• தீ மிதித்தல் ஏமாற்று வித்தை
  12.03.1946 இல் நடைபெற்ற கரூர் காமாட்சியம்மன் திருவிழாவில் ஆச்சாரத்தோடு, அம்மையிடம் பக்தியாய், ஆண்டவன் அருள் கொண்டு ஆஸ்திகர்கள் நெருப்புக் குழியில் தீ மிதிக்க இறங்கிய பொழுது தீ மிதித்தல் ஏமாற்று வித்தை என்பதை நிரூபிக்க கறுப்புச் சட்டைப் படை இளைஞர்கள் 6 பேர் கறுப்புச் சட்டையணிந்து ஆச்சாரம், பக்தி, அருள் ஒன்றும் இல்லாமலே தாமும் அவர்களுடன் தீ மிதித்து ஏறினர். இனி இம்மாதிரி ஏமாற்று வித்தைகள்  பலிக்காது என ஆஸ்திகர்கள்...

  Read more

  தீமிதித்தல் பக்தியினாலா?
  துறையூரில் நடந்த திரவுபதி அம்மன் விழாவில் கடைசி நாளாகிய 4.8.44  ஆம் தேதியன்று அக்கினியில் இறங்கியதில் நமது இயக்க அன்பர்கள் வை. நடேசன், து.வீ. நாராயணன் முதலியவர்கள் காப்புக்கட்டிக் கொள்ளாமலும் கையில் செங்கொடியுடன் பெரியார் வாழ்க! சூழ்ச்சி ஒழிக! என்ற சப்தத்தோடு அக்கினியில் இறங்கி இது பக்தியல்ல என்று வெளிப்படுத்தினார்கள்.மேற்படி கோயில் தர்மகர்த்தா அனுமதி கொடுத்தால் ஒவ்வொரு வருடமும் முன்னணியில் இறங்க தயாராக இருக்கிறோம் என்றும் சொல்லுகிறார்கள்.இவ்விழாவினால் ஏற்படும் உடையார்...

  Read more

  மூடநம்பிக்கை முறியடிக்கப்பட்டது
  16.05.1946 இல் திண்டிவனம் தாலுக்கா கோவடி கிராமத்தில் நடந்த அய்யனாரப்பன் திருவிழாவில், கிராமத்திலுள்ள பெரியவர்களும் வாலிபர்களும் திராவிடர் கழகத் தோழர்களை, அய்யனாரப்பனுக்கு ஒரு கரகம் ஜோடிப்பதாகவும், தெய்வங்களின்  கதைகள் வெறும் புனைந்துரை எனக் கூறும் நீங்கள் உங்களில் யாராவது மேற்படி கரகத்தைத் தூக்கிக்கொண்டு ஊரைச்சுற்றி கொண்டுவந்து இறக்கிவிடுங்கள் என்று பிடிவாதம் செய்து கேட்டதினால், நமது இயக்கத் தோழரும் திண்டிவம் தாலுக்கா திராவிடர் கழக செயற்குழு உறுப்பினருமான என்.சேதுராமன் அவர்கள் அந்தக்...

  Read more

  வர்ணாசிரம மாநாட்டின் கேலிக் கூத்து
  சிதம்பரத்தில் 8.10.1944 முதல் 11.10.44 வரை நடக்கவிருந்த வர்ணாசிரம மாநாடு 8.10.44இல் ஒரு நாள் மட்டும் அதுவும் 3 மணி நேரத்தில் நடந்து முடிந்தது. குறிப்பிட்ட தலைவர் தோழர்கள் பராண்யும், சீனிவாச அய்யங்காரும் வரவில்லை. இம்மாநாடு குறித்து 7.10.1944இல் ஊர்வலத்துடன் பொதுக்கூட்டமும், 8.10.44இல் காலை ஊர்வலமும், 11.10.1944இல் தேதி பொதுக்கூட்டமும் திராவிடர் கழகத்தார் நடத்தப் போவதாய் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். சிதம்பரம் ஸ்டேஷனரி சப்மாஜிஸ்திரேட் திராவிடர் கழகத்தாருக்கு 7.10.1944 முதல் ஒரு...

  Read more

  நேரு பல்டி - கார்டியன் ஆசி
  லண்டன் , மே 22- வாய்வீரர் ஜவஹர்லால் நேருவின் வண்டவாளம் நாடெல்லாம் சிரிக்க நடுத்தெரு அம்பலமாக்கப்பட்டது. இந்தியாவை சாம்ராஜ்யப் பிணைப்பிலிருந்து ஒரே வெட்டாக வெட்டித் துணித்துவிட வேண்டும். எடுங்கள் ராட்டை ஆயுதத்தை எழுங்கள் சண்டியாக்கிரகப் போருக்கு என்று வரட்டு தவளையாய் கோஷித்த கஞ்சி வாட்டர் பட்டினி சோல்ஜர் படைத்தலைவர் நேரு, மகாயுத்தத்தைக் கண்டதும் தொடை நடுங்கி, அய்யோ, இல்லவே இல்லை சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்போவதாகக் கூறுவது யாரோ விரோதிகள் கட்டிவிட்டப் பொய்யென எண்ணிக்கொள்ளுங்கள்...

  Read more

 • காஞ்சியில் பிரிவினை மாநாடு
  பெரியார் காங்கிரசிலிருந்த காலையில் பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதவர்களை வஞ்சித்து சூழ்ச்சி செய்து தங்கள் ஆதிக்கத்தை நிலைக்கச் செய்வதை உணர்ந்து பார்ப்பனரல்லாதாருக்கு சகல துறைகளிலும் அவரவர்களுடைய விகிதாச்சாரத்திற்குத் தகுந்தாற்போல் பிரதிநிதித்துவம் அளித்துவர வேண்டும் என கர்ஜனை செய்து வெளியேறினார் என்பதையும், அந்தக் கொள்கையை நாடெங்கும் திக்விஜயம் செய்து முழக்கினார் என்பதையும், மக்கள் அதன் கருத்தை உணர்ந்து தெளிந்து மாநாடுகள் கூட்டி, தீர்மானங்கள் நிறைவேற்றி, அந்த நோக்கம் சித்தி பெறும் வரை கிளர்ச்சி செய்தனர்...

  Read more

  (சட்டசபை உறுப்பினர் சம்பள ஒழிப்பு நாள்)
  15.05.1940 15.05.1940 ஆம் தேதியன்று சட்டசபை அங்கத்தினர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தை நிறுத்த வேண்டுமென்பதற்காக ஆங்காங்கு கூட்டங்கள் கூட்டி, மேற்படி சம்பளத்தை நிறுத்திவிட வேண்டுமென்று தீர்மானங்கள் நிறைவேற்றி மேன்மை தங்கிய சென்னை கவர்னர் பிரவு அவர்களுக்கும், வைஸ்ராய் பிரபு அவர்களுக்கும் அனுப்ப வேண்டுகிறேன். ஈ.வெ.ராமசாமி குடிஅரசு - செய்தி துணுக்கு - 12.05.1940

  Read more

  வீரர்கள் கல்நாட்டு விழா
  அருமைத் தோழர்களே, தாய்மார்களே! நான் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கும் கட்டிடத்தின் ஞாபகத்திற்குரிய இரு வீரர்களான தோழர்கள் ல. நடராசன், வெ. தாளமுத்து ஆகியவர்களின் சேவையையும் உணர்ச்சியையும் தமிழர்கள் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்த்தால் அவர்களின் சுயநலமற்ற தியாகம் தெற்றென விளங்கும். அவ்வித புகழுக்குரிய வீரர்களின் ஞாபகார்த்த கட்டிடத்தை நாம் இங்கு கட்டுவது அவர்களுக்கு ஏதோ பிரமாதமாக நாம் செய்ததாகவல்லது. அதற்குப் பதிலாக அவ்வீரர்களின் தியாகத்தை  நாம் பின்பற்றி நம் நாட்டின் விடுதலைக்காக...

  Read more

  பிரிவினை மாநாடு - 7-05-1940இல் ஆரம்பக் கூட்டம் நிறைவேறிய தீர்மானங்கள்
  மேற்படி மாநாட்டின் பூர்வாங்க கூட்டம் காஞ்சீபுரத்தில் தோழர் ஏ.கே. தங்கவேலு முதலியார் அவர்கள் தலைமையில் கூடி கீழ்க்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டது. (1) திராவிடநாடு, இப்போது பிரிட்டிஷ் இந்தியாவில் பிணைக்கப்பட்டிருப்பதால் அரசியல், மதம், கலை, மொழி, நாகரிகம், கைத்தொழில், பொருளாதாரம், வர்த்தகம் ஆகிய சகல துறைகளிலும் ஆரியத்துக்கு அடிமைப்பட்டு சிதைந்து வருவதால் திராவிட நாட்டை தன்னாட்சியுள்ள தனி நாடாகப் பிரித்து அமைக்கவேண்டுமென்று தமிழகத்தில் 2 வருடமாக நடைபெற்றுவரும் கிளர்ச்சியை பலப்படுத்தும் நோக்கத்துடன் பிரிவினை மாநாடு,...

  Read more

  ஆரியர் - திராவிடர்: பெரியாரும் காந்தியும்
  திராவிடர்களுடைய சமயத்திற்கும் கலைகளுக்கும் தத்துவங்களுக்கும் இஸ்லாமியர்களுடைய சமயத்திற்கும் கலைகளுக்கும் தத்துவங்களுக்கும் பேதமில்லை. திராவிடர்கள் கடவுளுக்கும் இஸ்லாம் கடவுளுக்கும் எவ்வித பேத கற்பனையும் இல்லை. திராவிடத்தில் உள்ள முஸ்லிம்கள் அநேகமாய் யாவரும் திராவிடர்களே ஒழிய அவர்கள் வேறு நாட்டினரோ வேறு ஜாதியா (வர்க்கத்தா)ரோ அல்ல; திராவிடர்களேயாவார்கள். ஈ.வெ.ரா “இந்துமதமும் இஸ்லாமிய மதமும் - இந்து கலைகளும் இஸ்லாமிய கலைகளும் - இந்து தத்துவங்களும் இஸ்லாம் தத்துவங்களும் (ஒன்றேயாகும்) - ஒன்றுக்கொன்று விரோதமானது என்று சொல்லப்படுவதை...

  Read more

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: