ரிகிறது வீடு என்றால், உடனே அறிவுள்ள மக்களால் ஆணும் பெண்ணும், இளைஞர் முதல் முதியோர் ஈறாக எவரும் தீயை அணைக்க முந்துவார்கள். அவரவர்கள் தம் தம் சக்திக்கேற்றளவு உதவுவார்கள். இது மனித இயல்பு. இன்று உலகிலே ஒரு பெருந்தீ கொழுந்து விட்டெரிகிறது. அதுதான் உலகப்போர், இதை அணைக்க உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டு மக்களும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், இளைஞனும், முதியோனும் பாடுபட்டு வருகின்றனர். அல்லும் பகலும் இதற்காக தங்கள் நலன்களையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு உழைத்து வருகின்றனர். ஒருவருக்கும் தங்கு தடையில்லை.

இதுபோலவே, இன்று நம் நாட்டில் எங்கு பார்த்தாலும் இன எழுச்சி காணப்படுகிறது. இனப்போர் முழக்கம் கிளம்புகிறது. தன்மான உணர்ச்சி பெற்று விட்டனர் மக்கள். சமுதாயத்தின் பெயராலும், பிறவியின் பெயராலும், ஜாதியின் பெயராலும் தங்களை இழிவுபடுத்தி அழுத்தி வைத்திருப்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள். ஆரியத் தீயானது எரிந்து கொண்டிருக்கிறது. திராவிட நாட்டில் இதைக் கண்ணுறும் எவர்தான் வாளாயிருக்க முடியும்; அதிலும் அறிவு விளக்கம் பெறும் மக்கள் வாளாயிருப்பார்களா?

எனவே, மாணவத் தோழர்கள் கிளம்பியிருக்கின்றனர். இத்தீயை அணைக்கச் சென்ற கோடைகால விடுமுறையில் கிளம்பியது போலவே, இந்த கிறிஸ்துமஸ் விடுமுறையில் கிளம்பி திக்கு விஜயம் செய்து வருகின்றனர், திராவிட மாணவத் தோழர்கள். இவர்களது ஆர்வத்தை – ஊக்கத்தை கண்டு நாம் மகிழ்வதோடு திராவிடநாடு மகிழும் என்றே கருதுகின்றோம். இவர்களது பிரசாரத்தால் குருட்டு நம்பிக்கையில் ஆழ்ந்து கிடக்கிறவர்களும், ஆரியத்திற்கு அடிமையாயிருந்து வருகிறவர்களும் விழிப்படைந்திருப்பார்கள் என்றே நம்புகின்றோம்.

இவ்வாறு இவர்கள் விழிப்படைந்ததற்கு அறிகுறியாகவும், மாணவத் தோழர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு – சேவைக்கு நன்றியறிதலாகவும் செய்ய வேண்டியது யாதெனில் திராவிடர் கழகத்தில் உறுப்பினராகச் சேருவது, திராவிடர் கழகங்களை நிறுவுவதுதான். இதனைச் செய்வார்களானால் மேலும் மேலும் மாணவத் தோழர்களுக்கு இப்பணியில் இறங்குவதற்கு ஊக்கமளித்தவர்களாகவார்கள் என்பதோடு ஆரிய ஆதிக்க தீயானது அதிகமாகப் பரவாமல் தடுத்தவர்களுமாவார்கள். இந்நாட்டார், நன்றியறிதல் உள்ளவர்கள் என்பதற்குப் பெயர் போனவர்கள் ஆனதால், இக்கைம்மாறு செய்யத் தவறமாட்டார்கள் என்றே நம்புகின்றோம்.

குடிஅரசுதுணைத் தலையங்கம் – 30.12.1944

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: