• abolish-caste-1.jpg
  • abolish-caste-2.jpg
  • abolish-caste-3.jpg
  • Brahmins.JPG
  • periyar1.jpg

சாதி ஒழிப்பு

கடைசிப் பதிவேற்றம்

  • Last Modified: Wednesday 07 October 2020, 10:37:52.

தேசியம் - தேசிய இனம்

  • திராவிடரும் - தமிழரும்
    நாடு பிரிவினைக் கமிட்டி அறிக்கையைப் பார்த்தேன். இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிக்கை பற்றிய சேதிகளின் சுருக்கம் ஒருவாறு எனக்குத் தெரியவந்தது. பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால்...

    Read more

  • ‘தேசியம்’ ஓர் முட்டுக்கட்டையே
    தேசீய இயக்கம் சென்ற வாரம் சுயமரியாதை இயக்கம் என்னும் தலைப்புக்கொடுத்து, அவ்வியக்கத்தின் கொள்கைகளைப் பற்றியும், திட்டங்களைப் பற்றியும், அதன் நிலையைப் பற்றியும், செல்வாக்கைப் பற்றியும், இதுவரை அது செய்திருக்கும் வேலையைப் பற்றியும் ஒருவாறு குறிப்பிட்டிருந்தோம். இவ்வாரம் தேசீய இயக்கம் என்னும் தலைப்புப் பெயர் கொடுத்து அதன் கொள்கை, திட்டம், நிலைமை,...

    Read more

  • இலங்கை உபன்யாசம் - தேசம், தேசீயம் ஒரு போலி உணர்ச்சி
      அன்புள்ள தலைவரே! வீரமும், எழுச்சியும், சுயமரியாதை உணர்ச்சி யும் உள்ள வாலிபர்களே!! தலைவரின் முன்னுரையிலும், உபசாரப் பத்திரங்களிலும், மற்றும் பேசியவர்களும் அளவுக்கு மீறி என்னைப் பற்றியும், எனது சிறு தொண்டைப் பற்றியும் புகழ்ந்து கூறி இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட புகழ்ச்சிகளுக்கு நான் சிறிதும் தகுதியுடையேன் அல்லன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கி...

    Read more

  • தேசீயப் பைத்தியம்
      தேசீயம் என்பது ஒரு பித்தலாட்டம் என்பதையும், அது சுயநலவாதி களின் வயிற்றுப்பிழைப்புக்குத் துணைபுரியும் வார்த்தை என்பதையும், நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் நாம் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம். தேசீயவாதியாக இருக்கின்ற ஒருவன் எச்சமயத்திலும் யோக்கியப் பொறுப்பு டன் நடந்துகொள்ள முடியாது. சமயத்திற்குத் தகுந்த வேஷங்களைப் போட்டுக்கொண்டு பாமர மக்களை...

    Read more

  • ஆந்திரர் தமிழர் என்று பிரிக்கப்பார்ப்பது
      ஜஸ்டிஸ்  கட்சியிலிருந்து  நம்பிக்கை  இல்லாத்  தீர்மானத்தின்  காரணமாய்  வெளியேறி  விட்ட  தோழர்  குமாரராஜா  அவர்களுக்காக  குமாரராஜா  அவர்களை  ஆதரிக்க  ஆசைப்பட்டவர்களோ  அல்லது  அவரிடம்  கூலிபெற்றவர்களோ  ஜஸ்டிஸ்  கட்சியைத்  தாக்க  இதுசமயம்  தங்களுக்கு  வேறு  எவ்வித  கதியும்  இல்லாமல்  நிற்கதியாயிருப்பதை  முன்னிட்டு  மிக  இழிவான  மார்க்கத்தைக்  கைக்கொள்ளத்  துணிந்து  விட்டார்கள். ...

    Read more

பொதுவுடைமை

  • தந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு முதல்நாள் நிகழ்வுகள்
    இன்று (15.01.1948) காலை 9 மணிக்கு பிராட்வேயில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான பந்தலில் வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு பெருமிதத்துடன் ஆரம்பமாயிற்று. பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந...

    Read more

    சுயராஜ்யத்தில் வேறு சுய ஆட்சி ஏன்?
    ஸ்தல ஸ்தாபனங்கள் என்பன அந்தந்த ஸ்தல மக்களைச் சுயஆட்சிக்குத் தகுதியுடையவர்களாகப் பழக்குவதற்காகவே முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நோக்கத்திற்கு மாறாக, நாளடைவில் நகரமன்றங்களுக்கும், நாட்டாண்மைக் கழகங்களுக...

    Read more

    ஏமாற்றுப் பிழைப்பு எத்தனை நாள்
    அண்மையில் சென்னை மாகாணத்திற்குக் கனம் ஆச்சாரியார் வந்த முக்கிய காரணங்கள் இரண்டு என்று கூறலாம். ஒன்று திருவண்ணாமலையில் புராணப் பிரசாரம் செய்வது, மற்றொன்று “கல்கி” மகளார் திருமணத்திற்கு விஜயம் செய்வது. ...

    Read more

    குறள் பற்றிப் பெரியார்!
    குறள் என்பது மற்ற நூல்களைப் போலவே அதாவது ஆரிய மத இதிகாச நூல்களைப் போலவே, எல்லாத் தமிழ்(இந்து) மக்களாலும் இதுவரையில் மதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆரிய நூல்களைப் போன்றே குறளுக்கும், ஆரிய மத இதிகாசக் ...

    Read more

    குறளும் பெரியாரும்!
    திருவள்ளுவரின் திருக்குறளைப் பற்றிப் பெரியார் ஈ. வெ. ரா அவர்கள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். அது இவ்வாரக் குடிஅரசில் பிறிதோரிடத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதை வாசகர்கள் ஊன்றிப் படிக்க வேண்ட...

    Read more

  • பதினோறாம் தடவை?
    நமது சென்னை சர்க்கார் - பார்ப்பனப் பனியாக்களின் ஆதிக்க சர்க்கார், நடத்திவரும் ‘தடை படலத்தை‘ப் பார்க்கும் போது, குறிப்பாக பெரியார் அவர்களுடன் பிள்ளை விளையாட்டு விளையாடுவதில் பெருமையடைகிறதோ, என்றே நினைக...

    Read more

    ஒப்புயர்வற்ற குறள் நாள்!
    இந்த மாதத்தில் சென்னையில் குறள் நாள் வெகு ஆடம்பரமாகக் கொண்டாடப் பெறவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். பெரியார் திரு. வி. க. அவர்களையும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அவரும் மகிழ...

    Read more

    பொறுத்துப் பார்ப்போம்
    “உண்மை தோற்றது, பொய்ம்மை வெற்றி பெற்றது. நாணயம் நலிந்தது, நம்பிக்கைத் துரோகம் செழித்தது. யோக்கியதைக்கு மதிப்பு இல்லை, அயோக்கியத் தனத்திற்கு ஆடம்பர வரவேற்பு” - இவை இன்று இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்க...

    Read more

    ஸ்தல சுயாட்சி!
    இந்த மாதம் 12ஆம் தேதி திராவிடத் தந்தை பெரியாரவர்களுக்குத் திருச்சி நகரசபை அளித்த சிறப்பு மிக்க வரவேற்பு, நம் காங்கிரஸ் தோழர்களுக்கு - மந்திரிமார்களுக்குப் பெரும் மனக்கசப்பைத் தருமென்று கூறப்படுமானால்,...

    Read more

    திருவள்ளூரில் காமராசர்!
    சென்ற ஒருவார காலமாகத் தோழர் காமராசர் அவர்கள், செங்கற்பட்டு வட்டாரத்தில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். சென்னை மேல்சபை உறுப்பினருள் ஒருவரான தோழர் முத்துரங்கனார் அவர்கள் காலஞ் சென்ற...

    Read more

Periyar in English

  • தந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு முதல்நாள் நிகழ்வுகள்
    இன்று (15.01.1948) காலை 9 மணிக்கு பிராட்வேயில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான பந்தலில் வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு பெருமிதத்துடன் ஆரம்பமாயிற்று. பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந...

    Read more

    சுயராஜ்யத்தில் வேறு சுய ஆட்சி ஏன்?
    ஸ்தல ஸ்தாபனங்கள் என்பன அந்தந்த ஸ்தல மக்களைச் சுயஆட்சிக்குத் தகுதியுடையவர்களாகப் பழக்குவதற்காகவே முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நோக்கத்திற்கு மாறாக, நாளடைவில் நகரமன்றங்களுக்கும், நாட்டாண்மைக் கழகங்களுக...

    Read more

    ஏமாற்றுப் பிழைப்பு எத்தனை நாள்
    அண்மையில் சென்னை மாகாணத்திற்குக் கனம் ஆச்சாரியார் வந்த முக்கிய காரணங்கள் இரண்டு என்று கூறலாம். ஒன்று திருவண்ணாமலையில் புராணப் பிரசாரம் செய்வது, மற்றொன்று “கல்கி” மகளார் திருமணத்திற்கு விஜயம் செய்வது. ...

    Read more

    குறள் பற்றிப் பெரியார்!
    குறள் என்பது மற்ற நூல்களைப் போலவே அதாவது ஆரிய மத இதிகாச நூல்களைப் போலவே, எல்லாத் தமிழ்(இந்து) மக்களாலும் இதுவரையில் மதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆரிய நூல்களைப் போன்றே குறளுக்கும், ஆரிய மத இதிகாசக் ...

    Read more

    குறளும் பெரியாரும்!
    திருவள்ளுவரின் திருக்குறளைப் பற்றிப் பெரியார் ஈ. வெ. ரா அவர்கள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். அது இவ்வாரக் குடிஅரசில் பிறிதோரிடத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதை வாசகர்கள் ஊன்றிப் படிக்க வேண்ட...

    Read more

  • பதினோறாம் தடவை?
    நமது சென்னை சர்க்கார் - பார்ப்பனப் பனியாக்களின் ஆதிக்க சர்க்கார், நடத்திவரும் ‘தடை படலத்தை‘ப் பார்க்கும் போது, குறிப்பாக பெரியார் அவர்களுடன் பிள்ளை விளையாட்டு விளையாடுவதில் பெருமையடைகிறதோ, என்றே நினைக...

    Read more

    ஒப்புயர்வற்ற குறள் நாள்!
    இந்த மாதத்தில் சென்னையில் குறள் நாள் வெகு ஆடம்பரமாகக் கொண்டாடப் பெறவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். பெரியார் திரு. வி. க. அவர்களையும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அவரும் மகிழ...

    Read more

    பொறுத்துப் பார்ப்போம்
    “உண்மை தோற்றது, பொய்ம்மை வெற்றி பெற்றது. நாணயம் நலிந்தது, நம்பிக்கைத் துரோகம் செழித்தது. யோக்கியதைக்கு மதிப்பு இல்லை, அயோக்கியத் தனத்திற்கு ஆடம்பர வரவேற்பு” - இவை இன்று இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்க...

    Read more

    ஸ்தல சுயாட்சி!
    இந்த மாதம் 12ஆம் தேதி திராவிடத் தந்தை பெரியாரவர்களுக்குத் திருச்சி நகரசபை அளித்த சிறப்பு மிக்க வரவேற்பு, நம் காங்கிரஸ் தோழர்களுக்கு - மந்திரிமார்களுக்குப் பெரும் மனக்கசப்பைத் தருமென்று கூறப்படுமானால்,...

    Read more

    திருவள்ளூரில் காமராசர்!
    சென்ற ஒருவார காலமாகத் தோழர் காமராசர் அவர்கள், செங்கற்பட்டு வட்டாரத்தில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். சென்னை மேல்சபை உறுப்பினருள் ஒருவரான தோழர் முத்துரங்கனார் அவர்கள் காலஞ் சென்ற...

    Read more

பகுத்தறிவு

  • மர்க்குரி ஒழிக!
    கலிகால அதிசயம்! ஆண்டவனின் அதியற்புத அலாதி லீலை! பக்தர்களின் மனம் மகிழ மகேசனின் மயக்கவரம்!
    ஆம்! முதல்நாள் போட்ட மர்க்குரி மாரனை எரித்த தியாகராஜனுக்கு தாபத்தை உண்டாக்கியதாம். அல்ல, அல்ல கடுங்கோபத்தையே உண்டாக்கியதாம்! முனிகொண்டால் முப்புரம் எரிக்கும் மாயரல்லவா அவர்! ஆலய சிப்பந்தியின் உடம்பை எரித்தார் காயம் படாமல்!
    வெளியூர் 27. 10. 1949 ஆம் தேதிய சுதேசமித்திரனில் காணப்படுகிறது மேலே கண்ட செய்தி.
    முதல்நாள் போடப்பட்டதாம் மர்க்குரி லைட்; அடுத்த நாள் ஆண்டவனின்...

    Read more

  • பட்டாபிஷேகம்!
    ராம இராஜ்யத்துக்குப் பட்டாபிஷேகம் 1950 ஜனவரி 26ஆம் தேதி என்று வதிஸ்டர் வம்சத்தினர் நாள் குறித்துவிட்டனர். ராமாயண வதிஸ்டர், நாடாள குறிப்பிட்ட நாள், இராமன் காடேக வேண்டிய நாள் ஆக, ஆகிய இப்போது இந்துஸ்தான் வதிஸ்டவம்சத்தோர் குறிப்பிடும் இந்த 26 எப்படியும் மாறப்போவதில்லை என்று உறுதி கூறுகிறார்கள்.
    நம் காங்கிரஸ் தோழர்கள் ஏகாதிபத்தியம் என்று சொல்லுவதற்குப் பதிலாக கண்டுபிடித்த மற்றொரு பழமையான - அர்த்த புஷ்டியான சொல் இராமராஜ்யம் என்பதை அவர்களே...

    Read more

  • தீ நாள்!
    என்றைக்கோ ஒரு காலத்தில் ஒரு அசுரன் இருந்தானாம். அந்த அசுரன் ஒரு பன்றிக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். இந்த விசித்திரப் பிறவியான அசுரன் தேவர்களை - பூலோகப் பிராமணர்களை எல்லாம் கொடுமைப்படுத்தினானாம். இதனால் தன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம். செத்துப் போனதைப் பூலோக மக்கள் எல்லாரும் கொண்டாடிக் களிப்படைய வேண்டுமென்று செத்துப்போன அந்த அசுரன் கேட்டுக் கொண்டானாம். அந்தப்படியே ஆகட்டும் என்று மகாவிஷ்ணு திருவாய் மலர்ந்தாராம்....

    Read more

  • கடவுள் தர்பாரில்!
    இடம்: பரலோகம் கடவுள் தர்பார்.
    பாத்திரங்கள்: கடவுள், சித்திரபுத்த்திரன், யமன், ஞானசாகரன், பக்தரத்னம்.
    காலம்: ஊழிக் காலம்.
    I
    கடவுள்: அடே! சித்திரபுத்திரா! என்ன தாமதம். இன்றைய கணக்கென்ன?
    சித்திராபுத்திரன்: சர்வலோகப் பிரபு சர்வஞானப் பிரபு! சர்வவல்லப் பிரபு! கருணாநிதி! நாயேன் தங்களாக்ஞையையே எதிர்பார்த்திருந்தேன். (யமனைப் பார்த்து சமிக்கை செய்கிறான்).
    யமன்: (மானிடர் இருவரை அழைத்து வந்து தர்பார் முன்னிலையில் நிறுத்தி) “சுவாமி உத்திரவுப்படி நடந்து கொண்டேன்”. என்று ஒதுங்கி குனிந்து வாய் பொத்திக் கைகட்டி நிற்கிறான்.
    சித்திராபுத்திரன்:...

    Read more

  • கடவுள்
    வினா: கடவுளைப் பற்றிப் பொதுவாக ஜனங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களை விளக்கிக்கூறு.
    விடை: கடவுள் வானமண்டலத்தையும், பூமியையும், அதிலுள்ள சகல சராசரங்களையும் படைத்தவன் என்று மக்களில் பெரும்பாலோர் நம்புகிறார்கள்.
    வினா: அப்புறம்?
    விடை: கடவுள் சர்வஞானமுடையவனாம், யாவற்றையும் பார்க்கிறானாம். பிரபஞ்சம் முழுதும் அவனது உடமையாம். சர்வவியாபியாம்.
    வினா: கடவுள் ஒழுக்கத்தைப் பற்றி மக்கள் என்ன சொல்லுகிறார்கள்.
    விடை: அவன் நீதிமானாம்; புனிதனாம்.
    வினா: வேறு என்ன?
    விடை: அவன் அன்பு மயமானவனாம்.
    வினா: கடவுள் அன்பு மயமானவனென்று ஜனங்கள் எப்பொழுதும்...

    Read more

இந்த மாதம் 12ஆம் தேதி திராவிடத் தந்தை பெரியாரவர்களுக்குத் திருச்சி நகரசபை அளித்த சிறப்பு மிக்க வரவேற்பு, நம் காங்கிரஸ் தோழர்களுக்கு - மந்திரிமார்களுக்குப் பெரும் மனக்கசப்பைத் தருமென்று கூறப்படுமானால், அங்கு பெரியார் கூறிய கருத்துக்கள், எத்தனையோ மடங்கு அதிகமான மனக்கசப்பை அவர்களுக்கு நிச்சயமாகத் தந்திருக்க வேண்டும்.

பெரியாரவர்கள் அந்த வரவேற்புக்குப் பதில் கூறும்போது, இன்றைய ஸ்தல ஸ்தாபனங்கள் சுயேச்சையாகச் செய்யக்கூடிய செயல்கள் இரண்டு; ஒன்று வரவேற்பு வழங்குவது, மற்றொன்று திருவுருவப்படம் திறந்து வைப்பது என்று கூறியிருப்பது வெறும் வேடிக்கைக் காகக் கூறிய விஷயமல்ல. இன்றைய ஸ்தலஸ்தாபனங்களின் உண்மையான யோக்கியதை அவ்வளவுதான். ஸ்தல ஸ்தாபனங்களில் முக்கியமாக முனிசிபாலிட்டிகள், பஞ்சாயத்துப் போர்டுகள் என்பவைகளில் அங்கம் வகிக்கும் எவரும் அந்த ஸ்தாபனங்களால் அந்த நகருக்கோ, ஊருக்கோ எந்த ஒரு பொது நன்மையையும் செய்ய முடியாத அளவில்தான் அவர்களுடைய அதிகாரம் ‘பறிமுதல்’ செய்யப்பட்டிருக்கிறது.

பறிமுதல் என்று ஏன் கூறுகிறோமென்றால், ஸ்தல ஸ்தாபன அமைப்பு முறையே அந்த ஸ்தலத்திற்கு வேண்டிய பொது நன்மை எது எதுவுண்டோ அது எல்லாவற்றையும் செய்வதற்குப் பூரணசுயாட்சியுடையதாய் இருக்க வேண்டுமென்பதே வெளியாரின், முக்கிய மாக அரசாங்கத்தாரின் தலையீட்டுக்கு நிர்வாகத்தில் இடமில்லாமல் இருக்கவேண்டு மென்பதே. ஆனால் இன்றைய ஸ்தல ஸ்தாபனங்களில் நடைமுறை எப்படி? `மாடல்’ குடிஅரசாக விளங்கவேண்டிய ஸ்தாபனங்கள், படிப் படியாகத் தன் எல்லைக்குட்பட்ட எல்லா நிர்வாகப் பொறுப்பையும் ஏற்று நடத்தவேண்டிய ஸ்தல ஸ்தாபனங்கள், நம் நாட்டில் படிப்படியாக, நாளுக்கு நாள் எல்லா அதிகாரங்களையும் இழந்தே வந்திருக்கிறது. இவற்றின் வரலாற்றை அறிந்தவர்கள் இதை மறுக்கமுடியாது.

சுயாட்சி என்று பெயர் கொடுக்கப்பட்டு, ஆனால் சுயேட்சையாக செய்வதற்கு ஒரு காரியமும் இல்லை என்கிற இந்த நிலைமை வந்ததற்கு - வந்த நிலைமை மாறாமல் இருப்பதற்கு யார் யாரையோ குறை கூறினாலோ, பெரும் பொறுப்பாளியாய் இருந்தவர்களும், இன்று இருப்பவர்களும் நமது மதிப்பிற்குரிய காங்கிரஸ்காரர்கள்தான் என்பதை எவர்தான் இல்லை என்று சொல்லமுடியும்?

20 வருஷங்களுக்கு முன்னால் எல்லாம் ஸ்தல ஸ்தாபனங்கள் பணக்காரர்கள் கையில் சிக்கி, “காண்ட்ராக்டர்கள் ராஜ்யமாக” விளங்குகிறது என்று அன்றைக்குக் காங்கிரஸ்காரர்களால் சித்தரிக்கப்பட்டு குறை கூறப்பட்டது என்றாலும், அந்த நிலைமையை உண்டாக்கியவர்களும் அவர்கள்தான். நாட்டில் பெரிய அரசியல் கட்சியாய் - வயதில் மூத்ததாய் - மற்ற கட்சிகளுக்கு வழிகாட்டியாய் இருக்கவேண்டிய காங்கிரஸ், ஸ்தல ஸ்தாபனங்களைக் கட்சியின் பெயர் கூறிக் கைப்பற்றுவதில் தீவிரத் திட்டம் வகுத்தது. பணக்காரர்களோ பணத்தால் அடித்தடித்து அதை வீழச் செய்தார்கள். பிறகு வீசிய பணத்தையெல்லாம் அவர்கள் திரட்ட ஆரம்பித்தார்கள். ஆகவே இந்தக் காரியத்தில், ‘காண்ராக்ட் ராஜ்யம்’ நடத்திய பணக்காரர்கள் எப்படிக் குற்றவாளிகளாகிவிட முடியும்?

பெரியாரவர்கள் காங்கிரசிலிருந்த போதே, 1920ஆம் வருஷத்திலேயே, அரசியல் கட்சியின் பெயரால் ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்றக் கூடாது என்று கூறினார்கள் என்றால், அதை அன்றைக் காங்கிரஸ் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அதற்கு உண்மையான அர்த்தம் என்ன? ஸ்தல சுயாட்சி என்பதன் அர்த்தத்தைத் தெளிவாக உணர்ந்து கொண்டதும், உணர்ந்து கொள்ள மறுத்ததும்தானே காரணமாகும்.

“நகரசபை வேலைகளில் அரசியல் கட்சிப் போட்டிகளைப் புகுத்துவது, அதன் வேலையைக் கெடுப்பதென்பது மட்டுமல்லாமல், நகரசபையால் மக்களுக்கு எதைச் சாதிக்க வேண்டுமோ அதைமறந்து, கட்சிச் சண்டைகளை பெரிதும் வளருவதற்கு இடமேற்பட்டு விடுகிறது” என்று, பெரியாரவர்கள் அன்று திருச்சியில் கூறிய கருத்தானது; அனுபவத்தின் மீது கூறியது என்பது மாத்திரமல்ல, அவர்கள் பொது வாழ்வில் ஈடுபட்ட காலந்தொட்டே கூறிவரும் கருத்தாகும்.

இந்த உண்மையை கண்ணாரக் கண்டு வருகிற காங்கிரஸ்காரர்கள் பல வருஷங்களுக்குப் பிறகு இன்றைக்காவது இதை ஒப்புக்கொள்ளுகிறார்களா? கட்சிப் போட்டாபோட்டி கண்டிக்கப்பட வேண்டியது என்கிறார்களா? என்றால் என்ன பதில் சொல்ல முடியும்? 1947ஆம் வருஷம் நடந்த ஸ்தலஸ்தாபனத் தேர்தலிலேகூட “யார் யாருக்குப் பதவி கொடுப்பது? யார் யாருக்கு இல்லை என்று கூறுவது” என்கிற தகராறைக் காரணமாகக் கூறித்தானே, நம் காங்கிரஸ் தியாகிகள் - ஊழியர்கள் காங்கிரசானது தேர்தலில் கலந்து கொள்ளக்கூடாது என்று தீர்மானித்தது. அப்படித் தீர்மானித்தும் அதைக் கிழித்தெறிந்துவிட்டுப் பின் எங்கெங்கு செல்வாக்குண்டோ, அங்கெல்லாம் கட்சியின் பேரால்? ‘மங்களகரமான’ மஞ்சளின்பேரால் நபர்களைக் காங்கிரஸ் நிறுத்தி வைத்தது. ஆகவே இந்த நடத்தையிலிருந்து அவர்கள் உணர்ந்து கொண்டு விட்டார்கள் என்று எப்படிச் சொல்லமுடியும்?

ஸ்தலஸ்தாபனங்களுக்கு அதிகாரங்கள் அதிகரிக்கப்படும் என்று 1947லேயே (பிரகாசம் மந்திரி சபையிலேயே) கூறப்பட்டது என்றாலும், அது இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை என்றால், அதற்குக் காரணம், ஆளவந்தவர்கள் கண்ட கனவின்படி அநேக இடங்கள் அவர்கள் கைக்கு சிக்கவில்லை என்பதுதானே! ஸ்தல ஸ்தாபனங்களுக்கு அதிகாரம் போதாது, கூட்டப்படவேண்டும் என்பதை உணர்ந்தும்; அதை நடைமுறைக்குக் கொண்டுவரப் போகிறோம் என்று கூறியும், பின்னால் இன்றுவரை அதைச் செய்யவில்லை என்பதைப் பார்க்கும் போது, ஸ்தல ஸ்தாபனங்களுக்குக் கொடுக்கும் அதிகாரம் தங்கள் கட்சிக்கு வேலி அமைப்பதாய் இருக்கவேண்டும் என்கிற ஒரு நோக்கத்தைத் தவிர வேறு என்ன கருத்துக் கூறிவிட முடியும்?

சென்ற சூலை மாதத்தில் ஜில்லா போர்டுகளை மாற்றியமைப்பதற்காக ஒரு திருத்த மசோதா என்றுகூறி, பெரும் பொருள் சேர்க்க முடியாத எம். எல். ஏக்களுக்கெல்லாம் ஜில்லாப் போர்டை “வேட்டைக்காடு” ஆக்கப்போகிறோம் என்று இப்போதைய மந்திரிசபை கூறியதிலிருந்தே, ஸ்தல ஸ்தாபனங்களைப் பற்றி இன்றைக்கும் நம் காங்கிரஸ்காரர்கள் கொண்டிருக்கும் கருத்தென்ன என்பது விளங்கவில்லையா? மந்திரிசபை என்கிற கட்டிடத்திற்கு ஸ்தல ஸ்தாபனம் என்கிற அஸ்திவாரம் என்றெண்ணிக் கொண்டிருக்கும் வரையிலும், அதற்கேற்றபடி காரியங்கள் செய்யப்படும் வரையிலும் ஸ்தல ஸ்தாபனங்களால், அந்த ஸ்தல மக்களுக்கு என்ன நன்மை உண்டாகிவிட முடியும்?

“நகரசபைகளில் திராவிடர் கழகத்தார் இருந்தால், விளக்கு வெளிச்சம் தராதா? அல்லது காங்கிரஸ்காரர்கள் மட்டுமிருந்தால் விளக்கு எரியாமலே வெளிச்சம் உண்டாக்கிவிடமுடியுமா? கழகத் தோழர்கள் நகரசபைக்குச் சென்றால் ரோடெல்லாம் பொன்மயமாகி விடுமா? அல்லது காங்கிரஸ்காரரேயிருந்தால் ரோடுகள் எல்லாம் இடிந்து விடுமா? இதைக் காங்கிரஸ்காரர்கள் அறியாதவர்கள் அல்ல. ஆனால் ஸ்தல ஸ்தாபனங்கள் என்பதற்கு அவர்கள் அகராதியில் வேறு அர்த்தமல்லவா எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்தலத்தின் மக்கள் நன்மைக்கு ஆட்சி புரியும் ஸ்தாபனங்கள் என்று பெரியார் அர்த்தம் கூறினால், ஸ்தலத்தின் மக்களை எங்களுக்குச் சேர்ந்துத்தரும் ஸ்தாபனம் என்றல்லவா, அவர்கள் செயலால் சொல்லுகிறார்கள்? இப்படிச் சொல்லும் வரையிலும் ஸ்தல ஸ்தாபனங்கள் - சுயாட்சி என்பது எப்படி உருப்பட முடியும்?

தமிழ் நாட்டிலே சென்னைக்கு அடுத்தபடியில் 2ஆம் இடத்தைப் பெற்றிருக்கும் பெரிய நகரம் திருச்சி. இதற்கு வருமானம் இந்தப் பணவீக்க காலத்தில் 31லட்சம்தான் என்பதையும், அதுசெய்ய வேண்டிய செலவுகளுக்கு அரசாங்கத்தை எதிர்பார்க்க வேண்டியதாய் இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டு, ஆனால், அதே நேரத்தில் தனிப்பட்ட எத்தனையோ பேர் இந்த நகரத்திலேயே கோடி கோடியாய்ச் சம்பாதிப்பதில்லையா என்றும் பெரியாரவர்கள் கேட்கிறார்கள். கேட்பதோடு மட்டுமல்ல; அதற்கு மார்க்கமும் கூறுகிறார்கள்.

“ஒவ்வொரு நகரசபையும் சோவியத் நாட்டிலுள்ள சுயேட்சை பெற்ற சிறு சிறு யூனிட்கள் போன்றிருக்க வேண்டும். அந்தந்த நகர மக்களின்பெரும்பாலான காரியங்களும் அந்நகர சபையினராலேயே நிர்வகிக்கப்பட வேண்டும். அந்த அதிகாரம் அளிக்கப்படுவதோடு, இதன் தேர்தலில் எவரும் கட்சியின் பேரால் நிற்பதை அரசியலார் தடைப்படுத்தும் வகையில் சட்டம் விதிக்க வேண்டும்” என்று கூறுகிற இருமுறைகளையும் பொதுமக்கள் எண்ணத்திற்கு - பரிசீலனைக்கு விட்டுவிடுகிறோம்.

“இயற்கை செல்வத்தை - மக்கள் உழைப்பைத் தேசிய உடைமையாக்குவதுதான் எங்கள் திட்டம்; ஆனால் முதல் இல்லையே, அதற்கேற்றபடி திறமையான நபருமில்லையே என்று கண்ணீர்விடும் காங்கிரஸ் சோஷியலிஸ்டுகள், முதலைக் கண்ணீராய் இல்லாதிருந்தால், முதலில் இந்த வேலையை ஏன் தொடங்கக்கூடாது? நாட்டின் முழுப் பகுதியிலும், உடனடியாக இந்தத் திட்டத்தை நடத்திச் செல்லும் மனவுரம் இன்றைய ஆளவந்தார்களுக்கில்லை என்றாலும் குறிப்பிட்ட சில பகுதிகளிலாவது - ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்தின் கீழ் ஸ்தலத் தொழில்களைப் பெரும் வியாபாரத்தை ஏன் கொண்டுவரக்கூடாது?” என்கிற எண்ணந்தான், நேரு சர்க்காரின் அநுதாபி என்று கூறிக்கொள்ளும் எவனுக்கும், பெரியார் அவர்களின் இந்தத் திட்டத்தைச் சிந்திக்கும்போது உண்டாகும் என்பது நிச்சயம்.

சிந்தனைக்கு தெளிவாக, செயலுக்கு ஏற்றதாகச் செய்வதற்கும் எளிதாக உள்ள இப்பேர்ப்பட்டத் திட்டங்களை, நம் தேசிய சர்க்கார் எப்போதும் சிரித்துப் பேசிக் கிண்டல் பண்ணி வருவதுதான், அதன் வாடிக்கை என்பதை நாம் உணர்வோம். ஆனால் அந்தப் பருப்பு இனியும் வேகுமா? என்பதை இப்போது அவர்களே நினைக்கும் போதுதான், இந்தக் கருத்துக்கள் அவர்களுடைய சுயரூபத்தைப் படம் பிடித்துக் காட்டுவதாயிருக்கிறதே என்பதைப் பார்க்கும் போதுதான், இது அவர்களுக்கு எவ்வளவு பெரிய மனக்கசப்பை உண்டாக்கியிருக்க வேண்டும் என்பது தெரியும். இதை மறைக்க எத்தனையோ திட்டங்களை அவர்கள் வெளியாக்கலாம். எங்கள் நேரு சர்க்காருக்கிணை இவ்வுலகிலுண்டோ என்று பலமாக முழங்கலாம். சோஷலிச நேரு சர்க்கார்! சோஷலிச நேரு சர்க்கார்!! என்று வாய்வலிக்கப் பெருமையாகச் சொல்லலாம், துந்துபி பாடலாம். ஆனால் சோஷலிசம் சோரம் போனபிறகு, தனிப்பட்ட முதலாளித்துவத்திற்குத் தூவப்பட்டிருக்கும் விதை எத்தனை நாளைக்கு வெளியாகாமல் இருந்துவிடப்போகிறது? வயிறு பெருப்பதை மறைத்துக் கட்டிவிடலாம்! மாத முடிவில் வெளிப்பட்டுத்தானே தீரவேண்டும்?

குடிஅரசு - தலையங்கம் - 19.03.1949

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: