• abolish-caste-1.jpg
  • abolish-caste-2.jpg
  • abolish-caste-3.jpg
  • periyar1.jpg

சாதி ஒழிப்பு

கடைசிப் பதிவேற்றம்

  • Last Modified: Wednesday 20 November 2019, 22:22:42.

தேசியம் - தேசிய இனம்

  • திராவிடரும் - தமிழரும்
    நாடு பிரிவினைக் கமிட்டி அறிக்கையைப் பார்த்தேன். இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிக்கை பற்றிய சேதிகளின் சுருக்கம் ஒருவாறு எனக்குத் தெரியவந்தது. பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால்...

    Read more

  • ‘தேசியம்’ ஓர் முட்டுக்கட்டையே
    தேசீய இயக்கம் சென்ற வாரம் சுயமரியாதை இயக்கம் என்னும் தலைப்புக்கொடுத்து, அவ்வியக்கத்தின் கொள்கைகளைப் பற்றியும், திட்டங்களைப் பற்றியும், அதன் நிலையைப் பற்றியும், செல்வாக்கைப் பற்றியும், இதுவரை அது செய்திருக்கும் வேலையைப் பற்றியும் ஒருவாறு குறிப்பிட்டிருந்தோம். இவ்வாரம் தேசீய இயக்கம் என்னும் தலைப்புப் பெயர் கொடுத்து அதன் கொள்கை, திட்டம், நிலைமை,...

    Read more

  • இலங்கை உபன்யாசம் - தேசம், தேசீயம் ஒரு போலி உணர்ச்சி
      அன்புள்ள தலைவரே! வீரமும், எழுச்சியும், சுயமரியாதை உணர்ச்சி யும் உள்ள வாலிபர்களே!! தலைவரின் முன்னுரையிலும், உபசாரப் பத்திரங்களிலும், மற்றும் பேசியவர்களும் அளவுக்கு மீறி என்னைப் பற்றியும், எனது சிறு தொண்டைப் பற்றியும் புகழ்ந்து கூறி இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட புகழ்ச்சிகளுக்கு நான் சிறிதும் தகுதியுடையேன் அல்லன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கி...

    Read more

  • தேசீயப் பைத்தியம்
      தேசீயம் என்பது ஒரு பித்தலாட்டம் என்பதையும், அது சுயநலவாதி களின் வயிற்றுப்பிழைப்புக்குத் துணைபுரியும் வார்த்தை என்பதையும், நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் நாம் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம். தேசீயவாதியாக இருக்கின்ற ஒருவன் எச்சமயத்திலும் யோக்கியப் பொறுப்பு டன் நடந்துகொள்ள முடியாது. சமயத்திற்குத் தகுந்த வேஷங்களைப் போட்டுக்கொண்டு பாமர மக்களை...

    Read more

  • ஆந்திரர் தமிழர் என்று பிரிக்கப்பார்ப்பது
      ஜஸ்டிஸ்  கட்சியிலிருந்து  நம்பிக்கை  இல்லாத்  தீர்மானத்தின்  காரணமாய்  வெளியேறி  விட்ட  தோழர்  குமாரராஜா  அவர்களுக்காக  குமாரராஜா  அவர்களை  ஆதரிக்க  ஆசைப்பட்டவர்களோ  அல்லது  அவரிடம்  கூலிபெற்றவர்களோ  ஜஸ்டிஸ்  கட்சியைத்  தாக்க  இதுசமயம்  தங்களுக்கு  வேறு  எவ்வித  கதியும்  இல்லாமல்  நிற்கதியாயிருப்பதை  முன்னிட்டு  மிக  இழிவான  மார்க்கத்தைக்  கைக்கொள்ளத்  துணிந்து  விட்டார்கள். ...

    Read more

பொதுவுடைமை

  • சின்னாளப்பட்டியில் பொதுக்கூட்டம்
    16.01.1946 மாலை 4:00 மணிக்குத் தனிக்காரில் பெரியாரவர்களும் மற்றும் பலரும் சின்னாளப்பட்டி வந்து சேர்ந்தனர். உடனே ஒரு மாபெரும் ஊர்வலம் புறப்பட்டு முக்கிய தெருக்களின் வழியாகச் சென்றது. வழி நெடுக மலர் மால...

    Read more

    கோவை மாவட்டதிராவிடர் மாநாடு
    நம்மியக்கம் இப்பொழுது எல்லாத் திராவிடத் தோழர்களாலும் பல்துறையிலும் பலப்படுத்தப்பட்டு வருகிறதென்றும், தேசியத் தோழர்கள் “தங்கள் தியாகத்தை”க் காட்ட வேண்டுமானால் மந்திரிகளாக முடியும். ஆனால் திராவிடர் க...

    Read more

    திருமண அழைப்பு
    திருமணம் முதலாகிய சமுதாய சடங்குகளுக்குப் பெரியார் ஈ.வெ.ரா. இனி அழைக்குமிடங்களுக்கு எல்லாம் போக வசதி இல்லை என்றும், அப்படி போவதானால் இயக்க வேலைகள் குந்தகப்படுகிறதென்றும், இயக்கத் தோழர்களும் உடல் நலம...

    Read more

    சிலை வணக்கமும் திராவிடர் கழகமும்
    “விக்ரக ஆராதனை (சிலை வணக்கம்)யைக் கண்டித்துத் தாங்களும் இயக்கத் தோழர்களும், அடிக்கடி பேசியும் எழுதியும் வருகிறீர்கள். திராவிடர் கழகம் ஒரு அரசியல் கட்சி இயக்கம். சுயமரியாதை இயக்கத்தைப் போல் வெறும் சம...

    Read more

    எது தேசத் துரோகம்?
    தோழர்களே! இந்தியாவைவிட்டுப் பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு விலகப் போகிறதா இல்லையா? அது காந்தி கோஷ்டியார், பிரிட்டிஷ் தூது கோஷ்டியார் பேசிக் கொள்ளும் இரகசியப் பேச்சின் தத்துவத்தைப் பொறுத்தது. காங்கிர...

    Read more

  • கடவுளின் கருணையே கருணை!
    மழையில்லை, அரிசி இல்லை என்று மக்கள் திண்டாடுகிறார்கள். ஆனால், அதன் பேராலும் பார்ப்பனர்கள் வயிறு புடைக்கிறது. மழைக்காக வருண ஜபம் செய்வதாகக் கூறிக் கொண்டு கண்ட கண்ட இடங்களில் இருக்கும் பார்ப்பனர்கள் வ...

    Read more

    மந்திரிசபையில் கெட்ட புத்தி தோற்றம்
    சென்னை மந்திரிசபை தனது நிஜமான நிறத்தோடு வெளிக்கிளம்ப துணிந்து முன் வந்து விட்டதாகத் தெரிகிறது. இன்றைய அரசியல் கொள்கையில் காங்கிரசுக்கும் இம்மாகாண பார்ப்பனரல்லாத மக்கள் என்பவர்களுக்கும் இதுவரை இருந்...

    Read more

    பூதேவர்களின் விஷமப்பிரசாரக் கோஷ்டியார்களின் தேவ பாதுகாப்பு மாநாடு
    சித்திரபுத்திரன் தேசிய பத்திரிகை நகரத்தில், பார்ப்பன நிருபர்கள் பந்தலில், பூதேவர்கள் கழகச் சார்பில் விஷமப் பிரசார கோஷ்டிப் படையின் சதியாலோசனை மாநாடு நடவடிக்கைகள். விஷயாலோசனைக் கூட்டம் தலைவர்...

    Read more

    “வெற்றி நம்முடையதுதான்”
    நம் கழகச் சார்பாக சென்ற மாதம் இரு கூட்டங்கள் நடந்தன. அதற்குப் பிறகு பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. 1. சென்னை மந்திரிசபை அமைப்பு 2. இங்கிலாந்து தூது கோஷ்டி தோல்வி 3. மதுரை கலவரம் முதலிய காரியங்களாகு...

    Read more

    சர்.ஏ.பி. பாத்ரோ மறைவு
    ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்துவரும், 1921ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் கட்சி ஆட்சி செய்தபொழுது கல்வி, மராமத்து இலாகா மந்திரியாகயிருந்து சென்னை யுனிவர்சிட்டி சட்டத்தில் சீர்திருத்தம் செய்தவ...

    Read more

Periyar in English

  • சின்னாளப்பட்டியில் பொதுக்கூட்டம்
    16.01.1946 மாலை 4:00 மணிக்குத் தனிக்காரில் பெரியாரவர்களும் மற்றும் பலரும் சின்னாளப்பட்டி வந்து சேர்ந்தனர். உடனே ஒரு மாபெரும் ஊர்வலம் புறப்பட்டு முக்கிய தெருக்களின் வழியாகச் சென்றது. வழி நெடுக மலர் மால...

    Read more

    கோவை மாவட்டதிராவிடர் மாநாடு
    நம்மியக்கம் இப்பொழுது எல்லாத் திராவிடத் தோழர்களாலும் பல்துறையிலும் பலப்படுத்தப்பட்டு வருகிறதென்றும், தேசியத் தோழர்கள் “தங்கள் தியாகத்தை”க் காட்ட வேண்டுமானால் மந்திரிகளாக முடியும். ஆனால் திராவிடர் க...

    Read more

    திருமண அழைப்பு
    திருமணம் முதலாகிய சமுதாய சடங்குகளுக்குப் பெரியார் ஈ.வெ.ரா. இனி அழைக்குமிடங்களுக்கு எல்லாம் போக வசதி இல்லை என்றும், அப்படி போவதானால் இயக்க வேலைகள் குந்தகப்படுகிறதென்றும், இயக்கத் தோழர்களும் உடல் நலம...

    Read more

    சிலை வணக்கமும் திராவிடர் கழகமும்
    “விக்ரக ஆராதனை (சிலை வணக்கம்)யைக் கண்டித்துத் தாங்களும் இயக்கத் தோழர்களும், அடிக்கடி பேசியும் எழுதியும் வருகிறீர்கள். திராவிடர் கழகம் ஒரு அரசியல் கட்சி இயக்கம். சுயமரியாதை இயக்கத்தைப் போல் வெறும் சம...

    Read more

    எது தேசத் துரோகம்?
    தோழர்களே! இந்தியாவைவிட்டுப் பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு விலகப் போகிறதா இல்லையா? அது காந்தி கோஷ்டியார், பிரிட்டிஷ் தூது கோஷ்டியார் பேசிக் கொள்ளும் இரகசியப் பேச்சின் தத்துவத்தைப் பொறுத்தது. காங்கிர...

    Read more

  • கடவுளின் கருணையே கருணை!
    மழையில்லை, அரிசி இல்லை என்று மக்கள் திண்டாடுகிறார்கள். ஆனால், அதன் பேராலும் பார்ப்பனர்கள் வயிறு புடைக்கிறது. மழைக்காக வருண ஜபம் செய்வதாகக் கூறிக் கொண்டு கண்ட கண்ட இடங்களில் இருக்கும் பார்ப்பனர்கள் வ...

    Read more

    மந்திரிசபையில் கெட்ட புத்தி தோற்றம்
    சென்னை மந்திரிசபை தனது நிஜமான நிறத்தோடு வெளிக்கிளம்ப துணிந்து முன் வந்து விட்டதாகத் தெரிகிறது. இன்றைய அரசியல் கொள்கையில் காங்கிரசுக்கும் இம்மாகாண பார்ப்பனரல்லாத மக்கள் என்பவர்களுக்கும் இதுவரை இருந்...

    Read more

    பூதேவர்களின் விஷமப்பிரசாரக் கோஷ்டியார்களின் தேவ பாதுகாப்பு மாநாடு
    சித்திரபுத்திரன் தேசிய பத்திரிகை நகரத்தில், பார்ப்பன நிருபர்கள் பந்தலில், பூதேவர்கள் கழகச் சார்பில் விஷமப் பிரசார கோஷ்டிப் படையின் சதியாலோசனை மாநாடு நடவடிக்கைகள். விஷயாலோசனைக் கூட்டம் தலைவர்...

    Read more

    “வெற்றி நம்முடையதுதான்”
    நம் கழகச் சார்பாக சென்ற மாதம் இரு கூட்டங்கள் நடந்தன. அதற்குப் பிறகு பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. 1. சென்னை மந்திரிசபை அமைப்பு 2. இங்கிலாந்து தூது கோஷ்டி தோல்வி 3. மதுரை கலவரம் முதலிய காரியங்களாகு...

    Read more

    சர்.ஏ.பி. பாத்ரோ மறைவு
    ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்துவரும், 1921ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் கட்சி ஆட்சி செய்தபொழுது கல்வி, மராமத்து இலாகா மந்திரியாகயிருந்து சென்னை யுனிவர்சிட்டி சட்டத்தில் சீர்திருத்தம் செய்தவ...

    Read more

பகுத்தறிவு

  • தீ மிதித்தல் ஏமாற்று வித்தை
    12.03.1946 இல் நடைபெற்ற கரூர் காமாட்சியம்மன் திருவிழாவில் ஆச்சாரத்தோடு, அம்மையிடம் பக்தியாய், ஆண்டவன் அருள் கொண்டு ஆஸ்திகர்கள் நெருப்புக் குழியில் தீ மிதிக்க இறங்கிய பொழுது தீ மிதித்தல் ஏமாற்று வித்தை என்பதை நிரூபிக்க கறுப்புச் சட்டைப் படை இளைஞர்கள் 6 பேர் கறுப்புச் சட்டையணிந்து ஆச்சாரம், பக்தி, அருள் ஒன்றும் இல்லாமலே தாமும் அவர்களுடன் தீ மிதித்து ஏறினர். இனி இம்மாதிரி ஏமாற்று வித்தைகள்  பலிக்காது என ஆஸ்திகர்கள்...

    Read more

  • தீமிதித்தல் பக்தியினாலா?
    துறையூரில் நடந்த திரவுபதி அம்மன் விழாவில் கடைசி நாளாகிய 4.8.44  ஆம் தேதியன்று அக்கினியில் இறங்கியதில் நமது இயக்க அன்பர்கள் வை. நடேசன், து.வீ. நாராயணன் முதலியவர்கள் காப்புக்கட்டிக் கொள்ளாமலும் கையில் செங்கொடியுடன் பெரியார் வாழ்க! சூழ்ச்சி ஒழிக! என்ற சப்தத்தோடு அக்கினியில் இறங்கி இது பக்தியல்ல என்று வெளிப்படுத்தினார்கள்.மேற்படி கோயில் தர்மகர்த்தா அனுமதி கொடுத்தால் ஒவ்வொரு வருடமும் முன்னணியில் இறங்க தயாராக இருக்கிறோம் என்றும் சொல்லுகிறார்கள்.இவ்விழாவினால் ஏற்படும் உடையார்...

    Read more

  • மூடநம்பிக்கை முறியடிக்கப்பட்டது
    16.05.1946 இல் திண்டிவனம் தாலுக்கா கோவடி கிராமத்தில் நடந்த அய்யனாரப்பன் திருவிழாவில், கிராமத்திலுள்ள பெரியவர்களும் வாலிபர்களும் திராவிடர் கழகத் தோழர்களை, அய்யனாரப்பனுக்கு ஒரு கரகம் ஜோடிப்பதாகவும், தெய்வங்களின்  கதைகள் வெறும் புனைந்துரை எனக் கூறும் நீங்கள் உங்களில் யாராவது மேற்படி கரகத்தைத் தூக்கிக்கொண்டு ஊரைச்சுற்றி கொண்டுவந்து இறக்கிவிடுங்கள் என்று பிடிவாதம் செய்து கேட்டதினால், நமது இயக்கத் தோழரும் திண்டிவம் தாலுக்கா திராவிடர் கழக செயற்குழு உறுப்பினருமான என்.சேதுராமன் அவர்கள் அந்தக்...

    Read more

  • வீரர்கள் கல்நாட்டு விழா
    அருமைத் தோழர்களே, தாய்மார்களே!
    நான் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கும் கட்டிடத்தின் ஞாபகத்திற்குரிய இரு வீரர்களான தோழர்கள் ல. நடராசன், வெ. தாளமுத்து ஆகியவர்களின் சேவையையும் உணர்ச்சியையும் தமிழர்கள் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்த்தால் அவர்களின் சுயநலமற்ற தியாகம் தெற்றென விளங்கும். அவ்வித புகழுக்குரிய வீரர்களின் ஞாபகார்த்த கட்டிடத்தை நாம் இங்கு கட்டுவது அவர்களுக்கு ஏதோ பிரமாதமாக நாம் செய்ததாகவல்லது. அதற்குப் பதிலாக அவ்வீரர்களின் தியாகத்தை  நாம் பின்பற்றி நம் நாட்டின் விடுதலைக்காக...

    Read more

  • பார்ப்பனருக்கும் ரயில்வேகாரருக்கும் ஒப்பந்தமா?
     
    நம் நாட்டில் சுதந்தரமும் சுயமரியாதையும் சொந்த அரசியலும் ஆரியர்கள் என்னும் பார்ப்பனர்களால் அழிந்து போனதல்லாமல் மனித சமூகம் வஞ்சக மதத்துக்கும் ஒழுக்கமும் நீதியும் அற்ற கடவுளுக்கும் முட்டாள்தனமும் பித்தலாட்டமும் நிறைந்த மூடநம்பிக்கைக்கும் அடிமைப்பட்டு பெருவாரியான மக்கள் ஒரு வெகு சிறுபான்மையான வன்னெஞ்ச வஞ்சகர்களுக்கு ஆளாகி இன்னல் படுவதும் மிருகங்களிலும் மலத்திலும் கேவலமாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திலிருப்பதும் தமிழ் நாட்டுச் சரித்திரம் அறிந்த எவரும் மறுக்க மாட்டார்கள். இம் மாதிரியான நிலைமை...

    Read more

நம் கழகச் சார்பாக சென்ற மாதம் இரு கூட்டங்கள் நடந்தன. அதற்குப் பிறகு பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. 1. சென்னை மந்திரிசபை அமைப்பு 2. இங்கிலாந்து தூது கோஷ்டி தோல்வி 3. மதுரை கலவரம் முதலிய காரியங்களாகும். மந்திரி சபை அமைப்பு பற்றி காங்கிரஸ் தலைவர்களுக்குள் எவ்வளவு கோளாறுகள் இருந்தாலும் நமக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால் அதில் ஆந்திரர், தமிழர் என்கின்ற பாஷை உணர்ச்சியும், பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற வகுப்பு பேத உணர்ச்சியும், அந்நிய மாகாணத்தார் பிரவேசம் கூடாது என்கின்ற மாகாண உணர்ச்சியும் யார் முதல் மந்திரி, யார் சாதாரண மந்திரி என்ற பதவி வேட்டைப் போராட்டமும். காங்கிரசார் இதுவரை குறை சொல்லி வந்த மற்ற கட்சிகள் நடத்தையையே சர்வ சாதாரணமாகக் காண்கிறோம். காங்கிரஸ்காரர்கள் அல்லாமல் “தேவர்களே” வந்து மந்திரி சபை நடத்தினாலும் இந்தப் போராட்டங்கள் நடந்துதான் தீரும். இது அரசியலுக்கு இயற்கையே ஆகும். ஏனெனில் அரசியல் என்பது வடிகட்டிய சுயநலம், பித்தலாட்டம், ஆகவே எந்தப் பித்தலாட்டமும், ஏன் தெய்வீகமும் சில நாள்களுக்குத்தான் செல்லும். இது எப்படி இருந்தாலும் நமக்குக் கவலையில்லை. நம்மைப் பொறுத்தவரை நாம் இந்த மந்திரிசபையினால் நல்லது கிடைப்பதை நன்றியோடு பெற இருக்கிறோம். கேடு ஏற்பட்டால் போராடவும் பின்வாங்கப் போவதில்லை. போருக்குத் தயாராகவே இருக்கிறோம்.

இந்தி வந்தால் அனுமதிப்போம் என்று நான் சொன்னதாகச் சொல்லுகிறார்கள். அது தவறு. அதைவிட முக்கிய வேலை இருக்கிறது. வந்தால் பார்த்துக் கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள். ஏற்படுத்தி விட்டு விட்டோம் என்றுதான் சொன்னேன். மற்றும் நம் பேச்சுக்களில் பார்ப்பனர்களைக் குறைகூறியதாக சில பார்ப்பனர்கள் பேசிக் கொண்டார்களாம். அதுவும் தவறு. நாம் அவர்களைக் குறை கூறுவதே இல்லை. நம் குறைகளைப் பற்றிப் பேசினால் அது அவர்களைக் குறைகூறுவதாகக் கருதுகிறார்கள். அக்குறைகள் நீங்கும்படி சட்டம் ஏற்பட்டால் ஒழிய அல்லது அவர்கள் திருத்திக் கொண்டால் ஒழிய இந்த நிலைமை இன்னும் அதிகமாகுமே தவிர குறையப் போவதில்லை.

ஆதலால் குறையையும் காரணங்களையும் சொல்லுகிறோம். இது அவர்களைத் திட்டுவதாகாது. அவர்களையும் அதாவது, பார்ப்பனர்களையும், நம்மையும் பார்த்தால் நமக்கு இருந்துவரும் குறையும், இழிவும், அசவுகரியமும் எவ்வளவு இருக்கின்றன? இதை அவர்களில் யார் சிந்திக்கிறார்கள்? தங்களைக் குறை கூறுவதாய்க் கருதும் பார்ப்பன சமுகம் இதற்காக என்ன செய்தது? என்ன செய்கிறது? அவர்கள் எப்போதும் அதிகாரத்தில் இருப்பவர்கள், மதத்தில் பெரியவர்கள், ஆதலால் அந்த அதிகாரத்தை, மதத்தைக்கொண்டு நம்மை எவ்வளவு பாரபட்சமாகவும், இழிவாகவும் நடத்துகிறார்கள். அவர்கள் பத்திரிகை ஆதிக்கக்காரர்கள். அப்பத்திரிகைகளைக் கொண்டும் நம்மக்களை, நம் இயக்கத்தை எவ்வளவு கொடுமையாக நடத்தி இழித்துக் கூறி நம்மைத் தலையெடுக்க விடாமல் எவ்வளவு வன்நெஞ்சமாய் அக்கிரமம் செய்கிறார்கள்? நம்மையும், நம் தலைவர்களையும், நம் ஸ்தாபனங்களையும் இழிவுபடுத்திக் கடும் பழி சுமத்தி நாடெல்லாம் விஷமப் பிரசாரம் செய்கிறார்கள். மற்ற மாகாணத்தார் நம்மை இழிவாய்க் கருதுகிறார்கள். சென்னை மந்திரி சபை அமைப்பில் பிரகாசம் - ராஜகோபாலாச்சாரி கட்சி சண்டை இருந்தாலும், பிரகாசம் அவர்கள் மீது ஆச்சாரியார் கும்பலுக்கு எவ்வளவுதான் அசூயையும் ஆத்திரமும் இருந்தாலும், கட்சித் தலைவர் தேர்தலில் ஆச்சாரியார் கட்சியார், பிரகாசம் தலைவராக வரும்படியாகத்தான் நடந்து கொண்டார்களே தவிர, முத்துரங்க முதலியார் தலைவராக வருவது பார்ப்பனர்களுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை.

ஆச்சாரியார் கூட்டம் உண்மையில் பிரகாசம் கூடாது என்று நினைத்து இருந்தால் அவர் தலைவராக ஆகி இருக்க முடியாது. எனவே பார்ப்பனர்களுக்குள் தங்கள் தங்கள் தனிப்பட்ட காரியம் வரும்போது தான் தங்களுக்குள் போட்டியே ஒழிய, பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் போட்டி வரும்போது பார்ப்பனர் யாவரும் ஒன்றுதான், நாம் தான் “தனிப்பட்ட நமக்கு இல்லாவிட்டால் பார்ப்பனரே வரட்டும்” என்று விபீஷணர்களாக நடப்பவர்களாக இருந்து வருகிறோம்.

இன்றும் பார்ப்பன மந்திரிகள் 5பேர்கள் ஆகிவிட்டார்கள். இன்னும் ஒருவர் வரலாம். முக்கியமான இலாகாக்கள் பணம் கொழிக்கும் இலாகாக்கள் யாவும் அவர்கள் இடமே தஞ்சமடைந்துவிட்டன. வெறுந்தப்பட்டைகள்தான் நம்மவர்கள் இடம் அளிக்கப்பட்டு இருக்கின்றன. இப்படி இருந்தாலும் மந்திரி சபையில் காங்கிரசில் துவேஷப்புகை புகைந்து கொண்டிருக்கிறது.

இனி அடுத்தாற்போல் பிரிட்டிஷ் மந்திரி தூதுகோஷ்டி விஷயம். இது தோல்வி அடைந்ததில் அதிசயமென்ன? காங்கிரஸ்காரர்கள் (ஆரியர்கள்) ஒரு நாளும் பிரிட்டிஷாரை வெளியேற விடமாட்டார்கள்.

பிரிட்டிஷார் வெளியேறினால் இந்தியா முஸ்லிம் ராஜ்ஜியமாகிவிடும் என்கின்ற பயம் வடநாட்டுத் தலைவர்களுக்கு (ஆரியர்களுக்கு) உண்டு. ஏனெனில் முஸ்லிம்கள் ஒரே ஜாதி, கட்டுப்பாடுடைய ஜாதியாராவார்கள். அவர்கள் தவிர்த்த “இந்தியர்கள்”பல ஜாதி, கட்டுப்பாடு இல்லாத விபீஷணர்கள் ஜாதி, ஆதலால் கட்டுப்பாடுடைய ஒரு ஜாதிதான் அவர்கள் யாராய் இருந்தாலும் எவ்வளவு சில தொகையினரானாலும் இந்தியாவை ஆள முடியும். அதனால் தான் காங்கிரசார் வெள்ளையனை வெளியேற அனுமதிக்க மாட்டார்கள் என்கிறேன்.

ஆனால் “வெள்ளையனே வெளியேறு” என்று அவர்கள் மக்களை ஏமாற்றப் பித்தலாட்டத்தைச் சொல்லிக் கொண்டே வெள்ளையனோடு ஒப்பந்தம் பேசிக்கொண்டு மேல் ஜாதியாரும், பணக்காரர்களும் ஆன ஆரியர்கள் நன்றாக வாழ வழி செய்து கொள்வார்கள். இதனால்தான் தூது கோஷ்டி தோல்வி என்ற நடிப்பை நடத்தினார்களே ஒழிய உண்மையில் தோல்வி இல்லை. அது வெற்றி பெற்றிருந்தால் முஸ்லிம்களுக்குப் பகுதி ஆதிக்கம் வந்துவிடும். இதற்கு, வருணாசிரமத்திற்கும் பணக்காரர்களுக்கும் பரமபக்தரான காந்தியார் சம்மதிப்பாரா? ஆகவே, தூது கோஷ்டி தோல்வி என்பது ஆரியருக்கு வெற்றியேயாகும். இனி அடுத்தாற்போல் மதுரை சம்பவ விஷயம்.

மதுரை சம்பவம் நமக்கு மொத்தத்தில் கணக்குப் பார்த்தால் சிலர் அடிபட்டாலும் பலனில் லாபமே தவிர நட்டமில்லை. நமது இயக்கமும் கருப்புச்சட்டைப்படை அமைப்பும், இந்தியா முழுவதும் பரவி விட்டது. நமது கொள்கைகளும் இந்தியா வெங்கும் தெரிந்துவிட்டன. இது எதிர்பாராமல் நமக்குக் கிடைத்த லாபமாகும். இதில் பார்ப்பனர்கள் ஏமாந்து போய்விட்டார்கள் என்றே சொல்லலாம். நம்மில் பலருக்கு அடி உண்டு. நல்ல நஷ்டமும் உண்டு. போனால் போகட்டும். இலாபம் எவ்வளவு பெரிது பாருங்கள். உருவக் கடவுள் பேரால் அவர்கள் அடிக்கும் கொள்ளைபற்றியும் ஜாதிக் கொடுமைப்பற்றியும் நமது அப்பிராயம் என்ன? கருப்புச் சட்டைப்படை நோக்கமென்ன? திராவிடர் கழக கொள்கை என்ன? என்பவை ஒருவாறு இந்தியா பூராவும் விளம்பரம் செய்யப்பட்டுவிட்டன. இவர்கள் இப்படி செய்யாதிருந்தால் இந்தக் கொள்கை பரவுவது லேசான காரியமல்ல. இதைப் பரப்புவதற்கு ஒரு சிலர் அடி உதை பட்டால் இழிவு அல்ல.

இதற்கு ஆகவேதான் 2000 ஆண்டுகளுக்கு முன்பே புத்தர், கிறிஸ்துநாதர், முகமது நபி ஆகிய சீர்திருத்தக்காரர்கள் பாடுபட்டார்கள். ஆனால், அது நம் நாட்டில் வெற்றி பெறவில்லை. இப்போது அதையேதான் நாம் செய்கிறோம். அவர்கள் பட்ட கஷ்ட நஷ்டங்களைப் போலவே நமக்கும் கஷ்ட நஷ்டம் வந்துதான் தீரும். அதற்குப் பயப்படக் கூடாது. அப்படிப்பட்ட அந்தக் காட்டுமிராண்டி காலத்தில் அவர்கள் இந்தியா தவிர மற்ற நாடுகளில் வெற்றி பெற்று விட்டார்கள் என்றால் இந்த விஞ்ஞான காலத்தில் அதே கொள்கைகளில் அதுவும் அக்கொள்கைகளில் உலகத்தில் 200கோடி மக்கள் இருக்கும்போது நாம் ஏன் வெற்றி பெற முடியாது? மதுரை சமணர்களைக் கழுவேற்றின ஊரல்லவா? அதை ஆதரித்துக் கழுவேற்றினவர்களுக்கு முக்தி கொடுத்த சிவன் உறையும் ஊரல்லவா? அது இப்போது சிலரை கல்லால் தடியால் அடித்து, மடியில் உள்ளதைப் பிடுங்கிக் கொண்டு, போய் கொட்டகைக்குத் தீ வைப்பது மதுரைக்கு எப்படி இழிவாகும்? ஆதலால் மதுரை சம்பவம் பற்றி நாம் அதிசயப்படவோ குறைகூறவோ இடமில்லை.

ஏசு, கோவில்களைக் “கள்ளர்குகை” என்றார். புத்தர் பார்ப்பனியத்திற்கு அஸ்திவாரத்தில் வெடி வைத்தார், முகமது நபி “விக்கிரகங்களை கடவுளை பரிகாசம் செய்யும் சின்னம் ஆதலால் கண்ட கண்ட பக்கம் அதை வெறுங்கள்”என்றார், காந்தியார் கோவில்களை “குச்சுக்காரிகள் விடுதி” என்றார். மற்றும் பல பெரியார்கள் “கல்லிலும், மரத்திலும், செம்பிலும், காரையிலும் சித்திரத்திலும் கடவுள் இருப்பாரா மடையர்களே” என்றார்கள். இதைவிடவா நாம் சொல்லுகிறோம்? இவ்வளவு கூட நாம் சொல்லுவதில்லையே, இப்படியெல்லாமும் நாம் செய்வதில்லையே, அப்படிஇருக்க இந்தப் பார்ப்பனர்கள் பழி சுமத்தி நம்மை ஒழிக்கப் பார்க்கிறார்கள். மதுரை காலித்தனத்திற்கு அஸ்திவாரம், பிறப்பிடம் தோழர் வைத்தியநாத அய்யர் என்கின்ற ஒரு பார்ப்பனரின் மூளையும், பணமும், ஆத்திரமும் என்பதாக அப்போதே மக்கள் என்னிடம் சொன்னார்கள். நான் முதலில் நம்பவில்லை. பிறகு அவரே அவரது தந்திரமான நடத்தையில் அதை வெளியாக்கிக் கொண்டுவிட்டார். பிறகும் எனக்கு ஏராளமான கடிதங்கள் வந்தன. இந்தப் பார்ப்பனர், பார்ப்பனரில் யோக்கியர் என்று சொல்லப்படுபவர். இவர் சங்கதி இப்படியானால் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள். மதுரையில் நான் நம் தொண்டர்களை அடக்கிவிட்டதால் நமக்கு அடிவிழ நேரிட்டதென்றும், விட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காதென்றும் நம்பிள்ளைகள் என் மீது குற்றம் சொல்லுகிறார்கள். நான் விட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? இன்னும் சிலர் இரு பக்கத்திலும் செத்திருப்பார்கள். இதனால் நமக்கு என்ன லாபம்? நம்மவர்கள்தானே இருபக்கமும் அடிபட்டு சாகவேண்டி இருக்கும். ஆதலாலேயே நான் எங்கு சென்றாலும் நம்மவர்களை அடக்குவதும், பலாத்காரம் கூடாது என்பதும் ஆகுமே தவிர பயத்தால் அல்ல. காங்கிரசாரானாலும், கம்யூனிஸ்ட் ஆனாலும் அவர்களில் நம்மவர்கள் என்றால் நாம் சற்று அடங்கி மரியாதையாய் நடந்து கொள்ள வேண்டும். அதுதான் நாகரிகமாகும். இனி எந்தக் கட்சி ஆனாலும் நம்மவர்களுக்குள் சண்டை, கலகம், வசவு கூடாது.

கருப்புச் சட்டை படைக்கு இது முக்கிய கவனமாக இருக்க வேண்டும். அவர்களிடம் சிநேகம் கொள்ளுங்கள். இந்த புத்தி இல்லாததாலேயே பொது எதிரியை மறந்து அவனுக்கு மானங்கெட்ட அடிமையாகிவிட்டோம். இதைத்தான் மதுரையில் முதல்நாள் கூட்டத்தில் வலியுறுத்திப் பேசி இருக்கிறேன்.

இப்போது மந்திரிசபை பார்ப்பன ஆதிக்கமாகிவிட்டது. சர்க்கார் காரியாலயம் பெரிதும் ஏற்கனவே பார்ப்பன அக்கிரகாரம், வெளி அய்.சி.எஸ். அதிகாரிகள், ஜட்ஜூகள், பெரிதும் பார்ப்பனர்கள், நம்மவர்களிலும் பலர் அவர்கள் அடிமைகள், பத்தரிகைகளும் யாவும் அவர்களுடையதும் அவர்களது ஆதிக்கத்தில் இருப்பதுமாகும். நம் மந்திரிகள், நம் அதிகாரிகள் யாராவது (திராவிடர்கள்) இருந்தால் அவர்கள் சக்தி அற்றவர்கள், ஆதரவற்றவர்கள். தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே பாததீர்த்தம் அருந்த வேண்டியவர்கள். இந்த நிலையில் நாம் இப்போது நான் செய்வதற்கு மேல் என்ன செய்ய முடியும்? இருக்கும் சக்தியையும், முஸ்தீபு சாதனங்களையும் வைத்துக் கொண்டு எவ்வளவு செய்யமுடியுமோ அதற்கு மேலேயே செய்வேனே ஒழிய விட்டுக் கொடுத்துவிடமாட்டேன். மாணவர்கள், இளைஞர்கள் சில பெரியார்களிடத்தில் எனக்கு உள்ள நம்பிக்கையையும் அவர்களுக்கு என்னிடத்தில் உள்ள அன்பையும் கொண்டு நம் முக்கிய குறைபாடுகளை நீக்கி நமக்குள் ஒரு ஒற்றுமை ஏற்படவே நான் திட்டம் வைத்திருக்கிறேன். அது நடைபெற வெற்றிபெற நீங்கள் கட்டுப்பாடாக, குயுக்தி இல்லாமல், உங்கள் சவுகரியத்திற்கு ஆக காரியங்களையே கெடுக்கப் பார்க்காமல் எனக்கு உதவி செய்யுங்கள். பொறுமையாய், கண்ணியமாய், ஒழுக்கமாய், ஒழுங்கு முறைப்படி நடந்து கொள்ளுங்கள், வெற்றி நம்முடையதுதான். சந்தேகமில்லை.

(26.05.1946 அன்று தேதி ஈரோடு காரைவாய்க்கால் மைதானத்தில் தோழர் குகநாதன் அவர்கள் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டம் இரவு 10 மணிக்கு மேல் துவக்கப்பட்டது. 5000 மக்கள் வரை வந்து இருந்தனர். நள்ளிரவு ஒரு மணி வரை சொற்பொழிவுகள் நடந்தன. அக்கூட்டத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு – சொற்பொழிவு - 15.06.1946

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: