சென்னை ஹைக்கோர்ட்டுக்கு இந்திய சீப் ஜட்ஜி

சென்னை ஹைக்கோர்ட்டுக்கு இந்திய சீப் ஜட்ஜி வேண்டுமென்று பார்ப்பனப் பத்திரிகைகள் கூப்பாடு போடுகின்றன. மைலாப்பூர் பார்ப்பன வக்கீல்களும் கூப்பாடு போடுகின்றனர்.

இக்கூப்பாட்டை அரசாங்கத்தார் ஏற்றுக்கொண்டு ஒரு இந்தியரை ஹைக்கோர்ட்டுக்கு சீப் ஜட்ஜியாக்கினால் அந்தப் பதவி தோழர் ஜட்ஜி வெங்கிடசுப்பராவ் என்கின்ற பார்ப்பனரல்லாதாருக்குத்தான் கிடைக்கும். ஏனெனில் அவர்தான் இருக்கிற இந்திய ஜட்ஜிகளில் அதிக சர்விஸ் பெற்று முன்னணியில் இருப்பவர். அப்படி இருக்க பார்ப்பனர்கள் ஒரு பார்ப்பனரல்லாதார் சீப் ஜட்ஜி ஆவதற்கு இவ்வளவு ஆத்திரப்படுவார்களா என்றும் அதற்குள் பார்ப்பனர்களுக்கு இவ்வளவு நல்ல எண்ணமும் நல்ல புத்தியும் வந்துவிட்டதா என்றும் நம்மவர் பலர் ஆச்சரியப்படலாம். "சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்கின்ற பழமொழிக்கு ஒப்ப பார்ப்பனர்கள் நல்ல எண்ணத்தின்மீது இதற்கு பாடுபடவில்லை. அதிலும் ஒரு கெட்ட எண்ணத்தை வைத்தே இந்தத் தந்திரம் செய்திருக்கிறார்கள்.

அது என்ன கெட்ட எண்ணம் என்று அறிய பலர் ஆசைப்படக்கூடும். அதென்னவென்றால் அகில இந்திய சம்மந்தமான ஒரு பெரிய உத்தியோகத்துக்கு இப்போது அட்வகேட் ஜனரலாயிருக்கும் தோழர் சர். அல்லாடிக்கும் ஜட்ஜி தோழர் வெங்கிட சுப்பராவுக்கும் போட்டி இருந்து வருகிறது.

அதாவது இவர்களுக்குள் போட்டி இல்லாவிட்டாலும் இவர்களில் யாரைப்போடுவது என்பதில் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதற்குப் போக சர். அல்லாடி முயற்சி செய்து வருகிறார். அநேகமாய் ஜஸ்டிஸ் வெங்கிடசுப்பராவுக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம். அப்படிக் கிடைத்து விட்டால் சர். அல்லாடி ஏமாற்றமடைய வேண்டிவரும்.

ஆதலால் ஜஸ்டிஸ் வெங்கிட சுப்பராவை சீப் ஜட்ஜி ஆக்கி இங்கேயே ஆணி அடித்துவிட்டால் சர். அல்லாடிக்கு தானாகவே அப்பதவி வந்து விடும் என்கின்ற "நல்ல எண்ணம்" அதனால் ஒரு பார்ப்பன ரல்லாதாருக்கு ஹைக்கோர்ட்டு ஜட்ஜி வேலை கிடைக்க பார்ப்பனர்கள் இவ்வளவு ஆசைப்படுகிறார்கள்.

அந்த அகில இந்திய இலாகா உத்தியோகம் என்னவென்றால் பிடரல் கோர்ட்டு ஜட்ஜி அல்லது ஆலோசனை சொல்லுபவர் என்கின்ற உத்தியோகமாகும். மற்றும் ஒன்றை கருத்தில் வைத்திருக்கிறார்கள். அவைகளுக்கு N 6000 ரூபாய்க்குக் குறையாத சம்பளமிருக்கும். அதிகாரமும் கெளரவமும் அதிகமானதாகும்.

தோழர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 14.03.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: