• abolish-caste-1.jpg
 • abolish-caste-2.jpg
 • abolish-caste-3.jpg
 • Brahmins.JPG
 • periyar1.jpg

சாதி ஒழிப்பு

கடைசிப் பதிவேற்றம்

 • Last Modified: Wednesday 07 October 2020, 10:37:52.

தேசியம் - தேசிய இனம்

 • திராவிடரும் - தமிழரும்
  நாடு பிரிவினைக் கமிட்டி அறிக்கையைப் பார்த்தேன். இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிக்கை பற்றிய சேதிகளின் சுருக்கம் ஒருவாறு எனக்குத் தெரியவந்தது. பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால்...

  Read more

 • ‘தேசியம்’ ஓர் முட்டுக்கட்டையே
  தேசீய இயக்கம் சென்ற வாரம் சுயமரியாதை இயக்கம் என்னும் தலைப்புக்கொடுத்து, அவ்வியக்கத்தின் கொள்கைகளைப் பற்றியும், திட்டங்களைப் பற்றியும், அதன் நிலையைப் பற்றியும், செல்வாக்கைப் பற்றியும், இதுவரை அது செய்திருக்கும் வேலையைப் பற்றியும் ஒருவாறு குறிப்பிட்டிருந்தோம். இவ்வாரம் தேசீய இயக்கம் என்னும் தலைப்புப் பெயர் கொடுத்து அதன் கொள்கை, திட்டம், நிலைமை,...

  Read more

 • இலங்கை உபன்யாசம் - தேசம், தேசீயம் ஒரு போலி உணர்ச்சி
    அன்புள்ள தலைவரே! வீரமும், எழுச்சியும், சுயமரியாதை உணர்ச்சி யும் உள்ள வாலிபர்களே!! தலைவரின் முன்னுரையிலும், உபசாரப் பத்திரங்களிலும், மற்றும் பேசியவர்களும் அளவுக்கு மீறி என்னைப் பற்றியும், எனது சிறு தொண்டைப் பற்றியும் புகழ்ந்து கூறி இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட புகழ்ச்சிகளுக்கு நான் சிறிதும் தகுதியுடையேன் அல்லன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கி...

  Read more

 • தேசீயப் பைத்தியம்
    தேசீயம் என்பது ஒரு பித்தலாட்டம் என்பதையும், அது சுயநலவாதி களின் வயிற்றுப்பிழைப்புக்குத் துணைபுரியும் வார்த்தை என்பதையும், நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் நாம் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம். தேசீயவாதியாக இருக்கின்ற ஒருவன் எச்சமயத்திலும் யோக்கியப் பொறுப்பு டன் நடந்துகொள்ள முடியாது. சமயத்திற்குத் தகுந்த வேஷங்களைப் போட்டுக்கொண்டு பாமர மக்களை...

  Read more

 • ஆந்திரர் தமிழர் என்று பிரிக்கப்பார்ப்பது
    ஜஸ்டிஸ்  கட்சியிலிருந்து  நம்பிக்கை  இல்லாத்  தீர்மானத்தின்  காரணமாய்  வெளியேறி  விட்ட  தோழர்  குமாரராஜா  அவர்களுக்காக  குமாரராஜா  அவர்களை  ஆதரிக்க  ஆசைப்பட்டவர்களோ  அல்லது  அவரிடம்  கூலிபெற்றவர்களோ  ஜஸ்டிஸ்  கட்சியைத்  தாக்க  இதுசமயம்  தங்களுக்கு  வேறு  எவ்வித  கதியும்  இல்லாமல்  நிற்கதியாயிருப்பதை  முன்னிட்டு  மிக  இழிவான  மார்க்கத்தைக்  கைக்கொள்ளத்  துணிந்து  விட்டார்கள். ...

  Read more

பொதுவுடைமை

 • தந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு முதல்நாள் நிகழ்வுகள்
  இன்று (15.01.1948) காலை 9 மணிக்கு பிராட்வேயில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான பந்தலில் வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு பெருமிதத்துடன் ஆரம்பமாயிற்று. பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந...

  Read more

  சுயராஜ்யத்தில் வேறு சுய ஆட்சி ஏன்?
  ஸ்தல ஸ்தாபனங்கள் என்பன அந்தந்த ஸ்தல மக்களைச் சுயஆட்சிக்குத் தகுதியுடையவர்களாகப் பழக்குவதற்காகவே முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நோக்கத்திற்கு மாறாக, நாளடைவில் நகரமன்றங்களுக்கும், நாட்டாண்மைக் கழகங்களுக...

  Read more

  ஏமாற்றுப் பிழைப்பு எத்தனை நாள்
  அண்மையில் சென்னை மாகாணத்திற்குக் கனம் ஆச்சாரியார் வந்த முக்கிய காரணங்கள் இரண்டு என்று கூறலாம். ஒன்று திருவண்ணாமலையில் புராணப் பிரசாரம் செய்வது, மற்றொன்று “கல்கி” மகளார் திருமணத்திற்கு விஜயம் செய்வது. ...

  Read more

  குறள் பற்றிப் பெரியார்!
  குறள் என்பது மற்ற நூல்களைப் போலவே அதாவது ஆரிய மத இதிகாச நூல்களைப் போலவே, எல்லாத் தமிழ்(இந்து) மக்களாலும் இதுவரையில் மதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆரிய நூல்களைப் போன்றே குறளுக்கும், ஆரிய மத இதிகாசக் ...

  Read more

  குறளும் பெரியாரும்!
  திருவள்ளுவரின் திருக்குறளைப் பற்றிப் பெரியார் ஈ. வெ. ரா அவர்கள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். அது இவ்வாரக் குடிஅரசில் பிறிதோரிடத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதை வாசகர்கள் ஊன்றிப் படிக்க வேண்ட...

  Read more

 • பதினோறாம் தடவை?
  நமது சென்னை சர்க்கார் - பார்ப்பனப் பனியாக்களின் ஆதிக்க சர்க்கார், நடத்திவரும் ‘தடை படலத்தை‘ப் பார்க்கும் போது, குறிப்பாக பெரியார் அவர்களுடன் பிள்ளை விளையாட்டு விளையாடுவதில் பெருமையடைகிறதோ, என்றே நினைக...

  Read more

  ஒப்புயர்வற்ற குறள் நாள்!
  இந்த மாதத்தில் சென்னையில் குறள் நாள் வெகு ஆடம்பரமாகக் கொண்டாடப் பெறவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். பெரியார் திரு. வி. க. அவர்களையும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அவரும் மகிழ...

  Read more

  பொறுத்துப் பார்ப்போம்
  “உண்மை தோற்றது, பொய்ம்மை வெற்றி பெற்றது. நாணயம் நலிந்தது, நம்பிக்கைத் துரோகம் செழித்தது. யோக்கியதைக்கு மதிப்பு இல்லை, அயோக்கியத் தனத்திற்கு ஆடம்பர வரவேற்பு” - இவை இன்று இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்க...

  Read more

  ஸ்தல சுயாட்சி!
  இந்த மாதம் 12ஆம் தேதி திராவிடத் தந்தை பெரியாரவர்களுக்குத் திருச்சி நகரசபை அளித்த சிறப்பு மிக்க வரவேற்பு, நம் காங்கிரஸ் தோழர்களுக்கு - மந்திரிமார்களுக்குப் பெரும் மனக்கசப்பைத் தருமென்று கூறப்படுமானால்,...

  Read more

  திருவள்ளூரில் காமராசர்!
  சென்ற ஒருவார காலமாகத் தோழர் காமராசர் அவர்கள், செங்கற்பட்டு வட்டாரத்தில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். சென்னை மேல்சபை உறுப்பினருள் ஒருவரான தோழர் முத்துரங்கனார் அவர்கள் காலஞ் சென்ற...

  Read more

Periyar in English

 • தந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு முதல்நாள் நிகழ்வுகள்
  இன்று (15.01.1948) காலை 9 மணிக்கு பிராட்வேயில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான பந்தலில் வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு பெருமிதத்துடன் ஆரம்பமாயிற்று. பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந...

  Read more

  சுயராஜ்யத்தில் வேறு சுய ஆட்சி ஏன்?
  ஸ்தல ஸ்தாபனங்கள் என்பன அந்தந்த ஸ்தல மக்களைச் சுயஆட்சிக்குத் தகுதியுடையவர்களாகப் பழக்குவதற்காகவே முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நோக்கத்திற்கு மாறாக, நாளடைவில் நகரமன்றங்களுக்கும், நாட்டாண்மைக் கழகங்களுக...

  Read more

  ஏமாற்றுப் பிழைப்பு எத்தனை நாள்
  அண்மையில் சென்னை மாகாணத்திற்குக் கனம் ஆச்சாரியார் வந்த முக்கிய காரணங்கள் இரண்டு என்று கூறலாம். ஒன்று திருவண்ணாமலையில் புராணப் பிரசாரம் செய்வது, மற்றொன்று “கல்கி” மகளார் திருமணத்திற்கு விஜயம் செய்வது. ...

  Read more

  குறள் பற்றிப் பெரியார்!
  குறள் என்பது மற்ற நூல்களைப் போலவே அதாவது ஆரிய மத இதிகாச நூல்களைப் போலவே, எல்லாத் தமிழ்(இந்து) மக்களாலும் இதுவரையில் மதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆரிய நூல்களைப் போன்றே குறளுக்கும், ஆரிய மத இதிகாசக் ...

  Read more

  குறளும் பெரியாரும்!
  திருவள்ளுவரின் திருக்குறளைப் பற்றிப் பெரியார் ஈ. வெ. ரா அவர்கள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். அது இவ்வாரக் குடிஅரசில் பிறிதோரிடத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதை வாசகர்கள் ஊன்றிப் படிக்க வேண்ட...

  Read more

 • பதினோறாம் தடவை?
  நமது சென்னை சர்க்கார் - பார்ப்பனப் பனியாக்களின் ஆதிக்க சர்க்கார், நடத்திவரும் ‘தடை படலத்தை‘ப் பார்க்கும் போது, குறிப்பாக பெரியார் அவர்களுடன் பிள்ளை விளையாட்டு விளையாடுவதில் பெருமையடைகிறதோ, என்றே நினைக...

  Read more

  ஒப்புயர்வற்ற குறள் நாள்!
  இந்த மாதத்தில் சென்னையில் குறள் நாள் வெகு ஆடம்பரமாகக் கொண்டாடப் பெறவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். பெரியார் திரு. வி. க. அவர்களையும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அவரும் மகிழ...

  Read more

  பொறுத்துப் பார்ப்போம்
  “உண்மை தோற்றது, பொய்ம்மை வெற்றி பெற்றது. நாணயம் நலிந்தது, நம்பிக்கைத் துரோகம் செழித்தது. யோக்கியதைக்கு மதிப்பு இல்லை, அயோக்கியத் தனத்திற்கு ஆடம்பர வரவேற்பு” - இவை இன்று இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்க...

  Read more

  ஸ்தல சுயாட்சி!
  இந்த மாதம் 12ஆம் தேதி திராவிடத் தந்தை பெரியாரவர்களுக்குத் திருச்சி நகரசபை அளித்த சிறப்பு மிக்க வரவேற்பு, நம் காங்கிரஸ் தோழர்களுக்கு - மந்திரிமார்களுக்குப் பெரும் மனக்கசப்பைத் தருமென்று கூறப்படுமானால்,...

  Read more

  திருவள்ளூரில் காமராசர்!
  சென்ற ஒருவார காலமாகத் தோழர் காமராசர் அவர்கள், செங்கற்பட்டு வட்டாரத்தில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். சென்னை மேல்சபை உறுப்பினருள் ஒருவரான தோழர் முத்துரங்கனார் அவர்கள் காலஞ் சென்ற...

  Read more

பகுத்தறிவு

 • மர்க்குரி ஒழிக!
  கலிகால அதிசயம்! ஆண்டவனின் அதியற்புத அலாதி லீலை! பக்தர்களின் மனம் மகிழ மகேசனின் மயக்கவரம்!
  ஆம்! முதல்நாள் போட்ட மர்க்குரி மாரனை எரித்த தியாகராஜனுக்கு தாபத்தை உண்டாக்கியதாம். அல்ல, அல்ல கடுங்கோபத்தையே உண்டாக்கியதாம்! முனிகொண்டால் முப்புரம் எரிக்கும் மாயரல்லவா அவர்! ஆலய சிப்பந்தியின் உடம்பை எரித்தார் காயம் படாமல்!
  வெளியூர் 27. 10. 1949 ஆம் தேதிய சுதேசமித்திரனில் காணப்படுகிறது மேலே கண்ட செய்தி.
  முதல்நாள் போடப்பட்டதாம் மர்க்குரி லைட்; அடுத்த நாள் ஆண்டவனின்...

  Read more

 • பட்டாபிஷேகம்!
  ராம இராஜ்யத்துக்குப் பட்டாபிஷேகம் 1950 ஜனவரி 26ஆம் தேதி என்று வதிஸ்டர் வம்சத்தினர் நாள் குறித்துவிட்டனர். ராமாயண வதிஸ்டர், நாடாள குறிப்பிட்ட நாள், இராமன் காடேக வேண்டிய நாள் ஆக, ஆகிய இப்போது இந்துஸ்தான் வதிஸ்டவம்சத்தோர் குறிப்பிடும் இந்த 26 எப்படியும் மாறப்போவதில்லை என்று உறுதி கூறுகிறார்கள்.
  நம் காங்கிரஸ் தோழர்கள் ஏகாதிபத்தியம் என்று சொல்லுவதற்குப் பதிலாக கண்டுபிடித்த மற்றொரு பழமையான - அர்த்த புஷ்டியான சொல் இராமராஜ்யம் என்பதை அவர்களே...

  Read more

 • தீ நாள்!
  என்றைக்கோ ஒரு காலத்தில் ஒரு அசுரன் இருந்தானாம். அந்த அசுரன் ஒரு பன்றிக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். இந்த விசித்திரப் பிறவியான அசுரன் தேவர்களை - பூலோகப் பிராமணர்களை எல்லாம் கொடுமைப்படுத்தினானாம். இதனால் தன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம். செத்துப் போனதைப் பூலோக மக்கள் எல்லாரும் கொண்டாடிக் களிப்படைய வேண்டுமென்று செத்துப்போன அந்த அசுரன் கேட்டுக் கொண்டானாம். அந்தப்படியே ஆகட்டும் என்று மகாவிஷ்ணு திருவாய் மலர்ந்தாராம்....

  Read more

 • கடவுள் தர்பாரில்!
  இடம்: பரலோகம் கடவுள் தர்பார்.
  பாத்திரங்கள்: கடவுள், சித்திரபுத்த்திரன், யமன், ஞானசாகரன், பக்தரத்னம்.
  காலம்: ஊழிக் காலம்.
  I
  கடவுள்: அடே! சித்திரபுத்திரா! என்ன தாமதம். இன்றைய கணக்கென்ன?
  சித்திராபுத்திரன்: சர்வலோகப் பிரபு சர்வஞானப் பிரபு! சர்வவல்லப் பிரபு! கருணாநிதி! நாயேன் தங்களாக்ஞையையே எதிர்பார்த்திருந்தேன். (யமனைப் பார்த்து சமிக்கை செய்கிறான்).
  யமன்: (மானிடர் இருவரை அழைத்து வந்து தர்பார் முன்னிலையில் நிறுத்தி) “சுவாமி உத்திரவுப்படி நடந்து கொண்டேன்”. என்று ஒதுங்கி குனிந்து வாய் பொத்திக் கைகட்டி நிற்கிறான்.
  சித்திராபுத்திரன்:...

  Read more

 • கடவுள்
  வினா: கடவுளைப் பற்றிப் பொதுவாக ஜனங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களை விளக்கிக்கூறு.
  விடை: கடவுள் வானமண்டலத்தையும், பூமியையும், அதிலுள்ள சகல சராசரங்களையும் படைத்தவன் என்று மக்களில் பெரும்பாலோர் நம்புகிறார்கள்.
  வினா: அப்புறம்?
  விடை: கடவுள் சர்வஞானமுடையவனாம், யாவற்றையும் பார்க்கிறானாம். பிரபஞ்சம் முழுதும் அவனது உடமையாம். சர்வவியாபியாம்.
  வினா: கடவுள் ஒழுக்கத்தைப் பற்றி மக்கள் என்ன சொல்லுகிறார்கள்.
  விடை: அவன் நீதிமானாம்; புனிதனாம்.
  வினா: வேறு என்ன?
  விடை: அவன் அன்பு மயமானவனாம்.
  வினா: கடவுள் அன்பு மயமானவனென்று ஜனங்கள் எப்பொழுதும்...

  Read more

குறள் என்பது மற்ற நூல்களைப் போலவே அதாவது ஆரிய மத இதிகாச நூல்களைப் போலவே, எல்லாத் தமிழ்(இந்து) மக்களாலும் இதுவரையில் மதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆரிய நூல்களைப் போன்றே குறளுக்கும், ஆரிய மத இதிகாசக் கற்பனைகள் - ஆரியத் தத்துவங்கள் முதலியனவற்றை, ஆதாரமாக - மேற்கோளாகக் கொண்டு பல உரைகளைச் செய்து, மக்களிடையேயும் அத்தன்மையிலேயே அது பரப்பப்பட்டு வந்திருக்கின்றது.

சைவர் வைணவரின் குறள் பிரசாரம்!

பெரிய பெரிய சைவ அன்பர்கள், வைணவ அன்பர்கள் எனப்படுவோர் முதல், பார்ப்பனப் பண்டிதர்கள் சங்கராச்சாரிகள் உள்பட எல்லோரும் குறளைப் பற்றியும் சிறிது சிறிது பிரசாரம் செய்கின்றனர். என்றாலும், அவர்கள் அத்தனை பேரும் குறளுக்கு நேர் விரோத மாக நடப்பவர்களாகவே இருக்கின்றனர். சங்கராச்சாரியார் கூட, குறளுக்கு உரை எழுதுகிறார்; இலவசமாய் வழங்கப் போகிறார் என்றால், இவர்கள் யாவரும் அவர்களுடைய கோட்பாடுகளுக்கு ஏற்ற முறையிலும், உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பவர்கள் அவர்களுடைய ஆதிக்கத்துக்கு ஏற்ற முறையிலும், உரைகள் - அர்த்தங்கள் புகுத்துவதற்குமேயல்லாமல், குறளின் உண்மையான தத்துவத்தை அதாவது வள்ளுவரின் உள்ளத்தை மக்கள் அறிந்து, அதன் வழி நடந்து, நன் மக்களாய் வாழ்வதற்காக அல்ல. ஆரிய மத, சைவ - வைணவ மதக்காரர்களும், சைவ வைணவக் கடவுள்களையும், புராண இதிகாசங்களையும் ஏற்றுக் கொண்டு ஒழுகுபவர்கள்கூட குறைகளைப் படிக்கின்றார்கள், பிரசாரம் செய்கின்றார்கள் என்றால், அது அதிசயமேயாகும்.

வியப்பும் திகைப்பும் ஏற்படத்தான் செய்யும்!

எனக்குக் குறளில் ருசியை உண்டாக்கியவர், நண்பர் காலஞ்சென்ற பா. வே. மாணிக்க நாயக்கரவர்கள்தான். அவர் என்னிடம் நகைச்சுவையாகப் பேசுவதற்கும்கூட குறளையே கையாளுவார். பார்ப்பனர்களை - ஆரியத்தைக் கிண்டல் செய்வதற்கும், அச்சமயங்களில், நானும் குறளைச் சிறிது உணர ஆரம்பித்தேன். அதுமட்டுமல்ல, அந்த நாளிலிருந்தே, நான் மற்ற ஆரியப் புராண இதிகாசங்களில் - சைவ வைணவங்களில் உள்ள குற்றங் குறைகளை எடுத்துக் கூறி வருவது போல, குறளிலும் பல குற்றங்களைக் கூறி வந்துள்ளேன். நண்பர் மாணிக்க நாயக்கர் அவர்களிடமும், நான் அடிக்கடி குறை கூறி தர்கிப்பதுண்டு. காரணம் அப்போது நான், குறளுக்கு ஆரியரும், ஆரிய உணர்ச்சியுள்ள மத வாதிகளும் செய்த உரைகளை, மெய்யென்று எண்ணியதே யாகும்.

ஆனால், இன்று சுயமரியாதைக்காரர்களாகிய திராவிடர் இயக்கத்தைச் சார்ந்தவர்களும், மற்ற திராவிட உணர்ச்சி உள்ள நண்பர்களும், சிறிதுகாலமாகக் குறளைப் பற்றி மக்களிடையே தீவிரப் பிரசாரம் செய்து வருவது குறித்து, சிலருக்கு ஆச்சரியமிருக்கக்கூடும். ஏனெனில், பொதுவாக இன்று நம் மதவாதிகளால் - சைவ வைணவர்களால் எது எது நீதி நூல், நெறி நூல், தெய்வ நூல், ஞான நூல் என்று கூறப்பட்டு வருகின்றனவோ, அவைகளை நாங்கள் பெரிதும் வெறுப்பவர்கள் என்பது மட்டுமல்லாமல் குறிப்பாக இராமாயணம், பாரதம் போன்ற இதிகாச புராணங்களை அடியோடு அழித்தொழித்தாலன்றி, மக்களுக்கு நல்வாழ்வும், நல்லொழுக்கமும், மான உணர்ச்சியும், பகுத்தறிவும் ஏற்படாது என்று கூறி, அதற்காகப் பாடுபட்டும் வருகிறவர்கள். அவ்வாறு பாடுபடக்கூடிய நானும், மற்றையக் கழகத் தோழர்களும் திருக்குறளை மட்டும் பெரிதும் ஆதரிக்க முன் வந்திருக்கிறோமென்றால், இதுவரை எங்கள் மீது, அதாவது “எல்லா நீதி நூல்களையும் ஒழிக்கும் நாஸ்திகர்கள்” என்று எங்களைக் கூறி வந்தவர்களுக்குச் சற்று வியப்பும், திகைப்பும் ஏற்பட்டுத்தான் தீரும்.

கொந்தளிப்புக்குப்பின் தெளிவு!

ஆரிய நூல்களையும், அவர்களால் கற்பிக்கப்பட்ட நீதி நூல்கள் எனப்படுபவகைகளையும் நம்மிடையே பரவாமல் ஒழிக்க வேண்டுமென்று நான் இதுவரை கூறிவந்தபோது, “இவன் என்ன? இந்த ராமசாமி பெரிய நாத்திகனாயிருக்கிறானே! எல்லாவற்றையும் ஒழித்து விட்டால் இதற்கு மாற்றுத்தான் என்ன? எதைத் தான் நாம் நீதி, நெறி நூலாக ஏற்பது?” என்று குறை கூறி வந்த சமயமெல்லாம், நான் வாய்ச் சாலக்காக, “நாறுகிறது, அதை எடுத்து எறி என்றால், அதற்குப் பதிலாக வேறு எதை வைப்பது என்று கேட்பது பயித்தியக்காரத் தனமல்லவா? முதலில் நாறுகிறதை எடுத்து அப்புறப்படுத்துங்கள், பிறகு பார்க்கலாம்” எனக் கூறி வந்தேன். ஆனால் இந்த விதமாக எத்தனை நாட்களுக்கு நாம் சொல்லி வர முடியும்? அதுமட்டுமல்ல, நமது பிரசாரத்தால் பார்ப்பனர்களின் பித்தலாட்டங்கள் வெளியாக வெளியாக, மக்கள் அவர்களின் அமைப்பு முறையில் வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டனர். நமது எதிரிகள் நம்மைப்பற்றி இதற்குமுன் கூறி வந்த தவறாக பொய்யுரைகளையும், இன்றைய மக்கள் அப்படியே நம்புவதுமில்லை. ஏனோ ஓரளவுக்காவது எதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். என்கிற நிலைக்கு, நமது பிரசாரம் மக்களைப் பண்படுத்திவிட்டது.

இவ்வாறு பார்ப்பனியப் பித்தலாட்டத்திலிருந்தும், மூட நம்பிக்கையிலிருந்தும் விடுபட்டு, அப்பார்ப்பனர்களால் கற்பிக்கப்பட்டு வந்த வேத, இதிகாச, புராண , நீதி நூல்களிலுள்ள மடமைகளையும், சூழ்ச்சிகளையும் தெரிந்து, அவற்றையும் ஓரளவுக்கு உதறித் தள்ளியபிறகு, நம் மக்களுக்கு, வேறு ஒரு நல்ல நெறி, வாழ்க்கையின் வளப்பத்துக்கு மிக மிக அவசியமாகிவிட்டது இன்று.

பல்லாயிரக்கணக்கான கோயில்களும், கடவுள்களும், அதற்கான கட்டுக் கதைகளும், வைதீகக் கோலங்களும் மக்களின் நல் வாழ்வுக்கு ஒரு சிறிதாவது பயன்பட்டு வந்துள்ளதா? என்று சிந்திக்கும்நிலை, பழுத்த ஆஸ்தீகர்கள் என்பவர்களுக்கும்கூட ஏற்பட்டுவிட்ட காலம் இது.

எனவே, அவ்வாறு சிந்தித்து சிந்தித்துப் பின்னர் ஒரு முடிவுக்கு வரும்போது, மக்கள் ஒரு நல்ல நெறியை - நீதி நூலை எதிர்பார்ப்பது இயற்கையேயல்லவா?

இன்று குறளைத்தவிர வேறு இல்லவே இல்லை. ஆனால்....?

இந்த இயற்கையை ஒட்டியே, அந்த இடத்திற்கு குறளை வைக்குமாறு இப்போது நான் கூறுகின்றேன். எல்லாத் துறைகளைப் பற்றியும் நல்வழிகாட்டக்கூடிய - அறிவு வழியைக் காட்டக்கூடிய நீதி நூல் நம் மக்களுக்கு இன்று குறள் ஒன்றைத் தவிர வேறில்லை. இதற்கு மேம்பட்ட ஒரு நீதிநூலை இன்று காண்பது அரிது.

நான் இவ்வாறு கூறும்போது, இங்கு ஒரு விளக்கத்தையும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். குறளின் உயர்வைப்பற்றி - அதன் வழிகாட்டித் தன்மையைப்பற்றி நான் வற்புறுத்தும்போது, ஒரு சுயமரியாதைக்காரன், பகுத்தறிவுவாதி, திராவிட இயக்கத் தலைவன் என்கிற முறையில்தான் வற்புறுத்துகிறேனே அல்லாமல் வேறில்லை.

நானோ, என்னுடைய எல்லாக் கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும், அவற்றிற்கான நெறிகளுக்கும் குறளையே ஆதாரமாக - அடிப்படையாகக் கொள்பவன் அல்ல. ஆனால் எனக்கு குறள் ஒரு மேற்கோளாக (அத்தாரிட்டியாக) விளங்குகிறது. மேலும் எங்களுடைய கொள்கை, கருத்து ஆகியவைகளுக்குக் குறளில் ஆதரவு இருக்கிறது.

உதாரணமாக கூறவேண்டுமானால், நான் சில சமயங்களில் சர்தார் பட்டேல், கனம் நேரு ஆகியோர் சொற்களை ஆதாரமாகக் கொள்வதை எடுத்துக் கூறலாம்.

“நேற்றுப் பட்டேல் அவர்கள் பேசியுள்ள பேச்சு பத்திரிகைகளில் வெளிவந்திருப்பதை நேயர்கள் படித்திருப்பார்கள். நான் காங்கிரசின் தற்காலத் தவறான தன்மையைப் பற்றி என்ன கூறிவருகிறேனோ, அதையே அவரும் கூறியிருக்கிறார்.”

இவ்வாறு, நான் பொது மேடைகளில் பேசும்போது, சர்தார் கூறியதையும் மேற்கோளாக எடுத்துக் கையாள்வதுண்டு. ஆனால் நான் காங்கிரஸ் பற்றிக் கூறுவதை, அவர் எடுத்துக் காட்டாகக் கையாள முடியாதல்லவா அதுபோலவே எங்களது கருத்துக்கு - கொள்கைக்கு குறள் ஆதாரமாக விளங்குவதைக் காண்கிறோம். ஒரு பெரிய மளிகைக் கடையிருந்தால், “இந்த ஊரிலேயே இதுதான் பெரிய மளிகைக்கடை, இங்கு சென்றால் தேவையான எந்தப் பொருளையும் பெற்றுக் கொள்ளலாம். யார் யாருக்கு எது எது தேவையோ, அதெல்லாம் ஏராளமாய் அங்கே இருக்கிறது. உனக்கு வேண்டுமானால் நீ போய் வாங்கிக்கொள்” என்று மளிகைச் சாமான் தேவைப்பட்ட ஒருவனுக்குக் கூறுவதுபோல, மக்களின் நல்வாழ்வுக்கு வேண்டிய யாவும் ஏராளமாய் குறளில் இருக்கிறது என்கிற அளவில்தானே ஒழிய, அந்தக் கடையில் இருப்பதெல்லாம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதல்ல. அதுபோலவேதான், நான் குறளை நாடெங்கும் எடுத்துக் காட்ட முற்பட்டிருப்பதும், என்னைச் சார்ந்த கழகத் தோழர்கள் குறளைப்பற்றிப் பிரசாரம் செய்வதுமாகும்.

இதை ஏன் இந்த முறையில் விளக்க வேண்டியிருக்கிறதென்றால், எனது கொள்கைக்கு - கழகக் கொள்கைக்கு ஆதாரம் வைத்தோ அளந்து எழுத வேண்டியிருக்கிறது. ஏன் என்றால் குறளில் உள்ள சில கருத்துகள் வேறு பலரால் உரைகாணும்போது அவை எனக்கும், சுயமரியாதை - திராவிடர் இயக்கத்துக்கும் மாறாக, பின்பற்ற முடியாததாக இருந்தாலும் இருக்கலாம். உதாரணமாக, நானோ, மாமிச உணவு உட்கொள்ளுகிறேன்; குறளோ மாமிச உணவை ஒப்புக் கொள்வதில்லை என்கிறார்கள். ஆதலால் இவன் குறளின்படி நடப்பதில்லை என்று சில புலவர்கள் என்னைக் குறை கூறி, மக்களை எளிதில் ஏமாற்றி விட முடியும். எனவேதான், நான் இவ்விளக்கத்தைத் திராவிடர் இயக்கத் தலைவன் என்கிற முறையில் கூறவேண்டியிருக்கிறது.

இதைத் தவிர்த்துப் பொதுவாகக் கூற வேண்டுமானால், நம் மக்களின் நல்வாழ்வுக்குத் தேவையான உயர்ந்த நெறியையும் வழி வகுக்கக், குறளுக்கு மேலான ஒரு நீதி நூல் வேறுகிடையாது என்பதே எனது எண்ணமாகும். நாகரிகம் என்பவை எல்லாம் மனிதனிடம் மனிதன் நடந்து கொள்ள வேண்டியதையே அடிப்படையாகக் கொண்டதாகும். அதற்கான நெறிகள் - வழிகள் குறளில் காணலாம், சுலபமாகக் கூறவேண்டுமென்றால், குறள் ஒரு பகுத்தறிவு நூல்! மற்றவை நம்பிக்கை நூல்! அதாவது சரியோ தவறோ நம்பிக்கை கொள்ள வேண்டிய நூல்!

இலட்சியம் நிறைவேற, சிந்தனை வேண்டும்!

மக்களுக்கு வேண்டுவது என்ன? திராவிடர் கழகம் வேண்டுவதும் என்ன? மக்கள் எனப்படுவோர் யாவரும் மனிதத் தன்மையுடன் வாழவேண்டும், மக்கள் அனைவரும் சமமான ஜாதி - பிறவி என்று எண்ண வேண்டும், மானத்துடன் ஒருவர்க்கொருவர் அன்பு நெறியுடன் வாழவேண்டும், ஒருவர்க்கொருவர் நன்மை - உதவி செய்ய வேண்டும். இவையே திராவிடர் கழகத்தின் இலட்சியமாகும். இவற்றைப் பெறவேண்டுமானால் மக்கள் சிந்தனா சக்தியைப் பெறவேண்டும்.

இந்தச் சிந்தனாசக்தி, மிருகத்தைப் பொருத்தவரையிலும் அதற்கு வேண்டாதிருக்கலாம். ஆனால் பகுத்தறிவைப் பெற்றிருக்கும் மனிதன் - மற்றவர்களோடு கூடி வாழவேண்டிய ஜீவனாக இருக்கும் மனிதன், சிந்திக்கும் சக்திக்கு உட்பட்டே தீரவேண்டுமல்லவா? இவ்விதச் சிந்தனாசக்தியைத் தடுத்து, அதை அழித்துவிட வேண்டுமென்பதே ஆரியத்தின் அடிப்படையாகவும், ஒரு சிறு கூட்டத்தினரின் தொழிலாகவும், மதமாகவும் இருந்து வருகிறது. அவர்களின் இந்தத் தத்துவத்திற்கே மற்ற நீதி நூல்களும், சைவ - வைணவ நூல்களும் அவற்றிற்கு ஆதாரமான கடவுள்களும் பக்கத் துணையாய் இருந்து வருகின்றன. இப்பேர்ப்பட்ட நீதி நூல்களும், கடவுளுமே நம்மீது சுமத்தப்பட்டுவிட்டன. எனவே இவ்வித ஏமாற்றுதலை எதிர்த்தொழித்து உண்மையைக் காட்ட, ஒரு நெறி - வழி இன்றியமையாததாய் இருக்கிறது. அதற்காகவே நாம் திருக்குறளை நீதிநெறி நூலாகக் கொள்கிறோம்.

குறளை ஏன் ஆதாரம் காட்டுகிறோம்?

திராவிட இயக்கத்தினராகிய நாங்கள் பல கடவுள் - அவை பற்றிய பல மதம் - புராணம் ஆகியவற்றை எதிர்த்து வருகிறோம். அவைகளை எதிர்க்கும் போது அவற்றை வளர்த்து - அவற்றால் பயனடைந்து வரும் கூட்டத்தினரோ, பொது மக்கள் எங்களைத் தவறாகக் கருதிக் கொள்ளுமாறு தந்திரம் செய்கின்றனர். பின்னர் தெளிவு பெற்று, “இப்படி எதிர்க்க, உனக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?” என்று நம்மைக் கேட்கும் நிலையை மக்கள் அடைகின்றார்கள். இந்த நிலையில் தான், அந்த ஆதாரத்திற்கு நாங்கள் குறளையே எடுத்துக்காட்டுகிறோம்.

கடவுளையே காணவில்லையே!

ஏனெனில் குறளுக்குள் கடவுள், மதம், ஜாதி, மோட்சம், முன் ஜென்மம் என்பவை போன்ற சொற்கள் இல்லவே இல்லை. இவ்வாறு நான் கூறுவதைக் கேட்கச் சிலர் ஆச்சரியப்படக்கூடும். ஆனால் உறுதியாகக் கூறுகிறேன், குறள் என்கிற நூலில், கடவுள் என்ற சொல்லோ, கடவுள் என்ற ஒரு வஸ்துத் தன்மையோ அறவே இல்லை. கடவுளே இல்லையானால் மற்றவற்றை எப்படி அதில் காண முடியும்?

அது மட்டுமல்ல, தமிழனுக்குக் கடவுள் என்கிற ஒரு பொருள், இருப்பதான கருத்து முன்பு இருந்ததேயில்லை. அதாவது குறளுக்கு முந்திய தொல்காப்பியத்திலும் கடவுள் என்ற சொல்காணப்படவில்லை. கடவுள் என்பதைப் பழங்கால திராவிட மக்கள் கொண்டு இருந்தார்கள் என்றால், இந்த இரண்டு நூல்களிலும், அந்தந்த ஆசிரியர்கள் அதைப்பற்றி நன்றாய் விளக்கியிருக்கமாட்டார்களா? அதைப்பற்றி நாம் எப்படி நடந்து கொள்வது என்பதைக் குறித்திருக்கமாட்டார்களா? ஆனால் புலவர்கள் இதைச் சுலபமாக ஒப்புக் கொள்வதில்லை.

மதமும், ஜாதியும், இல்லையே தமிழில்!

அது மட்டுமா? தமிழனுக்கு மதம் என்பது ஒன்று இருந்ததாகவும் ஆதாரம் கிடையாது. இன்று மதம் என்பது பெருவழக்காய் ஒரே ஒரு கருத்தில்தான் அதாவது கடவுளையடையும் மார்க்கம் என்கிற அர்த்தத்தில்தான் பயன்படுகிறது. இந்த ‘மதம்‘ என்கிற சொல் தமிழ்ச் சொல்லா? தமிழில் ‘மதம்‘ என்பதே இல்லையே! மதத்திற்குப் பதிலாக அந்த அர்த்தத்தைக் கொடுக்கக்கூடிய வேறு சொல் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், சமயத்துக்குத் தக்கபடி மற்றொரு சமஸ்கிருதச் சொல்லையோ, அதனுடைய சிதைவையோதானே பார்க்கமுடியும்? மனிதன் மற்றொரு மனிதனிடத்தில் நடந்து கொள்ள வேண்டிய பண்புகளைத்தான் நமது முன்னோர்கள் நெறி - ஒழுக்கம் - நீதி கோட்பாடு என்கின்ற தலைப்பில் கூறியிருக்கின்றார்களேயல்லாமல், மதம் என்ற சொல்லுக்கும், தமிழனுக்கும் - தமிழுக்கும் ஒரு சிறிதும் சம்பந்தம் கிடையாது. இதைப்போலவே, தமிழனுக்கு ஜாதியும் இருந்ததில்லை. அப்படி இருந்திருந்தால், நிச்சயமாகச் சொல்லுகிறேன், குறளிலும் கடவுள் - மதம் - ஜாதி முதலியவை இடம் பெற்றிருக்கவேண்டும். அல்லது தமிழில் அதற்கு சொல் இருக்கவேண்டும்.

இவ்வாறு நான் கூறுவது முடிவு கட்டுவது தவறாக இருந்தாலும் இருக்கலாம். அந்தத் தவறை யாரேனும் எடுத்துக்காட்ட முன் வருவார்களானால் திருத்திக் கொள்ளத் தயங்க மாட்டேன். ஆனால், தமிழனுக்கு ‘மதம்’ என்பதோ ‘ஜாதி’ என்பதோ ஒன்று இருந்ததாக எடுத்துக்காட்ட, இன்றுவரை எவராலும், எவ்வித ஆதாரத்தையும் காட்ட முடியவில்லையே.

கடவுள் வாழ்த்து என்று, குறளில் உள்ள ஒரு பிரிவுக்குத் தலைப்புக் கொடுக்கப்பட்டிருக் கிறதே என்றால், வள்ளுவர் தமது குறளில் எங்கேயாவது கடவுள் என்று குறிப்பிட்டிருக் கிறாரா? ஆனால் சில நற்பண்பு கொண்ட மகனை ‘வழிபடுக’ என்று கூறியிருக்கிறார். வழிபடு என்றால் பின்பற்றிநட என்பதுதானே? இவ்வித நற்பண்பை மக்கள் சமுதாயத்திலிருந்து அடியோடு ஒழிக்கும் வகையில், இன்றையக் கடவுள் - மதம் என்பன இருந்து வருவதா லேயே திராவிட இயக்கத்தவர்களாகிய நாங்கள், கற்பனைக் கடவுள் ஒழிய வேண்டும் - மதம் ஒழிய வேண்டும் - ஜாதி ஒழிய வேண்டுமென்றுகூறி, அதற்கானவற்றை எங்களால் இயன்ற அளவு பிரசாரம் செய்து வருகிறோம்.

மோட்சம் என்பது முன்பு இல்லையே!

நிற்க, வள்ளுவர் தமது குறளிலே அறம், பொருள், இன்பம் என்கிற மூன்று பிரிவுகளிலேயே மக்களின் நல்வாழ்க்கையையும், அதற்கான ஒழுக்கத்தையும் வரையறுத்திருக்கிறார். நாலாவதான ஒரு பிரிவு, வீடு அதுதான் மோட்சம் என்று கூறுகிறார்களே, அதை அவர் குறிப்பிடவேயில்லை. ‘மோட்சம்’ என்கிற கருத்தைத் தரக்கூடிய ஒரு சொல்லே, தமிழில் கிடையாது. அப்படியிருக்க அதை அவர் எப்படிக் குறிப்பிட முடியும்? வீடு என்கிற சொல்தான் மோட்சத்தைக் குறிக்கிறதென்றால், தமிழ் மக்கள் வீடு இல்லாமலா இருக்கின்றார்கள்? ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு உண்டு! (ஆரியக் கூட்டுறவால் பாழ்பட்ட சமுதாய அமைப்பில், ஒரு சிலர் வீடிழந்து அனாதைகளாயிருப்பது என்பது வேறு சங்கதி) பிற்காலத்தில் ஆரிய மதப்பித்துப் பிடித்தவர்களால், மோட்சம் என்பதற்கு வீடு என்பது, தேடிக் கண்டெடுத்துப் புகுத்தப்பட்டிருக்கிறதேயல்லாமல் வேறு ஏதாவது பொருத்தம் இருக்கிறதா? ஆகவே தமிழனுக்கு மோட்சம் என்கிற ஒன்று, அன்று இருந்ததில்லை என்பது நன்றாய் விளங்கவில்லையா?

வள்ளுவரின் மூன்று பிரிவு வேறு! வடவரின் நான்கு பிரிவு வேறு! மற்றொன்றும் நீங்கள் கவனிக்க வேண்டும். “தர்மார்த்த காமம்” என்பதைத்தான் வள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்கிற தத்துவமாக மாற்றிச் சொல்லியிருக்கின்றார் என்று சிலர் வியாக்கியானம் செய்யத் தலைபட்டிருக்கிறார்கள். அறம், பொருள், இன்பம் என்பன வேறு. தர்ம - அர்த்த - காம - மோட்சம் என்பன வேறு. உதாரணமாகக் காமம் என்பதை இன்பம் என்று எவனாவது கூறுவானேயானால், அக்கூற்றை அறிவுலகம் ஏற்க முடியுமா என்று கேட்கிறேன். காமத்தின் தன்மை என்ன? இன்பத்தின் நிலை என்ன? காமம், கெட்ட குணங்களில் ஒன்று. ஆசை அல்லது ஒரு நோய்(பலவீனம்). காமம் என்பது கண்டவுடன் காட்சி விவகாரத்தால் தோன்றுவது. காமம் என்பதானால், கண்ட இடமெல்லாம் கண்டவாறு, மனத்தின் கண்ணே காட்சியளித்து, வெறியையுண்டாக்கி, நேர்மையை அழிக்கத்தக்கது ஆதலால் அதிலிருந்து விடுபட வேண்டும். அதனால் பெரிதும் கேடுதான் - அழிவுதான் பயனாக இருக்க முடியும். ஆனால் இன்பமும், அன்பும் அப்படியல்ல. அவை என்றும் நீடித்திருப்பது - இருக்க வேண்டியது. காமத்துக்கும் இன்பத்துக்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ளது போன்றதேயாகும். எனவே வள்ளுவர் வகுத்த இன்பத்துக்கு கேவலம் காமத்தை ஒப்பாகச் சொல்வது, ஒட்ட முயற்சிப்பது அறிவுக்கோ, அனுபவத்துக்கோ ஏற்றதல்ல என்றே கூறுவேன். அன்பைப்பற்றி வள்ளுவர் தனிப்படக் கூறியிருக்கிறார்.

இவ்வாறாகவுள்ள திருக்குறளைச் சிலர் தங்களது சொந்த நலனுக்கும் ஆதிக்கத்துக்கும் ஏற்றவாறு, குறுகிய மனப்பான்மையில் வியாக்கியானம் செய்தும் உரை எழுதியும் வருகின்றனர். இந்தப் பித்தலாட்டங்களையெல்லாம் ஒழிக்கவேண்டிய பொறுப்பு, தமிழ்ப் பேரறிஞர்கள், காவலர்கள், பேராசிரியர்களுடையதல்லவா?

இன்பம் என்பதைக் காமமென்பதனோடு ஒப்பிட்டுக் கூறுவதை நாம் எப்படி ஒப்புக்கொள்ள முடியாதோ, எப்படி அறிவுக்கு ஏற்றுக் கொள்ளத் தகாததாயிருக்கின்றதோ அதேபோன்று, வீடு - மோட்சம் என்பதையும் தமிழர்கள் ஒப்புக்கொள்ள முடியாததாகும். வள்ளுவர் வகுத்திருக்கும் அறம், பொருள், இன்பம் என்கிற மூன்றின் மூலமாக, மனித சமுதாயத்தின் நல் வாழ்வுக்கு அவர் வழி வகுத்துவிட்டார். அறம் என்பது மனிதனிடம் மனிதன் நடந்து கொள்ள வேண்டிய மனிதனின் ஒழுங்குமுறை - கடமை. பொருள் என்பது மனித வாழ்க்கைச் சாதனம். இன்பம் என்பது மனிதன் அனுபவிக்கும் நற்பேறு. இந்த அடிப்படையில் இந்த மூன்று பிரிவைத் தவிர, நாலாவது பிரிவு என்று சொல்லப்படுகிற மோட்சத்தைப் பற்றியோ, மறு பிறவி, முன் ஜென்மம், காமம் என்பவைகளையோ குறளில் காணவேமுடியாது.

கடவுள் எப்பொழுது உருவம் பெற்றதோ, அப்பொழுதே கேடும் உருவானது!

கடவுள் என்பது, வஸ்து ரூபமாக அதாவது ஒரு பண்டமாக வந்த பின்னர்தான், அதன் தன்மை இன்றுள்ள மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. அதாவது கடவுளும் மனிதனைப் போல் கூடா ஒழுக்கங்களுடன் காட்சியளிக்க வேண்டியதாயிற்று. சாணி உருண்டையும், குழவிக் கல்லும், குரங்கும், கழுகும், தேளும், பாம்பும், அரச மரமும், மனிதரில் சில இழி மக்களும் கடவுள்களாகக் கற்பிக்கப்பட்டதால், எந்த உயர்ந்த தத்துவங்களும் நீதி நெறிகளும், ஒழுக்கமும் கடவுள் தன்மையாகக் கொண்டுவரப்பட்டனவோ, அவைகள் எல்லாம் பாழ்படுத்தப்பட்டுவிட்டன.

எங்களைப் போன்றவர்கள், கடவுள் என்பது, இவ்வித உருவங்களும் வழிபாடுகளுந்தானா என்று கேட்டால், “அவைகள் எல்லாம் முட்டாள் ஜனங்களுக்காக” என்று வெகுசுலபமாகப் பதில் கூறுகின்றனர். இவ்வாறு கூறும் பதில் அர்த்தமுடையதென்றால், கடவுளுக்கு உருவம் ஏற்படுத்தப்பட்ட பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும், ஏன் மக்கள் இன்னும் முட்டாள்களாகவே இருக்கின்றனர்? ஒழுக்கமற்றவர்களாக இருக்கின்றனர்? மற்ற விஷயங்களில் எல்லாம் முன்னேறிவரும் மனிதன் கடவுள் தன்மையில்மட்டும், அதை உருவமாகக் காட்டிய பிறகும்கூட முட்டாளகவேயிருந்து வரவேண்டுமா? கடவுள் வழிபாட்டின் பேரால், இன்னும் காட்டுமிராண்டித்தனத்தை வளர்த்துத்தான் வர வேண்டுமா?

எனவே, மக்கள் இயற்கையில், பிறவியில் முட்டாள்களாயில்லை. ஆரியக் கடவுள் தன்மையில் முட்டாள்தனத்தைப் புகுத்தப்பட்ட நாளிலிருந்துதான், மனித சமூகம் கீழ் நிலைக்குவர ஆரம்பித்துவிட்டது என்பது எனது உறுதியான எண்ணமாகும்.

இந்தக் கடவுள் தன்மை எதற்காக?

இன்றைய கடவுள் தன்மை யாருக்கு வேண்டும்? மிருகப் பிராயத்தில் உள்ளவர்கள்தான் இன்றைய நிலையில் பார்ப்பனர்களால் புகுத்தப்பட்டு, நடைமுறையில் இருந்து வருகிற கடவுள்களை வழிபடுவார்களேயன்றிச், சிறிதேனும் அறிவுடையவர்கள் இன்றுள்ள கடவுள் தன்மையை ஒப்புக்கொள்ள முடியுமா? அதிகமான அறிவுடைய மனிதனுக்குக் கடவுள் எதற்கு ஆக வேண்டும்? அறிவில்லாத ஜீவப் பிராணிகளைத்தான், கடவுள் அறிவு வழியில் நடத்திக் காப்பாற்ற வேண்டும்? அறிவுள்ள மனித ஜீவனைக் கடவுள் ஏன் நடத்த வேண்டும்? ஜெயிலைப் பாருங்கள்! கொலை செய்தவனும் மற்றும் பெருங் கொடுங்காரியம் செய்தவனும் கூட, கடவுளை வணங்கிக் கொண்டுதான் இருக்கிறான். அதனால், அதோடு அவன் சீர்திருத்திவிடுகின்றானா? வெளியில் வந்தவுடன் “கடவுள் செயலால் வெளிவந்தேன்” என்று கருதியும், முன்னைவிட இரட்டிப்பு மடங்கல்லவா குற்றவாளியாகிவிடுகின்றான்? கடவுள் மன்னிப்புத்தானே, மனிதனை அயோக்கியனாக்குகிறது. காரணம் என்ன? கடவுள் என்ற உருவத்தை நம்பி வாழ்வதாலேயே, அதற்குப் பூசைக் காசு தந்து பரிகாரம் செய்து கொள்ள இயலுகிறது. கடவுள் என்பது உருவமல்ல, தனி வஸ்து அல்ல என்று கொண்டு, உயர்ந்த பண்புகளைக் கடவுளாகக் - கடவுள் தன்மையாகக் கொண்டு இருந்தால், இப்படி இருக்க முடியாது. கடவுளின் அருளுக்குப் பண்புகள் அவசியமில்லாமல், பூசை - பிரார்த்தனை - படைப்பு - காசுகளே அவசியமாக்கப்பட்டதால், அது மனித சமுதாயத்துக்குப் பயன்படாமல் போயிற்று, வள்ளுவர் வகுத்த குறளில் கடவுளுக்குப் பூசை செய், பிரார்த்தனை செய், அடிமையாயிரு! என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ஆனால் இன்னின்ன பண்புகளுக்கு ஆளாகு, இன்னின்ன பண்புகளைப் பின்பற்று! என்றே அறிவூட்டியிருக்கிறார். அதை நாம் மறந்ததினாலேயே, நம் மனித சமுதாயத்திற்குப் பாதுகாப்பும், ஒழுக்கமுமில்லாமல் போய்விட்டது. இதுவரை தான் நாம் அவ்வாறு இருந்து வந்திருந்தாலும் பகுத்தறிவு வளர்ந்து வரும் இக்காலத்திலாவது, இந்தக் கடவுள் தன்மைகளைப் பற்றி ஒரு நல்ல முடிவு செய்தாக வேண்டாமா? நாம் தான் எப்படியோ வாழ்ந்து விட்டோமென்றாலும், நமது பின் சந்ததியார்களாவது மனிதத் தன்மையுடன் வாழ வேண்டாமா? காந்தியார் கொலை செய்யப்பட்ட அன்றே, நான் கூறினேன், இனியாவது மக்களிடம் ஜாதி - மதம் - கடவுள்கள் பேரால் புகுத்தப்பட்டுள்ள மடமைகள் நீக்கப்பட்டு நல்ல பண்புகள் வளர்க்கப்படவேண்டும் என்பதாக, காந்தியார் பேரால் இன்று கோடிக்கணக்கில் பொருள் திரட்டுபவர்கள், மனித தர்மத்துக்கு - அந்தப் பிரசாரத்துக்கு ஒரு காசளவாவது செலவு செய்கிறார்களா? செய்வார்களா?

விதி என்று வள்ளுவர் குறிப்பிடுவது எதை?

 ‘விதி’ என்பதையும் வள்ளுவர் நன்றாக விளக்கிக் காட்டியிருக்கிறார். உன் அறிவைக் கொண்டு, உன் முயற்சியின்படி நட! மக்களுக்கு நன்மை செய்! அறத்தை வளர்க்க! என்று கூறியிருக்கிறாரேயன்றி, உன் விதிப்படி - கடவுள் இஷ்டப்படி நீ நட! என்பதாக எந்த இடத்திலும் கூறவே இல்லை.

குறளில் ‘ஊழ்’ என்ற தலைப்புக்குப் பொருள் கூறவந்த புலவர்கள், அவரின் கருத்துக்கு மாறுபாடாகவே கூறியிருக்கிறார்கள். மனிதனுடைய சரீர அமைப்பின் பயனாய் ஏற்படும், சில தனிப்பட்ட குணங்களுக்குத்தான், ஊழ் என்ற பெயரை அவர் கொடுத்திருக்கிறார். ஊழ் என்பது பிறவிக்குணம், இயற்கைக்குணம், மனிதசுபாவத்தின் தனிப்பட்ட குணம் என்கிற கருத்துக்களேயாகும்.

உதாரணமாக, இரண்டுபேர் உடன் பிறந்த அண்ணன், தம்பி, ஒருவன் சாதாரணக் காரியங் களுக்குகூடச் சிரிப்பான். ஒருவன் பெரிய ஆச்சரியமான காரியங்களுக்குக்கூட சிரிப்ப தில்லை. ஒருவன் சாதாரணக் காரியத்துக்கும் கோபிப்பான். மற்றவன் எவ்வளவு வசவைப் பெற்றாலும் கோபிப்பதேயில்லை. ஒருவனுக்குப் பனிக்கட்டியில் கால்பட்டால் ஜலதோஷம். மற்றவனுக்கு, அவன் அதிலேயே சதாயிருந்தாலும் ஒன்றும் செய்வதில்லை. ஒருவனுக்கு 40தில் கண்பார்வை மங்கல், ஒருவனுக்கு 60திலும் வருவதில்லை, ஒருவன் சிறுதொகை யையும் திருடுவான், ஒருவன் பெருந்தொகையையும் திருடுவதில்லை. ஒருவன் சிறு விஷயத்திலும் பொய் பேசுவான், ஒருவன் பெரிய விஷயத்திற்கும் பொய் பேசான். இரண்டுபேரும் உடன் பிறந்த அண்ணன், தம்பிகளாயிருந்தும்கூட ஏன் இப்பேர்ப்பட்ட வேற்றுமைகள்?

இவர்கள் இருவர் தலையிலும், இந்த இந்த மாதிரி தான் தனித்தனியாக நடக்க வேண்டும் என்று கடவுள் எழுதி விட்டாரா? அல்லது அவரவர்களின், போன ஜன்மத்தில் நடந்து கொண்ட கர்மத்தின்படி கடவுள் விதித்த விதியா? இல்லவே இல்லை. மற்றென்னவெனில் இவற்றிற்கு, அவரவர்களின் உடற்கருவிகள் - காரணங்கள் அமைந்த தன்மை - உடலமைப்பு, எதுபோல என்றால், ஒரு டன் வெண்கலத்தை உருக்கி 10 - ராத்தால் வீதம் 200 - மணிகளை வார்த்தெடுக்கிறோம்; பிறகு ஒவ்வொரு மணியையும் அடித்தால், அவற்றின் ஓசையில் ஒன்றுக்கொன்று வித்தியாசமிருக்கிறதே ஏன்? நாம், மணிக்காக வார்ப்படம் ஊற்றும்போது, அவைகளுக்குள் கடவுள் புகுந்து, மணிகளின் தலையில் எழுதிவிட்டாரா; உனக்கு இவ்வளவு தான் ஓசை, இன்னொரு மணிக்குச் சற்று அதிக ஓசை என்று? இப்படி வேறுபட்ட ஓசைகளுக்குக் காரணம், ஒவ்வொரு மணியையும் வார்க்கும் போது இருக்கும் இயற்கை வசதிகள், வார்ப்பட அமைப்பு, காற்றுபோக்கு, சிதோஷ்ணத் தன்மை மற்றும் ஒரு குழலை ஊதினால், அதிலுள்ள ஓட்டைகளுக்கு ஏற்ப - ஓட்டைகள் அமைப்புக்கு ஏற்ப - ஒலி (சப்தம்) ஏற்படுகிறதே ஒழிய, அந்த மரத்தின் பிறவியின்படி ஏற்படுகிறதா? அதுபோலவே, மனிதனுடைய உடல் அமைப்புக்கு ஏற்றபடிதான், சிலர் அனாவசியமான காரியங்களுக்கும் பொய் பேசுவதும், சிலர் உயிர் போகும் அவசியமான காரியத்துக்கும் பொய் பேசாதிருப்பதுமாய் ஒருவர்க்கொருவர் மாறுபட்டிருக்கிறார்கள் என்றுதானே காண முடியும்?

உதாரணமாக காற்றை எடுத்துக் கொள்ளுங்கள்; அது ஒரு வாழை இலையை முள்ளின் மீது படவைத்து அதை எப்படிக்கிழிக்கிறது, அதே காற்று மற்றொரு இலையை எவ்வாறு கிழியச் செய்கிறது என்பதை. அதுபோலவே மனிதனுடைய சரீரத்திலுள்ள சில மாறுபாடுகளே, அவனது சில தனிப்பட்ட குணங்களுக்குக் காரணமாகிறதேயன்றி, புறம்பான விதியோ, கடவுள் எழுதியதோ ஆன செயல் காரணம் அல்ல.

இவ்விதப் பிறவிக் குணங்களில் சிலவற்றைத் திருத்தலாம், ஆனால் பெரும்பாலான வற்றைத் திருத்த முடியாது. அவற்றைத்தான் ஊழ் என்றும், ஊழ் முந்தூறும் என்றும் வள்ளுவர் குறிப்பிடுகிறார். ஆக, இவ்வித இயற்கைக் குணங்களைக் காமம், முற்பிறவியின் பயன் என்பதெல்லாம் மதவாதிகளுடைய வீண் கற்பனைகளேயாகும்.

ஏழு பிறப்பு என்பது என்ன?

இவ்விதமாகவே, பிறவியைப் பற்றியும் வள்ளுவர் வழி வகுத்துள்ளார். ஒருவனுடைய வாழ்வில் ஏற்படும் புதுபுதுக் கருத்துகள் - குண மாற்றங்களையே பிறப்பு என்று அவர் கூறியிருக்கிறார். அதாவது பல காரணங்களால் ஒருவன் கொண்டுள்ள கருத்துக்கள் மாற்றமடையலாம். அக்கருத்து மாற்றமே மறுபிறப்பு, அதாவது வேறு பிறப்பு என்று சொல்லப்படுவதாகும். ஒருவனைப் பார்த்து நாம் “அவன் புதிய பிறவி ஆகிவிட்டான்” அவன் புதிய பிறவி ஆகிவிட்டான், என்று நாம் சொல்லுகிறோமல்லவா, அதுபோல்தான்.

இத்தகைய உண்மைக் கருத்துக்களைக் கொண்டு நாம் குறளை ஆராய்ந்து பார்க்காமல், பரிமேலழகரும், அவரைப் போன்றவர்களும், மூட நம்பிக்கையுடைய புராண மத வாதிகளும் எழுதிய உரைகளைக் கொண்டு பார்த்தால், குறளின் உண்மைத் தத்துவங்களை நாம் எப்படி உணர்ந்து கொண்டுவிட முடியும்?

சமதர்ம ஞானி வள்ளுவர்!

வள்ளுவர் அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமதர்ம வாதியாவார் என்று கூடக் கூறலாம் ஏனென்றால் பொதுவுடைமையின் அடிப்படையை நாம் குறளில் காண முடிகிறது.

“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகு இயற்றியான்” என்று ஒரு குறளில் கூறுகின்றார். ஒருவன் பிச்சை எடுத்துத்தான் வாழவேண்டிய நிலையிருப்பின், அவனைப் படைத்ததாகக் கூறப்படும் படைத்தவனை ஓழி! என்று எடுத்துக்காட்டியிருக்கிறார். மக்களை - உலகத்தைப் படைத்தவன் ஒருவன் உண்டு என்றோ, அப்படி அவன் இருப்பதானாலும் மக்கள் நடத்தைக்கும், கருத்துக்கும், தன்மைக்கும், பண்புக்கும் அவனேதான் காரணமானவன் என்றோ, அவர் எங்கும் கருதினதாகவோ, நமக்குக் காட்டுவதாகவோ குறளில் சொல்லவே இல்லை. இதிலிருந்து வள்ளுவரின் கடவுள் தன்மை, எப்படிப் பட்டது என்பதை நீங்கள் அறியக்கூடும். குறளுக்கீடான பொதுவுடைமை சமதர்மக் கருத்து, வேறு எந்தத் தமிழ் நூலில், எங்கிருக்கிறது? எவ்வளவு தலைகீழ் மாறுதல்! ஆகவே ஆரியத்தை - மூட நம்பிக்கையை எதிர்த்துப் போராட, வள்ளுவரின் குறள் நமக்குக் கேடயமாக இருக்கின்றது. மேலும் வள்ளுவர், பொதுநலத்தொண்டு ஆற்றுவதின் மேன்மையை மிக மிகச் சிறப்பித்து வலியுறுத்திக் கூறுகிறார்.

குறளில், மக்களின் நல் வாழ்க்கைக்கும், நல்லாட்சிக்கும், மக்கள் பூரண மனிதத் தன்மையை யடைவதற்கும் ஏற்ற வழிவகைகள் குவிந்துகிடக்கின்றன. உலகக் கேடுகள் ஒழிவதற்கும் வழிவகை குறளில் இருக்கின்றன. ஆரிய மத நூல்களில், அவர்களது கடவுள் தன்மை எனக் கூறப்படும் புராண இதிகாசங்களில் இவைகளுக்கு மாறுபாடான கருத்துக்களே மலிந்து கிடக்கின்றன. ஆதலால் தான் குறளைப் படியுங்கள், ஆரியநீதி நூல்களை - கோட்பாடுகளை அறவே விலக்குங்கள் என்று வற்புறுத்திக் கூறிவருகிறோம்.

எனது பணிவான வேண்டுகோள்!

அவ்வாறு வற்புறுத்திவரும் நான், இன்றையப் பேரறிஞர்களைக் கேட்டு கொள்வதென்ன வெனில், இடைக்காலத்தில் வாழ்ந்த சில புலவர்களால், குறளில் கற்பிக்கப்பட்டுள்ள கற்பனைகளை - மாறுபாடுகளை நீக்க, நீங்கள் முன்வர வேண்டும் என்பதுதான். அந்த மாசுகளை நீக்கிவிட்டால், குற்ற உரை நீங்கிய குறளை, நம் மக்கள் அனைவரும் துணையாகக் கொண்டு, அவ்வழியே நடப்பார்களேயானால், குறைந்தது அய்ந்தே அய்ந்து ஆண்டுகளில் ஆரிய நீதி நூல்கள் எனப்படுபவைகளால், இந்த நாள் மக்கள் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சீர்கேடுகள், ஒழுக்கக் குறைவுகள், காட்டுமிராண்டித்தன்மைகள் எல்லாம் அறவே ஒழிந்துபோகும் என்கிற நம்பிக்கை எனக்கு உறுதியாக உண்டு. அந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே தான் திராவிடர் கழகமும் தொண்டாற்றி வருகிறது. திராவிடர் கழகக் கொள்கைக்குப் பெரிதும் ஆதாரம், வள்ளுவரின் குறளிலேயேயிருப்பதனால் தான் நாங்கள் அதை நாடெங்கும் எடுத்துக்கூற முற்பட்டிருக்கிறோம். அதற்கான உதவிகளைச் `செய்ய புலவர் பெருமக்கள் முன்வர வேண்டும்.

திராவிடர்களுக்கு நீதிநூல், ஒன்றேஒன்று தான் உண்டு. அது திருக்குறளைத் தவிர வேறில்லை என்பதாக உறுதி கொண்டு, ஆரிய மத புராண இதிகாச நூல்களாகிய ராமாயணம் - கீதை - பாரதம் - புராணம் ஆகிய வைணவ, சைவ மத நூல்கள் ஆகியவை களை அறவே ஒழித்துவிட வேண்டும்; அவற்றை நாம் மதித்தல் கூடாது என்கிற உறுதிப் பாடு, நாட்டு மக்களுக்கு உண்டாக வேண்டும்.

நம் நாட்டில் மதவெறி அகன்று, சாத்திரக் குப்பைகளை தீக்கிரையாக்கி; கடவுள் பேரால் மக்களை மடமைக்கு இழுத்துச் செல்லும் கயவர்களின் ஆதிக்கமும், ஏழை பணக்காரத் தன்மை, மேல்ஜாதி, கீழ்ஜாதி, வர்ணாசிரம வைதீகப் பித்தலாட்டங்கள் ஆகிய அனைத்தும் அறவே ஒழிந்து; நம் நாட்டை அன்பும், அறிவும், ஆண்மையும், தன்மானமும் கொண்டதாக ஆக்கி, மக்கள் அனைவரும் இன்ப வாழ்வு வாழ அடிகோலுவதற்கு, பொதுப்பணி ஆற்ற முற்பட்டுள்ள யாராயிருந்தாலும் கட்சி, ஜாதி, மதபேதங்களை மறந்து, வள்ளுவர் வகுத்த வழி நின்று தொண்டாற்ற வேண்டுமென்பதே திராவிட மக்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்.

திராவிடர் கழகத்தினராகிய நாங்கள் அவ்வுயரிய கருத்துக் கொண்டே குறளை நாட்டில் பரப்ப முற்பட்டுள்ளோமேன்றி வேறில்லை.

குடிஅரசு - கட்டுரை - 07.05.1949

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: