எங்கும் ஆடம்பரமான வரவேற்புகள்

ஆச்சாரியாரின் விபரீதக் கல்வித் திட்டம்

அவர் சொற்பொழிவில் இந்தி ஆரிய மொழியென்றும் அம் மொழியைக் கட்டாய பாடமாக்கினால் தமிழ் மொழியும் தமிழர் நாகரிகமும் எப்படி நசித்துபோகும் என்பதைப்பற்றியும் அதன் காரணமாக தமிழர்கள் ஆரிய கூட்டத்திற்கு அடிமைகளாக நேரிடும் என்பதைப் பல உதாரணங்களோடு எடுத்துக் காண்பித்தார். தாய் பாஷையிலேயே 100க்கு 93 பேருக்குக் கையெழுத்துப் போடத் தெரியாத மக்களுக்கு இந்தி என்னும் அன்னிய பாஷை கற்பிக்க வேண்டிய அவசியமும் அவரசரமும் என்ன என்று கேட்டார். கல்விக்குப் பணமில்லை என்று கூறி பள்ளிக் கூடங்களை அடைத்துவரும் மந்திரி சபையாருக்கு, இந்தி உபாத்தியார்களுக்குச் சம்பளம் கொடுக்க ஏற்பாடு செய்திருப்பதின் சூழ்ச்சியை விளக்கினார். ஆரம்பக்கல்வியை கட்டாயப்படுத்துவதாகச் சொல்லி வோட்டுப் பெற்றவர்கள் முதலில் அந்த கடமையை செய்யத் தவறிப் பொதுமக்கள் விரும்பாத இந்தியை வலுக்கட்டாயமாக திணிப்பதை கண்டித்தார். உபாத்தியாயரும் பள்ளிக்கூடமுமின்றி உதவியைக் கொண்டு கல்வியைப் போதிக்கப் போவதாக தோழர் ஆச்சாரியார் திட்டம் போட்டிருப்பதின் விபரீத போக்கை எடுத்து விளக்கிக் காட்டினார். பிறகு இந்தி எதிர்ப்பு சத்தியாக்கிரகிகள் விஷயத்தில் அரசாங்கம் செய்து வரும் கொடுமைகளை எடுத்துக் கூறினார்.

வகுப்புவாத வெறி

பிறகு காங்கரஸ் மந்திரிசபையின் வகுப்பு வாத வெறியைப் பற்றிக்கூறி பொது மக்களுக்கு அவர்கள் கொடுத்திருந்த வாக்குறுதிகளுக்கு விரோதமாக செய்திருக்கும் பல காரியங்களை எடுத்துக் காட்டியதோடு இவ்வரசாங்கத்தால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடன்சுமை, வரிப்பளுவு ஆகியவற்றையும் எடுத்துப் பேசினார். மதுவிலக்கு, கடன் நிவாரண மசோதாக்கள் ஆகியவற்றிலுள்ள குறைபாடுகளைப் பற்றியும் விளக்கிப் பேசினார்.

குறிப்பு: 17.07.1938 ஆம் நாள் தர்மபுரி யூனியன் போர்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டத்தில் "கட்டாய இந்தியும் தற்கால அரசியல் நிலைமையும்" என்ற பொருள் குறித்து ஆற்றிய உரையின் சுருக்கம்.

தோழர் பெரியார்,குடி அரசு - தலையங்கம் - 24.07.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: