• abolish-caste-1.jpg
 • abolish-caste-2.jpg
 • abolish-caste-3.jpg
 • periyar1.jpg

சாதி ஒழிப்பு

கடைசிப் பதிவேற்றம்

 • Last Modified: Wednesday 20 November 2019, 22:22:42.

தேசியம் - தேசிய இனம்

 • திராவிடரும் - தமிழரும்
  நாடு பிரிவினைக் கமிட்டி அறிக்கையைப் பார்த்தேன். இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிக்கை பற்றிய சேதிகளின் சுருக்கம் ஒருவாறு எனக்குத் தெரியவந்தது. பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால்...

  Read more

 • ‘தேசியம்’ ஓர் முட்டுக்கட்டையே
  தேசீய இயக்கம் சென்ற வாரம் சுயமரியாதை இயக்கம் என்னும் தலைப்புக்கொடுத்து, அவ்வியக்கத்தின் கொள்கைகளைப் பற்றியும், திட்டங்களைப் பற்றியும், அதன் நிலையைப் பற்றியும், செல்வாக்கைப் பற்றியும், இதுவரை அது செய்திருக்கும் வேலையைப் பற்றியும் ஒருவாறு குறிப்பிட்டிருந்தோம். இவ்வாரம் தேசீய இயக்கம் என்னும் தலைப்புப் பெயர் கொடுத்து அதன் கொள்கை, திட்டம், நிலைமை,...

  Read more

 • இலங்கை உபன்யாசம் - தேசம், தேசீயம் ஒரு போலி உணர்ச்சி
    அன்புள்ள தலைவரே! வீரமும், எழுச்சியும், சுயமரியாதை உணர்ச்சி யும் உள்ள வாலிபர்களே!! தலைவரின் முன்னுரையிலும், உபசாரப் பத்திரங்களிலும், மற்றும் பேசியவர்களும் அளவுக்கு மீறி என்னைப் பற்றியும், எனது சிறு தொண்டைப் பற்றியும் புகழ்ந்து கூறி இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட புகழ்ச்சிகளுக்கு நான் சிறிதும் தகுதியுடையேன் அல்லன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கி...

  Read more

 • தேசீயப் பைத்தியம்
    தேசீயம் என்பது ஒரு பித்தலாட்டம் என்பதையும், அது சுயநலவாதி களின் வயிற்றுப்பிழைப்புக்குத் துணைபுரியும் வார்த்தை என்பதையும், நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் நாம் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம். தேசீயவாதியாக இருக்கின்ற ஒருவன் எச்சமயத்திலும் யோக்கியப் பொறுப்பு டன் நடந்துகொள்ள முடியாது. சமயத்திற்குத் தகுந்த வேஷங்களைப் போட்டுக்கொண்டு பாமர மக்களை...

  Read more

 • ஆந்திரர் தமிழர் என்று பிரிக்கப்பார்ப்பது
    ஜஸ்டிஸ்  கட்சியிலிருந்து  நம்பிக்கை  இல்லாத்  தீர்மானத்தின்  காரணமாய்  வெளியேறி  விட்ட  தோழர்  குமாரராஜா  அவர்களுக்காக  குமாரராஜா  அவர்களை  ஆதரிக்க  ஆசைப்பட்டவர்களோ  அல்லது  அவரிடம்  கூலிபெற்றவர்களோ  ஜஸ்டிஸ்  கட்சியைத்  தாக்க  இதுசமயம்  தங்களுக்கு  வேறு  எவ்வித  கதியும்  இல்லாமல்  நிற்கதியாயிருப்பதை  முன்னிட்டு  மிக  இழிவான  மார்க்கத்தைக்  கைக்கொள்ளத்  துணிந்து  விட்டார்கள். ...

  Read more

பொதுவுடைமை

 • சின்னாளப்பட்டியில் பொதுக்கூட்டம்
  16.01.1946 மாலை 4:00 மணிக்குத் தனிக்காரில் பெரியாரவர்களும் மற்றும் பலரும் சின்னாளப்பட்டி வந்து சேர்ந்தனர். உடனே ஒரு மாபெரும் ஊர்வலம் புறப்பட்டு முக்கிய தெருக்களின் வழியாகச் சென்றது. வழி நெடுக மலர் மால...

  Read more

  கோவை மாவட்டதிராவிடர் மாநாடு
  நம்மியக்கம் இப்பொழுது எல்லாத் திராவிடத் தோழர்களாலும் பல்துறையிலும் பலப்படுத்தப்பட்டு வருகிறதென்றும், தேசியத் தோழர்கள் “தங்கள் தியாகத்தை”க் காட்ட வேண்டுமானால் மந்திரிகளாக முடியும். ஆனால் திராவிடர் க...

  Read more

  திருமண அழைப்பு
  திருமணம் முதலாகிய சமுதாய சடங்குகளுக்குப் பெரியார் ஈ.வெ.ரா. இனி அழைக்குமிடங்களுக்கு எல்லாம் போக வசதி இல்லை என்றும், அப்படி போவதானால் இயக்க வேலைகள் குந்தகப்படுகிறதென்றும், இயக்கத் தோழர்களும் உடல் நலம...

  Read more

  சிலை வணக்கமும் திராவிடர் கழகமும்
  “விக்ரக ஆராதனை (சிலை வணக்கம்)யைக் கண்டித்துத் தாங்களும் இயக்கத் தோழர்களும், அடிக்கடி பேசியும் எழுதியும் வருகிறீர்கள். திராவிடர் கழகம் ஒரு அரசியல் கட்சி இயக்கம். சுயமரியாதை இயக்கத்தைப் போல் வெறும் சம...

  Read more

  எது தேசத் துரோகம்?
  தோழர்களே! இந்தியாவைவிட்டுப் பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு விலகப் போகிறதா இல்லையா? அது காந்தி கோஷ்டியார், பிரிட்டிஷ் தூது கோஷ்டியார் பேசிக் கொள்ளும் இரகசியப் பேச்சின் தத்துவத்தைப் பொறுத்தது. காங்கிர...

  Read more

 • கடவுளின் கருணையே கருணை!
  மழையில்லை, அரிசி இல்லை என்று மக்கள் திண்டாடுகிறார்கள். ஆனால், அதன் பேராலும் பார்ப்பனர்கள் வயிறு புடைக்கிறது. மழைக்காக வருண ஜபம் செய்வதாகக் கூறிக் கொண்டு கண்ட கண்ட இடங்களில் இருக்கும் பார்ப்பனர்கள் வ...

  Read more

  மந்திரிசபையில் கெட்ட புத்தி தோற்றம்
  சென்னை மந்திரிசபை தனது நிஜமான நிறத்தோடு வெளிக்கிளம்ப துணிந்து முன் வந்து விட்டதாகத் தெரிகிறது. இன்றைய அரசியல் கொள்கையில் காங்கிரசுக்கும் இம்மாகாண பார்ப்பனரல்லாத மக்கள் என்பவர்களுக்கும் இதுவரை இருந்...

  Read more

  பூதேவர்களின் விஷமப்பிரசாரக் கோஷ்டியார்களின் தேவ பாதுகாப்பு மாநாடு
  சித்திரபுத்திரன் தேசிய பத்திரிகை நகரத்தில், பார்ப்பன நிருபர்கள் பந்தலில், பூதேவர்கள் கழகச் சார்பில் விஷமப் பிரசார கோஷ்டிப் படையின் சதியாலோசனை மாநாடு நடவடிக்கைகள். விஷயாலோசனைக் கூட்டம் தலைவர்...

  Read more

  “வெற்றி நம்முடையதுதான்”
  நம் கழகச் சார்பாக சென்ற மாதம் இரு கூட்டங்கள் நடந்தன. அதற்குப் பிறகு பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. 1. சென்னை மந்திரிசபை அமைப்பு 2. இங்கிலாந்து தூது கோஷ்டி தோல்வி 3. மதுரை கலவரம் முதலிய காரியங்களாகு...

  Read more

  சர்.ஏ.பி. பாத்ரோ மறைவு
  ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்துவரும், 1921ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் கட்சி ஆட்சி செய்தபொழுது கல்வி, மராமத்து இலாகா மந்திரியாகயிருந்து சென்னை யுனிவர்சிட்டி சட்டத்தில் சீர்திருத்தம் செய்தவ...

  Read more

Periyar in English

 • சின்னாளப்பட்டியில் பொதுக்கூட்டம்
  16.01.1946 மாலை 4:00 மணிக்குத் தனிக்காரில் பெரியாரவர்களும் மற்றும் பலரும் சின்னாளப்பட்டி வந்து சேர்ந்தனர். உடனே ஒரு மாபெரும் ஊர்வலம் புறப்பட்டு முக்கிய தெருக்களின் வழியாகச் சென்றது. வழி நெடுக மலர் மால...

  Read more

  கோவை மாவட்டதிராவிடர் மாநாடு
  நம்மியக்கம் இப்பொழுது எல்லாத் திராவிடத் தோழர்களாலும் பல்துறையிலும் பலப்படுத்தப்பட்டு வருகிறதென்றும், தேசியத் தோழர்கள் “தங்கள் தியாகத்தை”க் காட்ட வேண்டுமானால் மந்திரிகளாக முடியும். ஆனால் திராவிடர் க...

  Read more

  திருமண அழைப்பு
  திருமணம் முதலாகிய சமுதாய சடங்குகளுக்குப் பெரியார் ஈ.வெ.ரா. இனி அழைக்குமிடங்களுக்கு எல்லாம் போக வசதி இல்லை என்றும், அப்படி போவதானால் இயக்க வேலைகள் குந்தகப்படுகிறதென்றும், இயக்கத் தோழர்களும் உடல் நலம...

  Read more

  சிலை வணக்கமும் திராவிடர் கழகமும்
  “விக்ரக ஆராதனை (சிலை வணக்கம்)யைக் கண்டித்துத் தாங்களும் இயக்கத் தோழர்களும், அடிக்கடி பேசியும் எழுதியும் வருகிறீர்கள். திராவிடர் கழகம் ஒரு அரசியல் கட்சி இயக்கம். சுயமரியாதை இயக்கத்தைப் போல் வெறும் சம...

  Read more

  எது தேசத் துரோகம்?
  தோழர்களே! இந்தியாவைவிட்டுப் பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு விலகப் போகிறதா இல்லையா? அது காந்தி கோஷ்டியார், பிரிட்டிஷ் தூது கோஷ்டியார் பேசிக் கொள்ளும் இரகசியப் பேச்சின் தத்துவத்தைப் பொறுத்தது. காங்கிர...

  Read more

 • கடவுளின் கருணையே கருணை!
  மழையில்லை, அரிசி இல்லை என்று மக்கள் திண்டாடுகிறார்கள். ஆனால், அதன் பேராலும் பார்ப்பனர்கள் வயிறு புடைக்கிறது. மழைக்காக வருண ஜபம் செய்வதாகக் கூறிக் கொண்டு கண்ட கண்ட இடங்களில் இருக்கும் பார்ப்பனர்கள் வ...

  Read more

  மந்திரிசபையில் கெட்ட புத்தி தோற்றம்
  சென்னை மந்திரிசபை தனது நிஜமான நிறத்தோடு வெளிக்கிளம்ப துணிந்து முன் வந்து விட்டதாகத் தெரிகிறது. இன்றைய அரசியல் கொள்கையில் காங்கிரசுக்கும் இம்மாகாண பார்ப்பனரல்லாத மக்கள் என்பவர்களுக்கும் இதுவரை இருந்...

  Read more

  பூதேவர்களின் விஷமப்பிரசாரக் கோஷ்டியார்களின் தேவ பாதுகாப்பு மாநாடு
  சித்திரபுத்திரன் தேசிய பத்திரிகை நகரத்தில், பார்ப்பன நிருபர்கள் பந்தலில், பூதேவர்கள் கழகச் சார்பில் விஷமப் பிரசார கோஷ்டிப் படையின் சதியாலோசனை மாநாடு நடவடிக்கைகள். விஷயாலோசனைக் கூட்டம் தலைவர்...

  Read more

  “வெற்றி நம்முடையதுதான்”
  நம் கழகச் சார்பாக சென்ற மாதம் இரு கூட்டங்கள் நடந்தன. அதற்குப் பிறகு பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. 1. சென்னை மந்திரிசபை அமைப்பு 2. இங்கிலாந்து தூது கோஷ்டி தோல்வி 3. மதுரை கலவரம் முதலிய காரியங்களாகு...

  Read more

  சர்.ஏ.பி. பாத்ரோ மறைவு
  ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்துவரும், 1921ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் கட்சி ஆட்சி செய்தபொழுது கல்வி, மராமத்து இலாகா மந்திரியாகயிருந்து சென்னை யுனிவர்சிட்டி சட்டத்தில் சீர்திருத்தம் செய்தவ...

  Read more

பகுத்தறிவு

 • தீ மிதித்தல் ஏமாற்று வித்தை
  12.03.1946 இல் நடைபெற்ற கரூர் காமாட்சியம்மன் திருவிழாவில் ஆச்சாரத்தோடு, அம்மையிடம் பக்தியாய், ஆண்டவன் அருள் கொண்டு ஆஸ்திகர்கள் நெருப்புக் குழியில் தீ மிதிக்க இறங்கிய பொழுது தீ மிதித்தல் ஏமாற்று வித்தை என்பதை நிரூபிக்க கறுப்புச் சட்டைப் படை இளைஞர்கள் 6 பேர் கறுப்புச் சட்டையணிந்து ஆச்சாரம், பக்தி, அருள் ஒன்றும் இல்லாமலே தாமும் அவர்களுடன் தீ மிதித்து ஏறினர். இனி இம்மாதிரி ஏமாற்று வித்தைகள்  பலிக்காது என ஆஸ்திகர்கள்...

  Read more

 • தீமிதித்தல் பக்தியினாலா?
  துறையூரில் நடந்த திரவுபதி அம்மன் விழாவில் கடைசி நாளாகிய 4.8.44  ஆம் தேதியன்று அக்கினியில் இறங்கியதில் நமது இயக்க அன்பர்கள் வை. நடேசன், து.வீ. நாராயணன் முதலியவர்கள் காப்புக்கட்டிக் கொள்ளாமலும் கையில் செங்கொடியுடன் பெரியார் வாழ்க! சூழ்ச்சி ஒழிக! என்ற சப்தத்தோடு அக்கினியில் இறங்கி இது பக்தியல்ல என்று வெளிப்படுத்தினார்கள்.மேற்படி கோயில் தர்மகர்த்தா அனுமதி கொடுத்தால் ஒவ்வொரு வருடமும் முன்னணியில் இறங்க தயாராக இருக்கிறோம் என்றும் சொல்லுகிறார்கள்.இவ்விழாவினால் ஏற்படும் உடையார்...

  Read more

 • மூடநம்பிக்கை முறியடிக்கப்பட்டது
  16.05.1946 இல் திண்டிவனம் தாலுக்கா கோவடி கிராமத்தில் நடந்த அய்யனாரப்பன் திருவிழாவில், கிராமத்திலுள்ள பெரியவர்களும் வாலிபர்களும் திராவிடர் கழகத் தோழர்களை, அய்யனாரப்பனுக்கு ஒரு கரகம் ஜோடிப்பதாகவும், தெய்வங்களின்  கதைகள் வெறும் புனைந்துரை எனக் கூறும் நீங்கள் உங்களில் யாராவது மேற்படி கரகத்தைத் தூக்கிக்கொண்டு ஊரைச்சுற்றி கொண்டுவந்து இறக்கிவிடுங்கள் என்று பிடிவாதம் செய்து கேட்டதினால், நமது இயக்கத் தோழரும் திண்டிவம் தாலுக்கா திராவிடர் கழக செயற்குழு உறுப்பினருமான என்.சேதுராமன் அவர்கள் அந்தக்...

  Read more

 • வீரர்கள் கல்நாட்டு விழா
  அருமைத் தோழர்களே, தாய்மார்களே!
  நான் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கும் கட்டிடத்தின் ஞாபகத்திற்குரிய இரு வீரர்களான தோழர்கள் ல. நடராசன், வெ. தாளமுத்து ஆகியவர்களின் சேவையையும் உணர்ச்சியையும் தமிழர்கள் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்த்தால் அவர்களின் சுயநலமற்ற தியாகம் தெற்றென விளங்கும். அவ்வித புகழுக்குரிய வீரர்களின் ஞாபகார்த்த கட்டிடத்தை நாம் இங்கு கட்டுவது அவர்களுக்கு ஏதோ பிரமாதமாக நாம் செய்ததாகவல்லது. அதற்குப் பதிலாக அவ்வீரர்களின் தியாகத்தை  நாம் பின்பற்றி நம் நாட்டின் விடுதலைக்காக...

  Read more

 • பார்ப்பனருக்கும் ரயில்வேகாரருக்கும் ஒப்பந்தமா?
   
  நம் நாட்டில் சுதந்தரமும் சுயமரியாதையும் சொந்த அரசியலும் ஆரியர்கள் என்னும் பார்ப்பனர்களால் அழிந்து போனதல்லாமல் மனித சமூகம் வஞ்சக மதத்துக்கும் ஒழுக்கமும் நீதியும் அற்ற கடவுளுக்கும் முட்டாள்தனமும் பித்தலாட்டமும் நிறைந்த மூடநம்பிக்கைக்கும் அடிமைப்பட்டு பெருவாரியான மக்கள் ஒரு வெகு சிறுபான்மையான வன்னெஞ்ச வஞ்சகர்களுக்கு ஆளாகி இன்னல் படுவதும் மிருகங்களிலும் மலத்திலும் கேவலமாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திலிருப்பதும் தமிழ் நாட்டுச் சரித்திரம் அறிந்த எவரும் மறுக்க மாட்டார்கள். இம் மாதிரியான நிலைமை...

  Read more

தோழர்களே! இந்தியாவைவிட்டுப் பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு விலகப் போகிறதா இல்லையா? அது காந்தி கோஷ்டியார், பிரிட்டிஷ் தூது கோஷ்டியார் பேசிக் கொள்ளும் இரகசியப் பேச்சின் தத்துவத்தைப் பொறுத்தது.

காங்கிரசார் பதவி ஏற்ற இந்த காலத்தில் மக்களுக்காவது ஒரு சமரச முடிவு இல்லையானால் நாடு சீரழியப் போவது நிச்சயம். இதனால் பிரிட்டிஷ்காரருக்கு நஷ்டமில்லை. அவர்கள் ஆதிக்கம் இன்னும் பல நாளைக்கு பலப்படத்தான் இடமாகும். ஆரியர்களுக்கும் கஷ்டமில்லை. ஆரியர் பிரிட்டிஷாருடன் இன்னும் பலமான ஒப்பந்தம் செய்து கொள்ளுவர். காந்தியாருக்கும் குறைவு வராது. அவர் அவதாரக் கடவுள்தன்மை மாறி உண்மைக் கடவுளாகிவிடுவார். தொல்லைப் படப்போவது நாம் தான். முஸ்லிம், திராவிடர், ஷெட்யூல் வகுப்பார் ஆகியவர்களும், இக்கூட்டத்தில் உள்ள ஏழை, எளியவர், தொழிலான கூலியாட்கள் ஆகிய பாட்டாளி மக்களும் தான் - அதோடு மாத்திரமல்ல நம் கடமைகளும் இன்றைய மந்திரி (ஆரிய) அதிகாரத்தை ஒழித்து முன்போலவே (டெலிவரன்ஸ்) விடுதலை நாள் கொண்டாடவேண்டியதே ஆகும். இந்த முயற்சிக்கு முன்போல் நம்மில் 1000, 2000 பேர் செல்வதாலோ, இருவர், மூவர் இறப்பதாலோ ஆகக்கூடிய காரியமாயிராது. ஏராளமான மக்கள் ஈடுபடவேண்டி இருக்கும்.

கண்டிப்பாக இந்து முஸ்லிம் இரத்தம் சிந்துதலும், மேல்ஜாதி, கீழ்ஜாதி இரத்தம் சிந்துதல், சோம்பேறிபாட்டாளி ரத்தம் சிந்துதலும், முதலாளி தொழிலாளி இரத்தம் சிந்துதலும் நடந்துதான் தீரும். இப்போதே எங்கும் தொழிலாளிகள் ஸ்ட்ரைக், ரயில்வே சிப்பந்திகள் தபால் சிப்பந்திகள் ஸ்ட்ரைக், போலிசார் ஸ்ட்ரைக், கணக்குப் பிள்ளை பட்டா மணியக்காரர்கள் ஸ்ட்ரைக் என்பவைகள் உற்சாடனம் பெருகுகின்றன. இனி இராணுவத்தினர் ஸ்ட்ரைக்கும் ஏற்பாடாகக்கூடும். இப்படி ஆகுமா னால் நம் நிலை என்ன ஆகும்? பார்ப்பனர்கள் இவ்வளவுக்கும் இப்போதிருந்தே பந்தோபஸ்தாக இருக்க முயலுகிறார்கள். இரு கட்சியிலும் அதாவது ஸ்ட்ரைக்கிலும், சர்க்காரிலும் சரிபாதியாய் கலந்து அமைந்துவிட்டார்கள். நமக்கு சாந்தியோ, சமாதானமோ இல்லாமல் நாம் ஒருவரை ஒருவர் துன்பப்படுத்திக் கொள்ளப் போகிறவர்களாக ஆவோம்.

உண்மையில் நான் திராவிடத் தோழர்களை அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும், இந்து - முஸ்லிம் கலவரத்தில் கட்சிப் பிணக்கில் அவர்களுக்கு ஏன் சம்பந்தமிருக்கவேண்டும்? அதுவும் ஆரியனும் முஸ்லிமும் செய்துகொள்ளும் போராட்டத்தில் திராவிடன் ஏன் கலக்கவேண்டும் என்கிறேன்.

இன்றைய அரசியல் போராட்டம் என்பது என்ன? இந்தியன் - வெள்ளையன் போராட்டமா? இல்லையே? காந்தியாரே சொல்லிவிட்டாரே பிரிட்டிஷார் நல்லவர்கள், நல்லெண்ணமுடையவர்கள், அவர்கள் நல்லெண்ண விஷயத்தில் சந்தேகப்படாதீர்கள் என்று அதுவும் பிரார்த்தனையில் சொல்லிவிட்டாரே. இது கடவுள் அனுமதியின் பேரில் சொல்லப்பட்டதாகத்தான் இருக்கமுடியும். ஆகவே, இன்றைய இந்தியப் பிரச்சனை சுயராஜ்யப் பிரச்சனை அல்லவே, சுதந்திரப் பிரச்சனை அல்லவே, ஆங்கிலேய அன்னியன் பிரச்சனை அல்லவே, இந்து, முஸ்லிம் பிரச்சனையாகத்தானே ஆகிவிட்டது. இப்போது இந்துக்களுக்கு முஸ்லிம் அன்னியனாகவும், முஸ்லிமுக்கு இந்து அன்னியனாகவும்தானே காணப்படுகிறான். இந்து, முஸ்லிம் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதும், முஸ்லிம், இந்து ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதும், இந்து மதம் காப்பாற்றப்படுவதும், இஸ்லாம் காப்பாற்றப்படுவதுந்தானே இன்று சுதந்திரப் போராக ஆகிவிட்டது.

இந்தப் பிரச்சினையில் தான் பிரிட்டிஷ் தூது கோஷ்டி தோல்வி அடைவதாக இருக்கிறதே அல்லாமல் வெள்ளையன் வெளியேறுவதில், வீட்டைவிட்டுப் போகிற அல்லது எடுத்துக் கொண்ட போகிற சாமான்கள் பற்றிய தகராறு இருந்துவருகிறதா என்று யோசித்துப்பாருங்கள். நேற்றே காங்கிரஸ் பத்திரிகைகள் எழுதிவிட்டன. என்னவென்றால் முஸ்லிம் ஆட்சியைவிட “வேவல் ஆட்சியே மேல்” என்று எழுதிவிட்டன. இந்தக் கருத்தின்மீது தானே ஆரியர்கள் முன் காலத்தில் நல்ல கெட்டியான முஸ்லிம் ஆட்சி இருக்கும்போது வேவல் (ஆங்கில) ஆட்சியை இங்கே அழைத்து வந்து தங்களுக்கு ஏற்றபடியான மனு ஆட்சியாக அமைத்துக் கொண்டார்கள் (என்று சரித்திரம் கூறுகிறது). இந்த நிலையில் இன்று இந்திய சுயராஜ்யப் பிரச்சனை மாநாடு முறிவது என்பது முஸ்லிம் ஆதிக்கம் இல்லாமல் இருக்கவும், வேவல் (ஆங்கில) ஆட்சியை நிலைநிறுத்தவும் அல்லாமல் வேறு என்ன காரியத்திற்கு?

காங்கிரஸ் கொள்கையோடு அது உண்மையாக இருந்தாலும் பித்தலாட்டமாக இருந்தாலும் எங்களுக்கு இன்று சண்டை இல்லை. அவைகளை வேண்டுமானலும் நாம் ஒப்புக் கொள்ளுவோம். உண்மை சொல்லுகிறேன். ஆனால் நாம் காங்கிரஸ் கொள்கைக்கு மேற்கொண்டும் இரண்டொரு திட்டம் வைத்து இருக்கிறோம். அதற்கு என்ன செய்வது? அதைக் காங்கிரஸ் திராவிடர்களாவது ஒப்புக்கொண்டால் போதுமே. அதற்கு ஒத்துழைக்கக் காங்கிரஸ் திராவிடர்கள் தலையாட்டினாலும் போதுமே, திராவிடர் கழகத்தை கலைத்துவிட்டு காங்கிரசையே பலப்படுத்தத் தயங்கமாட்டோம்.

காங்கிரசுக்கும் நமக்கும் என்ன பேதம்?

 • 1. ஆரியன், திராவிடரை அடக்கி அனுப்பி வைப்பதை, மனு ஆட்சி புரிவதைச் சுயராஜ்யம், தர்மராஜ்யம், ராமராஜ்யம் என்கின்றான்.

திராவிடன் ஆரிய ஆதிக்கத்தில் இருந்து மீண்டு தனித்தன்மை பெறுவதை சுயராஜ்யம் என்கிறான்.

 • 2. காங்கிரஸ் அன்னியன் ஆதிக்கத்தில் இருந்து விலக வேண்டும் என்கின்றது.

நாமும், ஆம் அது சரி, அதுதான் முதல்வேலை என்கிறோம். ஆனால், அன்னியர் என்கின்ற பட்டியலில் திராவிடனல்லாதான் எவனும் அன்னியன் என்று விளக்கம் எழுதிக்கொள் என்கிறோம்.

 • 3. காங்கிரஸ், அன்னியன் சுரண்டுதல்கூடாது என்கிறது.

நாம், ஆம் கூடாது என்கிறோம். ஆனால், அன்னியன் என்கிறபடியால் அயல் மாகாணத்தவனும் அன்னியன் என்று எழுதிக்கொள் என்கிறோம்.

 • 4. நம் நாடு பாரத நாடு என்கிறது காங்கிரஸ்

 நாம், நம் நாடு திராவிட நாடு என்கிறோம்.

 • 5. ஆங்கிலேயன் தவிர மற்றபடி இந்தியன் என்ற பெயரால் எவன் பிழைத்தாலும் எவன் திராவிட நாட்டைக் கொள்ளைகொண்டாலும் சரி என்கிறது காங்கிரஸ்.

நாம், திராவிட நாட்டைத் திராவிடத்தில் நிரந்தரமாய் வாழும் திராவிட நாட்டுக் குடிகள் தவிர, பிர்லா, பஜாஜ், காந்தி, நேரு, பட்டேல், பட்டாணி, குஜராத்தி, மார்வாடி, பனியா, சிந்தி, காஷ்மீரி, பட்டான், மேமன், எல்லைப்புறக்காரன் எவரும் சுரண்டக்கூடாது என்கிறோம்.

 • 6. இந்தியாவில் திராவிடம் உள்ளடங்கியது என்கிறது காங்கிரஸ்.

இந்தியா வேறு, திராவிட நாடு வேறு என்று பிரிக்கப்பட வேண்டியது திராவிடத்தை என்கிறோம்.

 • 7. இந்தியன் மட்ட ஜாதியல்ல, வெள்ளையன் உயர்ந்த ஜாதி அல்ல. இருவருக்கும் சமஉரிமை வேண்டும் என்கிறது காங்கிரஸ்.

ஆம். இருவருக்கு மாத்திரமல்ல, மூவருக்கும் அதாவது திராவிடன், ஆரியன், வெள்ளையன் ஆகிய மூவருக்கும் சமஉரிமை வேண்டும். திராவிடன் சூத்திரனல்லன், பறையன் அல்லன், தீண்டப்படாதவன் அல்லன். ஆரியன் பிராமணன் அல்லன். மேல்ஜாதி அல்லன், பூதேவன் அல்லன், சமஉரிமையில், சம விகிதாச்சாரத்தில் சமபோகபோக்கியத்தில் சமஉழைப்பில் இருக்கவேண்டிய மக்கள் என்கிறது திராவிடர் கழகம்.

8.இந்தியா முழுமைக்கும் ஒரு சுயராஜ்யம் போதும் என்கிறது காங்கிரஸ்.

பிரிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி சுயராஜ்யம் வேண்டும். மற்றதைப் பற்றி யோசிக்காவிட்டாலும் திராவிட (சென்னை) மாகாணத்தைப் பொறுத்தவரைத் தனி சுயராஜ்யம் ஏற்படுத்த வேண்டும் என்கிறது திராவிடர் கழகம்.

இவைகளைத்தானே முக்கியமாக எடுத்துச்சொல்லிப் பரிகாரம் செய்யும்படி கோருகிறது இவைகளைப் கேட்பது எப்படிக் காங்கிரஸ் தேசபக்தர்களுக்கு தேசத் துரோகமாகும்? இவைகள் கேட்கப்படுவதால் எப்படிக் கிடைக்கப்போகும் சுயராஜ்யம் தடைபட்டுப்போகும் என்று கேட்கிறேன்.

நாங்கள் கேட்பவைகளுக்கு, சொல்லுபவைகளுக்கு ஆதாரம், அவசியம் பிரத்யட்ச அனுபவம், பொருத்தம் இல்லை என்று எந்தக் காங்கிரஸ் பக்தராவது சொல்லட்டுமே. ஜின்னா பிரிவினை கேட்டால் அவர் தேசத்துரோகி, முட்டுக் கட்டைவாதி, அம்பேத்கர் மனிதத்தன்மை, சமஉரிமை கேட்டால் அவர் தேசத்துரோகி, முட்டுக்கட்டைவாதி, கம்யூனிஸ்டுகள் பொருளாதார சமஉரிமை கேட்டால் அவர்கள் ஒழிக்கப்படவேண்டிய இழிமக்கள். திராவிடர்கள் பாதுகாப்பு சமுதாய உரிமை கேட்டால் அவர்கள் தேசத்துரோகிகள், முட்டுக்கட்டைவாதிகள் என்று அழைக்கப்படுவதும், கலகம், குழப்பம் கல்வீச்சு, சாணி உருண்டை வீச்சு, மிருகக் கூப்பாடு, காலித்தனம் ஆகியவைகளும்தானா பரிகாரம் என்று கேட்கிறேன். தோழர்களே! கலகத்தில், காலித்தனத்தில் ஆரியன் எவனாவது சிக்கிக்கொள்கிறானா? திராவிடன் கையில் சாணி உருண்டையையும் கல்லையும் கொடுத்து திராவிடன் மீதே எறியச் சொல்லிவிட்டு மறைவில் இருந்து வேடிக்கைப் பார்க்கிறானே. இதுவா விடுதலை முயற்சி? எனவே எங்களிடம் காங்கிரஸ் திராவிடர்கள் சந்தேகம் கொள்ளவேண்டிய தில்லை. எங்கள் முயற்சி வெற்றிபெற்றால் காங்கிரஸ் திராவிடர்களுக்கும் பங்குண்டு. அம்பேத்கர் முயற்சி வெற்றிபெற்றால் காங்கிரஸ் திராவிடருக்கும் பங்குண்டு. காங்கிரஸ் முயற்சி வெற்றிபெற்றால் எங்களுக்கு என்ன உண்டு? சூத்திரப்பட்டம் போகுமா? பஞ்சமப்பட்டம் போகுமா? மனுசாஸ்திரம் ஒழியுமா? சமுதாயத்திலாவது சமயத்திலாவது சர்வத்திலும் தீண்டாமை அண்டாமை, நுழையாமை, படியாமை, பதவிகிட்டாமை ஆகியவை ஒழிந்து யாவரும் சம தொண்டாற்றும் தன்மை ஏற்படுமா? சொல்லுங்கள் நாளையே சேருகிறோம். இத்தனை நாள் சேராததற்கு வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்.

காங்கிரஸ் திராவிடத் தோழர்களே! இளைஞர்களே! ஏமார்ந்து போகாதீர்கள்! ஆரியருக்கு கால்பிடித்து வாலிபத்தை வீணாகக் கழிக்காதீர்கள். நாங்கள் ஏமாந்து உஷார் ஆனவர்கள். நானும் காங்கிரஸ்கொடி தூக்கித் திரிந்தவன்தான். கதர் கட்டினவன் மாத்திரமல்ல, ராட்டினம் சுமந்து நூற்று , நெய்து ஊரெல்லாம் தலையில் சுமந்து விற்றவன். ஜின்னா சாயபு யார்? காங்கிரஸ் வாலண்டியர், கொடி தூக்கி “ஜே” போட்டவர். மகமது அலி, சவுகத் அலி கொடி தூக்கி “ஜே” போட்டவர்கள். டாக்டர் நாயர், தியாகராயர் காங்கிரஸ் தலைவர், காரியதரிசி, பொக்கிஷதாரர்களாக இருந்தவர்கள். எனவே, எங்கள் அனுபவம் உங்களுக்குப் போதாதா? நீங்கள் அனுபவம் பெற எங்களைப்போல ஆகுங்காலத்தில் உங்களால் தனியே நிற்க முடியாது. மற்றவர்கள்போல் அஞ்ஞாதவாசம் செய்யவேண்டியவர்களாகி விடுவீர்கள்: நல்ல திராவிடராகப் பிறந்து ஏன் விபீஷணர்களாக ஆகிறீர்கள்? பதவிக்கு, பட்டத்துக்கு, பணத்துக்கு இருப்பவர்கள் அங்கு இருக்கட்டும். விட்டுவிடுங்கள். அவர்களைப்போல் அப்படி ஒரு கூட்டம் உலகம் தோன்றிய நாள்தொட்டு திராவிடரிலும் இருந்துதான் வந்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தில் தியாக வீரர்களான திராவிட மணிகளே நீங்கள் சேரவேண்டாம் வீணுக்குழைக்காதீர்கள். மாற்றானுக்கு மண்டி இடாதீர்கள் என்றுதான் விண்ணப்பித்துக் கொள்ளுகிறேன். சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!! மான லட்சியம் வைத்து சிந்தியுங்கள்!!!

(12.06.1946, 13.06.1946 ஆகிய நாட்களில் பள்ளிக் கொண்டை மற்றும் வேலூர் பொதுக்கூட்டங்களில் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு - சொற்பொழிவு - 22.06.1946

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: