அருமைத் தோழர்களே, தாய்மார்களே!

நான் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கும் கட்டிடத்தின் ஞாபகத்திற்குரிய இரு வீரர்களான தோழர்கள் ல. நடராசன், வெ. தாளமுத்து ஆகியவர்களின் சேவையையும் உணர்ச்சியையும் தமிழர்கள் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்த்தால் அவர்களின் சுயநலமற்ற தியாகம் தெற்றென விளங்கும். அவ்வித புகழுக்குரிய வீரர்களின் ஞாபகார்த்த கட்டிடத்தை நாம் இங்கு கட்டுவது அவர்களுக்கு ஏதோ பிரமாதமாக நாம் செய்ததாகவல்லது. அதற்குப் பதிலாக அவ்வீரர்களின் தியாகத்தை  நாம் பின்பற்றி நம் நாட்டின் விடுதலைக்காக நாம் உழைக்க அடையாளமாகவேதான் அவ்விரு வீரர்களின் ஞாபகார்த்த கட்டிடத்தை நாம் கட்டி முடிக்க முன் வந்திருக்கிறோம்.

பண்டைய நாட்களில்கூட நம் பெரியோர்களால் இம்முறைதான் செய்யப்பட்டு வந்தது. ஏன் அதிகமாக சொல்ல வேண்டுமானால், இப்போதிருக்கும் பல கோயில்களிலிருக்கும் சின்னங்களும் அவ்வித முறையைப் பின்பற்றித்தான் ஏற்பட்டதாகும். சரித்திரத்தைப் பார்த்தாலே தெரியவரும் அதன் வரலாற்றை.periyar 28

ஆரியர் சூழ்ச்சி

ஆனால், நாளடைவில் ஆரிய சூழ்ச்சியாலும், பார்ப்பனிய வயிற்று பிழைப்பின் காரணமாகவும், கோயில்கள் எல்லாம் வேறுவிதமாக அவர்களின் பொய் ஏமாற்றுதலுக்கு  உபயோகப்பட்டு வந்துள்ளது. இன்றைய நிலையில் கூட யாராவது இறந்து விட்டவுடனே அவ்விடத்தில் கட்டப்படும் கட்டிடத்திற்கும் கோயில் போன்ற முறையில் பூஜை முதலான செய்து இல்லாததையெல்லாம் கற்பனை செய்து வருவதையும் நாம் கண்டு வருகிறோம். எனவே, அவ்வித நிலையிலோ அல்லது கருத்திலோ அல்ல நாம் இன்று கட்ட ஆரம்பித்திருக்கும் வீரர்களின் ஞாபகார்த்த கட்டிடமானது. அதைப் பார்க்குந்தோறும் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்மையிலேயே அவனது அடிமை வாழ்வும் சமுகத்தில்தான் அமிழ்ந்துகிடக்கும் சூழ்ச்சியும் நினைவிற்கு வந்து அதைத் தகர்த்தெறிய உடனே வீரனாக விளங்குவான். தோழர்கள் ல. நடராசன், தாளமுத்துபோல் உயிரிழக்க வேண்டுமென்பதல்ல. அவர்கள் எக்காரியத்துக்காகத் தங்களது அரும்பெரும் உயிர்களை அரைவிநாடியில் அர்ப்பணம் செய்தார்களோ, அப்பேர்ப்பட்ட கொடிய பார்ப்பனியத்தை ஒழிக்க ஒவ்வொரு தமிழனும் முன்வர வேண்டுமென்பதுதான் இக்கட்டிடம் கட்டுவதின் நோக்கமுமாகும். அதுவேதான், அவ்வீரர்களுக்கும்  நாம்செய்யும் வணக்கமும் மரியாதையும் ஆகுமே தவிர வேறில்லை. அப்பேர்ப்பட்ட காரியத்திற்கு அஸ்திவாரக்கல் நாட்டுவதற்காக, என்னை அழைத்ததற்கு நான் மிக மகிழ்ச்சியடைவதுடன், அவ்விரு வீரர்களின் கொள்கைகளைப் பின்பற்றி யாவரும் தொண்டு  செய்ய முன்வரவேண்டுமென்று கேட்டுக்கொண்டதோடு, மற்றும் மயானத்தில் ஜாதிவாரி புதைக்கும் வித்தியாசத்தை ஒழிக்க வேண்டுமென்பதைப் பற்றியும் மிக விளக்கமாகப்பேசி பலத்த கைதட்டுலுக்கிடையே வீரர்களின் ஞாபகார்த்த கட்டிடத்தின்  அஸ்திவாரக்கல்லை நாட்டினார்.

(05.05.1940 அன்று சென்னையில், சென்னை இந்தி எதிர்ப்புப் பிரசார நிதி கமிட்டியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு - சொற்பொழிவு - 12.05.1940

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: