துறையூரில் நடந்த திரவுபதி அம்மன் விழாவில் கடைசி நாளாகிய 4.8.44  ஆம் தேதியன்று அக்கினியில் இறங்கியதில் நமது இயக்க அன்பர்கள் வை. நடேசன், து.வீ. நாராயணன் முதலியவர்கள் காப்புக்கட்டிக் கொள்ளாமலும் கையில் செங்கொடியுடன் பெரியார் வாழ்க! சூழ்ச்சி ஒழிக! என்ற சப்தத்தோடு அக்கினியில் இறங்கி இது பக்தியல்ல என்று வெளிப்படுத்தினார்கள்.மேற்படி கோயில் தர்மகர்த்தா அனுமதி கொடுத்தால் ஒவ்வொரு வருடமும் முன்னணியில் இறங்க தயாராக இருக்கிறோம் என்றும் சொல்லுகிறார்கள்.இவ்விழாவினால் ஏற்படும் உடையார் – நாயக்கர் தகராறு இவ்வருடம் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருக்கிறது, இனியும் மேற்படி விழாவை நிறுத்தாமல் கவர்ன்மெண்டார் பார்த்துக் கொண்டிருந்தால், கொலை முதலிய பயங்கரமான முடிவுகள் ஏற்படும் என்று நிச்சயமாகத் தோன்றுகிறது. கவர்ன்மெண்டார் கவனிப்பார்களாக.“சாமியில்லை என்று சொல்லும் சுயமரியாதைக்காரர்கள் அக்கினியில் இறங்கட்டும் பார்ப்போம்” என்று சொன்ன காலம் மாறி, “சுயமரியாதைக்காரர்கள் அக்கினியில் இறங்க வருகிறார்கள், அவர்களை விடவேண்டாம்” என்று சொல்லும்படியான நிலைக்கு காலம் மாறிவிட்டது பெரியாரின் உழைப்பால்.

குடிஅரசு – செய்தி – 12.08.1944

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: