தில்லை நகர அகில இந்தியக் கதர்கடை வியாபாரி தோழர் பாலகிருஷ்ணப்பிள்ளை என்பவரிடம், சமையல் வேலை செய்து வந்த துரைசாமி என்பவரைப் போலிஸ் 64ஆம் சட்டத்தின் கீழ் சார்ஜ் செய்து மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கேஸ் நடந்தது உண்மையா?

மேற்படி துரைசாமிக்குச் சாதகமாகச் சிதம்பரம் காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் கதர்க்கடை கோவிந்தசாமி என்பவரும் டிபன்ஸ் சாட்சியும் சொல்லியது உண்மையா?

இந்தத் துரைசாமி ஏற்கனவே இரண்டு தடவை குற்றவாளியாகி ஜெயிலுக்குப் போய் வந்தவர் என்பது உண்மையா?

தென்னார்க்காடு ஜில்லா காங்கிரஸ் கமிட்டி செக்ரட்டரி சிவபுரி தோழர் கிருஷ்ணசாமி படையாட்சி என்பவரும், இன்னும் சில காங்கிரஸ் தோழர்களும் சேர்ந்து போலிஸ்காரரையும் மாஜிஸ்திரேட்டையும் வற்புறுத்தி எப்படியும் விடுதலை செய்துவிட வேண்டுமென்றும், செய்யாவிட்டால் மேலாவிலிருந்து வரும் தொந்தரவுகளுக்கு ஆளாக வேண்டுமென்றும் பயமுறுத்தி அவரை விடுதலை பெறச் செய்தது உண்மையா?

அதே 64ஆம் சட்டத்தில் சார்ஜ் செய்யப்பட்ட கிருஷ்ணசாமி என்பவருக்கு மட்டும் (திராவிடர் கழகத் தோழர்) 6-வாரம் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது உண்மையா?

பிராமணனுக்கு ஒரு தண்டனை சூத்திரனுக்கு ஒரு தண்டனை என்று முன்னால் இருந்த மனுதர்மமே, இப்பொழுது காங்கிரசாருக்கு ஒரு தண்டனை, காங்கிரஸ் அல்லாதவர்களுக்கு ஒரு தண்டனையாக மாறியிருக்கிறதெனவும், மனு ஆட்சி ஏட்டில் இருப்பது காங்கிரஸ் ஆட்சி நாட்டில் நடப்பது எனவும் மக்கள் பேசிக் கொள்வது உண்மையா?

குடிஅரசு - செய்தி விளக்கம் - 27.12.1947

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: