குடு குடு, குடு குடு குடு, குடுக் குடுக்.

சதியாலோசனை நடக்குது சதியாலோசனை நடக்குது நடக்குதூ. குடு குடு, குடு குடு, குடுக் குடுக்.

அந்த மூலையிலெ நடக்குது.

கடலோரத்திலே, காற்று வாக்கிலே, பத்து மந்திரி கூட்டத்திலே மாபாவிகள் நினைப்பிலே நடக்குது, நடக்குது, சதியாலோசனை நடக்குது.

குடு குடு குடு குடு குடுக்.

என்ன நடக்குது சொல்லடி கம்பளத்தாயி? குடு குடு குடு குடு குடக்.

பத்திரிகையை நிறுத்தலாமா? ஜாமீன் கேட்கலாமா?

பாண்டியனைப் பிடிக்கலாமா? விஸ்வநாதனைப் பிடிக்கலாமா வேண்டாம் - வேண்டாம், ராமசாமி ஒருவனைப் பிடித்தால் போதும். அப்புறம் பத்திரிக்கையைப் பிடிக்கலாம் என்று நடக்குது நடக்குது சதியாலோசனை நடக்குது. குடு குடு குடு குடு குடக்.

ஒரு பழைய சொக்காய் நீங்கள் கட்டிக் கிழித்த பீத்தல் துணி கொடுங்க.

நடக்குது நடக்குது அந்த மூலையிலே நடக்குது. இந்தி எதிர்ப்பு படைக்கு 144 போடலாமா என்னு நடக்குது சதியாலோசனை.

வாண்டாம் - வாண்டாம் பெருசு பண்ணாதே பெரிசு பண்ணாதே பெரிசு பண்ணாதே எங்குது ஒரு மந்திரி. குடு குடு குடு குடு குடக்.

இந்தி எதிர்ப்பு இயக்கம் சட்ட விரோதம் எண்ணு உத்திரவு போடு எங்குது ஒரு மந்திரி. ஐயோ வாண்டாம் ஐயோ வாண்டாம் என்குது ஒரு அய்யங்கார் மந்திரி. குடு குடு குடு குடு குடக் குடக்.

இன்னம் நடக்குது இன்னம் நடக்குது சதியாலோசனை இன்னம் நடக்குது. பேப்பரை பிடிக்க.

தோர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 28.08.1938

சென்னை கார்ப்பரேஷன் எலக்ஷன்

இனியும் மஞ்சள் பெட்டியா?

வெட்கம் இல்லையா?

காங்கரஸ்காரர்கள் கார்ப்பரேஷன் எலக்ஷனுக்கு 13 ஆட்களைப் பொறுக்கி எடுத்து விட்டார்கள்.

இவர்களுக்கு வரிகொடுப்போர் எதற்காக ஓட்டுச் செய்ய வேண்டும்?

சட்டசபையிலேயே ஒரு மந்திரி சொல்லுகிறபடி ஒன்பது மந்திரிகள் ஆடுகிறார்கள். அவர்களுக்கு சொந்த புத்தி கிடையாது.

இருந்தாலும் உபயோகிக்க முடியாமல் மானங்கெட்டு தவிக்கிறார்கள். சட்டசபை மெம்பர்கள் கதியும் அப்படியே.

அது போலவே கார்ப்பரேஷனிலும் ஒருவர் (சத்தியமூர்த்தி என்கின்ற ஒரு பார்ப்பன தோழர்) சொன்னபடிக்கு தான் மற்றவர்கள் கேட்க வேண்டும்.

கேட்காவிட்டால் லஞ்சம் வாங்கினான் என்றோ, அடங்காப் பிடாரி - கட்டுப்பாட்டை மீறினான் என்றோ குற்றம் சாட்டி பெயரைக் கெடுத்து ராஜிநாமா செய்யச் சொல்லி வெளியில் விரட்டி விடுகிறார்கள். அய்யருடைய யோக்கியதை சிவசைலம் பிள்ளையை அவமானப் படுத்தியதிலும் தணிகாசலம் செட்டி ரோட்டுப் பெயர் மாற்றியதிலும் தெரியவில்லையா?

ஆகவே காங்கரசின் பேரால் நிற்பவர்க்குத் தான் வெட்கம் இல்லை, மானம் இல்லை என்றாலும் காங்கரஸ் நிறுத்தின ஆட்களுக்கு ஓட்டுப்போடும் ஓட்டர்களுக்காவது மானம் வெட்கம் இருக்க வேண்டாமா?

மானமிருந்தால் மஞ்சள் பெட்டியை காறித் துப்புங்கள்!

குடி அரசு - வேண்டுகோள் - 28.08.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: