும்,சமுதாய முறையில் காணப்படும், பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் முதலிய ஆட்சேபகரமான பிரிவுகளையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
 • மனித நாகரிகத்திற்கும், தேச முன்னேற்றத்திற்கும்தடையான தீண்டாமை என்பதை ஒழித்து, எல்லா பொது சாலைகள், குளங்கள், கிணறுகள், பாடசாலைகள், சத்திரங்கள், தண்ணீர் பந்தல்கள், கோயில்கள் முதலிய பொது ஸ்தாபனங்களைத்தட்டுத் தடங்கலின்றி, அனுபவிக்க சகல சனங்களுக்கும் உரிமை கொடுக்க வேண்டும்.
 • இதற்காக அரசாங்க சட்டம் அவசியமென்றுகருதுகிறபடியால், சட்டசபை பிரதிநிதி களும்,சர்க்காரும் தக்க ஏற்பாடு செய்து பொது ஜன முயற்சிக்கு உதவி புரிய வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

 • ஜாதிப்பட்டமும், மதக்குறியும் :-
 • மக்கள் தங்கள் பெயர்களோடு, ஜாதி அல்லது வகுப்பைக்காட்டுவதற்காகச் சேர்க்கப் படும்பட்டங்களை விட்டுவிட வேண்டும்.
 • ஜாதி அல்லது சமயப்பிரிவுகளைக் காட்டும் குறிகளை யாரும் அணிந்து கொள்ளக் கூடாது.

 • கலியாணம் முதலிய சடங்குகள் :-
 • பெண்களின் கலியாண வயது 16 க்குமேற்பட்டிருக்கவேண்டுமென்றும், மனைவி புருஷன் இருவரில் ஒருவருக்கொருவர் ஒத்து வாழ இஷ்டமில்லாதபோது, தம்முடைய கலியாண ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்ள உரிமை இருக்க வேண்டும்.
 • விதவைகள் மறு விவாகம் செய்து கொள்வதற்கு உதவி செய்ய வேண்டும்.
 • கலியாணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்களும்,பெண்களும் ஜாதி மத பேதமின்றி தங்கள் தங்கள் மனைவி கணவர்களைத்தேர்ந்தெடுத்துக் கொள்ள பூரண உரிமை அளிக்கப்பட வேண்டும். அதற்கேற்றவாறுகலியாணச் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.
 • கலியாணம் முதலிய சடங்குகள் சொற்ப பணச் செலவில் நடத்தப்பட வேண்டும்.

 • கல்வி :-
 • கல்வி நிறுவனங்களிலே தாய் பாஷையும், பொது பாஷையாக அரசாங்க பாஷையும், தவிர மற்ற பாஷை படிப்பிற்காகப்பொதுப் பணத்தை உபயோகிக்கக் கூடாது.
 • பள்ளிக்குப்போகத்தக்க சிறுவர்,சிறுமிகளுக்கு ஆரம்ப கட்டாயக் கல்வி மாத்திரம் பொது நிதிகளிலிருந்துபோதிக்கப்பட வேண்டும்.
 • உயர்தரக்கல்விக்குப் பொது நிதிகளைச்செலவழிக்கக்கூடாதென்றும், அப்படி செலவழிக்கப்பட வேண்டிய தேவையிருந்தால்,வகுப்புவாரிவிகிதப்படிமாணவர்களைத் தேர்ந்தெடுத்து போதிக்க வேண்டும்.
 • மற்ற வகுப்பு குழந்தைகள் சமமாகக் கல்வி அடைகிற வரையிலும்,தீண்டாதவர்கள் என்று சொல்லப்படுகிறவகுப்பினரின்பிள்ளைகளுக்குப்பள்ளிக்கூடங்களில், புத்தகம், உணவு, உடை முதலியவற்றை இலவசமாக அளிக்க வேண்டும்.

 • கோயில், மடம் முதலியன :-
 • கடவுள் என்பதன் பேரால்கோயில்களிலாவது அல்லது வேறு இடங்களிலாவது, ஒரு பைசா பெறும்படியானசாமானாவதுசெலவழிக்கக்கூடாதென்றும்,வணங்குகிறவனுக்கும்,வணங்கப்படுபவனுக்கும் மத்தியில் தரகனாவது,வடபாஷையாவதுஇருக்கக்கூடாதென்றும்இம்மாநாடு கருதுகிறது.
 • இனிமேல்,புதிதாய் ஒரு கோயிலும்கட்டக்கூடாதென்றும்இப்போதிருக்கிற கோயில், மடம், சத்திரம், வேத பாடசாலை முதலியவைக்காகவிட்டிருக்கும்சொத்துகளைக் கைத்தொழில், வியாபாரம், ஆராய்ச்சி முதலிய கல்விகளுக்காகச்செலவழிக்க முயற்சி செய்ய வேண்டுமாய்ப் பொது ஜனங்களைஇம்மாநாடுகேட்டுக்கொள்கிறது.
 • கோயில்களில் உற்சவங்கள் முதலியவற்றைக் கொண்டாடுவதைநிறுத்திக் கொண்டு, அவற்றிற்குப்பதிலாகப் பொது ஜன அறிவு வளர்ச்சி,ஆரோக்கிய வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி சம்மந்தமானபொருட்காட்சிகளை நடத்தி, மக்களுக்கு அறிவும்,செல்வமும் ஏற்பட செய்ய வேண்டுமாய்இம்மாநாடுகேட்டுக்கொள்கிறது.

 • பார்ப்பனரல்லாத இளைஞர்கள் சங்கடம் :-
 • சர்க்கார் தர்க்காஸ்து நிலம் கொடுப்பதெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் என்பவர்களுக்கும் மற்றும் தங்களுக்கு நிலம் இல்லாதவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்றும், அதிலும் இப்போது தீண்டாதார்எனப்படுவோருக்கு சலுகை காட்டி,நிலங்களைப்பண்படுத்திப் பயிர் செய்ய பண உதவி செய்ய வேண்டுமென்றும்,
 • தீண்டாதார் எனப்படுவோருக்குச் சர்க்காரில் காலியாகும் உத்தியோகங்களில் முதலுரிமை கொடுக்க வேண்டும் என்றும்,
 • தீண்டத்தகாதார் என்று சொல்லப்படுபவர்களின்சிறுவர்,சிறுமிகளுக்குப்பள்ளிக்கூடங்களில் புத்தகம், உடை, உண்டி முதலியவற்றை இலவசமாய் அளிக்க வேண்டுமென்றும் இம்மாநாடுகேட்டுக்கொள்கிறது.

 • மூடப்பழக்கவழக்கங்கள் :-
 • மூடநம்பிக்கைகளையுடைய எந்த புத்தகங்களையும் பாடப்புத்தகங்களாகப் பள்ளிக்கூடங்களில் வைக்கக்கூடாதென்றும்,
 • உபாத்தியாயர்களைப்பயிற்சிக்கும்பள்ளிக்கூடங்களிலும்மூடநம்பிக்கையுள்ளபாடங்களைக்கற்பிக்கக்கூடாதென்கிற நிபந்தனை விதிக்க வேண்டுமென்றும,
 • பகுத்தறிவு, தன் முயற்சி, ஆராய்ச்சி முதலியவைகளுக்கு அனுகூலமான விசயங்களையே பாடமாக வைக்க வேண்டுமென்றும்,
 • டெக்ஸ்ட்புக் கமிட்டியாரும் அறிவையும், தன் முயற்சியையும்உண்டாக்கக் கூடிய புத்தகங்களையே சிபாரிசு செய்ய வேண்டுமென்றும் இம்மாநாடுகேட்டுக்கொள்கிறது.

 • பெண்களுக்குச் சமத்துவம் :-
 • பெண்களுக்கு ஆண்களைப் போலவே சமமாகச்சொத்துரிமைகளும், வாரிசு உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டும்.
 • பள்ளிக்கூடஉபாத்தியாயர்கள் வேலையில் பெண்களே அதிகமாக நியமிக்கப்படுவதற்குத் தக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும்,
 • ஆரம்பக் கல்வி கற்றுக் கொடுக்கும் உபாத்தியாயர் வேலைக்குப்பெண்களையே நியமிக்க வேண்டுமென்றும்இம்மாநாடு தீர்மானிக்கிறது.

 • நாடகங்களும்சினிமாக்களும் :-
 • நூலாசிரியர்கள்,நாடகாசிரியர்கள்,நடிகர்கள், நாடக நிலையச் சொந்தக்காரர்கள், சினிமா படக்காட்சிக்காரர் முதலியோர் பகுத்தறிவுக்கும், நியாயநேர்மைக்கும் எதிரிடையானதும், சுய நம்பிக்கையையும்,சுயமரியாதையையும் குன்றச்செய்வதும் அல்லது தவறானதும் பகுத்தறிவுக்கு மாறானதுமான மதக்கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதுமானநூல்களையும், கதைகளையும், நாடகங்களையும்எழுதவோ, நடிக்கவோ, ஆதரிக்கவோகூடாதென்றும்இம்மாநாடு தீர்மானிக்கிறது.

 • சிற்றுண்டிச்சாலைகளில் ஜாதி வித்தியாசம் :-
 • வகுப்புப் பேதம் காண்பிக்கப்படுகிற எல்லா ஓட்டல்களையும், காபி கிளப்பு களையும் இம்மாநாடு கண்டிப்பதுடன், இவ்வித விஷமத்தனமானபேதங்களுள்ளஓட்டல்களுக்கும், காபி கிளப்புகளுக்கும்அவ்விடத்திலுள்ள அதிகாரிகள் லைசன்ஸ் கொடுக்கக் கூடாதென்றும்,
 • இரயில்வே அதிகாரிகள் தங்கள் வசத்திலும்,மேற்பார்வையிலும் உள்ள சாப்பாட்டுச்சாலை களிலும்,சிற்றுண்டிச்சாலைகளிலும், ஜாதி, மதம், வகுப்பு, நிறம் முதலியவற்றைப் பொறுத்து எவ்வகையிலும்வேற்றுமையாகப்பிரயாணிகளைப்பாராட்டாமல் இருப்பதற்குரிய நடவடிக்கை களை உடனே மேற்கொள்ள வேண்டுமென்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

 • தொழிலாளர் குறைகள் :-
 • தொழிலாளர்களுடையமுன்னேற்றமும்அவசியமென்பதால்அவரவர்களின்வேலைக்குத்தகுந்தபடியும், அவர்கள் சுகமாக வாழ்வதற்கு வேண்டிய அளவு கூலி கொடுப்பதோடு ஒவ்வொரு தொழிலிலும் கிடைக்கும் லாபத்தில் அந்தந்த தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான பங்கு கொடுக்க வேண்டுமென்றும்இம்மாநாடு தீர்மானிக்கிறது.

           

பெரியாரின் வேண்டுகோள்     

நாம் நிறைவேற்றும்தீர்மானங்கள்அமுலுக்குக் கொண்டு வர நமக்கு வாலிபத் தொண்டர்கள் வேண்டும். அவர்கள் சதா சர்வ காலம் ஊர் ஊராய்த்திரிய வேண்டும். நம் நாட்டிலுள்ள மதப் புரட்டுகளையும், ஜாதிக்கட்டுப்பாடுகளையும் உடைத்தெறிய புறப்பட்டுப் புகழும், பெருமையும் அடைந்த புத்தபகவானின் சிஷ்யர்களான புத்தசன்னியாசிகளைப் போலப் புறப்பட்டுப்பாமரமக்களிடம் சென்று,அயோக்கியத்தனமும், சுயநலமும் கொண்ட மத சூழ்ச்சிகளையும், புரட்டுகளையும், கட்டுப்பாடுகளையும் உடைத்தெறிய தக்க இளஞ்சிங்கங்கள் நமக்கு வேண்டும். நல்ல பிரச்சாரமென்பது, வெறும் வாய்ப்பேச்சை விட நடத்தையில் நடந்து காட்டுவது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

தென்னிந்தியாவிலேயேஇவ்வளவுபெரியமாநாடுநடந்ததுஇல்லைஎன்கிறது, ‘குடிஅரசு’ பதிவு.அத்தகையவரலாற்றுச் சிறப்புமிக்க இம்மாநாட்டில், பெரியாரும் பல சிறப்பு அழைப்பாளர்களும் தங்கள் பெயருக்குப் பின் உள்ள ஜாதிப் பெயரை இனி பயன்படுத்தப்போவதில்லைஎனச்சூளுரைத்தனர். அதைத் தொடர்ந்து இன்று வரை இந்தியாவிலேயேஜாதிப்பெயரைத் தங்கள் பெயரோடுஇணைத்துக்கொள்ளாத ஒரே மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது என்பதும், இம்மாநாட்டுத் தீர்மானங்களான பெண்களுக்குச் சொத்துரிமை மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களாக முழுவதும் பெண்களையே நியமிப்பது என்பவை பிற்காலத்தில் திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில், கலைஞர் கருணாநிதியால் சட்ட வடிவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: