16.05.1946 இல் திண்டிவனம் தாலுக்கா கோவடி கிராமத்தில் நடந்த அய்யனாரப்பன் திருவிழாவில், கிராமத்திலுள்ள பெரியவர்களும் வாலிபர்களும் திராவிடர் கழகத் தோழர்களை, அய்யனாரப்பனுக்கு ஒரு கரகம் ஜோடிப்பதாகவும், தெய்வங்களின்  கதைகள் வெறும் புனைந்துரை எனக் கூறும் நீங்கள் உங்களில் யாராவது மேற்படி கரகத்தைத் தூக்கிக்கொண்டு ஊரைச்சுற்றி கொண்டுவந்து இறக்கிவிடுங்கள் என்று பிடிவாதம் செய்து கேட்டதினால், நமது இயக்கத் தோழரும் திண்டிவம் தாலுக்கா திராவிடர் கழக செயற்குழு உறுப்பினருமான என்.சேதுராமன் அவர்கள் அந்தக் கரகத்தைச் சுலபமாக எடுத்து, தன் தலைமேல் தாங்கி சுமார் 2 1 / 2மணி நேரம் வரை கிராமத்தைச் சுற்றிவந்து கோயிலில் இறக்கிவிட்டார். 

மேற்படி கரகத்தை நீண்ட காலமாக ஜோடிப்பதில்லையென்றும், ஆதியில் குதிரை மீது கரகத்தை வைத்து ஊர்வலம் வருவதென்றும், அப்படி வரும் போது குதிரைக்கு நொப்பும், நுரையும் தள்ளி மிகவும் அவஸ்தைப்பட்டுக் கீழே விழுந்துவிடும் என்றும், ஆதலால் அதை யாரும்  எடுக்கமுடியாதென்றும், அப்படி யாராவது எடுத்தால் வாயிலும் மூக்கிலும் இரத்தம் வந்து கீழே விழுந்து விடுவார்கள் என்றும் சொன்னார்கள்.இந்த மூடநம்பிக்கையை மேற்கண்ட விதம் செய்து உண்மையைத் தெளிய வைத்தவின் 'ஒழிக மூடநம்பிக்கை! திராவிடநாடு வாழ்க! பெரியார் வாழ்க!" என்னும் வாழ்த்தொலிகளுடன் கோயிலிருந்த கூட்டம் கலைந்தது. 

குடிஅரசு - பெட்டிச்செய்தி-18.07.1946

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: