• abolish-caste-1.jpg
 • abolish-caste-2.jpg
 • abolish-caste-3.jpg
 • periyar1.jpg

சாதி ஒழிப்பு

கடைசிப் பதிவேற்றம்

 • Last Modified: Thursday 23 April 2020, 10:19:37.

தேசியம் - தேசிய இனம்

 • திராவிடரும் - தமிழரும்
  நாடு பிரிவினைக் கமிட்டி அறிக்கையைப் பார்த்தேன். இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிக்கை பற்றிய சேதிகளின் சுருக்கம் ஒருவாறு எனக்குத் தெரியவந்தது. பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால்...

  Read more

 • ‘தேசியம்’ ஓர் முட்டுக்கட்டையே
  தேசீய இயக்கம் சென்ற வாரம் சுயமரியாதை இயக்கம் என்னும் தலைப்புக்கொடுத்து, அவ்வியக்கத்தின் கொள்கைகளைப் பற்றியும், திட்டங்களைப் பற்றியும், அதன் நிலையைப் பற்றியும், செல்வாக்கைப் பற்றியும், இதுவரை அது செய்திருக்கும் வேலையைப் பற்றியும் ஒருவாறு குறிப்பிட்டிருந்தோம். இவ்வாரம் தேசீய இயக்கம் என்னும் தலைப்புப் பெயர் கொடுத்து அதன் கொள்கை, திட்டம், நிலைமை,...

  Read more

 • இலங்கை உபன்யாசம் - தேசம், தேசீயம் ஒரு போலி உணர்ச்சி
    அன்புள்ள தலைவரே! வீரமும், எழுச்சியும், சுயமரியாதை உணர்ச்சி யும் உள்ள வாலிபர்களே!! தலைவரின் முன்னுரையிலும், உபசாரப் பத்திரங்களிலும், மற்றும் பேசியவர்களும் அளவுக்கு மீறி என்னைப் பற்றியும், எனது சிறு தொண்டைப் பற்றியும் புகழ்ந்து கூறி இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட புகழ்ச்சிகளுக்கு நான் சிறிதும் தகுதியுடையேன் அல்லன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கி...

  Read more

 • தேசீயப் பைத்தியம்
    தேசீயம் என்பது ஒரு பித்தலாட்டம் என்பதையும், அது சுயநலவாதி களின் வயிற்றுப்பிழைப்புக்குத் துணைபுரியும் வார்த்தை என்பதையும், நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் நாம் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம். தேசீயவாதியாக இருக்கின்ற ஒருவன் எச்சமயத்திலும் யோக்கியப் பொறுப்பு டன் நடந்துகொள்ள முடியாது. சமயத்திற்குத் தகுந்த வேஷங்களைப் போட்டுக்கொண்டு பாமர மக்களை...

  Read more

 • ஆந்திரர் தமிழர் என்று பிரிக்கப்பார்ப்பது
    ஜஸ்டிஸ்  கட்சியிலிருந்து  நம்பிக்கை  இல்லாத்  தீர்மானத்தின்  காரணமாய்  வெளியேறி  விட்ட  தோழர்  குமாரராஜா  அவர்களுக்காக  குமாரராஜா  அவர்களை  ஆதரிக்க  ஆசைப்பட்டவர்களோ  அல்லது  அவரிடம்  கூலிபெற்றவர்களோ  ஜஸ்டிஸ்  கட்சியைத்  தாக்க  இதுசமயம்  தங்களுக்கு  வேறு  எவ்வித  கதியும்  இல்லாமல்  நிற்கதியாயிருப்பதை  முன்னிட்டு  மிக  இழிவான  மார்க்கத்தைக்  கைக்கொள்ளத்  துணிந்து  விட்டார்கள். ...

  Read more

பொதுவுடைமை

 • தந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு முதல்நாள் நிகழ்வுகள்
  இன்று (15.01.1948) காலை 9 மணிக்கு பிராட்வேயில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான பந்தலில் வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு பெருமிதத்துடன் ஆரம்பமாயிற்று. பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந...

  Read more

  சுயராஜ்யத்தில் வேறு சுய ஆட்சி ஏன்?
  ஸ்தல ஸ்தாபனங்கள் என்பன அந்தந்த ஸ்தல மக்களைச் சுயஆட்சிக்குத் தகுதியுடையவர்களாகப் பழக்குவதற்காகவே முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நோக்கத்திற்கு மாறாக, நாளடைவில் நகரமன்றங்களுக்கும், நாட்டாண்மைக் கழகங்களுக...

  Read more

  ஏமாற்றுப் பிழைப்பு எத்தனை நாள்
  அண்மையில் சென்னை மாகாணத்திற்குக் கனம் ஆச்சாரியார் வந்த முக்கிய காரணங்கள் இரண்டு என்று கூறலாம். ஒன்று திருவண்ணாமலையில் புராணப் பிரசாரம் செய்வது, மற்றொன்று “கல்கி” மகளார் திருமணத்திற்கு விஜயம் செய்வது. ...

  Read more

  குறள் பற்றிப் பெரியார்!
  குறள் என்பது மற்ற நூல்களைப் போலவே அதாவது ஆரிய மத இதிகாச நூல்களைப் போலவே, எல்லாத் தமிழ்(இந்து) மக்களாலும் இதுவரையில் மதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆரிய நூல்களைப் போன்றே குறளுக்கும், ஆரிய மத இதிகாசக் ...

  Read more

  குறளும் பெரியாரும்!
  திருவள்ளுவரின் திருக்குறளைப் பற்றிப் பெரியார் ஈ. வெ. ரா அவர்கள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். அது இவ்வாரக் குடிஅரசில் பிறிதோரிடத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதை வாசகர்கள் ஊன்றிப் படிக்க வேண்ட...

  Read more

 • பதினோறாம் தடவை?
  நமது சென்னை சர்க்கார் - பார்ப்பனப் பனியாக்களின் ஆதிக்க சர்க்கார், நடத்திவரும் ‘தடை படலத்தை‘ப் பார்க்கும் போது, குறிப்பாக பெரியார் அவர்களுடன் பிள்ளை விளையாட்டு விளையாடுவதில் பெருமையடைகிறதோ, என்றே நினைக...

  Read more

  ஒப்புயர்வற்ற குறள் நாள்!
  இந்த மாதத்தில் சென்னையில் குறள் நாள் வெகு ஆடம்பரமாகக் கொண்டாடப் பெறவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். பெரியார் திரு. வி. க. அவர்களையும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அவரும் மகிழ...

  Read more

  பொறுத்துப் பார்ப்போம்
  “உண்மை தோற்றது, பொய்ம்மை வெற்றி பெற்றது. நாணயம் நலிந்தது, நம்பிக்கைத் துரோகம் செழித்தது. யோக்கியதைக்கு மதிப்பு இல்லை, அயோக்கியத் தனத்திற்கு ஆடம்பர வரவேற்பு” - இவை இன்று இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்க...

  Read more

  ஸ்தல சுயாட்சி!
  இந்த மாதம் 12ஆம் தேதி திராவிடத் தந்தை பெரியாரவர்களுக்குத் திருச்சி நகரசபை அளித்த சிறப்பு மிக்க வரவேற்பு, நம் காங்கிரஸ் தோழர்களுக்கு - மந்திரிமார்களுக்குப் பெரும் மனக்கசப்பைத் தருமென்று கூறப்படுமானால்,...

  Read more

  திருவள்ளூரில் காமராசர்!
  சென்ற ஒருவார காலமாகத் தோழர் காமராசர் அவர்கள், செங்கற்பட்டு வட்டாரத்தில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். சென்னை மேல்சபை உறுப்பினருள் ஒருவரான தோழர் முத்துரங்கனார் அவர்கள் காலஞ் சென்ற...

  Read more

Periyar in English

 • தந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு முதல்நாள் நிகழ்வுகள்
  இன்று (15.01.1948) காலை 9 மணிக்கு பிராட்வேயில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான பந்தலில் வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு பெருமிதத்துடன் ஆரம்பமாயிற்று. பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந...

  Read more

  சுயராஜ்யத்தில் வேறு சுய ஆட்சி ஏன்?
  ஸ்தல ஸ்தாபனங்கள் என்பன அந்தந்த ஸ்தல மக்களைச் சுயஆட்சிக்குத் தகுதியுடையவர்களாகப் பழக்குவதற்காகவே முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நோக்கத்திற்கு மாறாக, நாளடைவில் நகரமன்றங்களுக்கும், நாட்டாண்மைக் கழகங்களுக...

  Read more

  ஏமாற்றுப் பிழைப்பு எத்தனை நாள்
  அண்மையில் சென்னை மாகாணத்திற்குக் கனம் ஆச்சாரியார் வந்த முக்கிய காரணங்கள் இரண்டு என்று கூறலாம். ஒன்று திருவண்ணாமலையில் புராணப் பிரசாரம் செய்வது, மற்றொன்று “கல்கி” மகளார் திருமணத்திற்கு விஜயம் செய்வது. ...

  Read more

  குறள் பற்றிப் பெரியார்!
  குறள் என்பது மற்ற நூல்களைப் போலவே அதாவது ஆரிய மத இதிகாச நூல்களைப் போலவே, எல்லாத் தமிழ்(இந்து) மக்களாலும் இதுவரையில் மதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆரிய நூல்களைப் போன்றே குறளுக்கும், ஆரிய மத இதிகாசக் ...

  Read more

  குறளும் பெரியாரும்!
  திருவள்ளுவரின் திருக்குறளைப் பற்றிப் பெரியார் ஈ. வெ. ரா அவர்கள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். அது இவ்வாரக் குடிஅரசில் பிறிதோரிடத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதை வாசகர்கள் ஊன்றிப் படிக்க வேண்ட...

  Read more

 • பதினோறாம் தடவை?
  நமது சென்னை சர்க்கார் - பார்ப்பனப் பனியாக்களின் ஆதிக்க சர்க்கார், நடத்திவரும் ‘தடை படலத்தை‘ப் பார்க்கும் போது, குறிப்பாக பெரியார் அவர்களுடன் பிள்ளை விளையாட்டு விளையாடுவதில் பெருமையடைகிறதோ, என்றே நினைக...

  Read more

  ஒப்புயர்வற்ற குறள் நாள்!
  இந்த மாதத்தில் சென்னையில் குறள் நாள் வெகு ஆடம்பரமாகக் கொண்டாடப் பெறவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். பெரியார் திரு. வி. க. அவர்களையும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அவரும் மகிழ...

  Read more

  பொறுத்துப் பார்ப்போம்
  “உண்மை தோற்றது, பொய்ம்மை வெற்றி பெற்றது. நாணயம் நலிந்தது, நம்பிக்கைத் துரோகம் செழித்தது. யோக்கியதைக்கு மதிப்பு இல்லை, அயோக்கியத் தனத்திற்கு ஆடம்பர வரவேற்பு” - இவை இன்று இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்க...

  Read more

  ஸ்தல சுயாட்சி!
  இந்த மாதம் 12ஆம் தேதி திராவிடத் தந்தை பெரியாரவர்களுக்குத் திருச்சி நகரசபை அளித்த சிறப்பு மிக்க வரவேற்பு, நம் காங்கிரஸ் தோழர்களுக்கு - மந்திரிமார்களுக்குப் பெரும் மனக்கசப்பைத் தருமென்று கூறப்படுமானால்,...

  Read more

  திருவள்ளூரில் காமராசர்!
  சென்ற ஒருவார காலமாகத் தோழர் காமராசர் அவர்கள், செங்கற்பட்டு வட்டாரத்தில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். சென்னை மேல்சபை உறுப்பினருள் ஒருவரான தோழர் முத்துரங்கனார் அவர்கள் காலஞ் சென்ற...

  Read more

பகுத்தறிவு

 • மர்க்குரி ஒழிக!
  கலிகால அதிசயம்! ஆண்டவனின் அதியற்புத அலாதி லீலை! பக்தர்களின் மனம் மகிழ மகேசனின் மயக்கவரம்!
  ஆம்! முதல்நாள் போட்ட மர்க்குரி மாரனை எரித்த தியாகராஜனுக்கு தாபத்தை உண்டாக்கியதாம். அல்ல, அல்ல கடுங்கோபத்தையே உண்டாக்கியதாம்! முனிகொண்டால் முப்புரம் எரிக்கும் மாயரல்லவா அவர்! ஆலய சிப்பந்தியின் உடம்பை எரித்தார் காயம் படாமல்!
  வெளியூர் 27. 10. 1949 ஆம் தேதிய சுதேசமித்திரனில் காணப்படுகிறது மேலே கண்ட செய்தி.
  முதல்நாள் போடப்பட்டதாம் மர்க்குரி லைட்; அடுத்த நாள் ஆண்டவனின்...

  Read more

 • பட்டாபிஷேகம்!
  ராம இராஜ்யத்துக்குப் பட்டாபிஷேகம் 1950 ஜனவரி 26ஆம் தேதி என்று வதிஸ்டர் வம்சத்தினர் நாள் குறித்துவிட்டனர். ராமாயண வதிஸ்டர், நாடாள குறிப்பிட்ட நாள், இராமன் காடேக வேண்டிய நாள் ஆக, ஆகிய இப்போது இந்துஸ்தான் வதிஸ்டவம்சத்தோர் குறிப்பிடும் இந்த 26 எப்படியும் மாறப்போவதில்லை என்று உறுதி கூறுகிறார்கள்.
  நம் காங்கிரஸ் தோழர்கள் ஏகாதிபத்தியம் என்று சொல்லுவதற்குப் பதிலாக கண்டுபிடித்த மற்றொரு பழமையான - அர்த்த புஷ்டியான சொல் இராமராஜ்யம் என்பதை அவர்களே...

  Read more

 • தீ நாள்!
  என்றைக்கோ ஒரு காலத்தில் ஒரு அசுரன் இருந்தானாம். அந்த அசுரன் ஒரு பன்றிக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். இந்த விசித்திரப் பிறவியான அசுரன் தேவர்களை - பூலோகப் பிராமணர்களை எல்லாம் கொடுமைப்படுத்தினானாம். இதனால் தன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம். செத்துப் போனதைப் பூலோக மக்கள் எல்லாரும் கொண்டாடிக் களிப்படைய வேண்டுமென்று செத்துப்போன அந்த அசுரன் கேட்டுக் கொண்டானாம். அந்தப்படியே ஆகட்டும் என்று மகாவிஷ்ணு திருவாய் மலர்ந்தாராம்....

  Read more

 • கடவுள் தர்பாரில்!
  இடம்: பரலோகம் கடவுள் தர்பார்.
  பாத்திரங்கள்: கடவுள், சித்திரபுத்த்திரன், யமன், ஞானசாகரன், பக்தரத்னம்.
  காலம்: ஊழிக் காலம்.
  I
  கடவுள்: அடே! சித்திரபுத்திரா! என்ன தாமதம். இன்றைய கணக்கென்ன?
  சித்திராபுத்திரன்: சர்வலோகப் பிரபு சர்வஞானப் பிரபு! சர்வவல்லப் பிரபு! கருணாநிதி! நாயேன் தங்களாக்ஞையையே எதிர்பார்த்திருந்தேன். (யமனைப் பார்த்து சமிக்கை செய்கிறான்).
  யமன்: (மானிடர் இருவரை அழைத்து வந்து தர்பார் முன்னிலையில் நிறுத்தி) “சுவாமி உத்திரவுப்படி நடந்து கொண்டேன்”. என்று ஒதுங்கி குனிந்து வாய் பொத்திக் கைகட்டி நிற்கிறான்.
  சித்திராபுத்திரன்:...

  Read more

 • கடவுள்
  வினா: கடவுளைப் பற்றிப் பொதுவாக ஜனங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களை விளக்கிக்கூறு.
  விடை: கடவுள் வானமண்டலத்தையும், பூமியையும், அதிலுள்ள சகல சராசரங்களையும் படைத்தவன் என்று மக்களில் பெரும்பாலோர் நம்புகிறார்கள்.
  வினா: அப்புறம்?
  விடை: கடவுள் சர்வஞானமுடையவனாம், யாவற்றையும் பார்க்கிறானாம். பிரபஞ்சம் முழுதும் அவனது உடமையாம். சர்வவியாபியாம்.
  வினா: கடவுள் ஒழுக்கத்தைப் பற்றி மக்கள் என்ன சொல்லுகிறார்கள்.
  விடை: அவன் நீதிமானாம்; புனிதனாம்.
  வினா: வேறு என்ன?
  விடை: அவன் அன்பு மயமானவனாம்.
  வினா: கடவுள் அன்பு மயமானவனென்று ஜனங்கள் எப்பொழுதும்...

  Read more

 

ஈரோடு முனிசிபாலிட்டியானது எவ்வளவோ மோசமான நிலைமையில் இருந்து, அதாவது எல்லாவிதமான அக்கிரமங்களுக்கும், அயோக்கியத் தனங்களுக்கும், திருட்டு புரட்டு போர்ஜரி முதலிய கிரிமினல் காரியங்களுக்கு தாயகமாய் இருந்து, பொது ஜனங்களும் கவுன்சிலர்களும் எவ்வளவோ கூப்பாடு போட்டும் அரசாங்கத்தில் சரியான கேள்வி கேப்பாடு இல்லாமல் இருந்து கடைசியாக மெஜார்ட்டி கவுன்சிலர்கள் 13 பேர்கள் ராஜினாமா கொடுத்தும் அரசாங்கத்தார் லக்ஷியம் பண்ணாமல் இருந்து, முனிசிபல் பணங்களுக்கும் மற்றும் கல்வி இலாக்காப் பணம் சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் வேறு ஏதேதோ காரியங்களுக்கு என்று கொள்ளை போயும், சுமார் வருஷம் 3 லக்ஷ ரூபாய் வரும்படியுள்ள முனிசிபாலிட்டியானது ஆபீசு சம்பளத்துக்குகூட பணம் இல்லாமல் பாப்பராகியும் கடைசியாக தோழர் கான்சாயபு, க்ஷேக்தாவுத் சாயபு முதலிய சிலரது பெரு முயற்சியால் மறுபடியும் கொஞ்சம் கொஞ்சமாய் தலையெடுத்து சிறிது சிறிதாக யோக்கியமான நிலைமைக்கு வந்து, இப்போது பொது ஜனங்களுடையவும், அரசாங்கத்தாருடையவும் பாராட்டுதலுக்கு பாத்தியமானதாக ஆகி இருக்கிறது என்பது யாரும் அறிந்ததாகும். இன்னும் அநேக சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கிறது என்றாலும் பொது நிலமை வரவர உயர்ந்து கொண்டே வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

கடைசி வருஷத்து நிர்வாகத்தைப்பற்றி கலைக்டர் துரையவர்கள் கூறி இருப்பதில் சிலவற்றை இங்கே தருகிறோம்.

"நான் ஈரோட்டில் சில தினங்கள் இருந்திருக்கிறேன். அது சமயம் ஈரோடு முனிசிபல் நிர்வாக விஷயங்களைப்பற்றி நன்றாய்க் கவனித்தேன். சேர்மனும், கமிஷனரும், கௌன்சில் மெம்பர்களும் சேர்ந்து அம்முனிசிபாலிட்டியில் செய்துள்ள காரியங்களும், முயற்சிகளும் என் மனதைக் கவர்ந்தன. ரோட்டுகள் எல்லாம் மிக்க மேலான நல்ல நிலைமையில் இருக்கின்றன. இன்னும் சில ரோட்டுகள் ரிப்பேர் செய்வதற்கான பொருட்கள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த முனிசிபல் நிர்வாகத்தைப்பார்த்தால் கடந்த ஒரு வருஷமாக நடைபெற்ற முற்போக்கான பல வேலைகளையும், இன்னும் மேலான நிலைக்கு வரக்கூடும் என்ற அறிகுறியையும் தெளிவு படுத்துகிறது" என்பதாக மிகவும் புகழ்ந்து பாராட்டி இருக்கிறார்.

ஆனால் ஒரு விஷயத்தில் அதாவது மின்சார விளக்கு விஷயத்தில் சிறிது அதிருப்தி அடைந்திருக்கிறதாகத் தெரியவருவதை நாம் மறைக்க ஆசைப்படாமல் அதற்கு சமாதானம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

மின்சார விளக்கு சரித்திரம்

ஈரோடு மின்சாரத் திட்டமானது ஒரு சரித்திரத்துக்கு ஒப்பானதாகும் என்பதோடு ஸ்தல சுயாக்ஷி விஷயத்தில் அரசாங்கத்தின் தன்மையை எடுத்துக்காட்ட ஒரு கண்ணாடி போன்றதுமாகும்.

ஈரோடு மின்சார விளக்குத் திட்டம் 1926 முதல் ஆலோசனையால் இருந்து 1928ல் மின்சார விளக்குப் போடுவது என்ற முடிவுக்கு வந்து அரசாங்கத்தாரோடு கடித போக்குவரத்து செய்து வந்ததாகும்.

1928ல் மைசூர் அரசாங்கத்தினிடமிருந்து மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்த மின்சாரத்தை ஈரோட்டுக்கும் அந்த வழியில் வரவழைத்துக் கொள்ளலாம் என்று முதலில் கவுன்சில் முடிவு செய்து கவர்மெண்டைக் கேட்க கவர்மெண்டும் அங்கீகரித்து விட்டது.

அதன்படி மைசூர் கவர்மெண்டினிடமிருந்து பெற்றுக் கொள்ளச் செய்திருந்த ஏற்பாடானது என்ன காரணத்திலோ சென்னை அரசாங்கத்தின் பிரவேசத்தினால் மைசூர் கவர்மெண்ட் மின்சாரம் கொடுக்க மறுத்து விட்டது.

பிறகு முனிசிபாலிட்டியார் தாங்களே யந்திரம் வைத்து மின்சாரம் உண்டாக்கி தங்கள் ஊருக்கு வினியோகித்துக் கொள்வதாய் முடிவு செய்து சர்வை செய்து பிளான் போட்டு எஸ்ட்டிமேட்டும் தயார் செய்து 2லீ லக்ஷம் ரூபாய் கடன் வேண்டுமென்று கவர்மெண்டை கடன் கேட்டார்கள். கவர்மெண்டார் இடைகால வழியில் கொடுக்க முடியாதென்று சொல்லி வேறு எங்காவது வாங்கிக்கொள்ள அனுமதி கொடுத்தார்கள். (12435 நெ 13594 எல்.எம்.)

அந்த உத்திரவுபடி கோயமுத்தூர் ஜில்லா போர்டில் 2லீ லக்ஷம் ரூபாய் தயார் செய்து கொண்டு பிளான் எஸ்ட்டிமேட் ஆகியவைகளை சர்க்காருக்கு அனுப்பி வேலை துவக்க லைசென்சு கொடுக்கும்படி கேட்கப்பட்டது.

இதன் பேரில் கவர்மெண்டிடம் வேறு ஒரு திட்டம் யோசனையில் இருப்பதால் இதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று 9929ல் ஒரு ஜீ.ஒ. உத்திரவு கிடைத்தது. இந்த நிலையில் கல்கத்தா ஆக்டேவியஸ் ஸ்டீல் கம்பனியாரிடமிருந்து ஈரோட்டுக்கும் சேலத்துக்கும் மின்சாரம் வினியோகிக்க தங்களுக்கு அனுமதி கொடுக்கும்படி சர்க்கார் லைசென்சு கேட்டு இருப்பதாகவும் ஈரோடு முனிசிபாலிட்டி அதை ஆதரிக்க வேண்டும் என்றும் ஒரு கடிதம் வந்தது.

இதன்மீது ஈரோடு முனிசிபல் கவுன்சிலானது வேறு கம்பனிக்கு லைசென்சு கொடுக்கக் கூடாதென்றும் தாங்கள் இவ்விஷயத்துக்காக அதிக பணம் செலவு செய்து திட்டம் போட்டு பிளான் எஸ்ட்டிமேட்டும் பணமும் தயார் செய்துகொண்டாய் விட்டது என்றும் தங்களுக்கே லைசென்சு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

பிறகு 41029ல் கவர்மெண்டார் தாங்களாகவே 3098 3சி எல்.எம். நெ. மெமோராண்டத்தின் மூலம் "கடன் விண்ணப்பம் கெஜட்டில் பிரசுரிக்கப்படும், லைசென்சுக்கு முறைப்படி விண்ணப்பம் போடுங்கள்" என்று தெரிவித்தார்கள்.

அதன்பேரில் கவுன்சில் டிராப்ட் விண்ணப்பம் அச்சடிக்கப்பட்டது. காரியமும் ஒரு அளவுக்கு துவக்கப்பட்டது.

இந்த சமயத்தில் திடீரென்று ஒரு கவர்மெண்டு உத்திரவு வந்தது. அதில் ஈரோட்டுக்கு கவர்மெண்டார் தாங்களே மின்சாரம் சப்பிளை செய்யத் தயாராய் இருக்கிறார்கள். ஆதலால் முனிசிபாலிட்டி மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டியதில்லை என்று கண்டிருந்தது.

அதற்கும் கவுன்சிலர்கள் சம்மதித்து "அப்படியானால் மின்சாரச் சக்தியை எங்களுக்கு மொத்தமாய் கொடுத்து விட்டால் நாங்கள் ஊருக்குள் வினியோகித்துக் கொள்ளுகிறோம்" என்று ஈரோடு முனிசிபாலிட்டி சர்க்காரைக் கேட்டுக் கொண்டது.

இந்த மத்தியில் மறுபடியும் கல்கத்தா கம்பினியாரிடமிருந்து சர்க்காரிடம் மின்சார சக்தி மொத்தமாய் வாங்கி தாங்கள் சில்லரையில் ஈரோட்டுக்கு வினியோகிப்பதாகவும் அதை ஏற்றுக் கொள்ளும்படியும் ஒரு கடிதம் வந்தது.

ஈரோடு கவுன்சிலானது அதை ஒப்புக்கொள்ளமுடியாது என்றும் தங்கள் முனிசிபாலிட்டியே அந்த வினியோக லாப நஷ்டத்தை அடைய வேண்டுமே ஒழிய சர்க்காருக்கும் முனிசிபாலிட்டிக்கும், மத்தியில் வேறு ஒரு தனிப்பட்ட நபர் அடையக்கூடாது என்று சர்க்காருக்கும் கல்கத்தா ஆக்டேவியஸ் கம்பெனிக்கும் கவுன்சிலர்கள் தெரிவித்து விட்டு சர்க்கார், முன் தெரிவித்தபடி தங்களுக்கு மொத்தமாய் மின்சார சக்தி கொடுக்கும் படியாகவும் ஊருக்குள் வினியோகிக்க லைசென்சு வேண்டுமென்றும் கேட்டார்கள். அதோடு கூடவே தாமதம் ஆனால் ஏற்பாடு செய்த கடன் தொகைக்கு வீணாக அதிக வட்டி கொடுக்க வேண்டி வரும் என்றும் தெரிவித்தார்கள். இதற்குக் கவர்மெண்ட்டார் "இவ்விஷயமாக ஆலோசனையில் இருக்கிறது" என்று 151230ந் தேதியில் தெரிவித்தார்கள்.

அதன் மீது சிறிது நாள் பொறுத்துக் கவுன்சிலர்கள் "தயவு செய்து உடனே தங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் தாமதம் ஆனதால் கஷ்டமும் அசௌகரியமும் ஏற்படுவதாகவும்" தெரிவித்துக் கொண்டார்கள்.

இவ்வளவும் கவனிக்கப்படாமல் கடைசியாக கல்கத்தா ஆக்டேவியஸ் ஸ்டீல் கம்பனியாருக்கு லைசென்சு கொடுத்து விட்டதாகக் கவர்மென்டிட மிருந்து 111230ந் தேதி 11034 ஈ. உத்திரவு வந்தது.

இதுதான் சர்க்காருக்கும், ஈரோடு முனிசிபாலிட்டிக்கும் மின்சார சக்தி விஷயமாய் நடந்த கதைச் சுருக்கம்.

லைசென்ஸ் கண்டிஷன்

இனி அக்கம்பெனியாருக்கு லைசென்ஸ் கொடுத்ததில் சர்க்õர் அனுமதித்திருக்கும் கண்டிஷனை சற்று கவனிப்போம். அது ஒரே அடியாய் 20 வருஷத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் ஈரோட்டுக்கும் சேலத்துக்கும் ஒன்றாய் லைசென்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் தனியாக பிரித்துக் கொள்ள முடியாது. 20 வருஷம் பொறுத்தும் கம்பினிக்காக செலவு செய்ததாகச் சொல்லப்படும் செலவுத் தொகைகள் பூராவும் கொடுத்தால்தான் அதுவும் இரண்டு முனிசிபாலிட்டியும் சேர்ந்து தான் திரும்பிப் பெறமுடியும்.

மற்றும் கம்பினியார் ஊருக்குள் விளக்குப் போடுவதில் 30 மயில் தூரமுள்ள வீதிகளில் 7 மயில் தூரம் இப்போது போட்டிருப்பது போக பாக்கி 23 மயில்களுக்கு விளக்குப் போட்டால் அவ்விளக்குப் போடுவதற்கு உண்டான சார்ஜ் கொடுப்பதைத் தவிர அதற்கு ஏற்பட்ட எரக்ஷன் செலவு அதாவது கட்டடம், கம்பம் கம்பி முதலிய செலவு தொகைகளுக்கும் வருஷம் 1க்கு 100க்கு 12லீ வீதம் வட்டியும் கொடுத்து வரவேண்டும். இந்தப்படி இனிபோட வேண்டிய பாகத்துக்கும் லக்ஷக்கணக்கான ரூபாய்கள் செலவாகலாம்.

விளக்குக்கு உண்டான மின் சக்திக்கு சார்ஜ் கொடுத்து அதன் செலவு தொகைக்கு 100க்கு 12லீ வீதம் வருஷ வருஷம் வட்டி கொடுப்பதனால் வருஷம் எவ்வளவு ஆயிரம் ரூபாய் ஈரோடு முனிசிபாலிட்டி கொடுக்க வேண்டிவரும். முனிசிபாலிட்டிக்கு எவ்வளவு பதினாயிரக் கணக்கான தொகை வருஷ வருஷம் நஷ்டம் ஏற்படக் கூடும் என்பதையும் இந்தப்படி 20 வருஷ வாய்தா வரையில் கொடுத்துவர 20 வருஷம் பொறுத்தபின்பு சாமான்கள் பழையது ஆகி பழுதுபட்டு கெட்டுப்போய் மாற்ற வேண்டிய சமயத்தில் கம்பெனிக்காரர்களுடைய கொள்முதல், போக்குவரத்து செலவு, அவர்களுடைய கமிஷன் "நஷ்டம்" எல்லாம் சேர்ந்த தொகையை 10 லக்ஷக்கணக்காகக் கட்டிவிட்டு முனிசிபாலிட்டியார் திருப்பி வாங்கிக்கொள்ள வேண்டும். பிறகு மறுபடியும் அனேகமாய் எல்லாம் புதுப்பிக்கப்படவேண்டி வரும். அதற்கு பல லக்ஷக்கணக்காய் தொகை வேண்டும்.

இதற்கு சம்மதிக்காவிட்டால் மீண்டும் கம்பனியாரே சாஸ்வதமாய் நடத்தி இந்தக் கண்டிஷன்படியே அதன் லாபத்தை என்றென்றும் அடைந்து கொண்டிருக்க வேண்டும். இது அந்த நிபந்தனையின் கருத்து.

இந்தக் கொடுமையானதும் அடிமைத்தனமான நிபந்தனைகளுக்கு ஒரு முனிசிபல் கவுன்சில் ஒப்புக் கொள்ளுமானால் இதை விட வேறு என்ன கெடுதி முனிசிபாலிட்டிக்கு இக்கவுன்சில் செய்ய வேண்டும் என்பதை யோசித்து பார்க்க விரும்புகிறோம்.

ஆகையால் கவுன்சிலர்களும், சேர்மெனும், கமிஷனரும் சேர்ந்து எப்படியாவது இணங்கி வந்து கம்பெனிக்காரருடன் இருவருக்கும் நஷ்டமில்லாத மாதிரியில் ஒருவித சமாதானத்துக்கு வரவேண்டும் என்று எவ்வளவோ முயற்சித்தும் பயன் ஏற்படாததால் கடைசியில் தங்கள் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பதை சர்க்காருக்கு தெரிவித்துக் கொள்ள வேண்டி ஒரு வித முடிவுக்கு வந்து சில தீர்மானங்களை சர்க்காருக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

(அது மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.)

அது ஒப்புக்கொள்ளப்படுமானால் கம்பெனியாருக்கும் முனிசிபாலிட்டி யாருக்கும் கலைக்டர் துரையவர்களுக்கும் சர்க்காருக்கும் பொது ஜனங் களுக்கும் திருப்தி அளிக்கக்கூடும்.

இல்லாதவரையில் விஷயம் இப்படியே இருக்க வேண்டியதாகதான் ஏற்பட்டுவிடும்.

அதற்காக முனிசிபாலிட்டி மீது யாரும் குறை கூறுவது எவ்விதத்திலும் நியாயமாகாது என்பதே நமதபிப்பிராயம். ஏனெனில் முனிசிபாலிட்டியார் பொது ஜனங்களின் பிரதிநிதிகள் பொது ஜன நன்மைக்கு உழைக்க கட்டுப்பட்டவர்கள்.

ஆகையால் அவர்களுக்கு சரியென்று பட்டதைச் செய்யக் கடமைப்பட்டவர்கள்.

கடைசியாக இந்த ஊர் மகாஜனங்கள் பெரும்பாகம் பேர்கள் இந்த விஷயங்களை மிகவும் நன்றாக உணர்ந்தவர். ஆனதாலேயே யாவருடைய தூண்டுதலும் இல்லாமலும் கம்பனியார் எவ்வளவோ தந்திரங்களை உபயோகித்தும் மின்சார சக்தியை தங்களுடைய சொந்த வீட்டு விளக்கு முதலியவைகளுக்குக் கூட 4 வருஷ காலமாய் எடுத்துக் கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.

இதைக் கண்டாவது கலைக்டர் துரையவர்களும் அரசாங்கமும் பொதுஜனங்களின் உணர்ச்சி எப்படி இருந்து வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

பொது ஜனங்களுக்கு முனிசிபாலிட்டிமீது தப்பபிப்பிராயம் ஏற்படும்படி சில விஷமக்காரர்கள் தப்பான விஷயங்களை எடுத்துச் சொல்லிவந்தும் அவர்கள் ஏமாந்து போகாமல் இருந்து வருவது மிகவும் பாராட்டத்தக்கதாகும். ஆகையால் முனிசிபாலிட்டியார் பிடிவாதம் செய்கிறார்கள் என்று சொல்லப்படுமானால் அது உண்மையல்ல. முனிசிபாலிட்டியார் செய்வதெல்லாம் வரிசெலுத்தும் ஈரோடு வாசிகளின் நன்மைக்கு ஆகவே ஒழிய மற்றபடி யாருடைய சுய நலத்துக்காவோ, வீம்புக்காகவோ, தங்கள் கவுரவத்துக்காகவோ அல்ல என்பதை பொது ஜனங்களுக்கும் கலைக்டர் துரை அவர்களும் அரசாங்கமும் உணரவேண்டுமென்று விரும்புகிறோம்.

தோழர் பெரியர் - குடி அரசு - கட்டுரை - 20.10.1935

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: