• abolish-caste-1.jpg
  • abolish-caste-2.jpg
  • abolish-caste-3.jpg
  • Brahmins.JPG
  • periyar1.jpg

சாதி ஒழிப்பு

கடைசிப் பதிவேற்றம்

  • Last Modified: Tuesday 30 June 2020, 22:27:00.

தேசியம் - தேசிய இனம்

  • திராவிடரும் - தமிழரும்
    நாடு பிரிவினைக் கமிட்டி அறிக்கையைப் பார்த்தேன். இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிக்கை பற்றிய சேதிகளின் சுருக்கம் ஒருவாறு எனக்குத் தெரியவந்தது. பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால்...

    Read more

  • ‘தேசியம்’ ஓர் முட்டுக்கட்டையே
    தேசீய இயக்கம் சென்ற வாரம் சுயமரியாதை இயக்கம் என்னும் தலைப்புக்கொடுத்து, அவ்வியக்கத்தின் கொள்கைகளைப் பற்றியும், திட்டங்களைப் பற்றியும், அதன் நிலையைப் பற்றியும், செல்வாக்கைப் பற்றியும், இதுவரை அது செய்திருக்கும் வேலையைப் பற்றியும் ஒருவாறு குறிப்பிட்டிருந்தோம். இவ்வாரம் தேசீய இயக்கம் என்னும் தலைப்புப் பெயர் கொடுத்து அதன் கொள்கை, திட்டம், நிலைமை,...

    Read more

  • இலங்கை உபன்யாசம் - தேசம், தேசீயம் ஒரு போலி உணர்ச்சி
      அன்புள்ள தலைவரே! வீரமும், எழுச்சியும், சுயமரியாதை உணர்ச்சி யும் உள்ள வாலிபர்களே!! தலைவரின் முன்னுரையிலும், உபசாரப் பத்திரங்களிலும், மற்றும் பேசியவர்களும் அளவுக்கு மீறி என்னைப் பற்றியும், எனது சிறு தொண்டைப் பற்றியும் புகழ்ந்து கூறி இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட புகழ்ச்சிகளுக்கு நான் சிறிதும் தகுதியுடையேன் அல்லன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கி...

    Read more

  • தேசீயப் பைத்தியம்
      தேசீயம் என்பது ஒரு பித்தலாட்டம் என்பதையும், அது சுயநலவாதி களின் வயிற்றுப்பிழைப்புக்குத் துணைபுரியும் வார்த்தை என்பதையும், நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் நாம் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம். தேசீயவாதியாக இருக்கின்ற ஒருவன் எச்சமயத்திலும் யோக்கியப் பொறுப்பு டன் நடந்துகொள்ள முடியாது. சமயத்திற்குத் தகுந்த வேஷங்களைப் போட்டுக்கொண்டு பாமர மக்களை...

    Read more

  • ஆந்திரர் தமிழர் என்று பிரிக்கப்பார்ப்பது
      ஜஸ்டிஸ்  கட்சியிலிருந்து  நம்பிக்கை  இல்லாத்  தீர்மானத்தின்  காரணமாய்  வெளியேறி  விட்ட  தோழர்  குமாரராஜா  அவர்களுக்காக  குமாரராஜா  அவர்களை  ஆதரிக்க  ஆசைப்பட்டவர்களோ  அல்லது  அவரிடம்  கூலிபெற்றவர்களோ  ஜஸ்டிஸ்  கட்சியைத்  தாக்க  இதுசமயம்  தங்களுக்கு  வேறு  எவ்வித  கதியும்  இல்லாமல்  நிற்கதியாயிருப்பதை  முன்னிட்டு  மிக  இழிவான  மார்க்கத்தைக்  கைக்கொள்ளத்  துணிந்து  விட்டார்கள். ...

    Read more

பொதுவுடைமை

  • தந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு முதல்நாள் நிகழ்வுகள்
    இன்று (15.01.1948) காலை 9 மணிக்கு பிராட்வேயில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான பந்தலில் வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு பெருமிதத்துடன் ஆரம்பமாயிற்று. பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந...

    Read more

    சுயராஜ்யத்தில் வேறு சுய ஆட்சி ஏன்?
    ஸ்தல ஸ்தாபனங்கள் என்பன அந்தந்த ஸ்தல மக்களைச் சுயஆட்சிக்குத் தகுதியுடையவர்களாகப் பழக்குவதற்காகவே முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நோக்கத்திற்கு மாறாக, நாளடைவில் நகரமன்றங்களுக்கும், நாட்டாண்மைக் கழகங்களுக...

    Read more

    ஏமாற்றுப் பிழைப்பு எத்தனை நாள்
    அண்மையில் சென்னை மாகாணத்திற்குக் கனம் ஆச்சாரியார் வந்த முக்கிய காரணங்கள் இரண்டு என்று கூறலாம். ஒன்று திருவண்ணாமலையில் புராணப் பிரசாரம் செய்வது, மற்றொன்று “கல்கி” மகளார் திருமணத்திற்கு விஜயம் செய்வது. ...

    Read more

    குறள் பற்றிப் பெரியார்!
    குறள் என்பது மற்ற நூல்களைப் போலவே அதாவது ஆரிய மத இதிகாச நூல்களைப் போலவே, எல்லாத் தமிழ்(இந்து) மக்களாலும் இதுவரையில் மதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆரிய நூல்களைப் போன்றே குறளுக்கும், ஆரிய மத இதிகாசக் ...

    Read more

    குறளும் பெரியாரும்!
    திருவள்ளுவரின் திருக்குறளைப் பற்றிப் பெரியார் ஈ. வெ. ரா அவர்கள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். அது இவ்வாரக் குடிஅரசில் பிறிதோரிடத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதை வாசகர்கள் ஊன்றிப் படிக்க வேண்ட...

    Read more

  • பதினோறாம் தடவை?
    நமது சென்னை சர்க்கார் - பார்ப்பனப் பனியாக்களின் ஆதிக்க சர்க்கார், நடத்திவரும் ‘தடை படலத்தை‘ப் பார்க்கும் போது, குறிப்பாக பெரியார் அவர்களுடன் பிள்ளை விளையாட்டு விளையாடுவதில் பெருமையடைகிறதோ, என்றே நினைக...

    Read more

    ஒப்புயர்வற்ற குறள் நாள்!
    இந்த மாதத்தில் சென்னையில் குறள் நாள் வெகு ஆடம்பரமாகக் கொண்டாடப் பெறவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். பெரியார் திரு. வி. க. அவர்களையும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அவரும் மகிழ...

    Read more

    பொறுத்துப் பார்ப்போம்
    “உண்மை தோற்றது, பொய்ம்மை வெற்றி பெற்றது. நாணயம் நலிந்தது, நம்பிக்கைத் துரோகம் செழித்தது. யோக்கியதைக்கு மதிப்பு இல்லை, அயோக்கியத் தனத்திற்கு ஆடம்பர வரவேற்பு” - இவை இன்று இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்க...

    Read more

    ஸ்தல சுயாட்சி!
    இந்த மாதம் 12ஆம் தேதி திராவிடத் தந்தை பெரியாரவர்களுக்குத் திருச்சி நகரசபை அளித்த சிறப்பு மிக்க வரவேற்பு, நம் காங்கிரஸ் தோழர்களுக்கு - மந்திரிமார்களுக்குப் பெரும் மனக்கசப்பைத் தருமென்று கூறப்படுமானால்,...

    Read more

    திருவள்ளூரில் காமராசர்!
    சென்ற ஒருவார காலமாகத் தோழர் காமராசர் அவர்கள், செங்கற்பட்டு வட்டாரத்தில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். சென்னை மேல்சபை உறுப்பினருள் ஒருவரான தோழர் முத்துரங்கனார் அவர்கள் காலஞ் சென்ற...

    Read more

Periyar in English

  • தந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு முதல்நாள் நிகழ்வுகள்
    இன்று (15.01.1948) காலை 9 மணிக்கு பிராட்வேயில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான பந்தலில் வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு பெருமிதத்துடன் ஆரம்பமாயிற்று. பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந...

    Read more

    சுயராஜ்யத்தில் வேறு சுய ஆட்சி ஏன்?
    ஸ்தல ஸ்தாபனங்கள் என்பன அந்தந்த ஸ்தல மக்களைச் சுயஆட்சிக்குத் தகுதியுடையவர்களாகப் பழக்குவதற்காகவே முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நோக்கத்திற்கு மாறாக, நாளடைவில் நகரமன்றங்களுக்கும், நாட்டாண்மைக் கழகங்களுக...

    Read more

    ஏமாற்றுப் பிழைப்பு எத்தனை நாள்
    அண்மையில் சென்னை மாகாணத்திற்குக் கனம் ஆச்சாரியார் வந்த முக்கிய காரணங்கள் இரண்டு என்று கூறலாம். ஒன்று திருவண்ணாமலையில் புராணப் பிரசாரம் செய்வது, மற்றொன்று “கல்கி” மகளார் திருமணத்திற்கு விஜயம் செய்வது. ...

    Read more

    குறள் பற்றிப் பெரியார்!
    குறள் என்பது மற்ற நூல்களைப் போலவே அதாவது ஆரிய மத இதிகாச நூல்களைப் போலவே, எல்லாத் தமிழ்(இந்து) மக்களாலும் இதுவரையில் மதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆரிய நூல்களைப் போன்றே குறளுக்கும், ஆரிய மத இதிகாசக் ...

    Read more

    குறளும் பெரியாரும்!
    திருவள்ளுவரின் திருக்குறளைப் பற்றிப் பெரியார் ஈ. வெ. ரா அவர்கள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். அது இவ்வாரக் குடிஅரசில் பிறிதோரிடத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதை வாசகர்கள் ஊன்றிப் படிக்க வேண்ட...

    Read more

  • பதினோறாம் தடவை?
    நமது சென்னை சர்க்கார் - பார்ப்பனப் பனியாக்களின் ஆதிக்க சர்க்கார், நடத்திவரும் ‘தடை படலத்தை‘ப் பார்க்கும் போது, குறிப்பாக பெரியார் அவர்களுடன் பிள்ளை விளையாட்டு விளையாடுவதில் பெருமையடைகிறதோ, என்றே நினைக...

    Read more

    ஒப்புயர்வற்ற குறள் நாள்!
    இந்த மாதத்தில் சென்னையில் குறள் நாள் வெகு ஆடம்பரமாகக் கொண்டாடப் பெறவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். பெரியார் திரு. வி. க. அவர்களையும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அவரும் மகிழ...

    Read more

    பொறுத்துப் பார்ப்போம்
    “உண்மை தோற்றது, பொய்ம்மை வெற்றி பெற்றது. நாணயம் நலிந்தது, நம்பிக்கைத் துரோகம் செழித்தது. யோக்கியதைக்கு மதிப்பு இல்லை, அயோக்கியத் தனத்திற்கு ஆடம்பர வரவேற்பு” - இவை இன்று இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்க...

    Read more

    ஸ்தல சுயாட்சி!
    இந்த மாதம் 12ஆம் தேதி திராவிடத் தந்தை பெரியாரவர்களுக்குத் திருச்சி நகரசபை அளித்த சிறப்பு மிக்க வரவேற்பு, நம் காங்கிரஸ் தோழர்களுக்கு - மந்திரிமார்களுக்குப் பெரும் மனக்கசப்பைத் தருமென்று கூறப்படுமானால்,...

    Read more

    திருவள்ளூரில் காமராசர்!
    சென்ற ஒருவார காலமாகத் தோழர் காமராசர் அவர்கள், செங்கற்பட்டு வட்டாரத்தில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். சென்னை மேல்சபை உறுப்பினருள் ஒருவரான தோழர் முத்துரங்கனார் அவர்கள் காலஞ் சென்ற...

    Read more

பகுத்தறிவு

  • மர்க்குரி ஒழிக!
    கலிகால அதிசயம்! ஆண்டவனின் அதியற்புத அலாதி லீலை! பக்தர்களின் மனம் மகிழ மகேசனின் மயக்கவரம்!
    ஆம்! முதல்நாள் போட்ட மர்க்குரி மாரனை எரித்த தியாகராஜனுக்கு தாபத்தை உண்டாக்கியதாம். அல்ல, அல்ல கடுங்கோபத்தையே உண்டாக்கியதாம்! முனிகொண்டால் முப்புரம் எரிக்கும் மாயரல்லவா அவர்! ஆலய சிப்பந்தியின் உடம்பை எரித்தார் காயம் படாமல்!
    வெளியூர் 27. 10. 1949 ஆம் தேதிய சுதேசமித்திரனில் காணப்படுகிறது மேலே கண்ட செய்தி.
    முதல்நாள் போடப்பட்டதாம் மர்க்குரி லைட்; அடுத்த நாள் ஆண்டவனின்...

    Read more

  • பட்டாபிஷேகம்!
    ராம இராஜ்யத்துக்குப் பட்டாபிஷேகம் 1950 ஜனவரி 26ஆம் தேதி என்று வதிஸ்டர் வம்சத்தினர் நாள் குறித்துவிட்டனர். ராமாயண வதிஸ்டர், நாடாள குறிப்பிட்ட நாள், இராமன் காடேக வேண்டிய நாள் ஆக, ஆகிய இப்போது இந்துஸ்தான் வதிஸ்டவம்சத்தோர் குறிப்பிடும் இந்த 26 எப்படியும் மாறப்போவதில்லை என்று உறுதி கூறுகிறார்கள்.
    நம் காங்கிரஸ் தோழர்கள் ஏகாதிபத்தியம் என்று சொல்லுவதற்குப் பதிலாக கண்டுபிடித்த மற்றொரு பழமையான - அர்த்த புஷ்டியான சொல் இராமராஜ்யம் என்பதை அவர்களே...

    Read more

  • தீ நாள்!
    என்றைக்கோ ஒரு காலத்தில் ஒரு அசுரன் இருந்தானாம். அந்த அசுரன் ஒரு பன்றிக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். இந்த விசித்திரப் பிறவியான அசுரன் தேவர்களை - பூலோகப் பிராமணர்களை எல்லாம் கொடுமைப்படுத்தினானாம். இதனால் தன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம். செத்துப் போனதைப் பூலோக மக்கள் எல்லாரும் கொண்டாடிக் களிப்படைய வேண்டுமென்று செத்துப்போன அந்த அசுரன் கேட்டுக் கொண்டானாம். அந்தப்படியே ஆகட்டும் என்று மகாவிஷ்ணு திருவாய் மலர்ந்தாராம்....

    Read more

  • கடவுள் தர்பாரில்!
    இடம்: பரலோகம் கடவுள் தர்பார்.
    பாத்திரங்கள்: கடவுள், சித்திரபுத்த்திரன், யமன், ஞானசாகரன், பக்தரத்னம்.
    காலம்: ஊழிக் காலம்.
    I
    கடவுள்: அடே! சித்திரபுத்திரா! என்ன தாமதம். இன்றைய கணக்கென்ன?
    சித்திராபுத்திரன்: சர்வலோகப் பிரபு சர்வஞானப் பிரபு! சர்வவல்லப் பிரபு! கருணாநிதி! நாயேன் தங்களாக்ஞையையே எதிர்பார்த்திருந்தேன். (யமனைப் பார்த்து சமிக்கை செய்கிறான்).
    யமன்: (மானிடர் இருவரை அழைத்து வந்து தர்பார் முன்னிலையில் நிறுத்தி) “சுவாமி உத்திரவுப்படி நடந்து கொண்டேன்”. என்று ஒதுங்கி குனிந்து வாய் பொத்திக் கைகட்டி நிற்கிறான்.
    சித்திராபுத்திரன்:...

    Read more

  • கடவுள்
    வினா: கடவுளைப் பற்றிப் பொதுவாக ஜனங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களை விளக்கிக்கூறு.
    விடை: கடவுள் வானமண்டலத்தையும், பூமியையும், அதிலுள்ள சகல சராசரங்களையும் படைத்தவன் என்று மக்களில் பெரும்பாலோர் நம்புகிறார்கள்.
    வினா: அப்புறம்?
    விடை: கடவுள் சர்வஞானமுடையவனாம், யாவற்றையும் பார்க்கிறானாம். பிரபஞ்சம் முழுதும் அவனது உடமையாம். சர்வவியாபியாம்.
    வினா: கடவுள் ஒழுக்கத்தைப் பற்றி மக்கள் என்ன சொல்லுகிறார்கள்.
    விடை: அவன் நீதிமானாம்; புனிதனாம்.
    வினா: வேறு என்ன?
    விடை: அவன் அன்பு மயமானவனாம்.
    வினா: கடவுள் அன்பு மயமானவனென்று ஜனங்கள் எப்பொழுதும்...

    Read more

நமது சென்னை சர்க்கார் - பார்ப்பனப் பனியாக்களின் ஆதிக்க சர்க்கார், நடத்திவரும் ‘தடை படலத்தை‘ப் பார்க்கும் போது, குறிப்பாக பெரியார் அவர்களுடன் பிள்ளை விளையாட்டு விளையாடுவதில் பெருமையடைகிறதோ, என்றே நினைக்க வேண்டியிருக்கிறது.

நாட்டின் நலிவை எண்ணி, தமது தள்ளாத முதுமைப் பருவத்திலும் நாள் தவறாது, பட்டிதொட்டியெல்லாம் சுற்றிப் பிரசாரம் செய்து, மக்களின் மடமையையும், இழிவையும் போக்கப் பாடுபட்டுவரும் தந்தை பெரியாரவர்களை , இந்த மாதம் 16ஆம் தேதி உடுமலைப் பேட்டையிலுள்ள அதிகார வர்க்கம் 11ஆம் தடவையாக, இரவு ஏழரை மணிக்குக் கைது செய்ததையும், பின், அன்றிரவு நடுச் சாமத்திலேயே விடுதலை செய்ததையும் நினைக்கும்போது, இந்த எண்ணந்தானே வலுப்படமுடியும்?

தடை உத்தரவை மீறுவது என்கிற காரணமாக, தமிழ்நாட்டில் பெரியாரவர்கள் 100க்கணக்கான தடவைகள் தடை உத்தரவு சார்வு செய்யப்பட்டிருந்தாலும், அதற்கு ஆக கைது செய்யப்பட்டிருப்பது இது 4ஆம் தடவையாகும். சமீபத்தில் குடந்தையில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதும், மறுநாள் நள்ளிரவில் போலிஸ் லாரியில் ஏற்றித் திருச்சி, தஞ்சையெல்லாம் சுற்றியடித்துத் தடியடியையும் எல்லை மீறிய கொடுமையையும் தொண்டர்களுக்குப் பரிசாகக் கொடுத்து, ஆதித்தன் தர்பார் நடந்து முடிந்ததை யாருக்கும் நினைப்பூட்ட வேண்டியதில்லை. இப்போது மறுபடியும் இரவின் தொடக்கத்தில் கைது செய்து, நடுச்சாமத்திலேயே விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த நள்ளிரவு நடவடிக்கைகளை, அதிகாரிகள் நடத்துவதற்குக் காரணம், “பகலில், மக்கள் கண்ணெதிரில் தங்கள் செய்கையை செய்ய வெட்கப்படுகிறார்களா? அல்லது பகல் நேரத்தில் கைது செய்வதால், மக்களின் கொதிப்புக்கு ஆளாக வேண்டிவரும் என்று அஞ்சுகிறார்களா? இவற்றில் எது உண்மையாக இருந்தாலும், அதிகாரிகளின் நடத்தைக்கு நாம் உண்மையாகவே பரிதாபப்படுகிறோம். ஆனால், பொறுப்பு வாய்ந்த ஒரு மக்கள் தலைவரை, ஏதோ ஒரு செக்‌ஷனைக் கூறிக் கைது செய்வதும், பின் சிறைக்குக் கொண்டு செல்வதும், உடனே விடுதலை செய்வதையும் கண்டால் நாட்டு மக்கள் இந்த நடத்தையை எவ்வளவு கேவலமாக எண்ணுவார்கள்?

பெரியாரவர்கள் குடந்தையில் கைது செய்யப்பட்டபோது, குடந்தை தலைவர்களான தோழர்கள் நீலமேகம், முத்துதனபால், பொன்னுசாமி, சாமி ஆகிய நால்வரையும் உடன் கைது செய்தனர். ஆனால், எவருமே அப்போது தடையை மீறவில்லை. தடையை மீறாத நிலையிலேயே அங்கு கைது செய்யப்பட்டனர். உடுமலையிலேயே தடையை மீறியபின் கைது! இப்போது பெரியாரவர்களுடன், மத்திய திராவிடர் மாணவர் கழகத்தலைவர் தோழர் மதியழகனும், உள்ளூர் கழகத் துணைத்தலைவர் தோழர் நாராயணனும், செயலாளர் தோழர் தங்கவேல் ஆகிய மூவரும் உடன் சேர கைது!

உள்ளூர்த் தலைவர்கள் நால்வருக்கும் கொடுக்கப்பட்ட தடையுத்தரவு, உரிமையை ஒழித்துக்கட்டும் இழவோலை என்று மக்கள் கருதியதால், அந்தத் தடையை மீறுவதென்று நாள் குறித்து, அதை அறவழியில் அமைதியாகச் செலுத்த வேண்டும் என்பதில் கவனஞ்செலுத்தி, அதைப் பார்வையிடச் சென்றிருந்தபோது குடந்தையில் கைது! தடையுத்தரவுக்குக் காரணமோ, காங்கிரஸ் தோழர்கள் கழகத்தை மோசமாகத் தாக்கிப் பேசியதும், உள்ளூர் மக்கள் சிலர்(கழகத் தோழர்களல்ல)அதைத் தாக்கிப் பேசியதும் ஆகுமென்று குடந்தை மாஜிஸ்திரேட் தோழர் ஜெயபாண்டியன் குறிப்பிட்டிருந்தார்!

உடுமலையில் தடையுத்தரவோ விசித்திரமானது. உடுமலைப்பேட்டை மாஜிஸ்திரேட் தோழர் அருள்ராஜ் அவர்களால் தடையுத்தரவுக்குக் காரணம் கூறப்பட்டிருப்பதைக் காணும்போது, வெளியூர்க் காங்கிரஸ்காரர்கள் கூட கை கொட்டிச் சிரித்தால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், அந்தக் குற்றச்சாட்டு எவ்வளவு அபாண்டமானது? ஆதாரமின்றியல்லவா உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது? என்பதை அவர்கள் அறிவார்கள். திரு ஈ. வெ. ராமசாமி 16. 04. 1949இல் உடுமலைப்பேட்டைக்கு வரப்போவதாகவும், அன்று பொதுக்கூட்டமோ ஊர்வலமோ நடத்த அனுமதிப்பது அவராலும், அவரைப் பின்பற்றுவோராலும், அநுதாபிகளாலும், அமைதியையோ, சட்ட ஒழுங்கினையோ ஒட்டி நடந்து கொள்ளப்படும் என்று எவ்வித உத்தரவாதமும் கிடையாது”. ஆகவே 144 என்கிற தடையுத்தரவு.

பெரியாரவர்கள் பொது வாழ்வில் இறங்கியது இன்று நேற்றல்ல. அவர் பொதுப் பணியில் இறங்கிய காலத்திலிருந்து, பல்லாயிரக்கணக்கான பொதுக்கூட்டங்களில், பல லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ள இடங்களில் பேசியிருக்கிறார். எப்போதேனும் எந்த இடத்திலாவது பெரியாரவர்களுடைய பேச்சு கலவரத்தை உண்டாக்கியதாகவோ, பலாத்கார உணர்ச்சியைக் கிளப்பியதாகவோ எவராவது எடுத்துக்காட்டிவிட முடியுமா?

பெரியாரவர்கள் கலந்துகொள்ளும் மாநாடுகளில் நடக்கும் ஊர்வலங்களில் கூட “பார்ப்பனர் ஒழிக” என்றுகுரல் எழுப்பினால்கூட, “கோபமாக, ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாது, இதுபோன்ற ஒழிகக் கூச்சல் உதவாது” என்று கண்டிப்பவர் என்பதைப் போலிஸ் ரிப்போர்ட் கூறும். ஏமாற்றத்தில் அகப்பட்ட சிலர், தங்களை எதிரிகளாக எண்ணிக் கொண்டு, எத்தனை தொல்லைகளைக் கொடுத்தாலும்கூட, அவை எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் பொறுமையும், கடமை உணர்ச்சியும், கட்டுப்பாடுமுடைய ஒரு தலைவரின் வருகையால் - அவர் கலந்து கொள்ளும் கூட்டத்தால் - பேசும் பேச்சால் அசம்பாவிதம், நிகழ்ந்துவிடுமென்று அதிகாரிகளுக்கு ஏற்பட்ட அய்யத்திற்குக் காரணம் என்ன?

“இந்த நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டால் அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டு, அடிதடியும் ரத்தக்களரியும் பெருகிவிடுமென்று தோன்றும்படி செய்யப்பட்டுள்ளது” என்று அந்தத் தடையுத்தரவு மேலும் விளக்குகிறது. அந்தத் தோற்றத்தைச் செய்ததெது? யார்? ஆதாரமென்ன? ரத்தக்களரி பெருகும் என்று பயப்பட வேண்டிய அளவுக்கு, யார் யாரைத் தாக்க அங்கு ஆயுதம் சேகரித்து வைத்திருந்தனர்? அப்படியொரு தகவல் போலிசுக்குக் கிடைத்திருந்தால், அங்கு யார் யார் வீடுகள் சோதனை செய்யப்பட்டன? அந்தச் சோதனையில் கிடைத்த தகவல் என்ன? அப்படியெல்லாம் ஒன்றுமில்லாமல், அபாண்டமாக ரத்தக்களரி உண்டாகிவிடும் என்று அனுமானிப்பது எப்படிப் பொருந்தும்?

இந்தத் தடையுத்தரவு எதனால் ஜனித்தது என்று நாம் அறிகின்றோமென்றால், உடுமலைப் பேட்டையிலுள்ள சிலர் (40) கையெழுத்துச் செய்து, போலிசுக்கு மனுக் கொடுத்தார்களாம், அந்த மனுவின் மீது தடையுத்தரவு என்பதை அறிந்தவுடன், அந்த ஊரிலேயே ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கையெழுத்துச் செய்து, அப்படி ஒரு அசம்பாவிதமும் நடந்துவிடாது:

கூட்டம் நடத்த அனுமதி கொடுத்துவிடவேண்டும் என்று கோரினார்களாம். முந்திய சிலரின் வேண்டுகோளுக்கு இணங்கியும், பிந்திய ஆயிரத்தோரின் வேண்டுகோளை அலட்சியம் செய்துமே இந்தத் தடையுத்தரவாம். இது உண்மையாயிருக்குமானால், நீதியின் கழுத்து எவ்வளவு கொடுமையாக திருகப்பட்டிருக்கிறது என்று கேட்கிறோம்.

இந்தத் தடையுத்தரவு போடுவதற்கு அவசியம் எதுவாக இருந்தாலும், இந்தக் கூட்டத்தை நடத்த இருந்த முக்கியஸ்தர் யார்? அவர் அமைதிக்குப் பங்கமான, ஆட்சேபிக்கக் கூடிய செயல்களில் ஈடுபடுபவரா? மக்களின் பிரதிநிதி - நகரத்தின் தந்தை - (முனிசிபல் சேர்மன்) தோழர் கனகராஜன் எத்தகைய போக்குடையவர் என்பதை உள்ளூர் அதிகாரிகள் தெரிந்திருக்க வேண்டும். மேலும் இந்தத் தடையுத்தரவு போடப்பட்ட கூட்டம் எந்த நாளோ, அந்த நாளில்தான் உடுமலைப்பேட்டை நகரவாசிகள் நகரசபையின் பேரால், தடையுத்தரவால் தடுக்கப்பட்ட தலைவரை வரவேற்று, அவர் செயலைப் போற்ற, வரவேற்புக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

ஊர் மக்களோ வரவேற்று, உவகையுடன் அவர் வருகையைக் கொண்டாடும் காட்சி ஒரு பக்கம்! அந்த ஊர் மக்களுக்கு அபாயம் என்று காரணம் கூறிப் பெரியார் பேச இருக்கும் மற்றொரு பொதுக்கூட்டத்திற்குத் தடை விதிக்கும் காட்சி மற்றொரு பக்கம்! இந்த இரண்டையும் சேர்த்து எண்ணியிருக்க வேண்டாமா?

 “ஒரு நகரத் தந்தைக்கு தடையுத்தரவு போட்ட செயல், அந்த நகர மக்களையே அவமானம் செய்வதல்லவா? ‘தட்டிக் கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்’ என்பது போலல்லவா இந்த அதிகாரிகள் நடந்து கொண்டிருக்கின்றனர்” என்று யாரேனும் எண்ணலாம். ஆனால், நாம் அதிகாரிகளைக் குற்றம் கூறவில்லை.

ஏனென்றால், கழகத்தினுடைய கொள்கை எதிர் வழக்காடுவதல்ல, எது உத்தரவோ அந்த உத்தரவுக்கு உடனே கட்டுப்பட வேண்டியதுதான் என்பதை அதிகாரிகள் அறிவார்கள். மேலும் எவ்வளவு கேவலமாகக் கழகத்தாரை நடத்துகிறோமோ அந்த அளவுக்கு நமக்குப் பரிசு (உத்தியோக உயர்வுண்டு) என்கிற நம்பிக்கை, இன்றைய மந்திரிமார்களால் அவர்களுக்கு ஊட்டப்பட்டு வருகிறது என்பதை எண்ணினால், அதிகாரிகளின் இந்த நடத்தைகளுக்கு, அந்த அதிகாரிகளையே எப்படிக் குற்றம் சொல்லிவிட முடியும்?

மேலும், அன்று உடுமலைப்பேட்டையில், ஸ்தலஸ்தாபன மந்திரி பேசியிருக்கும் பேச்சைக் கவனித்தால், அதிகாரிகளை எப்படிக் குறைசொல்ல முடியும்? காலையில் மந்திரிக்கு வரவேற்பு நகரசபையில். மாலையில் பெரியாருக்கு வரவேற்பு அதே நகரசபையில். அந்த வரவேற்புக்குப் பிறகுதான் பொதுக்கூட்டம். அந்தப் பொதுக்கூட்டத்திற்குத்தான் தடையுத்தரவு. இந்தத் தடையுத்தரவு வெளிப்படுத்தப்பட்ட பிறகு அன்று காலையில், காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் பேசிய தோழர் சந்திரமவுலி அவர்கள், திராவிடர் கழக இயக்கத்தைக் கண்டித்துப் பேசியதுடன் நில்லாமல், “கிராமங்களிலும் நகரங்களிலும் அவ்வியக்கத்தைப் பரவவிடாமல் தடுக்கக் காங்கிரஸ் ஊழியர்கள் பாடுபடவேண்டும்” என்றும் ஆலோசனை கூறியிருக்கிறார். இதற்கு உண்மையான அருத்தமென்ன?

பெரியாரைக் கைது செய்த அன்று, பெருத்த போலிஸ் பந்தோபஸ்து ஏற்பாடாகியிருந்ததையும், காலையில் மந்திரியார் காங்கிரஸ் தியாகிகளுக்கு செய்த உபதேசத்தையும் சேர்த்து எண்ணினால் பெருத்த போலிஸ் பந்தோபஸ்துக்கு என்ன அவசியம் என்பது நன்றாகத் தெரியும். சர்க்கார் செய்ய வேண்டிய வேலையை, மந்திரிமார்கள் தங்கள் கட்சியில் உள்ள கூலிக்காரர்களைக் கொண்டு நடத்தச் செய்தால், அதனால் ஏற்படும் பின்விளைவு எப்படி இருக்கும் என்பதை எண்ணித்தான், அந்த பந்தோபஸ்துக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்தார்களோ, என்னவோ? இனி என்ன? பெரியாரவர்களுக்கு மற்ற தோழர்களுக்கும் விரைவில் அழைப்பு வரலாம். உடனே, மனம் போலத் தண்டிக்கவும் படலாம்.

நமது கடமை என்ன? சிறை செல்லும் தலைவர் நமக்கு விடுக்கும் கட்டளை எதுவோ, அதைப் பொறுமையோடு நிறைவேற்ற வேண்டியது தானே நமது கடமை. தயாராகக் காத்திருப்போம்.

குடிஅரசு - தலையங்கம் - 23.04.1949

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: