• abolish-caste-1.jpg
  • abolish-caste-2.jpg
  • abolish-caste-3.jpg
  • periyar1.jpg

சாதி ஒழிப்பு

கடைசிப் பதிவேற்றம்

  • Last Modified: Wednesday 20 November 2019, 22:22:42.

தேசியம் - தேசிய இனம்

  • திராவிடரும் - தமிழரும்
    நாடு பிரிவினைக் கமிட்டி அறிக்கையைப் பார்த்தேன். இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிக்கை பற்றிய சேதிகளின் சுருக்கம் ஒருவாறு எனக்குத் தெரியவந்தது. பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால்...

    Read more

  • ‘தேசியம்’ ஓர் முட்டுக்கட்டையே
    தேசீய இயக்கம் சென்ற வாரம் சுயமரியாதை இயக்கம் என்னும் தலைப்புக்கொடுத்து, அவ்வியக்கத்தின் கொள்கைகளைப் பற்றியும், திட்டங்களைப் பற்றியும், அதன் நிலையைப் பற்றியும், செல்வாக்கைப் பற்றியும், இதுவரை அது செய்திருக்கும் வேலையைப் பற்றியும் ஒருவாறு குறிப்பிட்டிருந்தோம். இவ்வாரம் தேசீய இயக்கம் என்னும் தலைப்புப் பெயர் கொடுத்து அதன் கொள்கை, திட்டம், நிலைமை,...

    Read more

  • இலங்கை உபன்யாசம் - தேசம், தேசீயம் ஒரு போலி உணர்ச்சி
      அன்புள்ள தலைவரே! வீரமும், எழுச்சியும், சுயமரியாதை உணர்ச்சி யும் உள்ள வாலிபர்களே!! தலைவரின் முன்னுரையிலும், உபசாரப் பத்திரங்களிலும், மற்றும் பேசியவர்களும் அளவுக்கு மீறி என்னைப் பற்றியும், எனது சிறு தொண்டைப் பற்றியும் புகழ்ந்து கூறி இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட புகழ்ச்சிகளுக்கு நான் சிறிதும் தகுதியுடையேன் அல்லன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கி...

    Read more

  • தேசீயப் பைத்தியம்
      தேசீயம் என்பது ஒரு பித்தலாட்டம் என்பதையும், அது சுயநலவாதி களின் வயிற்றுப்பிழைப்புக்குத் துணைபுரியும் வார்த்தை என்பதையும், நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் நாம் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம். தேசீயவாதியாக இருக்கின்ற ஒருவன் எச்சமயத்திலும் யோக்கியப் பொறுப்பு டன் நடந்துகொள்ள முடியாது. சமயத்திற்குத் தகுந்த வேஷங்களைப் போட்டுக்கொண்டு பாமர மக்களை...

    Read more

  • ஆந்திரர் தமிழர் என்று பிரிக்கப்பார்ப்பது
      ஜஸ்டிஸ்  கட்சியிலிருந்து  நம்பிக்கை  இல்லாத்  தீர்மானத்தின்  காரணமாய்  வெளியேறி  விட்ட  தோழர்  குமாரராஜா  அவர்களுக்காக  குமாரராஜா  அவர்களை  ஆதரிக்க  ஆசைப்பட்டவர்களோ  அல்லது  அவரிடம்  கூலிபெற்றவர்களோ  ஜஸ்டிஸ்  கட்சியைத்  தாக்க  இதுசமயம்  தங்களுக்கு  வேறு  எவ்வித  கதியும்  இல்லாமல்  நிற்கதியாயிருப்பதை  முன்னிட்டு  மிக  இழிவான  மார்க்கத்தைக்  கைக்கொள்ளத்  துணிந்து  விட்டார்கள். ...

    Read more

பொதுவுடைமை

  • சின்னாளப்பட்டியில் பொதுக்கூட்டம்
    16.01.1946 மாலை 4:00 மணிக்குத் தனிக்காரில் பெரியாரவர்களும் மற்றும் பலரும் சின்னாளப்பட்டி வந்து சேர்ந்தனர். உடனே ஒரு மாபெரும் ஊர்வலம் புறப்பட்டு முக்கிய தெருக்களின் வழியாகச் சென்றது. வழி நெடுக மலர் மால...

    Read more

    கோவை மாவட்டதிராவிடர் மாநாடு
    நம்மியக்கம் இப்பொழுது எல்லாத் திராவிடத் தோழர்களாலும் பல்துறையிலும் பலப்படுத்தப்பட்டு வருகிறதென்றும், தேசியத் தோழர்கள் “தங்கள் தியாகத்தை”க் காட்ட வேண்டுமானால் மந்திரிகளாக முடியும். ஆனால் திராவிடர் க...

    Read more

    திருமண அழைப்பு
    திருமணம் முதலாகிய சமுதாய சடங்குகளுக்குப் பெரியார் ஈ.வெ.ரா. இனி அழைக்குமிடங்களுக்கு எல்லாம் போக வசதி இல்லை என்றும், அப்படி போவதானால் இயக்க வேலைகள் குந்தகப்படுகிறதென்றும், இயக்கத் தோழர்களும் உடல் நலம...

    Read more

    சிலை வணக்கமும் திராவிடர் கழகமும்
    “விக்ரக ஆராதனை (சிலை வணக்கம்)யைக் கண்டித்துத் தாங்களும் இயக்கத் தோழர்களும், அடிக்கடி பேசியும் எழுதியும் வருகிறீர்கள். திராவிடர் கழகம் ஒரு அரசியல் கட்சி இயக்கம். சுயமரியாதை இயக்கத்தைப் போல் வெறும் சம...

    Read more

    எது தேசத் துரோகம்?
    தோழர்களே! இந்தியாவைவிட்டுப் பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு விலகப் போகிறதா இல்லையா? அது காந்தி கோஷ்டியார், பிரிட்டிஷ் தூது கோஷ்டியார் பேசிக் கொள்ளும் இரகசியப் பேச்சின் தத்துவத்தைப் பொறுத்தது. காங்கிர...

    Read more

  • கடவுளின் கருணையே கருணை!
    மழையில்லை, அரிசி இல்லை என்று மக்கள் திண்டாடுகிறார்கள். ஆனால், அதன் பேராலும் பார்ப்பனர்கள் வயிறு புடைக்கிறது. மழைக்காக வருண ஜபம் செய்வதாகக் கூறிக் கொண்டு கண்ட கண்ட இடங்களில் இருக்கும் பார்ப்பனர்கள் வ...

    Read more

    மந்திரிசபையில் கெட்ட புத்தி தோற்றம்
    சென்னை மந்திரிசபை தனது நிஜமான நிறத்தோடு வெளிக்கிளம்ப துணிந்து முன் வந்து விட்டதாகத் தெரிகிறது. இன்றைய அரசியல் கொள்கையில் காங்கிரசுக்கும் இம்மாகாண பார்ப்பனரல்லாத மக்கள் என்பவர்களுக்கும் இதுவரை இருந்...

    Read more

    பூதேவர்களின் விஷமப்பிரசாரக் கோஷ்டியார்களின் தேவ பாதுகாப்பு மாநாடு
    சித்திரபுத்திரன் தேசிய பத்திரிகை நகரத்தில், பார்ப்பன நிருபர்கள் பந்தலில், பூதேவர்கள் கழகச் சார்பில் விஷமப் பிரசார கோஷ்டிப் படையின் சதியாலோசனை மாநாடு நடவடிக்கைகள். விஷயாலோசனைக் கூட்டம் தலைவர்...

    Read more

    “வெற்றி நம்முடையதுதான்”
    நம் கழகச் சார்பாக சென்ற மாதம் இரு கூட்டங்கள் நடந்தன. அதற்குப் பிறகு பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. 1. சென்னை மந்திரிசபை அமைப்பு 2. இங்கிலாந்து தூது கோஷ்டி தோல்வி 3. மதுரை கலவரம் முதலிய காரியங்களாகு...

    Read more

    சர்.ஏ.பி. பாத்ரோ மறைவு
    ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்துவரும், 1921ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் கட்சி ஆட்சி செய்தபொழுது கல்வி, மராமத்து இலாகா மந்திரியாகயிருந்து சென்னை யுனிவர்சிட்டி சட்டத்தில் சீர்திருத்தம் செய்தவ...

    Read more

Periyar in English

  • சின்னாளப்பட்டியில் பொதுக்கூட்டம்
    16.01.1946 மாலை 4:00 மணிக்குத் தனிக்காரில் பெரியாரவர்களும் மற்றும் பலரும் சின்னாளப்பட்டி வந்து சேர்ந்தனர். உடனே ஒரு மாபெரும் ஊர்வலம் புறப்பட்டு முக்கிய தெருக்களின் வழியாகச் சென்றது. வழி நெடுக மலர் மால...

    Read more

    கோவை மாவட்டதிராவிடர் மாநாடு
    நம்மியக்கம் இப்பொழுது எல்லாத் திராவிடத் தோழர்களாலும் பல்துறையிலும் பலப்படுத்தப்பட்டு வருகிறதென்றும், தேசியத் தோழர்கள் “தங்கள் தியாகத்தை”க் காட்ட வேண்டுமானால் மந்திரிகளாக முடியும். ஆனால் திராவிடர் க...

    Read more

    திருமண அழைப்பு
    திருமணம் முதலாகிய சமுதாய சடங்குகளுக்குப் பெரியார் ஈ.வெ.ரா. இனி அழைக்குமிடங்களுக்கு எல்லாம் போக வசதி இல்லை என்றும், அப்படி போவதானால் இயக்க வேலைகள் குந்தகப்படுகிறதென்றும், இயக்கத் தோழர்களும் உடல் நலம...

    Read more

    சிலை வணக்கமும் திராவிடர் கழகமும்
    “விக்ரக ஆராதனை (சிலை வணக்கம்)யைக் கண்டித்துத் தாங்களும் இயக்கத் தோழர்களும், அடிக்கடி பேசியும் எழுதியும் வருகிறீர்கள். திராவிடர் கழகம் ஒரு அரசியல் கட்சி இயக்கம். சுயமரியாதை இயக்கத்தைப் போல் வெறும் சம...

    Read more

    எது தேசத் துரோகம்?
    தோழர்களே! இந்தியாவைவிட்டுப் பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு விலகப் போகிறதா இல்லையா? அது காந்தி கோஷ்டியார், பிரிட்டிஷ் தூது கோஷ்டியார் பேசிக் கொள்ளும் இரகசியப் பேச்சின் தத்துவத்தைப் பொறுத்தது. காங்கிர...

    Read more

  • கடவுளின் கருணையே கருணை!
    மழையில்லை, அரிசி இல்லை என்று மக்கள் திண்டாடுகிறார்கள். ஆனால், அதன் பேராலும் பார்ப்பனர்கள் வயிறு புடைக்கிறது. மழைக்காக வருண ஜபம் செய்வதாகக் கூறிக் கொண்டு கண்ட கண்ட இடங்களில் இருக்கும் பார்ப்பனர்கள் வ...

    Read more

    மந்திரிசபையில் கெட்ட புத்தி தோற்றம்
    சென்னை மந்திரிசபை தனது நிஜமான நிறத்தோடு வெளிக்கிளம்ப துணிந்து முன் வந்து விட்டதாகத் தெரிகிறது. இன்றைய அரசியல் கொள்கையில் காங்கிரசுக்கும் இம்மாகாண பார்ப்பனரல்லாத மக்கள் என்பவர்களுக்கும் இதுவரை இருந்...

    Read more

    பூதேவர்களின் விஷமப்பிரசாரக் கோஷ்டியார்களின் தேவ பாதுகாப்பு மாநாடு
    சித்திரபுத்திரன் தேசிய பத்திரிகை நகரத்தில், பார்ப்பன நிருபர்கள் பந்தலில், பூதேவர்கள் கழகச் சார்பில் விஷமப் பிரசார கோஷ்டிப் படையின் சதியாலோசனை மாநாடு நடவடிக்கைகள். விஷயாலோசனைக் கூட்டம் தலைவர்...

    Read more

    “வெற்றி நம்முடையதுதான்”
    நம் கழகச் சார்பாக சென்ற மாதம் இரு கூட்டங்கள் நடந்தன. அதற்குப் பிறகு பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. 1. சென்னை மந்திரிசபை அமைப்பு 2. இங்கிலாந்து தூது கோஷ்டி தோல்வி 3. மதுரை கலவரம் முதலிய காரியங்களாகு...

    Read more

    சர்.ஏ.பி. பாத்ரோ மறைவு
    ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்துவரும், 1921ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் கட்சி ஆட்சி செய்தபொழுது கல்வி, மராமத்து இலாகா மந்திரியாகயிருந்து சென்னை யுனிவர்சிட்டி சட்டத்தில் சீர்திருத்தம் செய்தவ...

    Read more

பகுத்தறிவு

  • தீ மிதித்தல் ஏமாற்று வித்தை
    12.03.1946 இல் நடைபெற்ற கரூர் காமாட்சியம்மன் திருவிழாவில் ஆச்சாரத்தோடு, அம்மையிடம் பக்தியாய், ஆண்டவன் அருள் கொண்டு ஆஸ்திகர்கள் நெருப்புக் குழியில் தீ மிதிக்க இறங்கிய பொழுது தீ மிதித்தல் ஏமாற்று வித்தை என்பதை நிரூபிக்க கறுப்புச் சட்டைப் படை இளைஞர்கள் 6 பேர் கறுப்புச் சட்டையணிந்து ஆச்சாரம், பக்தி, அருள் ஒன்றும் இல்லாமலே தாமும் அவர்களுடன் தீ மிதித்து ஏறினர். இனி இம்மாதிரி ஏமாற்று வித்தைகள்  பலிக்காது என ஆஸ்திகர்கள்...

    Read more

  • தீமிதித்தல் பக்தியினாலா?
    துறையூரில் நடந்த திரவுபதி அம்மன் விழாவில் கடைசி நாளாகிய 4.8.44  ஆம் தேதியன்று அக்கினியில் இறங்கியதில் நமது இயக்க அன்பர்கள் வை. நடேசன், து.வீ. நாராயணன் முதலியவர்கள் காப்புக்கட்டிக் கொள்ளாமலும் கையில் செங்கொடியுடன் பெரியார் வாழ்க! சூழ்ச்சி ஒழிக! என்ற சப்தத்தோடு அக்கினியில் இறங்கி இது பக்தியல்ல என்று வெளிப்படுத்தினார்கள்.மேற்படி கோயில் தர்மகர்த்தா அனுமதி கொடுத்தால் ஒவ்வொரு வருடமும் முன்னணியில் இறங்க தயாராக இருக்கிறோம் என்றும் சொல்லுகிறார்கள்.இவ்விழாவினால் ஏற்படும் உடையார்...

    Read more

  • மூடநம்பிக்கை முறியடிக்கப்பட்டது
    16.05.1946 இல் திண்டிவனம் தாலுக்கா கோவடி கிராமத்தில் நடந்த அய்யனாரப்பன் திருவிழாவில், கிராமத்திலுள்ள பெரியவர்களும் வாலிபர்களும் திராவிடர் கழகத் தோழர்களை, அய்யனாரப்பனுக்கு ஒரு கரகம் ஜோடிப்பதாகவும், தெய்வங்களின்  கதைகள் வெறும் புனைந்துரை எனக் கூறும் நீங்கள் உங்களில் யாராவது மேற்படி கரகத்தைத் தூக்கிக்கொண்டு ஊரைச்சுற்றி கொண்டுவந்து இறக்கிவிடுங்கள் என்று பிடிவாதம் செய்து கேட்டதினால், நமது இயக்கத் தோழரும் திண்டிவம் தாலுக்கா திராவிடர் கழக செயற்குழு உறுப்பினருமான என்.சேதுராமன் அவர்கள் அந்தக்...

    Read more

  • வீரர்கள் கல்நாட்டு விழா
    அருமைத் தோழர்களே, தாய்மார்களே!
    நான் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கும் கட்டிடத்தின் ஞாபகத்திற்குரிய இரு வீரர்களான தோழர்கள் ல. நடராசன், வெ. தாளமுத்து ஆகியவர்களின் சேவையையும் உணர்ச்சியையும் தமிழர்கள் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்த்தால் அவர்களின் சுயநலமற்ற தியாகம் தெற்றென விளங்கும். அவ்வித புகழுக்குரிய வீரர்களின் ஞாபகார்த்த கட்டிடத்தை நாம் இங்கு கட்டுவது அவர்களுக்கு ஏதோ பிரமாதமாக நாம் செய்ததாகவல்லது. அதற்குப் பதிலாக அவ்வீரர்களின் தியாகத்தை  நாம் பின்பற்றி நம் நாட்டின் விடுதலைக்காக...

    Read more

  • பார்ப்பனருக்கும் ரயில்வேகாரருக்கும் ஒப்பந்தமா?
     
    நம் நாட்டில் சுதந்தரமும் சுயமரியாதையும் சொந்த அரசியலும் ஆரியர்கள் என்னும் பார்ப்பனர்களால் அழிந்து போனதல்லாமல் மனித சமூகம் வஞ்சக மதத்துக்கும் ஒழுக்கமும் நீதியும் அற்ற கடவுளுக்கும் முட்டாள்தனமும் பித்தலாட்டமும் நிறைந்த மூடநம்பிக்கைக்கும் அடிமைப்பட்டு பெருவாரியான மக்கள் ஒரு வெகு சிறுபான்மையான வன்னெஞ்ச வஞ்சகர்களுக்கு ஆளாகி இன்னல் படுவதும் மிருகங்களிலும் மலத்திலும் கேவலமாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திலிருப்பதும் தமிழ் நாட்டுச் சரித்திரம் அறிந்த எவரும் மறுக்க மாட்டார்கள். இம் மாதிரியான நிலைமை...

    Read more

தோழர்களே!

ஜஸ்டிஸ் கட்சியாராகிய நம் மீது இன்று பெரியதொரு பொறுப்பு இருக்கிறது. சென்னை மாகாண பார்ப்பனர் அல்லாத மக்கள் சுமார் 4 கோடி பேருக்கும் நாம் பிரதிநிதிகளாக இருக்கிறோம். இவர்களில் இராஜாக்கள், ஜமீன்தார்கள், செல்வவான்கள், பெரும் பதவியும், பட்டமும் கொண்டு அகவிலையைப் பற்றி கவலை இல்லாத சீமான்கள், பிரபுக்கள் ஆகியவர்களுள்ளும் பலர் நம் கட்சியைச் சேர்ந்தவர்களாவார்கள் என்றாலும், சமுதாயத்தில் தாழ்ந்தும், வாழ்க்கையில் இழிந்தும், கல்வி வாசனை அற்றும், வாழ்வுக்குத் திண்டாடிக்கொண்டு என்றென்றும் தலை எடுக்க முடியாத படி அழுந்தியும் அறிவற்று, மானமற்று, தீண்டப்படாத மக்களாய் இருக்கிற மக்கள் அநேகர் இருக்கிறார்கள். இவர்கள்தான் மொத்த எண்ணிக்கையில் 100க்கு 90 எனலாம். இவர்களுக்கு எல்லாம் ஜஸ்டிஸ் கட்சி பிரதிநிதித்துவம் வாய்ந்தது என்று உரிமை பாராட்டுகிறது அல்லவா? அப்படி இருக்கும் போது இந்த நம் கட்சிக்கு உள்ள பொறுப்பை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். அதற்கு ஆக நாம் என்ன செய்கிறோம்? கட்சியில் தங்களுக்கு மிகுதியும் பொறுப்பு இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு நமக்கும் கூட புத்தி சொல்லத் துணிகிறவர்கள் கட்சிக்கு ஆக என்ன செய்கிறார்கள்? என்ன திட்டம் வைத்து இருக்கிறார்கள்? அன்றியும் நம்ம கட்சியையே குறை கூறும் கட்சி பக்தசிகாமணிகள், பொதுநலத்துக்கு உழைக்கும் மகான்கள் இதுவரை மேற்கண்ட பெருங்குறைபாட்டிற்கு என்ன செய்தார்கள்; என்ன என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று சிந்தியுங்கள்.

நம்மைக் குறை சொல்லுகிறவர்கள் சொல்லிக்கொண்டிருக்கட்டும். வைபவர்கள் வைது கொண்டிருக்கட்டும். விஷமப் பிரசாரக்காரர்கள் விஷமப் பிரசாரம் செய்து கொண்டிருக்கட்டும். கட்சியையும் நம்மையும் காட்டிக் கொடுத்துக்கொண்டும், நம்மாலும் கட்சிப் பேராலும் பிழைத்துக் கொண்டும், பட்டம், பதவி, உத்தியோகம், லாப ஆதாயம், பெற்றுக்கொண்டும் இருப்பவர்கள் நன்றாய் இருக்கட்டும். அவர்கள் மகிழ்ச்சியில், லாபத்தில் நாம் குறுக்கிட வேண்டாம். நம்முடைய பொறுப்பை நாம் உணர வேண்டும். நம் பொறுப்பு அதிகம். ஏனெனில் நாம் ஒரு கூட்டத்தினர் “கட்சியினால் எவ்வித சுயபலனும் அடையாமல் கவலையோடு உழைக்கிறோம்” என்றுச் சொல்லிக் கொள்ளுகிறோம். அப்படி என்றால் என்ன என்றால் கஷ்ட நஷ்டம் தொல்லை துன்பம் அனுபவித்துக் கொண்டு சுயநலத்தை பிரதானமாய்க் கருதாமல், முழுநேரத்தையும் கட்சிக்குப் பயன்படுத்தி உழைத்துக் கொண்டு இருக்கிறோம் என்கிறோம். ஆகவே ஒரு வியாபாரத்துக்கு முதல் போட்டவனுக்கு எப்படி அதிகப் பொறுப்போ அது போல் அதிகமாய் உழைக்கிறோம் என்பவர்களுக்குப் பொறுப்பு அதிகம்.

அதனால்தான் நாம் நம்ம உழைப்பின் பயன் என்ன? என்று எதிர்பார்க்கக் கடமைப் பட்டிருக்கிறோம். உழைப்புக்குப் பயன் என்ன என்று எதிர்பார்க்கும் உரிமையைத்தான் நான் பொறுப்பு என்கிறேன். இப்படி கஷ்ட நஷ்டங்களைப் பொருட்படுத்தாது தன்னலத்தை முக்கியமாய்க் கருதாது முழுநேரம் தங்கள் சொந்த செலவில் பாடுபடும் மக்கள் நம்மில் அநேகர் இருக்கிறார்கள். இங்குகூட அப்படிப்பட்ட அநேகர் கூடியிருக்கிறோம். ஆகவேதான் நமக்குப் பொறுப்பு அதிகம் இருக்கிறது என்று மறுபடியும் மறுபடியும் கூறுகிறேன்.

லட்சியம்

ஜஸ்டிஸ் கட்சியின் லட்சியம் ஆரம்பகாலத்தில் மிக சுருக்கமாக இருந்தது.

அதாவது 50 வருஷத்துக்கு முன் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட போது எப்படி முதலில் இராஜ விசுவாசத்தைத் தீர்மானித்து விட்டு அடுத்தபடியான பெரிய பெரிய உத்தியோகமும், சம்பளமும் வேண்டியது மாத்திரம்தான் காங்கிரசின் லட்சியமாக இருந்ததோ, அந்தப்படியே அது செய்து கொண்டதோ அதே போல ஜஸ்டிஸ் கட்சிக்கு சர்க்காரிடம் ஒத்துழைத்து சர்க்காரை திருப்தி செய்து  “எங்கள் எண்ணிக்கைக்குத் தக்கபடி பிரதிநிதித்துவமும், உத்தியோகமும் கிடைக்கும்படிச் செய்ய வேண்டும்" என்பன போன்றவை முக்கிய லட்சியங்களாய் இருந்தன.

இப்போது அவை நமது முக்கிய லட்சியங்கள் அல்ல. இன்றைய நம் லட்சியம் இன்னும் மேலே போய்விட்டது. நமக்கு இப்போது உத்தியோகம் கிடைத்துவிட்டால் மாத்திரமே நம் லட்சியம் நிறைவேற முடியாதபடி லட்சியங்கள் வளர்ந்து காணப்படுகின்றன.

இன்னமுமா விண்ணப்பம் போடுவதும் கெஞ்சுவதும்?

நம் கட்சியினர்கள் நம் கட்சியின் பேரால்அரசியலை நடத்தினார்கள். அதன் மூலம் நம்குறை சொன்னவர்கள் நம்ம சர்க்காரால் பெரியதொரு அரண்மனையில் வைக்கப்பட்டு இராஜோபகாரம் செய்து காப்பாற்றப்பட்டு பெருமை படுத்தப்பட்டு வரவில்லையா?

அதன்மூலம் நம் குறைபாடுகள் எல்லாம் ஒழிந்துவிடவில்லை. ஒழிய வழி கூடதென்படவில்லை. சில சிறு காரியம் செய்ய முடிந்ததே ஒழிய இன்றைய லட்சியத்திற்கு அவை பெரிதும் பயன்படும் என்றுகூடத் தோன்றவில்லை. அதனால் நாம் வேறு சில காரியங்களை லட்சியம் செய்து வேலை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். இதற்கு சற்று அதிகமான கஷ்ட நஷ்டப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம். அதற்கேற்ற தொல்லை துன்பம் ஆகியவைகளை அனுபவிக்க வேண்டியவர்களாகவும் இருக்கிறோம். இதற்கும் காங்கிரசையே உதாரணமாக சொல்லுகிறேன். அதன் உட்கிடக்கையை உணர்ந்து கொள்ளுங்கள்.

“பிரிட்டிஷ் சர்க்காரைக் கடவுள்தான் எங்களுக்கு அனுப்பிக் கொடுத்தது. அவர்களால்தான் நாங்கள் மனிதர்களாக, கண்ணுள்ளவர்களாக, பயமற்றவர்களாக, முற்போக்கு அடைந்தவர்களாக வாழ்கின்றோம். எங்கள் பின் சந்ததிகளும், பிரிட்டிஷ்காரர்களுக்கு பல தலைமுறைக்கு கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டியவர்களாவார்கள். பிரிட்டிஷ் சர்க்காரே உலகம் உள்ளவரை எங்களை ஆள வேண்டும். பிரிட்டிஷ் கொடியின் கீழ் இருப்பது எங்களுக்கு ஒரு பெருமை” என்று சொன்ன காங்கிரஸ்காரர்கள் வேறு சிலர் அந்த நிலைக்கு வந்துவிட்டார்கள் என்று தெரிந்தவுடன் இன்று  “வெள்ளையர்களே வெளியே போங்கள்", “எங்கள் நாடு; எக்கெதி கெட்டாலும் கெடட்டும்”, “அராஜகம் ஏற்பட்டாலும், ஏற்படட்டும்; நீங்கள் உடனே வெளியேறுங்கள்”

- என்று சொல்லும் நிலைக்கு வந்துவிடவில்லையா? அவர்கள் இதை நிஜமாய்ச் சொன்னாலும் சரி பொய்யாய்ச் சொன்னாலும் சரி அப்படிச் சொன்னது மாத்திரமல்லாமல், அப்படிச் சொன்னவர்கள், நம்ம சர்க்காரால் பெரியதொரு அரண்மனையில் வைக்கப்பட்டு இராஜோபசாரம் செய்து காப்பாற்றப்பட்டு பெருமை படுத்தப்பட்டு வரவில்லையா? அது மாத்திரமா, இக்கூட்டத்தாரால் இரயிலைக் கவிழ்த்து, கட்டடங்களை இடித்து நொறுக்கி, சர்க்கார் நீதிமன்றங்களை, ரிகார்டுகளை நெருப்பு வைத்துக் கொளுத்தி, அதிகாரிகளைக் கொன்று, அவர்கள் கண்களில் திராவகத்தைக் கொட்டி செய்யப்பட்ட கொடுமைகள் எல்லாம் இன்று தீவிர அரசியல் உணர்ச்சியாகவும், தேசாபிமானச் சின்னமாகவும், அப்படி செய்தவர்களும் அதற்கு ஆதாரமாய் இருந்தவர்களும் நாளைக்கு மந்திரிகளாகவும், அரசியல் சமாதானம் பேசும்போது அரசப்பிரநிதிகளுக்கு சமமாக ஜனப்பிரதிநிதி ஆசனத்தில் அமரப் போகிறவர்களாகவும் இருக்கப் போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாத சங்கதியா? உலகம் அறியாத சங்கதியா? அல்லது இவை ஒழுக்கக் `கடவுளும்’ நேர்மைக் `கடவுளும்’ ஒப்புக் கொள்ளாத காரியமா? என்று கேட்கிறேன்.

காலம் மாறுதலடைந்துவிட்டது

ஆகவே நாம், நம் கட்சி ஆரம்பித்து 27 வருஷம் ஆனபின்பும் இன்னமும் வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் விண்ணப்பம் போட்டுக் கெஞ்சுவதுமான நிலையிலேயே இருக்க வேண்டுமா என்று கேட்கிறேன். காலம் பெரிய மாறுதலடைந்துவிட்டது. அன்பு காட்டுவதை அடிமைத்தனமாவும், நேர்மையைக் கோழைத்தனமாகவும் ஒழுக்கத்தை நாணயத்தை முட்டாள்தனமாகவும் கருதும்படியான காலமாக ஆகிவிட்டது. இதை நான் வித்தாரமாகப் பேசவில்லை. நம் சர்வவல்லமை உள்ள சர்க்கார் நடத்தையைப் பார்த்தே நான் சொல்லுகிறேன், சர்க்கார் மதிப்புக்கு நாம் பாத்திரர்கள் ஆக வேண்டுமானால், சர்க்காரின் கருணை உள்ள தயவை நாம் பெற வேண்டுமானால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு காங்கிரசுக்கும், சர்க்காருக்கும் உள்ள சம்பந்தத்தையும் நடப்பையுமே கருதிப் பற்றிப் பேசுகிறேன்.

நாம் அதிக எண்ணிக்கை உள்ளவர்கள், சர்க்காரின் நண்பர்கள், சர்க்கார் சொல்லும் நீதிநெறிகளில் கோடு தாண்டாதவர்கள், சர்க்காரின் பெருமையையும், மகிமையையும் பிரசாரம் செய்பவர்கள், சர்க்காருக்கு வந்த கஷ்டத்தை நமக்கு வந்ததாகக் கருதி துடிதுடிப்பவர்கள், என்ற பேர்வாங்கி இருக்கிறோம். இதற்குச் சர்க்கார் கொடுத்த நற்சாட்சிப் பத்திரமும் நம் தலைவர்கள் பலரிடம் இருக்கிறது. எனவே இந்தச் சர்க்காரால் நாம் எப்படி நடத்தப்படுகிறோம்? நம் எதிரிகளும், சர்க்காரின் “எதிரிகளும்” எப்படி நடத்தப்படுகிறார்கள்? சற்று சிந்தித்துப் பாருங்கள். நம் கட்சிக்குச் சரியானபடி, உரிமைப்படி உத்தியோகம் கொடுக்கவில்லை என்பதையே குறையாகச் சொல்லவில்லை. அதைப்பிறகு பார்ப்போம்.  சர்க்கார் யாருக்குப் பதவியும், உத்தியோகமும் கொடுக்கிறார்கள் என்பதைத்தான் கவனிக்க விரும்புகிறேன். அய்க்கோர்ட்டைப் பாருங்கள்; சர்வீஸ் கமிஷனைப் பாருங்கள். மற்றும் ஒரு சிறு விஷயம் பாருங்கள், உதாரணமாக சேலத்தில் நடந்த ஒரு சம்பவம் சொல்லுகிறேன். இது சிறு சம்பவம். இனியும் பெரும் சம்பவங்கள் பல இருக்கின்றன.

சேலத்தில் ஒரு வருஷத்துக்கு முன்பு ஒரு `அடிஷனல் பப்ளிக் பிராக்சிக்யூட்டர்’ வேலை ஏற்பட்டது. காங்கிரஸ்காரரை, கதர் போட்டவரை, காங்கிரஸ் மெம்பராக இருந்து காங்கிரஸ் காரியம் பார்ப்பவரை, காங்கிரஸில் எம். எல். ஏயின் மகனை, மேடைகளில் மற்றக் கட்சிகளை அடிமைக்கட்சி என்று பேசுபவரை, இதை தவிர வக்கீல் உத்தியோகத்தில் 3ஆம் 4ஆம் தரத்தில் இருந்தவரைத் தேடிக் கொண்டு போய் கொடுத்தார்கள். ஆனால் அப்போது ஒரு பார்ப்பனர் கலெக்டராய் இருந்தார். போகட்டும், மேலிருக்கும் சர்க்காருக்கும் இது தெரியாமல் இருக்கலாம். இப்போது இம்மாத முடிவில் மறுபடியும் அதுபோல் ஒரு ஸ்தானம் அங்கேயே ஏற்பட்டது. அங்கு இன்று பார்ப்பனக் கலெக்டர்கூட இல்லை. என்ன ஆயிற்று என்றால், பார்ப்பனர் ஒருவர் காங்கிரஸ் பேரால் தேர்தலுக்கு நின்று தோற்றவர் கதர்க்காரர், (அது போகட்டும்) கிரிமினல் கோர்ட்டுகளையே சாதாரணத்தில் கண்டறியாதவர் ஒருவர் ஒரு வெள்ளைக்காரரால் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சமயத்தில் பார்ப்பனர் கலெக்டராக இருக்கும்போது பார்ப்பனரல்லாத காங்கிரஸ்காரர் என்றால் பார்ப்பனக் கலெக்டர் இல்லாதபோது அதுவும் வெள்ளைக்காரக் கலெக்டரால் காங்கிரஸ் பார்ப்பனரையே நியமிப்பது என்றால் இதற்கு அர்த்தம் என்ன என்று பாருங்கள். சர்க்காரின் உள் எண்ணம் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்ததால்தான் தங்கள் காரியம் நடக்கும் என்றும் பார்ப்பனர் – காங்கிரஸ்காரர்கள் தயவு இருந்தால்தான் தாங்கள் இந்த நாட்டில் நிலையாக ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்று தானே கருத வேண்டும்.

ஆகவே, நாம் நமது லட்சியங்களையும், வேலை முறைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.  நாம் 3பேரைப் பற்றிக் கவனித்து நம் திட்டங்களை அமைக்க வேண்டும். அவர்கள் பார்ப்பனர் – சர்க்கார் - பாமர மக்கள் ஆகிய 3பேர்கள் ஆவார்கள். பாமர மக்களை நாம் கவனித்து அதற்குத் தகுந்தபடி திட்டம் அமைத்துக் கொள்ளாவிட்டால், நாம் இன்றைய நிலையில் அரசியலில் ஒரு காரியமும் செய்ய முடியாது. தேர்தல்கள் பெரும்பாலும் பாமர மக்கள் கையில் இருக்கும் காரியமாகி விட்டது. நம் தலைவர்கள் பாமர மக்களை சிறிதும் நேரில் தெரிந்து கொள்ளாதவர்கள். இப்படிப்பட்ட இவர்கள் ஒரு நாளும் தேர்தலில் வெற்றி பெற முடியாது.

சர். இராமசாமி முதலியாரும், சர். சண்முகம் செட்டியாரும் தோல்வி அடைந்த காலநிலை இன்று சிறிதாவது மாறி இருக்கிறதா என்று கேட்கிறேன். அப்படிப்பட்ட அறிஞர்களை நாம் நம் நாட்டில் உயர்பதவிகளில் வைத்துப் பயன் அனுபவிக்க முடியவில்லை. அதற்கு மேல் நாம் யாரைப் பிடிக்கப் போகிறோம்?  காங்கிரஸ்காரன் 2500 ரூபாய் செலவு செய்கிறான். நம் கட்சியார் 50,000, 60,000 ரூபாய் செலவு செய்கிறார்கள் அப்படி இருந்தும் காங்கிரஸ் வெற்றி; மஞ்சள் பெட்டி வழிந்தோடுகிறது; நமக்குப் “புகையிலை வழங்கும்படி” தோல்வி ஏற்படுகிறது. கன்னியாகுமரி முதல் இமயமலை வரை உள்ளவர்கள் கைகொட்டிச் சிரித்து இழிவுபடுத்துகிறார்கள்.

என்ன காரணம் என்று எந்தப் பிரமுகர் கவனித்தார். தேர்தல் என்றால் யாரோ ஆசைப்படுவதும் யாரோ பணம் கொடுப்பதும், தேர்தல் முடிந்த பின் ஜெயிக்காமல் போன அவமானத்தோடு கொடுத்த பணத்துக்குக் கணக்கு கேட்பதாலும் அதை பலர் பங்குபோட்டு பயன் அனுபவிப்பதில் கலகம், மனஸ்தாபம், ஒருவரை ஒருவர் வைவது ஆகிய காரியங்கள் ஏற்பட்டு அதைப் பார்த்து ஊரார் சிரிப்பதுமல்லாமல் வேறு என்ன பயன்படுகிறது?

காங்கிரஸ்காரர்கள் தேர்தலுக்கு நிற்க ஆரம்பித்த காலம் முதல் நமக்கு அதிகமான தோல்விகள் ஏற்பட்டு வந்திருக்கின்றன.

அதனால் தேர்தலுக்கு நிற்பதற்குக்கூட ஆட்கள் மிக அரிதாகி விட்டது. நிற்பதாயிருந்தால் பணத்துக்கு அந்நியரிடம் கையேந்த வேண்டியதாகிறது. அப்படி ஆனாலும் தோல்வி தாண்டவ மாடுகிறது. ஏன்? நமக்கும் பாமர மக்களுக்கும் சரியான சம்மந்தம், நம்பிக்கை, நட்புமுறை ஏற்படத்தகுந்த சட்டம், நிலை ஏற்படும் வரை தேர்தலை லட்சியம் செய்யாமல் வேலை செய்ய வேண்டும்.

காங்கிரஸ்காரர்கள் 16 வருஷம் தேர்தலில் நேரிட சம்மந்தப்படவில்லை. இந்தப் பதினாறு வருஷத்தில் பலர் மாதம் இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய் வரும்படியைவிட்டார்கள். திவான் பகதூர், சர் முதலிய பட்டம் விட்டார்கள். பல தடவை சிறை சென்றார்கள். சாதாரண மனிதர்கள் போல பாமர மக்களிடம் பழகினார்கள், சர்க்காருக்கு விரோதமாகக் கூட தினம் தினம் மேடைகளில் விளங்கினார்கள். கூப்பிட்ட பக்கமெல்லாம் ஓடினார்கள். சாதாரண தொண்டர்களை எல்லாம் தலைவர்கள் போல் மதித்து மரியாதை செய்தார்கள். தங்களுக்கு வேண்டியவர்களே அதிகாரத்தில் இருக்கும்நிலை ஏற்படுத்திக் கொண்டார்கள். சர்க்காருக்கும் தாங்கள் விரோதிகள் என்று பறையடித்தார்கள். தங்கள் கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டுமே என்று பெருமையாகவோ போலி கவுரவமாகவோ நடந்து கொள்வதில்லை. கூட்டங்களுக்கு `வெட்கத்தை எதிர்பார்க்காமல் வந்து வெறுந்தரையில் உட்காருவார்கள்’. வெள்ளைக்கார வேடத்தை வெறுத்தவர்களைப் போல் காட்டிக் கொள்வார்கள். இன்னமும் இது போல் எவ்வளவு வேண்டும்? இவைகளால் பாமர மக்களை சுவாதீனம் செய்துகொண்டுவிட்டார்கள்.

இப்படிப்பட்ட குணங்களில் ஏதாவது ஒன்று நம்மில் நம் தலைவர்களில், தலைவர்களாக ஆசைப்படுபவர்களில், தலைவர்களாக ஆகத் தெரிந்தெடுப்பவர்களில் யார் இருக்கிறார்கள்? என்று கேட்கிறேன்.

(13.02.1944 அன்று சென்னையில் நடைபெற்ற சென்னை ஜில்லா நீதிக்கட்சி மாநாட்டில் பெரியார் ஈ. வெ. ரா. ஆற்றிய தொடக்க உரை)

குடிஅரசு - சொற்பொழிவு - 19.02.1944

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: