சேலம் நகரசபைத் தோழர்கள் தேர்தல் விஷயமாக தோழர் ஜெகதீச செட்டியார் செய்து வரும் முயற்சி வெற்றி பெற்று வருவது கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தோழர் ஜெகதீச செட்டியார் கட்சியை ஆதரித்து காங்கரஸ்காரருடன் போட்டி போட சேலம் பிரபலஸ்தர்கள் வலிய வந்திருப்பதாயும் அவர்களில் சிலர் சேலம் நகரசபை மாஜித் தலைவர்கள் என்றும் அறிகின்றோம். ஆகவே தோழர் ஜெகதீச செட்டியார் கட்சி மிகவும் வலிமையுடைய கட்சியாக இருக்கு மென்பதற்குச் சந்தேகமே இல்லை. தண்ணீர் குழாய் கண்ராக்ட்டு சம்மந்தமாக காங்கரஸ் மந்திரியார் பின்பற்றி வரும் கொள்கை சுயமரியாதையுடையவர்களை யெல்லாம் தட்டி யெழுப்பாமலிருக்குமா? எனவே தோழர் ஜெகதீச செட்டியார் கடசிக்கு முழு வெற்றியேற்படும்படி சேலம் மகாஜனங்கள் ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.04.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: