• abolish-caste-1.jpg
 • abolish-caste-2.jpg
 • abolish-caste-3.jpg
 • periyar1.jpg

சாதி ஒழிப்பு

கடைசிப் பதிவேற்றம்

 • Last Modified: Wednesday 20 November 2019, 22:22:42.

தேசியம் - தேசிய இனம்

 • திராவிடரும் - தமிழரும்
  நாடு பிரிவினைக் கமிட்டி அறிக்கையைப் பார்த்தேன். இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிக்கை பற்றிய சேதிகளின் சுருக்கம் ஒருவாறு எனக்குத் தெரியவந்தது. பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால்...

  Read more

 • ‘தேசியம்’ ஓர் முட்டுக்கட்டையே
  தேசீய இயக்கம் சென்ற வாரம் சுயமரியாதை இயக்கம் என்னும் தலைப்புக்கொடுத்து, அவ்வியக்கத்தின் கொள்கைகளைப் பற்றியும், திட்டங்களைப் பற்றியும், அதன் நிலையைப் பற்றியும், செல்வாக்கைப் பற்றியும், இதுவரை அது செய்திருக்கும் வேலையைப் பற்றியும் ஒருவாறு குறிப்பிட்டிருந்தோம். இவ்வாரம் தேசீய இயக்கம் என்னும் தலைப்புப் பெயர் கொடுத்து அதன் கொள்கை, திட்டம், நிலைமை,...

  Read more

 • இலங்கை உபன்யாசம் - தேசம், தேசீயம் ஒரு போலி உணர்ச்சி
    அன்புள்ள தலைவரே! வீரமும், எழுச்சியும், சுயமரியாதை உணர்ச்சி யும் உள்ள வாலிபர்களே!! தலைவரின் முன்னுரையிலும், உபசாரப் பத்திரங்களிலும், மற்றும் பேசியவர்களும் அளவுக்கு மீறி என்னைப் பற்றியும், எனது சிறு தொண்டைப் பற்றியும் புகழ்ந்து கூறி இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட புகழ்ச்சிகளுக்கு நான் சிறிதும் தகுதியுடையேன் அல்லன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கி...

  Read more

 • தேசீயப் பைத்தியம்
    தேசீயம் என்பது ஒரு பித்தலாட்டம் என்பதையும், அது சுயநலவாதி களின் வயிற்றுப்பிழைப்புக்குத் துணைபுரியும் வார்த்தை என்பதையும், நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் நாம் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம். தேசீயவாதியாக இருக்கின்ற ஒருவன் எச்சமயத்திலும் யோக்கியப் பொறுப்பு டன் நடந்துகொள்ள முடியாது. சமயத்திற்குத் தகுந்த வேஷங்களைப் போட்டுக்கொண்டு பாமர மக்களை...

  Read more

 • ஆந்திரர் தமிழர் என்று பிரிக்கப்பார்ப்பது
    ஜஸ்டிஸ்  கட்சியிலிருந்து  நம்பிக்கை  இல்லாத்  தீர்மானத்தின்  காரணமாய்  வெளியேறி  விட்ட  தோழர்  குமாரராஜா  அவர்களுக்காக  குமாரராஜா  அவர்களை  ஆதரிக்க  ஆசைப்பட்டவர்களோ  அல்லது  அவரிடம்  கூலிபெற்றவர்களோ  ஜஸ்டிஸ்  கட்சியைத்  தாக்க  இதுசமயம்  தங்களுக்கு  வேறு  எவ்வித  கதியும்  இல்லாமல்  நிற்கதியாயிருப்பதை  முன்னிட்டு  மிக  இழிவான  மார்க்கத்தைக்  கைக்கொள்ளத்  துணிந்து  விட்டார்கள். ...

  Read more

பொதுவுடைமை

 • சின்னாளப்பட்டியில் பொதுக்கூட்டம்
  16.01.1946 மாலை 4:00 மணிக்குத் தனிக்காரில் பெரியாரவர்களும் மற்றும் பலரும் சின்னாளப்பட்டி வந்து சேர்ந்தனர். உடனே ஒரு மாபெரும் ஊர்வலம் புறப்பட்டு முக்கிய தெருக்களின் வழியாகச் சென்றது. வழி நெடுக மலர் மால...

  Read more

  கோவை மாவட்டதிராவிடர் மாநாடு
  நம்மியக்கம் இப்பொழுது எல்லாத் திராவிடத் தோழர்களாலும் பல்துறையிலும் பலப்படுத்தப்பட்டு வருகிறதென்றும், தேசியத் தோழர்கள் “தங்கள் தியாகத்தை”க் காட்ட வேண்டுமானால் மந்திரிகளாக முடியும். ஆனால் திராவிடர் க...

  Read more

  திருமண அழைப்பு
  திருமணம் முதலாகிய சமுதாய சடங்குகளுக்குப் பெரியார் ஈ.வெ.ரா. இனி அழைக்குமிடங்களுக்கு எல்லாம் போக வசதி இல்லை என்றும், அப்படி போவதானால் இயக்க வேலைகள் குந்தகப்படுகிறதென்றும், இயக்கத் தோழர்களும் உடல் நலம...

  Read more

  சிலை வணக்கமும் திராவிடர் கழகமும்
  “விக்ரக ஆராதனை (சிலை வணக்கம்)யைக் கண்டித்துத் தாங்களும் இயக்கத் தோழர்களும், அடிக்கடி பேசியும் எழுதியும் வருகிறீர்கள். திராவிடர் கழகம் ஒரு அரசியல் கட்சி இயக்கம். சுயமரியாதை இயக்கத்தைப் போல் வெறும் சம...

  Read more

  எது தேசத் துரோகம்?
  தோழர்களே! இந்தியாவைவிட்டுப் பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு விலகப் போகிறதா இல்லையா? அது காந்தி கோஷ்டியார், பிரிட்டிஷ் தூது கோஷ்டியார் பேசிக் கொள்ளும் இரகசியப் பேச்சின் தத்துவத்தைப் பொறுத்தது. காங்கிர...

  Read more

 • கடவுளின் கருணையே கருணை!
  மழையில்லை, அரிசி இல்லை என்று மக்கள் திண்டாடுகிறார்கள். ஆனால், அதன் பேராலும் பார்ப்பனர்கள் வயிறு புடைக்கிறது. மழைக்காக வருண ஜபம் செய்வதாகக் கூறிக் கொண்டு கண்ட கண்ட இடங்களில் இருக்கும் பார்ப்பனர்கள் வ...

  Read more

  மந்திரிசபையில் கெட்ட புத்தி தோற்றம்
  சென்னை மந்திரிசபை தனது நிஜமான நிறத்தோடு வெளிக்கிளம்ப துணிந்து முன் வந்து விட்டதாகத் தெரிகிறது. இன்றைய அரசியல் கொள்கையில் காங்கிரசுக்கும் இம்மாகாண பார்ப்பனரல்லாத மக்கள் என்பவர்களுக்கும் இதுவரை இருந்...

  Read more

  பூதேவர்களின் விஷமப்பிரசாரக் கோஷ்டியார்களின் தேவ பாதுகாப்பு மாநாடு
  சித்திரபுத்திரன் தேசிய பத்திரிகை நகரத்தில், பார்ப்பன நிருபர்கள் பந்தலில், பூதேவர்கள் கழகச் சார்பில் விஷமப் பிரசார கோஷ்டிப் படையின் சதியாலோசனை மாநாடு நடவடிக்கைகள். விஷயாலோசனைக் கூட்டம் தலைவர்...

  Read more

  “வெற்றி நம்முடையதுதான்”
  நம் கழகச் சார்பாக சென்ற மாதம் இரு கூட்டங்கள் நடந்தன. அதற்குப் பிறகு பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. 1. சென்னை மந்திரிசபை அமைப்பு 2. இங்கிலாந்து தூது கோஷ்டி தோல்வி 3. மதுரை கலவரம் முதலிய காரியங்களாகு...

  Read more

  சர்.ஏ.பி. பாத்ரோ மறைவு
  ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்துவரும், 1921ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் கட்சி ஆட்சி செய்தபொழுது கல்வி, மராமத்து இலாகா மந்திரியாகயிருந்து சென்னை யுனிவர்சிட்டி சட்டத்தில் சீர்திருத்தம் செய்தவ...

  Read more

Periyar in English

 • சின்னாளப்பட்டியில் பொதுக்கூட்டம்
  16.01.1946 மாலை 4:00 மணிக்குத் தனிக்காரில் பெரியாரவர்களும் மற்றும் பலரும் சின்னாளப்பட்டி வந்து சேர்ந்தனர். உடனே ஒரு மாபெரும் ஊர்வலம் புறப்பட்டு முக்கிய தெருக்களின் வழியாகச் சென்றது. வழி நெடுக மலர் மால...

  Read more

  கோவை மாவட்டதிராவிடர் மாநாடு
  நம்மியக்கம் இப்பொழுது எல்லாத் திராவிடத் தோழர்களாலும் பல்துறையிலும் பலப்படுத்தப்பட்டு வருகிறதென்றும், தேசியத் தோழர்கள் “தங்கள் தியாகத்தை”க் காட்ட வேண்டுமானால் மந்திரிகளாக முடியும். ஆனால் திராவிடர் க...

  Read more

  திருமண அழைப்பு
  திருமணம் முதலாகிய சமுதாய சடங்குகளுக்குப் பெரியார் ஈ.வெ.ரா. இனி அழைக்குமிடங்களுக்கு எல்லாம் போக வசதி இல்லை என்றும், அப்படி போவதானால் இயக்க வேலைகள் குந்தகப்படுகிறதென்றும், இயக்கத் தோழர்களும் உடல் நலம...

  Read more

  சிலை வணக்கமும் திராவிடர் கழகமும்
  “விக்ரக ஆராதனை (சிலை வணக்கம்)யைக் கண்டித்துத் தாங்களும் இயக்கத் தோழர்களும், அடிக்கடி பேசியும் எழுதியும் வருகிறீர்கள். திராவிடர் கழகம் ஒரு அரசியல் கட்சி இயக்கம். சுயமரியாதை இயக்கத்தைப் போல் வெறும் சம...

  Read more

  எது தேசத் துரோகம்?
  தோழர்களே! இந்தியாவைவிட்டுப் பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு விலகப் போகிறதா இல்லையா? அது காந்தி கோஷ்டியார், பிரிட்டிஷ் தூது கோஷ்டியார் பேசிக் கொள்ளும் இரகசியப் பேச்சின் தத்துவத்தைப் பொறுத்தது. காங்கிர...

  Read more

 • கடவுளின் கருணையே கருணை!
  மழையில்லை, அரிசி இல்லை என்று மக்கள் திண்டாடுகிறார்கள். ஆனால், அதன் பேராலும் பார்ப்பனர்கள் வயிறு புடைக்கிறது. மழைக்காக வருண ஜபம் செய்வதாகக் கூறிக் கொண்டு கண்ட கண்ட இடங்களில் இருக்கும் பார்ப்பனர்கள் வ...

  Read more

  மந்திரிசபையில் கெட்ட புத்தி தோற்றம்
  சென்னை மந்திரிசபை தனது நிஜமான நிறத்தோடு வெளிக்கிளம்ப துணிந்து முன் வந்து விட்டதாகத் தெரிகிறது. இன்றைய அரசியல் கொள்கையில் காங்கிரசுக்கும் இம்மாகாண பார்ப்பனரல்லாத மக்கள் என்பவர்களுக்கும் இதுவரை இருந்...

  Read more

  பூதேவர்களின் விஷமப்பிரசாரக் கோஷ்டியார்களின் தேவ பாதுகாப்பு மாநாடு
  சித்திரபுத்திரன் தேசிய பத்திரிகை நகரத்தில், பார்ப்பன நிருபர்கள் பந்தலில், பூதேவர்கள் கழகச் சார்பில் விஷமப் பிரசார கோஷ்டிப் படையின் சதியாலோசனை மாநாடு நடவடிக்கைகள். விஷயாலோசனைக் கூட்டம் தலைவர்...

  Read more

  “வெற்றி நம்முடையதுதான்”
  நம் கழகச் சார்பாக சென்ற மாதம் இரு கூட்டங்கள் நடந்தன. அதற்குப் பிறகு பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. 1. சென்னை மந்திரிசபை அமைப்பு 2. இங்கிலாந்து தூது கோஷ்டி தோல்வி 3. மதுரை கலவரம் முதலிய காரியங்களாகு...

  Read more

  சர்.ஏ.பி. பாத்ரோ மறைவு
  ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்துவரும், 1921ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் கட்சி ஆட்சி செய்தபொழுது கல்வி, மராமத்து இலாகா மந்திரியாகயிருந்து சென்னை யுனிவர்சிட்டி சட்டத்தில் சீர்திருத்தம் செய்தவ...

  Read more

பகுத்தறிவு

 • தீ மிதித்தல் ஏமாற்று வித்தை
  12.03.1946 இல் நடைபெற்ற கரூர் காமாட்சியம்மன் திருவிழாவில் ஆச்சாரத்தோடு, அம்மையிடம் பக்தியாய், ஆண்டவன் அருள் கொண்டு ஆஸ்திகர்கள் நெருப்புக் குழியில் தீ மிதிக்க இறங்கிய பொழுது தீ மிதித்தல் ஏமாற்று வித்தை என்பதை நிரூபிக்க கறுப்புச் சட்டைப் படை இளைஞர்கள் 6 பேர் கறுப்புச் சட்டையணிந்து ஆச்சாரம், பக்தி, அருள் ஒன்றும் இல்லாமலே தாமும் அவர்களுடன் தீ மிதித்து ஏறினர். இனி இம்மாதிரி ஏமாற்று வித்தைகள்  பலிக்காது என ஆஸ்திகர்கள்...

  Read more

 • தீமிதித்தல் பக்தியினாலா?
  துறையூரில் நடந்த திரவுபதி அம்மன் விழாவில் கடைசி நாளாகிய 4.8.44  ஆம் தேதியன்று அக்கினியில் இறங்கியதில் நமது இயக்க அன்பர்கள் வை. நடேசன், து.வீ. நாராயணன் முதலியவர்கள் காப்புக்கட்டிக் கொள்ளாமலும் கையில் செங்கொடியுடன் பெரியார் வாழ்க! சூழ்ச்சி ஒழிக! என்ற சப்தத்தோடு அக்கினியில் இறங்கி இது பக்தியல்ல என்று வெளிப்படுத்தினார்கள்.மேற்படி கோயில் தர்மகர்த்தா அனுமதி கொடுத்தால் ஒவ்வொரு வருடமும் முன்னணியில் இறங்க தயாராக இருக்கிறோம் என்றும் சொல்லுகிறார்கள்.இவ்விழாவினால் ஏற்படும் உடையார்...

  Read more

 • மூடநம்பிக்கை முறியடிக்கப்பட்டது
  16.05.1946 இல் திண்டிவனம் தாலுக்கா கோவடி கிராமத்தில் நடந்த அய்யனாரப்பன் திருவிழாவில், கிராமத்திலுள்ள பெரியவர்களும் வாலிபர்களும் திராவிடர் கழகத் தோழர்களை, அய்யனாரப்பனுக்கு ஒரு கரகம் ஜோடிப்பதாகவும், தெய்வங்களின்  கதைகள் வெறும் புனைந்துரை எனக் கூறும் நீங்கள் உங்களில் யாராவது மேற்படி கரகத்தைத் தூக்கிக்கொண்டு ஊரைச்சுற்றி கொண்டுவந்து இறக்கிவிடுங்கள் என்று பிடிவாதம் செய்து கேட்டதினால், நமது இயக்கத் தோழரும் திண்டிவம் தாலுக்கா திராவிடர் கழக செயற்குழு உறுப்பினருமான என்.சேதுராமன் அவர்கள் அந்தக்...

  Read more

 • வீரர்கள் கல்நாட்டு விழா
  அருமைத் தோழர்களே, தாய்மார்களே!
  நான் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கும் கட்டிடத்தின் ஞாபகத்திற்குரிய இரு வீரர்களான தோழர்கள் ல. நடராசன், வெ. தாளமுத்து ஆகியவர்களின் சேவையையும் உணர்ச்சியையும் தமிழர்கள் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்த்தால் அவர்களின் சுயநலமற்ற தியாகம் தெற்றென விளங்கும். அவ்வித புகழுக்குரிய வீரர்களின் ஞாபகார்த்த கட்டிடத்தை நாம் இங்கு கட்டுவது அவர்களுக்கு ஏதோ பிரமாதமாக நாம் செய்ததாகவல்லது. அதற்குப் பதிலாக அவ்வீரர்களின் தியாகத்தை  நாம் பின்பற்றி நம் நாட்டின் விடுதலைக்காக...

  Read more

 • பார்ப்பனருக்கும் ரயில்வேகாரருக்கும் ஒப்பந்தமா?
   
  நம் நாட்டில் சுதந்தரமும் சுயமரியாதையும் சொந்த அரசியலும் ஆரியர்கள் என்னும் பார்ப்பனர்களால் அழிந்து போனதல்லாமல் மனித சமூகம் வஞ்சக மதத்துக்கும் ஒழுக்கமும் நீதியும் அற்ற கடவுளுக்கும் முட்டாள்தனமும் பித்தலாட்டமும் நிறைந்த மூடநம்பிக்கைக்கும் அடிமைப்பட்டு பெருவாரியான மக்கள் ஒரு வெகு சிறுபான்மையான வன்னெஞ்ச வஞ்சகர்களுக்கு ஆளாகி இன்னல் படுவதும் மிருகங்களிலும் மலத்திலும் கேவலமாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திலிருப்பதும் தமிழ் நாட்டுச் சரித்திரம் அறிந்த எவரும் மறுக்க மாட்டார்கள். இம் மாதிரியான நிலைமை...

  Read more

தமிழ் தினசரி பத்திரிகை

இப்போது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலராகிய ஆதித்தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமாயும் அவசரமாயும் வேண்டியது பொது நோக்குடைய ஒரு தமிழ் தினசரி பத்திரிகையே ஆகும். தமிழ்நாட்டில் தற் காலம் உலவிவரும் தமிழ் தினசரி பத்திரிகைகள் மூன்று. அதாவது சுதேச மித்திரன், திராவிடன், சுயராஜ்யா ஆகிய இவைகளே. இவற்றில் சுதேச மித்திரன் முதலில் தோன்றியது.

இதன் முக்கியக் கொள்கை பழய காங்கிரஸ் கொள்கைகளைப் போல அரசாங்கத்தினிடம் இருந்து பதவிகளும் உத்தியோகமும் மக்கள் அடையக் கிளர்ச்சி செய்வதாயிருந்தது. இதின்படி பதவிகளும் உத்தியோகங்களும் கிடைக்க கிடைக்க அவையெல்லாம் தங்கள் சமூகமாகிய பிராமணர்களுக்கே கிடைக்கும்படியாகவும் பிராமணர்கள்தான் உயர்ந்தவர்கள், அவர்கள்தான் அறிவாளிகள் என்றும் மற்றும் பிராமண மதம் ஆக்கம் பெறவும் உழைத்து வந்தது.

இம்மட்டோடல்லாமல் வரவர பிராமணரல்லாதாருக்கு உயர்ந்த உத்தியோகங்களும், பதவிகளும், அந்தஸ்துகளும், கீர்த்திகளும் உண்டா வதைக் கூற்றுவன் போல் நின்று தடுத்துக் கொண்டேயும் வந்தது.

இச்சூழ்ச்சி வெகுகாலமாய் பிராமணரல்லாதாருக்குத் தெரியாமல் இருந்துவிட்டதால் சகல பதவிகளும் அரசாங்க உத்தியோகங்களும், அந்தஸ்தும், கீர்த்தியும், பிராமணர்களுக்கே கிடைத்து, அரசாங்கமே பிராமண மயமாய் போய்விட்டதால், பிராமணரல்லாதார் நிலை தாழ்த்தப் பட்டது. அப்போது படித்திருந்த சில பிராமணரல்லாதார் சிலர் தாங்கள் எவ்வளவு கெட்டிக்காரராயும், யோக்கியர்களாயும், புத்திசாலிகளாயும், தேச பக்தி, பரோபகாரம் முதலிய அறுங்குணங்கள் நிறைந்தவர்களாயுமிருந்தும் தாங்கள் ஏன் தாழ்த்தப்பட்டு கிடக்கின்றோம் என்று யோசனை செய்து பார்த்ததில் இப் பிராமண பத்திரிகைகளும், கட்டுப்பாடான பிராமண சூழ்ச்சிகளுமே இதற்குக் காரணம் என்று கண்டுபிடித்துத் தாங்களும் மற்றவர்களைப்போல முன்னேறு வதற்குத் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டுமென்றும், தங்களுக்கும் பிரசாரத்திற்கு ஒரு பத்திரிகை வேண்டுமென்றும் கருதி ஒரு சங்கத்தையும் திராவிடன், ஜஸ்டிஸ் என்கிற பத்திரிகைகளையும் ஏற்படுத்தினார்கள்.

இப்பத்திரிக்கையும், சங்கமும், சகலமும் சகல போக்கியங்களையும் தாங்களே ஏகபோகமாய் அனுபவித்து வந்த சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைக்கும், அதன் கூட்டத்தாருக்கும், இவை போட்டியாய்க் கண்டதால் இவற்றைச் செல்வாக்கில்லாமலடித்து ஒழிக்க பல தந்திரங்களும் செய்ததி னால் இத்தந்திரங்களுக்குத் தாக்கு பிடிக்க சுதேசமித்திரன் போலவும், அதன் கூட்டத்தார் போலவும் திராவிடனும் அதன் கூட்டத்தாரும் அரசாங்கத்தை தழுவ நேரிட்டது. என்ன செய்தும் சுதேசமித்திரன் கூட்டத்திற்குள்ள தந்திர சக்தி திராவிடன் கூட்டத்திற்கில்லாததாலும், பிராமணரல்லாதாரில் சிலருக்கு தங்கள் தனிப்பட்ட சுயநலத்திற்கும், கீர்த்திக்கும் சுதேசமித்திரன் கூட்டம் இடங்கொடுத்ததால், இவர்களும் அதோடு சேர்ந்து எதிர்ப்பிரசாரம் செய்ததாலும், திராவிடனுக்குப் பாமர ஜனங்கள் உண்மையை உணரும்படிச் செய்யவும், பாமர ஜனங்களிடத்தில் செல்வாக்குப் பெறவும் முடியாமல் போய்விட்டதால் இது தக்க பலனை தென்னிந்திய மக்களுக்கு அளிக்கக் கூடியதாய் இல்லாமலிருக்கிறது.

இதுதான் இப்படி என்றாலோ, மகாத்மா ஏழை மக்கள் விடுதலையின் பொருட்டுக் காங்கிரஸில் சேர்ந்து, ஒத்துழையாமை என்னும் கொள்கையை உண்டாக்கி நிர்மாணத் திட்டம் என சில திட்டங்களைக் கண்டு வேலை செய்த காலத்தில் ஒத்துழையாமையும், நிர்மாணத் திட்டமும் தங்கள் கூட்டத்தாருக் கும், சுயநலப்புலிகளுக்கும் கஷ்டத்தைக் கொடுப்பதாய் இருந்ததால் ஒத்துழையாமையும் நிர்மாணத் திட்டத்தையும் மகாத்மா செல்வாக்கையும் அழிக்க சுதேசமித்திரன் பிரசாரம் செய்து வந்த காலத்தில் ஒத்துழையாமை யிலும் நிர்மாணத் திட்டத்திலும் மகாத்மாவிடமும் ஈடுபட்டிருந்த சிலர் சுதேச மித்திரனால் தேசத்திற்கு ஏற்படும் கெடுதியைத் தடுக்க ஒரு தினசரி ஏற்படுத்த எண்ணினார்கள்.

அதுசமயம் ஆங்கில சுயராஜ்ய பத்திரிகை மக்கள் நம்பக் கூடியது போல் நடந்து வந்ததால், பொது மக்கள் பணமாகிய 10000 ரூபாயை தூக்கி அதன் முக்கியஸ்தரான ஸ்ரீமான் பிரகாசத்தினிடம் கொடுத்து தினசரி ஆரம்பிக்கச் சொன்னார்கள். கடசியாய் சுதேசமித்திரன் திட்டமும், சுயராஜ்யா திட்டமும் வித்தியாசமற்றதாகி இரண்டும் ஒன்றுபடக் கலந்துவிட்டதால் - புதுத் திருடனைவிட பழய திருடனே மேல் என்னும் பழமொழிபோல் இரண்டும் ஒன்று சேர்ந்துக் கொண்டு, பிராமணர்கள் ஆக்கம் பெறவும் பிராமணரல்லாதாரின் அழிவுக்கும் ஒத்து வேலை செய்கின்றதுகள்.

இதில் ஒரு விஷேஷம் சுதேசமித்திரன் ஒரு விதத்தில் சுயராஜ்யாவை விட யோக்கியன் என்றே சொல்லலாம். எப்படி என்றால் சுதேசமித்திரன், “தான் ஒரு பிராமணனைத்தான் ஆசிரியராகக் கொண்டிருக்கிறேன்” என்று உண்மையே பேசுகிறான்.

சுயராஜ்யாவோ இரண்டு பிராமணரல்லாதாரை ஆசிரியராய் வைத்தி ருப்பதாய் பொய் சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி தனது அட்டூழி யங்களை நடத்துகின்றது. பத்திரிகைகள் யோக்கியமாய் நடந்திருந்தால் தென்னிந்தியாவில் ஒத்துழையாமை ஒழிந்து சுயராஜ்யக் கட்சியின் சூழ்ச்சி நடந்தேறுமா?

இந்நிலையில், தென்னிந்தியாவுக்கு தென்னிந்தியர்களுக்கு ஒரு நம்பிக்கையும் யோக்கியமுமுள்ள தமிழ் தினசரி பத்திரிகை வேண்டுமா வேண்டாமா என்று யோசிக்க வேண்டும். வேண்டுமென்றால் சுலபத்தில் நடத்திவிட முடியாது. சுதேசமித்திரனின் போட்டியையும், கெடுதியையும் சமாளிப்பது லேசான காரியமல்ல - அதற்கு பிராமணரல்லாதார் பொருள் களும் பிராமணரல்லாதார் சந்தாதாரர்களும் பிராமணரல்லாத சுயநலப்புலிகள் ஆதரவும், சாராய விற்பனை முதலிய விளம்பர வரும்படிகளும் மலிந்து கிடக்கிறது. ஆதலால் நாம் ஆரம்பிப்பதானால் தக்க மூலதனத்துடனும் தக்க ஏற்பாட்டுடனும்தான் ஆரம்பிக்க வேண்டும்.

குறைந்தது ஒரு லக்ஷ ரூபாய் மூலதனம் வேண்டும். ஒரு வருஷத்தில் 10,000 சந்தாதாரர்கள் சேர வேண்டும். 50000 ரூபாயாவது இல்லாமல் ஆரம்பிப்பது நிலை பெறத்தக்கதாகாது. குறைந்த அளவு 5 வருஷ காலத்துக் குக் குறையாமல் பத்திரிகை நடத்தக்கூடிய முஸ்தீபுகளை கையில் வைத்துக் கொண்டு ஆரம்பித்தாலல்லாது எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது.

ஆதலால் இவைகளைப் பற்றி சில கனவான்களோடு யோசனை செய்து பார்த்ததில் அடியில் கண்ட விஷயங்கள் புலப்பட்டன. அதாவது, பங்கு 1- க்கு 5 ரூபாய் வீதம் 20000 பங்கு கொண்ட ஒரு லக்ஷ ரூபாய் மூலதனம் வேண்டும். 50000 ரூ. வசூலித்த பிறகுதான் பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும். தமிழ் ஜில்லாக்களாகிய 12 ஜில்லாக்களும், ஜில்லா ஒன்றுக்கு 5000 ரூ. வீதம் முன்பணம் வசூலித்துக் கொடுக்கவேண்டும்.

ஒவ்வொரு ஜில்லாவிலும் 1000 ரூ. கொடுக்கக்கூடிய இரண்டு பேர்கள் அவசியம் முன் வருவதோடு பாக்கி மூவாயிரம் ரூபாயையும் வசூலித்துக் கொடுக்க அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆயிரம் கொடுப்பவர்களும், ஊதியமில்லாமல் உழைக்க வருபவர்களும், நிர்வாகிகளாக இருக்க வேண்டும்.

பத்திரிகையின் கொள்கை பிராமணரல்லாதாருடையவும் தீண்டாதா ருடையவும், சமத்துவமும் முன்னேற்றமுமே முக்கியமானதாயிருக்க வேண்டும். பத்திரிகையின் நேரான நிர்வாகமும் பதிப்பும் யோக்கியமான ஒரு சிறு போர்டினிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இப்போர்டில் உள்ளவர்கள் பத்திரிகை நிர்வாகம் பதிப்பு இவைகளைத்தவிர, வேறு எந்தப் பொதுக் காரியங்களிலும் சம்பந்தப்படாதவர்களாயிருக்க வேண்டும்.

குறைந்தது 5 வருஷத்திற்கு ஒரு தரம் இந்த போர்டை புதுப்பிக்கத் தக்கதாயிருக்க வேண்டும். இக்கொள்கைக்கு இதுவரை சில செல்வாக்குள்ள கனவான்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஆகையால் இதைப்பற்றித் தமிழ் மக்கள் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தால் தமிழ்மக்களுக்கு ஏதாவது சுயமரியாதை உண்டாகலாம் என்று விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம்.

தோழர் பெரியார், குடி அரசு - தலையங்கம் - 22.11.1925

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: